கிருபையின் உபதேசங்களை குறித்து எச்சரிக்கையாயிருங்கள்
அது என்ன கிருபை உபதேசம்?
1) இந்த
உபதேசத்தை போதிக்கிறவர்கள் நம்முடைய கிரியைகளினால் ஒரு போதும் நாம் நீதிமானாக
முடியாது என்று போதிப்பார்கள்
2)
நமக்கு கிடைக்கும் இரட்சிப்பு இலவசமானது ஆதலால் அதற்கு கிரியை செய்ய தேவையில்லை
என்று போதிப்பார்கள்
3) பாவம்
செய்வதை நம்மால் நிறுத்த முடியாது என்று போதிப்பார்கள்
4) நாம்
தேவனுடைய பிரமாணத்தின் நடக்க முயற்சி செய்யும் போது இரட்சிப்பை சம்பாதிக்க முயற்சி
செய்கிறீர்கள் என்று பரியாசம் செய்வார்கள்
5) தேவன்
கிருபையுள்ளவர் ஆகையால் அவருடைய கிருபையினாலே நம்முடைய பாவங்களை மன்னிப்பார் என்று
போதிப்பார்கள்
6)
கிறிஸ்துவின் இரத்தத்தை கொண்டு நம்மை பார்ப்பதால் நம்முடைய பாவங்களை எண்ண மாட்டார்
என்று போதிப்பார்கள்
7) ஒரு
முறை இரட்சிக்கப்பட்டால் நாம் நம்முடைய இரட்சிப்பை ஒருபோதும் இழந்து போக முடியாது அது
நித்திய இரட்சிப்பு என்று போதிப்பார்கள்
8) நாம்
இரட்சிப்பை பெறுவதற்கு எந்த தகுதியும் இல்லை ஆனால் தேவன் அதை நமக்கு கொடுத்து
இருக்கிறார் அது தான் கிருபை என்றும் சொல்லுவார்கள்
9)
தகுதியில்லாத ஒருவருக்கு தகுதியான ஒன்றை கொடுப்பது தான் கிருபை என்று அர்த்தங்களை
கொடுப்பார்கள்
மேலே
சொல்லப்பட்ட ஏதோ ஒன்றையோ அல்லது எல்லாவற்றையுமோ உங்களுக்கு போதிப்பார்கள் என்றால்
அவர்கள் கிருபையின் உபதேசங்களை போதிக்கிறவர்கள் என்று அடையாளங் கண்டு கொள்ளுங்கள்
இன்றைக்கு இந்த உபதேசங்களுக்கு அநேக கிறிஸ்தவர்கள் அடிமையாக போய்
விட்டார்கள்
வேத வாக்கியங்களில் தேவ கிருபை நமக்கு என்ன போதிக்கிறது?
Tit 2:11 ஏனெனில் எல்லா மனுஷருக்கும் இரட்சிப்பை அளிக்கத்தக்க தேவகிருபையானது பிரசன்னமாகி,
எல்லா மனுஷருக்கும் தேவ கிருபை இரட்சிப்பை அளிக்கத்தக்கதாக பிரசன்னமாகிறது
நாம் இரட்சிக்கப்படுகிறதற்கு கிரியை செய்ய வேண்டுமா அல்லது வேண்டாமா?
தேவனுக்கேற்ற கிரியை செய்யவில்லையென்றால் இரட்சிக்கப்பட முடியாது
நாம் பாவத்திலிருந்து மன்னிப்பை பெற்று இரட்சிக்கப்படுவதற்கு நாம்
கிரியை செய்ய வேண்டும்
Rom 10:14 அவரை விசுவாசியாதவர்கள் எப்படி அவரைத் தொழுதுகொள்ளுவார்கள்? அவரைக் குறித்துக் கேள்விப்படாதவர்கள் எப்படி விசுவாசிப்பார்கள்? பிரசங்கிக்கிறவன் இல்லாவிட்டால் எப்படிக் கேள்விப்படுவார்கள்?
இரட்சிக்கப்படுவதற்கு தேவனுடைய வார்த்தையை கேட்க
வேண்டும்
Rom 10:17 ஆதலால் விசுவாசம் கேள்வியினாலே வரும், கேள்வி தேவனுடைய வசனத்தினாலே வரும்
Rom 10:9 என்னவென்றால், கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய்.
நம்முடைய பாவத்திலிருந்து முதலில்
மனந்திரும்ப வேண்டும்
நாம் இனிமேல் நமக்காக நாம் வாழமல்
தேவனுக்காகவும் அவருடைய சித்தத்திற்காகவும் வாழ்வுதுதான் மனந்திரும்புதல் ஆகும்
Act 17:30 அறியாமையுள்ள காலங்களைத் தேவன் காணாதவர் போலிருந்தார்; இப்பொழுதோ மனந்திரும்பவேண்டுமென்று எங்குமுள்ள மனுஷரெல்லாருக்கும் கட்டளையிடுகிறார்.
Act 3:20 உங்கள் பாவங்கள் நிவிர்த்திசெய்யப்படும்பொருட்டு நீங்கள் மனந்திரும்பிக் குணப்படுங்கள்.
மனந்திரும்புதலுக்கான ஆதாரம் என்னவென்றால்
அதற்கான கிரியை செய்ய வேண்டும்
Act 26:20 ,,,,,,,,அவர்கள் தேவனிடத்திற்கு மனந்திரும்பிக் குணப்படவும், மனந்திரும்புதலுக்கேற்ற கிரியைகளைச் செய்யவும் வேண்டுமென்று அறிவித்தேன்.
2Pe 3:9 ,,,,,,ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்பவேண்டுமென்று விரும்பி, நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார்.
இயேசு கிறிஸ்துவை தேவனுடைய குமாரனென்று வாயினால் அறிக்கை செய்ய
வேண்டும்
Act 8:37 அதற்குப் பிலிப்பு: நீர் முழு இருதயத்தோடும் விசுவாசித்தால் தடையில்லையென்றான். அப்பொழுது அவன்: இயேசு கிறிஸ்துவைத் தேவனுடைய குமாரனென்று விசுவாசிக்கிறேன் என்று சொல்லி;
Rom 10:10 நீதியுண்டாக இருதயத்திலே விசுவாசிக்கப்படும், இரட்சிப்புண்டாக வாயினாலே அறிக்கைபண்ணப்படும்.
Mat 10:32 மனுஷர் முன்பாக என்னை அறிக்கை பண்ணுகிறவன் எவனோ, அவனை நானும் பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் முன்பாக அறிக்கைபண்ணுவேன்.
பிதா குமாரன் பரிசுத்த ஆவியின்
நாமத்தினால் ஞானஸ்நானம் பெற வேண்டும்
Mat 28:19 ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,
Mar 16:16 விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான்; விசுவாசியாதவனோ ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவான்.
Act 2:38 பேதுரு அவர்களை நோக்கி: நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள்.
பாருங்கள் ஒரு மனிதன் பாவத்திலிருந்து
இரட்சிக்கப்படுவதற்கு இந்த வழியைத்தான் தேவன் நமக்கு கொடுத்து இருக்கிறார்.
தண்ணீருக்குள்ளாக முழுகி ஞானஸ்நானம் பெறும்
போது தான் நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்படுகிறது
Act 22:16 இப்பொழுது நீ தாமதிக்கிறதென்ன? நீ எழுந்து கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொண்டு, ஞானஸ்நானம்பெற்று, உன் பாவங்கள் போகக் கழுவப்படு என்றான்.
ஞானஸ்நானம் பெறும் போது தான் நாம்
கிறிஸ்துவை தரித்து கொள்ளுகிறோம்
Gal 3:27 ஏனெனில், உங்களில் கிறிஸ்துவுக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்றவர்கள் எத்தனைபேரோ, அத்தனைபேரும் கிறிஸ்துவைத் தரித்துக்கொண்டீர்களே.
இரட்சிக்கப்படுவதற்கு நாம் தேவனுக்கேற்ற
கிரியை செய்தே ஆக வேண்டும்
மேலும் அந்த தேவ கிருபை என்ன போதிக்கிறது என்று பாருங்கள்
Tit 2:12 நாம் அவபக்தியையும் லௌகிக இச்சைகளையும் வெறுத்து, தெளிந்த புத்தியும் நீதியும் தேவபக்தியும் உள்ளவர்களாய் இவ்வுலகத்திலே ஜீவனம்பண்ணி,
Tit 2:13 நாம் நம்பியிருக்கிற ஆனந்த பாக்கியத்துக்கும், மகா தேவனும் நமது இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவினுடைய மகிமையின் பிரசன்னமாகுதலுக்கும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும்படி நமக்குப் போதிக்கிறது.
அந்த தேவ கிருபை நம்மை எந்த கிரியை செய்ய
வேண்டாம் என்று சொல்லுகிறதா அல்லது ஏதோ ஒன்றை செய்ய வேண்டும் என்று சொல்லுகிறதா?
1) அவ பக்தியை வெறுக்க வேண்டும்
2) லௌகிக இச்சைகளை(உலக ஆசைகள்) வெறுக்க
வேண்டும்
3) தெளிபுத்தியோடும் நீதியோடும் தேவ
பக்தியும் உள்ளவர்களாய் இவ்வுலகத்திலே ஜீவனம் பண்ண வேண்டும்
4) இயேசு கிறிஸ்துவினுடைய மகிமையின்
பிரச்சனமாகுதலுக்கு எதிர்பார்த்து கொண்டு இருக்க வேண்டும் என்று போதிக்கிறது
இங்கு தேவன் சொல்லக்கூடிய எல்லாமே நம்முடைய
கிரியை சம்பந்தப்பட்டது என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்
தொடர்ந்து இந்த உபதேசங்களை குறித்து உண்மை
சத்தியத்தை கற்றுக் கொள்ளுவோம்