Thursday, 15 March 2018

மோசேயின் நியாயப்பிரமாணம் என்பது வேறு தேவனுடைய நியாயப்பிரமாணம் என்பது வேறு என்று போதிக்கிறார்களே அது தேவனுடைய சத்தியமா?


பாடம் :11 ஓய்வு நாள் பிரமாண உபதேசங்கள்    



                                           
ஏழாம் ஓய்வுநாளை ஆசரிக்கக்கூடியவர்கள் நியாயப்பிரமாணத்தை இரண்டாக பிரித்து கொள்ளுகிறார்கள்
1) தேவனுடைய நியாயப்பிரமாணம் (அல்லது) கர்த்தருடைய நியாயப்பிரமாணம்
2) மோசேயின் நியாயப்பிரமாணம்


  1. இவர்கள் சொல்லக்கூடியது என்னவென்றால் தேவனுடைய நியாயப்பிரமாணம்(கர்த்தருடைய நியாயப்பிரமாணம்) என்பது பத்து கட்டளைகள் என்கிறார்கள்
  2. மோசேயின் பிரமாணம் என்பது மற்ற எல்லா கட்டளைகளும்(603) அதாவது பலிகள், காணிக்கைகள், பண்டிகைகள் போன்ற மற்ற பிரமாணங்கள் எல்லாம் சேர்த்து மோசேயின் பிரமாணம் என்கிறார்கள்
  3.  இவர்களுடைய போதனைகள் என்னவென்றால் இயேசு கிறிஸ்து தேவனுடைய நியாயப்பிரமாணமாகிய பத்து கட்டளைகளை சிலுவையில் குலைத்து போடவில்லை மோசேயின் பிரமாணத்தை மட்டுமே குலைத்து போட்டார் என்கிறார்கள்
  4. கர்த்தருடைய நியாயப்பிரமாணம் என்றாலும் மோசேயின் நியாயப்பிரமாணம் என்றாலும் இரண்டும் ஒன்று தான் அநேக வசன ஆதாரங்கள் இருக்கிறது



மோசேயின் நியாயப்பிரமாணம் என்றாலும் அது கர்த்தரிடத்தில் வந்தது என்பதை நாம் ஒத்துக் கொள்ள வேண்டும்
Joh 1:17 எப்படியெனில் நியாயப்பிரமாணம் மோசேயின் மூலமாய்க் கொடுக்கப்பட்டது, ,,,,
Gal 3:19 அப்படியானால், நியாயப்பிரமாணத்தின் நோக்கமென்ன? ,,,, தேவதூதரைக்கொண்டு மத்தியஸ்தன் கையிலே கட்டளையிடப்பட்டது.

மோசேயின் நியாயப்பிரமாணமாக இருந்தாலும் அது தேவனாகிய கர்த்தருடைய எழுதிக் கொடுத்த கட்டளைகளும் கற்பனைகளும் நியாயங்களும் சாட்சிகளுமாய் இருக்கிறது
1Ki 2:4 மோசேயின் நியாயப்பிரமாணத்தில் எழுதியிருக்கிறபடி, நீ உன் தேவனாகிய கர்த்தருடைய கட்டளைகளையும், கற்பனைகளையும், நியாயங்களையும், சாட்சிகளையும் கைக்கொள்ள, அவர் வழிகளில் நடக்கும்படிக்கு அவருடைய காவலைக் காப்பாயாக.
Mal 4:4 ஓரேபிலே இஸ்ரவேலரெல்லாருக்காகவும் என் தாசனாகிய மோசேக்கு நான் கற்பித்த நியாயப்பிரமாணமாகிய கட்டளைகளையும் நியாயங்களையும் நினையுங்கள்.
2Ki 17:36 உங்களை மகா வல்லமையினாலும் ஓங்கிய புயத்தினாலும் எகிப்து தேசத்திலிருந்து வரப்பண்ணின கர்த்தருக்கே பயந்து, அவரையே பணிந்துகொண்டு, அவருக்கே பலியிட்டு,
2Ki 17:37 அவர் உங்களுக்கு எழுதிக்கொடுத்த திட்டங்களின்படியும், முறைமைகளின்படியும், நியாயப்பிரமாணத்தின்படியும், கற்பனைகளின்படியும், நீங்கள் சகல நாளும் செய்கிறதற்குக் கவனமாயிருந்து அந்நிய தேவர்களுக்குப் பயப்படாதிருங்கள்.

ஓய்வுநாட்களிலும் மாதப்பிறப்புகளிலும் பண்டிகைகளிலும் செலுத்த வேண்டிய சர்வாங்க தகனபலிகளும் என்பது இந்த வசனத்தில் மோசேயின் பிரமாணம் என்று சொல்லப்படாமலும் கர்த்தருடைய நியாயப்பிரமாணம் என்று சொல்லப்பட்டு இருப்பதை  என்பதை கவனியுங்கள்
2Ch 31:3 ராஜா கர்த்தருடைய நியாயப்பிரமாணத்தில் எழுதியிருக்கிறபடியே அந்திசந்திகளில் செலுத்தவேண்டிய சர்வாங்க தகனபலிகளுக்கும், ஓய்வுநாட்களிலும் மாதப்பிறப்புகளிலும் பண்டிகைகளிலும் செலுத்தவேண்டிய சர்வாங்க தகனபலிகளுக்கும் தன் ஆஸ்தியிலிருந்தெடுத்துத் தன் பங்கைக் கொடுத்தான்.

எஸ்றா மோசேயின் நியாயப்பிரமாணத்திலே தேறின வேதபாரகனாக இருந்தார். அந்த மோசேயின் பிரமாணத்தை தேவன் அருளி இருந்தார்
Ezr 7:6 இந்த எஸ்றா இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் அருளிய மோசேயின் நியாயப்பிரமாணத்திலே தேறின வேதபாரகனாயிருந்தான்; ,,,

எஸ்றா மோசேயின் நியாயப்பிரமாணத்தை போதிக்கிறவராக இருந்தாலும் அவர் எப்படி அழைக்கப்பட்டு இருக்கிறார் ?
Ezr 7:12 ராஜாதிராஜாவாகிய அர்தசஷ்டா பரலோகத்தின் தேவனுடைய நியாயப்பிரமாணத்தைப் போதிக்கிற உத்தம வேதபாரகனாகிய எஸ்றா ,,,
Ezr 7:26 உன் தேவனுடைய நியாயப்பிரமாணத்தின்படியேயும், ராஜாவினுடைய நியாயப்பிரமாணத்தின்படியேயும் செய்யாதவனெவனும் உடனே மரணத்துக்காகிலும், தேசத்துக்குப் புறம்பாக்குதலுக்காகிலும், அபராதத்துக்காகிலும், காவலுக்காகிலும் தீர்க்கப்பட்டுத் தண்டிக்கப்படக்கடவன் என்று எழுதியிருந்தது.

ஜனங்களுக்கு எஸ்றா மோசேயின் நியாயப்பிரமாணத்தை வாசித்தார்
Neh 8:1 ,,,, கர்த்தர் இஸ்ரவேலுக்குக் கற்பித்த மோசேயின் நியாயப்பிரமாண புஸ்தகத்தைக் கொண்டுவரவேண்டுமென்று வேதபாரகனாகிய எஸ்றாவுக்குச் சொன்னார்கள்.

ஆனால் அது என்ன புஸ்தகம் என்று அழைக்கப்படுகிறது?
தேவனுடைய நியாயப்பிரமாணம் என்று அழைக்கப்பட்டது
Neh 8:8 அவர்கள் தேவனுடைய நியாயப்பிரமாணப் புஸ்தகத்தை தீர்க்கமாக வாசித்து, அர்த்தஞ்சொல்லி, வாசித்ததை அவர்களுக்கு விளங்கப்பண்ணினார்கள்.
Neh 8:18 முதலாம் நாள் தொடங்கிக் கடைசி நாள்மட்டும், தினம்தினம் தேவனுடைய நியாயப்பிரமாண புஸ்தகம் வாசிக்கப்பட்டது,,,,

  • அது பத்துக்கட்டளை மாத்திரம் என்றால் எதற்காக அதை வாசித்து அர்த்தம் சொல்லி வாசித்ததை அவர்களுக்கு விளங்கப்பண்ண வேண்டும்?

மோசேயின் நியாயப்பிரமாணம் கர்த்தருடைய நியாயப்பிரமாணம் என்று அழைக்கப்பட்டது
Neh 9:3 ,,, அப்பொழுது ஒரு ஜாமமட்டும் அவர்களுடைய தேவனாகிய கர்த்தரின் நியாயப்பிரமாணப் புஸ்தகம் வாசிக்கப்பட்டது; ,,,
Neh 10:29 தங்களுக்குப் பெரியவர்களாகிய தங்கள் சகோதரரோடே கூடிக்கொண்டு: தேவனுடைய தாசனாகிய மோசேயைக்கொண்டு கொடுக்கப்பட்ட தேவனுடைய நியாயப்பிரமாணத்தின்படி நடந்துகொள்வோம் என்றும், எங்கள் ஆண்டவராகிய கர்த்தரின் கற்பனைகளையும் சகல நீதிநியாயங்களையும், கட்டளைகளையும் எல்லாம் கைக்கொண்டு, அவைகளின்படி செய்வோம் ,,,

குழந்தையை பெற்றுக் கொண்டவர்கள் ஆட்டுக்குட்டியை கொண்டுவர சக்தில்லாதவர்களாக இருந்தால் புறாக்குஞ்சுகளை பலி செலுத்துவது தேவனுடைய நியாயப்பிரமாணத்தில் (கர்த்தருடைய நியாயப்பிரமாணம்) இருக்கிறதா அல்லது மோசேயின் நியாயப்பிரமாணத்தில் இருக்கிறதா?
அது மோசேயின் நியாயப்பிரமாணத்தில் இருக்கிறது
Lev 12:8 ஆட்டுக்குட்டியைக் கொண்டுவர அவளுக்குச் சக்தியில்லாதிருந்தால், இரண்டு காட்டுப்புறாக்களையாவது இரண்டு புறாக்குஞ்சுகளையாவது, ஒன்றைச் சர்வாங்க தகனபலியாகவும் மற்றொன்றைப் பாவநிவாரணபலியாகவும் கொண்டுவரக்கடவள்; அதினால் ஆசாரியன் அவளுக்காகப் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்; அப்பொழுது அவள் சுத்தமாவாள் என்று சொல் என்றார்.

ஆனால் இயேசு கிறிஸ்து பிறந்தபோது அவருடைய பெற்றோர்கள் எந்த பிரமாணத்தின்படி புறாக்குஞ்சுகளை பலி செலுத்தினார்கள்?
Luk 2:23 முதற்பேறான எந்த ஆண்பிள்ளையும் கர்த்தருக்குப் பரிசுத்தமானதென்னப்படும் என்று கர்த்தருடைய நியாயப்பிரமாணத்தில் எழுதியிருக்கிறபடி அவரைக் கர்த்தருக்கென்று ஒப்புக்கொடுக்கவும்,
Luk 2:24 கர்த்தருடைய நியாயப்பிரமாணத்தில் சொல்லியிருக்கிறபடி, ஒரு ஜோடு காட்டுப்புறாவையாவது இரண்டு புறாக்குஞ்சுகளையாவது பலியாகச் செலுத்தவும், அவரை எருசலேமுக்குக் கொண்டுபோனார்கள்.
Luk 2:39 கர்த்தருடைய நியாயப்பிரமாணத்தின்படி சகலத்தையும் அவர்கள் செய்து முடித்தபின்பு, கலிலேயா நாட்டிலுள்ள தங்கள் ஊராகிய நாசரேத்துக்குத் திரும்பிப்போனார்கள்.

இந்த வசனமே மோசேயின் பிரமாணம் என்றாலும் கர்த்தருடைய பிரமாணம்(தேவனுடைய பிரமாணம்) என்றாலும் இரண்டு ஒன்று தான் என்று போதிக்கிறது

கர்த்தருக்கு சித்தமானால் தொடரும்






No comments:

Post a Comment