Friday, 22 May 2020

இயேசு கிறிஸ்து எதற்காக மறுபடியும் வருகிறார்?


பகுதி :2 நித்திய நியாயத்தீர்ப்பின் நாள் (Eternal Judgement Day)

இயேசு கிறிஸ்து எதற்காக மறுபடியும் வருகிறார்?

தேவனுடைய நித்திய நியாயத்தீர்ப்பு நாளைக் குறித்த சத்தியங்களை கற்றுக் கொண்டு வருகிறோம்

நம்முடைய வேத வாக்கியம் நித்திய நியாத்தீர்ப்பின் நாள் எப்படி இருக்கும் என்று மிக துல்லியமாக போதிக்கிறது

அதற்கு காரணம் என்னவென்றால் வேத வாக்கியத்தின் ஒவ்வொரு எழுத்தும் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்த தேவனுடையது

கிறிஸ்துவின் நியாயசனத்திற்கு முன்பாக பூமியில் வாழ்ந்த ஒவ்வொரு மனிதனும் நியாயந்தீர்க்கப்படுவதற்காக நிற்க வேண்டும்

இன்றைக்கு அநேகர் இயேசு கிறிஸ்துவை அடிக்கப்பட்ட வண்ணமாய் இருக்கிற ஆட்டிக்குட்டியாக பார்த்துக் கொண்டு அவரை ஏற்றுக் கொள்ள மனமில்லாமல் பரியாசம் பண்ணிக் கொண்டு இருக்கிறார்கள்

ஆனால் நித்திய நியாயத்தீர்ப்பின் நாளில் சிங்காசனத்தில் யூதா கோத்திரத்தின் சிங்கமாக வீற்றிருக்கும் போது யார் அவரை பார்த்து பயப்படாதிருப்பார்கள்

அன்றைய நாளில் எல்லாருடைய முழங்கால்களும் அவருக்கு முன்பாக முடங்கும்

இன்றைக்கு ஆட்டுக்குட்டியை யார் என்ன வேண்டுமானாலும் பரியாசம் செய்யலாம் ஆனால் அந்த நாளில்
யூத கோத்திர சிங்கத்திற்கு முன்பாக யார் எதிர்த்து நிற்க முடியும்?

அன்றைக்கு தான் ஆட்டுக்குட்டியானவரின் கோபத்தை கண்டு எல்லாரும் பயந்து நடுங்குவார்கள்

இயேசு கிறிஸ்து தம்முடைய இரண்டாம் வருகையில் வரும் போது அவருக்கு விரோதமாய் இருந்தவர்கள் அவரைக் கண்டு பயந்து நடுங்குவார்கள்
வெளி 6:15 பூமியின் ராஜாக்களும், பெரியோர்களும், ஐசுவரியவான்களும், சேனைத்தலைவர்களும், பலவான்களும், அடிமைகள் யாவரும், சுயாதீனர் யாவரும், பர்வதங்களின் குகைகளிலும் கன்மலைகளிலும் ஒளித்துக்கொண்டு,
வெளி 6:16 பர்வதங்களையும் கன்மலைகளையும் நோக்கி: நீங்கள் எங்கள்மேல் விழுந்து, சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருடைய முகத்திற்கும், ஆட்டுக்குட்டியானவருடைய கோபத்திற்கும் எங்களை மறைத்துக்கொள்ளுங்கள்;
வெளி 6:17 அவருடைய கோபாக்கினையின் மகா நாள் வந்துவிட்டது, யார் நிலைநிற்கக்கூடும் என்றார்கள்.

ஆனால் தேவனுடைய வார்த்தைகளுக்கு கீழ்ப்படிந்த தேவனுடைய பிள்ளைகளுக்கு அந்த நாள் மிகுந்த சந்தோசத்தை கொடுக்க கூடிய நாள்

இப்போது கேள்வி என்னவென்றால் கிறிஸ்து எதற்காக வருகிறார்?
அப் 17:31 மேலும் ஒரு நாளைக் குறித்திருக்கிறார்; அதிலே அவர் தாம் நியமித்த மனுஷனைக்கொண்டு, பூலோகத்தை நீதியாய் நியாயந்தீர்ப்பார்;,,,,,,,,,,,
இயேசு கிறிஸ்து பூமியை நீதியாய் நியாயந்தீர்ப்பதற்காக வருகிறார்
அவரை மரித்தோரிலிருந்து தேவன் எழுப்பினதினாலே அதின் நிச்சயத்தை எல்லாருக்கும் விளங்கப்பண்ணி இருக்கிறார்

இயேசு கிறிஸ்து தமக்காகக் காத்துக் கொண்டிருக்கிறவர்களுக்கு நித்திய இரட்சிப்பை அருளும் படி வரப்போகிறார்
எபி 9:28 ,,,,,,,,,,, தமக்காகக் காத்துக்கொண்டிருக்கிறவர்களுக்கு இரட்சிப்பை அருளும்படி இரண்டாந்தரம் பாவமில்லாமல் தரிசனமாவார்.

இப்போது இன்னொரு கேள்வி

நம்மை நியாயந்தீர்க்கப் போகிறவர் யார்?

பிதாவாகிய தேவனா? அல்லது இயேசு கிறிஸ்துவா?
யோவா 5:22,,,,,,,, பிதாவானவர் தாமே ஒருவருக்கும் நியாயத்தீர்ப்புச் செய்யாமல், நியாயத்தீர்ப்புச் செய்யும் அதிகாரம் முழுவதையும் குமாரனுக்கு ஒப்புக்கொடுத்திருக்கிறார்.

எல்லாரும் பிதாவை கனம்பண்ணுகிறது போல எல்லாரும் குமாரனையும் கனம் பண்ணுவதற்கு நியாயத்தீர்ப்பு செய்யும் அதிகாரம் முழுவதையும் அவருக்கு கொடுத்து இருக்கிறார்

பிதாவாகிய தேவன் இயேசு கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பினதினாலே எல்லாருக்கும் நியாயத்தீர்ப்பு இருக்கிறது என்பதை நமக்கு விளங்கப்பண்ணி இருக்கிறார்
அப் 17:31 மேலும் ஒரு நாளைக் குறித்திருக்கிறார்;,,,,, அந்த மனுஷனை மரித்தோரிலிருந்து எழுப்பினதினாலே அதின் நிச்சயத்தை எல்லாருக்கும் விளங்கப்பண்ணினார் என்றான்.
2 தீமோ 4:1 நான் தேவனுக்கு முன்பாகவும், உயிரோடிருக்கிறவர்களையும் மரித்தவர்களையும் நியாயந்தீர்க்கப்போகிற கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு முன்பாகவும், அவருடைய பிரசன்னமாகுதலையும் அவருடைய ராஜ்யத்தையும் சாட்சியாக வைத்துக் கட்டளையிடுகிறதாவது:

நியாயத்தீர்ப்பின் நாளிலே யாரும் தப்பித்துக் கொள்ள முடியாது என்பதை நாம் கவனிக்க வேண்டும்

இயேசு கிறிஸ்து மரித்தவர்களையும் உயிரோடிருக்கிறவர்களையும் நியாயந்தீர்ப்பார் என்பதை மனதிலே வைத்து கொள்ள வேண்டும்

பிதாவாகிய தேவன் இயேசு கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பி எல்லாருக்கு நியாயத்தீர்ப்பு நாள் இருக்கிறது என்று நிச்சயப்படுத்தி இருக்கிறார்
அப் 3:26,,,,,,,, உங்களை ஆசீர்வதிக்கும்படி தேவன் தம்முடைய பிள்ளையாகிய இயேசுவை எழுப்பி, முதலாவது உங்களிடத்திற்கே அவரை அனுப்பினார் என்றான்.
அப் 5:30 நீங்கள் மரத்திலே தூக்கிக் கொலைசெய்த இயேசுவை நம்முடைய பிதாக்களின் தேவன் எழுப்பி,

பிதாவின் மகிமையினாலே கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுப்பப்பட்டார்
ரோம 6:4 மேலும் பிதாவின் மகிமையினாலே கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுப்பப்பட்டதுபோல,,,,,,,

இயேசு கிறிஸ்துவின் வருகையின் நாளில் மரித்தவர்கள் எல்லாரும் உயிர்த்தெழுவார்கள்

தேவன் சாவுக்கேதுவான நம்முடைய சரீரங்களையும் உயிர்ப்பிப்பார்
ரோம 8:11 அன்றியும் இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பினவருடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பினவர் உங்களில் வாசமாயிருக்கிற தம்முடைய ஆவியினாலே சாவுக்கேதுவான உங்கள் சரீரங்களையும் உயிர்ப்பிப்பார்.

இயேசு கிறிஸ்து எப்படி உயிர்த்தெழுந்தாரோ அப்படியே நாமும் உயிர்ப்பிக்கப்படுவோம்

இயேசு கிறிஸ்துவை தேவன் மரித்தோரிலிருந்து எழுப்பினார் என்று இருதயத்தில் விசுவாசித்தால் தான் நாம் இரட்சிக்கபட முடியும்
ரோம 10:9 என்னவென்றால், கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய்.

தேவன் ஏன் கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பினார்?
1பேது 1:21 உங்கள் விசுவாசமும் நம்பிக்கையும் தேவன்மேலிருக்கும்படி, அவரை மரித்தோரிலிருந்து எழுப்பி, அவருக்கு மகிமையைக் கொடுத்தார்.

நம்முடைய விசுவாசமும் நம்பிக்கையும் தேவன் மேல் இருக்கும் படி இயேசுவை மரித்தோரிலிருந்து தேவன் உயிரோடு எழுப்பினார்

தேவன் ஏன் இயேசு கிறிஸ்துவுக்கு நியாயத்தீர்ப்பு செய்யும் அதிகாரத்தை கொடுத்து இருக்கிறார்?
யோவா 5:27 அவர் மனுஷகுமாரனாயிருக்கிறபடியால், நியாயத்தீர்ப்புச் செய்யும்படிக்கு அதிகாரத்தையும் அவருக்குக் கொடுத்திருக்கிறார்.

அவர் மனுஷகுமாரனாயிருக்கிறபடியால் அந்த அதிகாரத்தை தேவன் அவருக்கு கொடுத்து இருக்கிறார்

பிதாவானவர்(தேவன்) ஏன் அவரைக் கொண்டு உலகத்தை நியாயந்தீர்க்க வேண்டும்?
யோவா 5:22 அன்றியும் பிதாவைக் கனம்பண்ணுகிறதுபோல எல்லாரும் குமாரனையும் கனம்பண்ணும்படிக்கு, பிதாவானவர் தாமே ஒருவருக்கும் நியாயத்தீர்ப்புச் செய்யாமல், நியாயத்தீர்ப்புச் செய்யும் அதிகாரம் முழுவதையும் குமாரனுக்கு ஒப்புக்கொடுத்திருக்கிறார்.

இயேசு கிறிஸ்துவின் வருகையை எல்லாருடைய கண்களும் காணும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்
வெளி 1:7 இதோ, மேகங்களுடனே வருகிறார்; கண்கள் யாவும் அவரைக் காணும், அவரைக் குத்தினவர்களும் அவரைக் காண்பார்கள்; பூமியின் கோத்திரத்தாரெல்லாரும் அவரைப் பார்த்துப் புலம்புவார்கள். அப்படியே ஆகும், ஆமென்.

கர்த்தருக்கு சித்தமானால் கிறிஸ்துவின் வருகையை குறித்து இன்னும் கற்றுக் கொள்ளுவோம்