சூரியனை அணிந்து இருந்த அந்த ஸ்திரீ யார்?
வெளிப்படுத்தின விசேஷத்தில் 12ம் அதிகாரத்தில் உள்ள அந்த ஸ்திரீ யாரை
அடையாளப்படுத்துகிறாள்?
ரோமன் கத்தோலிக்க சபையார் இந்த உருவகங்களை வைத்து மரியாளை தான்
குறிக்கிறது என்று சொல்லி ஒரு பெரிய விக்கிரக சிலையையும் உருவப்படங்களையும்
வரைந்து விட்டார்கள்
இந்த வசனங்களை வைத்து தான் மரியாளுடைய காலின் கீழ் சந்திரனும் தலையின்
பின்புறம் சூரியனும் நட்சத்திரங்களும் வைத்து கையில் ஒரு குழந்தை(இயேசு)
இருப்பதைப் போல சித்திரம் வரைந்து விட்டார்கள்
இந்த அதிகாரத்திற்கு நான் சொல்லக்கூடிய காரியங்கள் ஒருவேளை இருக்கலாம்
தான், உறுதியாக எனக்கு தெரியாது
1) இந்த ஸ்திரீ என்பது ஒருவேளை இஸ்ரவேல்
கோத்திரங்களை குறிக்க உருவகமாக பயன்படுத்தப்பட்டு இருக்கலாம்
Rev 12:1 அன்றியும் ஒரு பெரிய அடையாளம் வானத்திலே காணப்பட்டது; ஒரு ஸ்திரீ சூரியனை அணிந்திருந்தாள், அவள் பாதங்களின் கீழே சந்திரனும், அவள் சிரசின்மேல் பன்னிரண்டு நட்சத்திரங்களுள்ள கிரீடமும் இருந்தன.
இந்த வசனத்தை பாருங்கள்
Gen 37:9 அவன் வேறொரு சொப்பனம் கண்டு, தன் சகோதரரை நோக்கி: நான் இன்னும் ஒரு சொப்பனத்தைக் கண்டேன்; சூரியனும் சந்திரனும் பதினொரு நட்சத்திரங்களும் என்னை வணங்கினது என்றான்.
யாக்கோபு வம்சத்தார் அந்த ஸ்திரீயாக
ஒருவேளை இருக்கலாம்
இந்த வசனம் ஒருவேளை இயேசு கிறிஸ்து இஸ்ரவேல் கோத்திரத்தில்
யூதா கோத்திரத்தில் பிறந்ததை அடையாளப்படுத்தலாம்
Rev 12:2 அவள் கர்ப்பவதியாயிருந்து, பிரசவவேதனையடைந்து, பிள்ளைபெறும்படி வருத்தப்பட்டு அலறினாள்.
Rom 1:5 மாம்சத்தின்படி தாவீதின் சந்ததியில் பிறந்தவரும்....
Heb 7:14 நம்முடைய கர்த்தர் யூதாகோத்திரத்தில் தோன்றினாரென்பது பிரசித்தமாயிருக்கிறது; ,,,,
2) இது ஒருவேளை ரோம அரசங்கத்தை குறிப்பிடலாம் ஏனென்றால் ரோம
ராஜாக்களின் நாட்களில் தான் தேவன் தம்முடைய ராஜ்யத்தை ஸ்தாபிப்பார் தானியேல் 2ம்
அதிகாரத்தில் தீர்க்கதரிசனமாக வெளிப்படுத்தி இருக்கிறார்
Rev 12:3 அப்பொழுது வேறொரு அடையாளம் வானத்திலே காணப்பட்டது; ஏழு தலைகளையும், பத்துக் கொம்புகளையும், தன் தலைகளின்மேல் ஏழு முடிகளையுமுடைய சிவப்பான பெரிய வலுசர்ப்பமிருந்தது.
3) இது ஒருவேளை இயேசு கிறிஸ்து பிறந்த போது
அவரைக் கொன்று போடும் படி எரோது கட்டளையிட்டதை குறிப்பிடலாம்
Rev 12:4 அதின் வால் வானத்தின் நட்சத்திரங்களில் மூன்றிலொருபங்கை இழுத்து, அவைகளைப் பூமியில் விழத்தள்ளிற்று; பிரசவவேதனைப்படுகிற அந்த ஸ்திரீ பிள்ளை பெற்றவுடனே, அவளுடைய பிள்ளையைப் பட்சித்துப்போடும்படிக்கு அந்த வலுசர்ப்பம் அவளுக்கு முன்பாக நின்றது.
இந்த வசனத்தை படித்து பாருங்கள்
Mat 2:16 அப்பொழுது ஏரோது தான் சாஸ்திரிகளால் வஞ்சிக்கப்பட்டதைக் கண்டு, மிகுந்த கோபமடைந்து, ஆட்களை அனுப்பி, தான் சாஸ்திரிகளிடத்தில் திட்டமாய் விசாரித்த காலத்தின்படியே, பெத்லெகேமிலும் அதின் சகல எல்லைகளிலுமிருந்த இரண்டு வயதுக்குட்பட்ட எல்லா ஆண்பிள்ளைகளையும் கொலைசெய்தான்.
4) இது ஒருவேளை இயேசு கிறிஸ்து பாடுபட்டு
அடக்கம் பண்ணப்பட்டு உயிர்த்தெழுந்து பிதாவினிடத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டதை
இந்த வசனம் குறிப்பிடலாம்
Rev 12:5 சகல ஜாதிகளையும் இருப்புக்கோலால் ஆளுகைசெய்யும் ஆண்பிள்ளையை அவள் பெற்றாள்; அவளுடைய பிள்ளை தேவனிடத்திற்கும் அவருடைய சிங்காசனத்தினிடத்திற்கும் எடுத்துக்கொள்ளப்பட்டது.
Mar 16:19 இவ்விதமாய்க் கர்த்தர் அவர்களுடனே பேசினபின்பு, பரலோகத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, தேவனுடைய வலதுபாரிசத்தில் உட்கார்ந்தார்.
5) ஒருவேளை இங்கே ஸ்திரீயானவள் என்று
தொடர்ந்து சொல்லும்போது இஸ்ரவேல் கோத்திரங்களை சேர்ந்த அப்போஸ்தலர்களை பற்றி இது
குறிப்பிடலாம்
Rev 12:6 ஸ்திரீயானவள் வனாந்தரத்திற்கு ஓடிப்போனாள்; அங்கே ஆயிரத்திருநூற்றறுபது நாளளவும் அவளைப் போஷிப்பதற்காகத் தேவனால் ஆயத்தமாக்கப்பட்ட இடம் அவளுக்கு உண்டாயிருந்தது.
அப்போஸ்தலர்கள் உலகமெங்கும் போய்
கிறிஸ்துவின் சுவிசேஷத்தை பிரசங்கிப்பதற்கு அவர்கள் தேவனால்
பாதுக்காக்கப்பட்டார்கள் ஒருவேளை இது இந்த காரியங்களை குறிப்பிடலாம்
6) இது ஒருவேளை முதல் நுற்றாண்டு காலத்திலே
சபைக்கு ஏற்ப்பட்ட உபத்திரவங்களை குறிப்பிடலாம். இது ஆவிக்குரிய யுத்தமாக இருக்கிறது
Rev 12:7 வானத்திலே யுத்தமுண்டாயிற்று; மிகாவேலும் அவனைச் சேர்ந்த தூதர்களும் வலுசர்ப்பத்தோடே யுத்தம்பண்ணினார்கள்; வலுசர்ப்பமும் அதைச் சேர்ந்த தூதரும் யுத்தம்பண்ணியும் ஜெயங்கொள்ளவில்லை.
Rev 12:8 வானத்தில் அவர்கள் இருந்த இடமும் காணப்படாமற்போயிற்று.
Rev 12:9 உலகமனைத்தையும் மோசம்போக்குகிற பிசாசு என்றும் சாத்தான் என்றும் சொல்லப்பட்ட பழைய பாம்பாகிய பெரிய வலுசர்ப்பம் தள்ளப்பட்டது; அது பூமியிலே விழத்தள்ளப்பட்டது, அதனோடேகூட அதைச் சேர்ந்த தூதரும் தள்ளப்பட்டார்கள்.
7) ஒருவேளை உலகமெங்கும் கிறிஸ்துவின்
ராஜ்யமானது ஸ்தாபிக்கப்பட்டு பலன் கொடுப்பதை பற்றியும், அநேகர்
உபத்திரவப்பட்டாலும் மரணபரியந்தம் தேவனுடைய பிள்ளைகள் உண்மை இருந்ததை இந்த வசனம்
குறிப்பிடலாம்
Rev 12:10 அப்பொழுது வானத்திலே ஒரு பெரிய சத்தமுண்டாகி: இப்பொழுது இரட்சிப்பும் வல்லமையும் நமது தேவனுடைய ராஜ்யமும், அவருடைய கிறிஸ்துவின் அதிகாரமும் உண்டாயிருக்கிறது; இரவும் பகலும் நம்முடைய தேவனுக்கு முன்பாக நம்முடைய சகோதரர்மேல் குற்றஞ் சுமத்தும்பொருட்டு அவர்கள்மேல் குற்றஞ்சாட்டுகிறவன் தாழத் தள்ளப்பட்டுப்போனான்.
Rev 12:11 மரணம் நேரிடுகிறதாயிருந்தாலும் அதற்குத் தப்பும்படி தங்கள் ஜீவனையும் பாராமல், ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினாலும் தங்கள் சாட்சியின் வசனத்தினாலும் அவனை ஜெயித்தார்கள்.
Col 1:6 அந்த நம்பிக்கையைக்குறித்து, நீங்கள் முன்னமே சத்தியவசனமாகிய சுவிசேஷத்தினாலே கேள்விப்பட்டீர்கள்; அந்தச் சுவிசேஷம் உலகமெங்கும் பரம்பிப் பலன்தருகிறதுபோல, ,,,,,
8) இது ஒருவேளை தொடர்ந்து இஸ்ரவேல்
கோத்திரங்களை சேர்ந்த அப்போஸ்தலர்களுக்கும் தீர்க்கதரிசிகளுக்கும் பிசாசினால்
வரக்கூடிய சோதனைகளையும் உபத்திரவங்களையும் குறிப்பிடலாம்
Rev 12:12 ஆகையால் பரலோகங்களே! அவைகளில் வாசமாயிருக்கிறவர்களே! களிகூருங்கள். பூமியிலும் சமுத்திரத்திலும் குடியிருக்கிறவர்களே! ஐயோ, பிசாசானவன் தனக்குக் கொஞ்சக்காலமாத்திரம் உண்டென்று அறிந்து, மிகுந்த கோபங்கொண்டு, உங்களிடத்தில் இறங்கினபடியால், உங்களுக்கு ஆபத்துவரும் என்று சொல்லக்கேட்டேன்.
Rev 12:13 வலுசர்ப்பமானது தான் பூமியிலே தள்ளப்பட்டதை அறிந்து, அந்த ஆண் பிள்ளையைப்பெற்ற ஸ்திரீயைத் துன்பப்படுத்தினது.
9) இது ஒருவேளை அப்போஸ்தலர்களுக்கும்
தீர்க்கதரிசிகளுக்கும் உபவத்திரவம் வந்தாலும் அவர்களை தேவன் பாதுகாத்தார் என்பதை குறிப்பிடலாம்
Rev 12:14 ஸ்திரீயானவள் அந்தப் பாம்பின் முகத்திற்கு விலகி, ஒரு காலமும், காலங்களும், அரைக்காலமுமாகப் போஷிக்கப்படத்தக்கதாய் வனாந்தரத்திலுள்ள தன் இடத்திற்குப் பறந்துபோகும்படி பெருங்கழுகின் இரண்டு சிறகுகள் அவளுக்குக் கொடுக்கப்பட்டது.
அநேக அப்போஸ்தலர்கள் கி,பி 70 வரை
உலகமெங்கும் அநேக தேசங்களுக்கு போய் கிறிஸ்துவின் சுவிசேஷத்தை அறிவித்தார்கள். அது
வரைக்கும் அவர்கள் ஜீவன் தேவனால் பாதுகாக்கப்பட்டு இருந்தது
10) ஒருவேளை இது அப்போஸ்தலர்களுடைய
ஜீவனுக்கு உபத்திரம் வந்த போது பூமிக்குரிய அநேகர் அவர்களை பாதுகாத்ததை ஒருவேளை
இது குறிப்பிடலாம்
Rev 12:15 அப்பொழுது அந்த ஸ்திரீயை வெள்ளங்கொண்டுபோகும்படிக்குப் பாம்பானது தன் வாயிலிருந்து ஒரு நதிபோன்ற வெள்ளத்தை அவளுக்குப் பின்னாக ஊற்றிவிட்டது.
Rev 12:16 பூமியானது ஸ்திரீக்கு உதவியாகத் தன் வாயைத் திறந்து, வலுசர்ப்பம் தன் வாயிலிருந்து ஊற்றின வெள்ளத்தை விழுங்கினது.
இதற்கு சில உதாரணங்களை பாருங்கள்
Act 5:38 இப்பொழுது நான் உங்களுக்குச் சொல்லுகிறதென்னவென்றால், இந்த மனுஷருக்கு ஒன்றுஞ்செய்யாமல் இவர்களை விட்டுவிடுங்கள். இந்த யோசனையும் இந்தக் கிரியையும் மனுஷரால் உண்டாயிருந்ததானால் ஒழிந்துபோம்;
Act 5:39 தேவனால் உண்டாயிருந்ததேயானால், அதை ஒழித்துவிட உங்களால் கூடாது; தேவனோடே போர்செய்கிறவர்களாய்க் காணப்படாதபடிக்குப் பாருங்கள் என்றான்.
Act 23:23 பின்பு அவன் நூற்றுக்கு அதிபதிகளில் இரண்டுபேரை அழைத்து, செசரியா பட்டணத்திற்குப் போகும்படி இருநூறு காலாட்களையும், எழுபது குதிரை வீரரையும், இருநூறு ஈட்டிக்காரரையும், இராத்திரியில் மூன்றாம்மணி வேளையிலே, ஆயத்தம்பண்ணுங்களென்றும்;
Act 23:24 பவுலை ஏற்றி, தேசாதிபதியாகிய பேலிக்ஸினிடத்திற்குப் பத்திரமாய்க் கொண்டுபோகும்படிக்குக் குதிரைகளை ஆயத்தப்படுத்துங்களென்றும் சொன்னதுமன்றி,
Act 27:43 நூற்றுக்கு அதிபதி பவுலைக் காப்பாற்ற மனதாயிருந்து, அவர்களுடைய யோசனையைத் தடுத்து, நீந்தத்தக்கவர்கள் முந்திக் கடலில் விழுந்து கரையேறவும்,
11) இது அப்போஸ்தலர்களுடைய காலத்திலும்
அவர்களுக்கு பின்வந்த காலத்திலும் கிறிஸ்தவர்களுக்கு ஏற்ப்பட்ட ஒட்டு மொத்த உபத்திரவங்களை இது குறிப்பிடலாம்
Rev 12:17 அப்பொழுது வலுசர்ப்பமானது ஸ்திரீயின்மேல் கோபங்கொண்டு, தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களும், இயேசு கிறிஸ்துவைக் குறித்துச் சாட்சியை உடையவர்களுமாகிய அவளுடைய சந்ததியான மற்றவர்களுடனே யுத்தம்பண்ணப்போயிற்று.
அவளுடைய சந்ததி என்று சொல்லும் போது நாம் (கிறிஸ்தவர்கள்)
ஆபிரகாமின் ஆவிக்குரிய பிள்ளைகளாக இருக்கலாம்
மேலே சொல்லப்பட்ட எல்லா காரியங்களுக்கும்
அநேக வசனங்களை ஆதாரமாக கொடுக்க முடியும்
நான் இது தான் இந்த தீர்க்கதரிசனத்தின்
அர்த்தம் என்று சொல்லவில்லை ஒருவேளை இருக்கலாம் அல்லது இல்லாமலும் இருக்கலாம் என்று
தான் சொல்லி இருக்கிறேன்
Pro 30:5 தேவனுடைய வசனமெல்லாம் புடமிடப்பட்டவைகள்; தம்மை அண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு அவர் கேடகமானவர்.
Pro 30:6 அவருடைய வசனங்களோடு ஒன்றையும் கூட்டாதே, கூட்டினால் அவர் உன்னைக் கடிந்துகொள்வார், நீ பொய்யனாவாய்.
No comments:
Post a Comment