பகுதி:1 ஜென்ம பாவம்
குழந்தைகள் ஜென்ம பாவத்தோடு பிறக்கிறார்களா?
இன்றைக்கு கிறிஸ்தவத்தில் குழந்தைகள் ஜென்ம பாவத்தோடு பிறக்கிறார்கள் என்று அநேகர் விசுவாசிக்கிறார்கள் அதை போதிக்கவும் செய்கிறார்கள்
ஜென்ம பாவத்தில் பிறந்து இருக்கிற குழந்தைகளுக்கு பாவ மன்னிப்பை கொடுக்க வேண்டும் என்று சொல்லி ஞானஸ்நானமும் கொடுக்கிறார்கள்
ஆதாமின் பாவமும் மனுகுலம் முழுவதும் தொடர்ந்து கொண்டு இருக்கிறது என்றும் போதிக்கிறார்கள்
வேத வாக்கியங்கள் குழந்தைகள் ஜென்ம பாவத்தோடு அல்லது ஆதாமின் பாவத்தோடு பிறக்கிறது என்று போதிக்கிறதா?
இப்படி போதிக்கிறவர்கள் அதற்கு வசன ஆதாரமாக சில வேத வாக்கியங்களை காண்பிக்கிறார்கள்
ஆதாமின் பாவம் இன்றைக்கும் மனுகுலத்திற்கு தொடர்ந்து கொண்டு இருக்கிறது என்பதற்கு இந்த வேத வாக்கியத்தை காண்பிக்கிறார்கள்
ரோம 5:12 இப்படியாக, ஒரே மனுஷனாலே பாவமும் பாவத்தினாலே மரணமும் உலகத்திலே பிரவேசித்ததுபோலவும், எல்லா மனுஷரும் பாவஞ்செய்தபடியால், மரணம் எல்லாருக்கும் வந்ததுபோலவும் இதுவுமாயிற்று. ரோம 5:14 அப்படியிருந்தும், மரணமானது ஆதாம்முதல் மோசேவரைக்கும், ஆதாமின் மீறுதலுக்கொப்பாய்ப் பாவஞ்செய்யாதவர்களையும் ஆண்டுகொண்டது; அந்த ஆதாம் பின்பு வந்தவருக்கு முன்னடையாளமானவன்.
இந்த வசனத்தில் கேள்வி இது தான்
1)ஆதாமின் பாவம் தொடர்ந்து கொண்டு இருக்கிறதா?
(அல்லது)
2) ஆதாமின் பாவத்தினால் வந்த மரணம் தொடர்ந்து கொண்டு இருக்கிறதா?
ஒரே மனுஷனாலே(ஆதாம்) பாவம் வந்தது
பாவத்தினாலே உலகத்தில் மரணம் பிரவேசித்தது
எல்லா மனுஷரையும் ஆதாமின் பாவம் ஆண்டு கொண்டதா அல்லது மரணம் ஆண்டு கொண்டதா?
மரணம் தான் எல்லாரையும் ஆண்டு கொண்டது
இந்த வசனத்தில் நாம் கற்றுக் கொள்ளுவது என்னவென்றால் ஆதாமின் பாவத்தை நாம் சுமப்பது இல்லை, அவர் செய்த பாவத்தினிமித்தம் வந்த மரணம் நம்மை ஆண்டு கொண்டு இருக்கிறது
குழந்தைகள் பாவத்தோடு பிறக்கிறார்கள் என்றால் கேள்வி இது தான்
1) தாயின் கருவறையில் மரிக்கிற குழந்தைகளும்
2) தாயின் கருவறையில் இருந்து பிறந்து மரிக்கிற பச்சிளம் குழந்தைகளும் எங்கே இருப்பார்கள்?
பரதீசியிலா அல்லது வேதனையுள்ள ஸ்தலத்திலா?
குழந்தைகள் ஜென்ம பாவத்தோடு பிறக்கிறது என்றால் மரிக்கிற எல்லா குழந்தைகளும் வேதனையுள்ள ஸ்தலத்தில் இருப்பார்கள்
குழந்தைகள் ஜென்ம பாவத்தை ஒரு போதும் சுமப்பது இல்லை
பாவம் செய்கிற ஆத்துமாவே சாகும்
எசே 18:4 இதோ, எல்லா ஆத்துமாக்களும் என்னுடையவைகள்; தகப்பனின் ஆத்துமா எப்படியோ, அப்படியே மகனின் ஆத்துமாவும் என்னுடையது; பாவஞ்செய்கிற ஆத்துமாவே சாகும். எந்த மனிதன் பாவம் செய்கிறானோ அந்த ஆத்துமா தான் சாகும்
கோராகு தாத்தான் அபிராம் என்பவர்கள் தேவனுக்கு முன்பாக பாவிகளாய் இருந்தார்கள் எண் 16:27 அப்படியே அவர்கள் கோராகு தாத்தான் அபிராம் என்பவர்களுடைய வாசஸ்தலத்தை விட்டு விலகிப்போனார்கள்; தாத்தானும் அபிராமும் வெளியே வந்து, தங்கள் பெண்ஜாதிகள் பிள்ளைகள் குழந்தைகளோடும் தங்கள் கூடாரவாசலிலே நின்றார்கள்.
அவர்களுடைய குழந்தைகள் அவர்கள் பாவத்தை சுமந்தார்களா அல்லது அவர்கள் செய்த பாவத்தின் விளைவை சுமந்தார்களா? எண் 16:32 பூமி தன் வாயைத் திறந்து, அவர்களையும் அவர்கள் வீடுகளையும், கோராகுக்குரிய எல்லா மனிதரையும், அவர்களுக்கு உண்டான சகல பொருள்களையும் விழுங்கிப்போட்டது.
எண் 16:33 அவர்கள் தங்களுக்கு உண்டானவை எல்லாவற்றோடும் உயிரோடே பாதாளத்தில் இறங்கினார்கள்; பூமி அவர்களை மூடிக்கொண்டது; இப்படிச் சபையின் நடுவிலிருந்து அழிந்துபோனார்கள்.
அவர்கள் செய்த பாவத்தின் விளைவை தான் சுமந்தார்கள்
இஸ்ரவேலின் குழந்தைகளைப் பற்றியும் பிள்ளைகளைப் பற்றியும் தேவன் என்ன சொல்லுகிறார் உபா 1:39 கொள்ளையாவார்கள் என்று நீங்கள் சொன்ன உங்கள் குழந்தைகளும், இந்நாளிலே நன்மை தீமை அறியாத உங்கள் பிள்ளைகளும் அதில் பிரவேசிப்பார்கள்; அவர்களுக்கு அதைக் கொடுப்பேன்; அவர்கள் அதைச் சுதந்தரித்துக்கொள்வார்கள்,
நன்மை தீமை அறியாத பிள்ளைகள் என்று சொல்லுவதை கவனியுங்கள்
தாயின் கருவறையில் இருக்கும் குழந்தைகள் எப்படி இருக்கிறார்கள்? ரோம 9:11 பிள்ளைகள் இன்னும் பிறவாமலும், நல்வினை தீவினை ஒன்றும் செய்யாமலுமிருக்கையில், தேவனுடைய தெரிந்துகொள்ளுதலின்படியிருக்கிற அவருடைய தீர்மானம் கிரியைகளினாலே நிலைநிற்காமல் அழைக்கிறவராலே நிலைநிற்கும்படிக்கு,
தாயின் வயிற்றில் இருக்கும் போது குழந்தைகள் நல்வினை தீவினை ஒன்றும் செய்யாது
ஒருவர் விபசாரம் செய்கிறார் அதனிமித்தமாக அவருக்கு எய்ட்ஸ்(HIV) வந்து விட்டது அதனித்தமாக அவருக்கு ஒரு குழந்தை பிறந்து விட்டது அந்த குழந்தைக்கும் அந்த நோய்(HiV) இருக்கிறது இப்போது அந்த குழந்தை தன் தகப்பனுடைய பாவத்தை சுமக்கிறதா அல்லது அவர் செய்த பாவத்தின் விளைவை சுமக்கிறதா?
தகப்பன் செய்த பாவத்தை சுமக்காது பாவத்தின் விளைவை தான் சுமக்கிறது எசேக்கியேல் 18:20 பாவஞ்செய்கிற ஆத்துமாவே சாகும்; குமாரன் தகப்பனுடைய அக்கிரமத்தைச் சுமப்பதுமில்லை, தகப்பன் குமாரனுடைய அக்கிரமத்தைச் சுமப்பதுமில்லை; நீதிமானுடைய நீதி அவன்மேல் தான் இருக்கும், துன்மார்க்கனுடைய துன்மார்க்கமும் அவன்மேல் தான் இருக்கும்.
இயேசு கிறிஸ்து நம்மை யாரைப் போல இருக்க வேண்டும் என்று கட்டளையிடுகிறார்
நாம் பிள்ளைகளை போல மாறினால் தான் பரலோக ராஜியத்தில் பிரவேசிக்க முடியும. மத் 18:3 நீங்கள் மனந்திரும்பிப் பிள்ளைகளைப்போல் ஆகாவிட்டால், பரலோகராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டீர்கள் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்
நம் பிள்ளைகளை போல நம்மை தாழ்த்தினால் தான் பரலோகராஜ்யத்தில் பெரியவர்களாய் இருக்க முடியும். மத் 18:4 ஆகையால் இந்தப் பிள்ளையைப்போலத் தன்னைத் தாழ்த்துகிறவன் எவனோ, அவனே பரலோகராஜ்யத்தில் பெரியவனாயிருப்பான்.
கர்த்தருக்கு சித்தமானால் ஜென்ம பாவத்தை குறித்து தொடர்ந்து கற்றுக் கொள்ளுவோம்