Thursday, 16 April 2020

நித்திய நியாயத்தீர்ப்பின் நாளைக் குறித்து நம்மில் எத்தனை பேர் பயப்படுகிறோம்?


பகுதி :1 நித்திய நியாயத்தீர்ப்பின் நாள் (Eternal Judgement Day)

நித்திய நியாயத்தீர்ப்பின் நாளைக் குறித்து நம்மில் எத்தனை பேர் பயப்படுகிறோம்?

நாம் தேவனுடைய சகல சத்தியங்களையும் அறிந்து வைத்து இருக்க வேண்டும் என்று தேவன் கட்டளையிட்டு இருக்கிறார்

அநேகர் நாம் பத்து வசனத்தைக் கற்றுக் கொண்டு அதில் நிலைத்து இருந்தால் போதும் பரலோகம் போய் விடலாம் என்கிறார்கள்

நாம் பத்து வசனம் கற்றுக் கொண்டு நிலைத்து இருந்தால் போதும் என்றால் தேவன் ஏன் புதிய ஏற்பாட்டில் இருபத்தி ஏழு புஸ்தகங்களை நமக்கு ஏன் கொடுக்க வேண்டும்?
Jas 2:12 சுயாதீனப்பிரமாணத்தினால் நியாயத்தீர்ப்படையப்போகிறவர்களாய் அதற்கேற்றபடி பேசி, அதற்கேற்றபடி செய்யுங்கள்.

இயேசு கிறிஸ்து கட்டளையிட்ட சகல சத்தியத்தையும் நாம் கற்றுக் கொள்ள வேண்டும்
Mat 28:20 நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம்பண்ணுங்கள். இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார். ஆமென்.

பிரயோஜனமானவைகளில் ஒன்றையும் நாம் மறைத்து வைக்கவும் கூடாது அதை நாம் நிராகரிக்கவும் கூடாது
Act 20:20 பிரயோஜனமானவைகளில் ஒன்றையும் நான் உங்களுக்கு மறைத்து வைக்காமல், வெளியரங்கமாக வீடுகள்தோறும் உங்களுக்குப் பிரசங்கித்து, உபதேசம்பண்ணி,

தேவனுடைய ஆலோசனையில் ஒன்றையும் நாம் மறைத்து வைக்கவும் கூடாது கற்றுக் கொள்ளாமல் இருக்கவும் கூடாது
Act 20:26 தேவனுடைய ஆலோசனையில் ஒன்றையும் நான் மறைத்துவைக்காமல், எல்லாவற்றையும் உங்களுக்கு அறிவித்தபடியினாலே,
நாம் வேதத்தில் உள்ள பிரயோஜனமானவைகளை மறைத்து வைக்கும் போது அவர்களுடைய இரத்தப்பழி நாம் மேல் சுமரும்
Act 20:27 எல்லாருடைய இரத்தப்பழிக்கும் நீங்கி நான் சுத்தமாயிருக்கிறேனென்பதற்கு உங்களை இன்றையத்தினம் சாட்சிகளாக வைக்கிறேன்.

நித்திய நியாயத்தீர்ப்பை நாளைக் குறித்து எத்தனை பேர் அறிந்து வைத்து இருக்கிறார்கள்

நித்திய நியாயத்தீர்ப்பு நாள் என்கிற உபதேசம் என்பது மூல உபதேசங்கள் தான்
Heb 6:2 ஸ்நானங்களுக்கடுத்த உபதேசம், கைகளை வைக்குதல், மரித்தோரின் உயிர்த்தெழுதல், நித்திய நியாயத்தீர்ப்பு என்பவைகளாகிய அஸ்திபாரத்தை மறுபடியும் போடாமல், பூரணராகும்படி கடந்து போவோமாக.

இந்த நித்திய நியாயத்தீர்ப்பின் நாள் உபதேசம் என்பது ஒவ்வொரு கிறிஸ்தவர்களும் தெரிந்து கொள்ள வேண்டிய அஸ்திபாரமான உபதேசம் தான்

நித்திய நியாயத்தீர்ப்பின் நாளைக் குறித்து யாரும் அதிகமாய் போதிப்பது இல்லை அதைப் பற்றி கவலைப்படுவதும் இல்லை

பவுல் ஆளுநராகிய பேலிக்ஸிடம் நியாயத்தீர்ப்பை குறித்து பிரசங்கித்த போது அவர் பயமடைந்தார்
Act 24:25 அவன், நீதியையும், இச்சையடக்கத்தையும், இனிவரும் நியாயத்தீர்ப்பையும்குறித்துப் பேசுகையில், பேலிக்ஸ் பயமடைந்து: இப்பொழுது நீ போகலாம், எனக்குச் சமயமானபோது உன்னை அழைப்பிப்பேன் என்றான்.

நித்திய நியாயத்தீர்ப்பின் நாளைக் குறித்து கிறிஸ்தவர்கள் என்ன சிந்திக்கிறார்கள்?

பாவிகளுக்கு மாத்திரமே நியாயத்தீர்ப்பு என்றும் தங்களுக்கு நியாயத்தீர்ப்பு இல்லை என்று அநேக கிறிஸ்தவர்கள் விசுவாசிக்கிறார்கள்

இன்னும் அநேக கிறிஸ்தவர்கள் நியாயத்தீர்ப்பு நாள் என்றால் அந்த நாளுக்காக பயப்படுகிறார்கள் ஆனால் அதற்கு ஆயத்தமாக வேண்டும் என்று விரும்புவதில்லை

அநேக கிறிஸ்தவர்கள் பரதீசை விசுவாசிக்கிறார்கள் ஆனால் அதற்கு போவதற்கு எத்தனை பேர் மரிக்க தயாராய் இருக்கிறார்கள்

பரலோகம் போக வேண்டும் என்று விரும்புகிறார்கள் ஆனால் நியாயத்தீர்ப்பின் நாளை கண்டு பயப்படுகிறார்கள்

கிறிஸ்துவின் வருகையை எத்தனை பேர் ஆவலோடு எதிர்ப்பார்க்கிறார்கள்?

நாம் நியாயத்தீர்ப்பின் நாளை மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்து காத்து இருக்க வேண்டும் என்று தேவன் விரும்புகிறார்
2Pe 3:12 தேவனுடைய நாள் சீக்கிரமாய் வரும்படிக்கு மிகுந்த ஆவலோடே காத்திருங்கள்; அந்த நாளில் வானங்கள் வெந்து அழிந்து, பூதங்கள் எரிந்து உருகிப்போம்.

உலகத்தார் தேவனுடைய நியாயத்தீர்ப்பு நாளைக் குறித்தெல்லாம் பெரும்பாலும் கவலைப்படுவதில்லை நித்தியத்தை அவர்கள் விசுவாசிப்பதும் இல்லை

இந்த பூமியில் இருக்கிற வரைக்கும் பாவமான காரியமாக இருந்தாலும் சந்தோஷமாய் சகலத்தையும் அநுபவித்து விட்டு மரிக்க வேண்டும் என்று எண்ணுகிறார்கள்

நித்திய நியாயத்தீர்ப்பு நாள் எப்படி இருக்கும் என்று நாம் அறிந்து இருக்க வேண்டும் என்று தேவன் விரும்புகிறார்

தேவன் இயேசு கிறிஸ்துவைக் கொண்டு இந்த உலகத்தை நீதியாய் நியாயந்தீர்ப்பார்
Act 17:31 மேலும் ஒரு நாளைக் குறித்திருக்கிறார்; அதிலே அவர் தாம் நியமித்த மனுஷனைக்கொண்டு, பூலோகத்தை நீதியாய் நியாயந்தீர்ப்பார் அந்த மனுஷனை மரித்தோரிலிருந்து எழுப்பினதினாலே அதின் நிச்சயத்தை எல்லாருக்கும் விளங்கப்பண்ணினார் என்றான்.

பூமியில் வாழ்ந்த வாழ்ந்து கொண்டு இருக்கிற எல்லா மனிதர்களுக்கும் நியாயத்தீர்ப்பு நாள் என்று ஒன்று இருக்கிறது, அந்த நியாயத்தீர்ப்பிலிருந்து யாரும் தப்பிக்க முடியாது எல்லாரும் நியாயந்தீர்க்கப்பட்டு அவர்களுக்கேற்ற பலனை அடைவார்கள்

இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையானது எப்படி சம்பவிக்கும் என்பதை பற்றி நாம் கற்றுக் கொள்ளப்போகிறோம்

பரிசுத்த ஆவியானவர் இனி வரும் நியாயத்தீர்ப்பை குறித்து போதிப்பார் என்பதை இயேசு கிறிஸ்து தம்முடைய சீஷர்களுக்கு போதித்து இருந்தார்
Joh 16:8 அவர் வந்து, பாவத்தைக்குறித்தும், நீதியைக்குறித்தும், நியாயத்தீர்ப்பைக்குறித்தும், உலகத்தைக் கண்டித்து உணர்த்துவார்.

நியாயத்தீர்ப்பைக் குறித்து யாரும் கவலைப்படுவதில்லை, பெரும்பாலான கிறிஸ்தவர்கள் தங்களுக்கு நியாயத்தீர்ப்பு இல்லை என்று விசுவாசிக்கிறார்கள்

தாங்கள் கிறிஸ்தவர்களாய் இருப்பதினால் நியாயத்தீர்ப்பு இல்லாமல் பரலோகம் போவோம் என்று எண்ணுகிறார்கள்

ஆனால் தேவன் எல்லாருக்கும் நியாயத்தீர்ப்பு இருக்கிறது என்று எச்சரித்து இருக்கிறார்

பரிசுத்த ஆவியானவர் நியாயத்தீர்ப்பைக் குறித்து அப்போஸ்தலர்கள் மூலமாக எச்சரித்து இருக்கிறார்
Act 24:25 அவன், நீதியையும், இச்சையடக்கத்தையும், இனிவரும் நியாயத்தீர்ப்பையும்குறித்துப் பேசுகையில், பேலிக்ஸ் பயமடைந்து: இப்பொழுது நீ போகலாம், எனக்குச் சமயமானபோது உன்னை அழைப்பிப்பேன் என்றான்.

இன்றைக்கு நியாயத்தீர்ப்பு நாளைக் குறித்து யார் அதிகம் போதிக்கிறார்கள் அல்லது நியாயத்தீர்ப்பை குறித்து போதிக்கும் போது யார் பயப்படுகிறார்கள்?

நித்திய நியாயத்தீர்ப்பு நாள் என்பது சுவிசேஷத்தின் ஒரு பகுதியாக இருக்கிறது என்பதை நாம் உணர்ந்து கொண்டு அந்த நாளைக் குறித்து விசுவாசிகள் ஆவலோடு எதிர் பார்க்கும் படி போதிக்க வேண்டும்

இயேசு கிறிஸ்து பரமேறி போகும் போது அங்கே இருந்த தூதர்கள் என்ன சொன்னார்கள்?
Act 1:10 அவர் போகிறபோது அவர்கள் வானத்தை அண்ணாந்து பார்த்துக்கொண்டிருக்கையில், இதோ, வெண்மையான வஸ்திரந்தரித்தவர்கள் இரண்டுபேர் அவர்களருகே நின்று:
Act 1:11 கலிலேயராகிய மனுஷரே, நீங்கள் ஏன் வானத்தை அண்ணாந்துபார்த்து நிற்கிறீர்கள்? உங்களிடத்தினின்று வானத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இந்த இயேசுவானவர் எப்படி உங்கள் கண்களுக்கு முன்பாக வானத்துக்கு எழுந்தருளிப்போனாரோ, அப்படியே மறுபடியும் வருவார் என்றார்கள்.

இயேசு கிறிஸ்து எப்படி எல்லாருடைய கண்களுக்கு முன்னால் மேலே வானத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டரோ அப்படியே எல்லாருடைய கண்களும் காணும்படியாக திரும்ப வருவார்

இயேசு கிறிஸ்து தான் திரும்பி வருவதாக வாக்குத்தத்தம் செய்து இருக்கிறார்
Mat 16:27 மனுஷகுமாரன் தம்முடைய பிதாவின் மகிமைபொருந்தினவராய்த் தம்முடைய தூதரோடுங்கூட வருவார்; அப்பொழுது, அவனவன் கிரியைக்குத்தக்கதாக அவனவனுக்குப் பலனளிப்பார்.
Rev 22:12 இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது.
Mat 24:44 நீங்கள் நினையாத நாழிகையிலே மனுஷகுமாரன் வருவார்; ஆதலால், நீங்களும் ஆயத்தமாயிருங்கள்.
Luk 12:40 அந்தப்படியே நீங்கள் நினையாத நேரத்தில் மனுஷகுமாரன் வருவார், ஆகையால் நீங்களும் ஆயத்தமாயிருங்கள் என்றார்.

முதலில் மனுஷனுக்கு என்ன நியமிக்கப்பட்டு இருக்கிறது என்பதை நாம் அறிந்து வைத்து இருக்க வேண்டும்?
Heb 9:27 அன்றியும், ஒரேதரம் மரிப்பதும், பின்பு நியாயத்தீர்ப்படைவதும், மனுஷருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறபடியே,

ஒவ்வொரு மனுஷனுக்கும் நியாயத்தீர்ப்பு நியமிக்கப்பட்டு இருக்கிறது

ஒவ்வொரு கிரியையையும் அந்தரங்கமான ஒவ்வொரு காரியத்தையும் தேவன் நியாயத்திலே கொண்டு வருவார்
Ecc 12:13 காரியத்தின் கடைத்தொகையைக் கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே.
Ecc 12:14 ஒவ்வொரு கிரியையையும், அந்தரங்கமான ஒவ்வொரு காரியத்தையும், நன்மையானாலும் தீமையானாலும், தேவன் நியாயத்திலே கொண்டுவருவார்.

கர்த்தருக்கு சித்தமானால் நித்திய நியாயத்தீர்ப்பு நாளைக் குறித்து இன்னும் கற்றுக் கொள்ளுவோம்