பகுதி:1 ஒய்வு நாள் ஆசாரிப்பு உபதேசங்கள்
ஒய்வு நாள் பிரமாணம் நமக்கு கொடுக்கப்பட்டதா?
ஒய்வு நாள் சபை (7th day church) எல்லன் ஜி ஒயிட் என்ற அம்மையாரால் ஆரம்பிக்கப்பட்டது, இந்த அம்மையாருக்கு தேவன் ஒரு தரிசனம் காண்பித்ததாகவும் அந்த தரிசனத்தில் பத்து கட்டளைகள் காண்பிக்கப்பட்டு அதில் ஒய்வு நாளை பரிசுத்தமாக ஆசாரிக்க நினைப்பாயாக என்ற கற்பனையில் மாத்திரம் தேவ மகிமை இறங்கியதாகவும் தெரிவித்து இந்த ஏழாம் ஓய்வு நாள் சபை(7th day church) என்ற பிரிவினை கூட்டமானது ஆரம்பிக்கப்பட்டது
இன்றைக்கு உலகத்தில் தேவனுடைய சத்தியங்களை துணிகரமாக திரித்து போதிக்கின்ற அநேக பிரிவினை கூட்டங்கள் இருக்கிறது
நாம் தான் எல்லாவற்றையும் சோதித்து பார்த்து ஆரோக்கியமான உபதேசங்களை பிடித்து கொள்ள வேண்டும் என்பது தேவனுடைய ஆலோசனையாக இருக்கிறது என்பதை எப்போதும் மனதில் வைத்து கொள்ள வேண்டும்
இவர்கள் இயேசு கிறிஸ்துவின் அன்பையும் அவருடைய உபதேசங்களையும் ஒரு போதும் உணர்ந்து கொள்ள மாட்டார்கள்
இவர்கள் ஓய்வு நாளை ஆசாரிக்க வேண்டும் ஓய்வு நாளை ஆசாரிக்க வேண்டும் என்பதை மாத்திரமே சொல்லி கொண்டே இருப்பார்கள்
வேத வாக்கியத்தில் எங்கெல்லாம் கற்பனை என்று வந்து இருக்கிறதோ அது எல்லாம் பத்து கற்பனைகள் என்று வாதிடுவார்கள்
பத்து கட்டளை என்பது வேறு மோசேயின் நியாயப்பிரமாணம் என்பது வேறு என்று தங்களுடைய கூட்டத்தாருக்கு போதித்து வைத்து இருப்பார்கள்
இந்த ஒய்வுநாளை ஆசாரிக்கக்கூடியவர்கள் இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவை மகிமைப்படுத்துவது இல்லை
யோவா 14:6 அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.
இப்போது கேள்வி என்னவென்றால் ஒய்வு நாள் ஆசரிப்பு கிறிஸ்தவர்களுக்கு கொடுக்கப்பட்டதா?
ஒருவன் போதித்தால் தேவனுடைய வாக்கியங்களின்படி தான் போதிக்க வேண்டும்
1பேது 4:11 ஒருவன் போதித்தால் தேவனுடைய வாக்கியங்களின்படி போதிக்கக்கடவன்; ......
நாம் கிறிஸ்துவினால் முடி சூட்டப்பட வேண்டும் என்றால் சட்டத்தின்படி மல்யுத்தம் பண்ண வேண்டும்
2தீமோ 2:5 மேலும் ஒருவன் மல்யுத்தம்பண்ணினாலும், சட்டத்தின்படி பண்ணாவிட்டால் முடிசூட்டப்படான்.
நாம் கிறிஸ்துவின் உபதேசத்தில் நிலைத்திராமல் மீறி நடக்கிற போது கிறிஸ்துவை உடையவர்களாக இருப்பதில்லை
2யோவா : 9 கிறிஸ்துவின் உபதேசத்திலே நிலைத்திராமல் மீறி நடக்கிற எவனும் தேவனை உடையவனல்ல; கிறிஸ்துவின் உபதேசத்தில் நிலைத்திருக்கிறவனோ பிதாவையும் குமாரனையும் உடையவன்.
முதல் நூற்றாண்டு சபையின் விசுவாசிகள் அப்போஸ்தலர்களுடைய உபதேசத்தில் உறுதியாய் தரித்து இருந்தார்கள்
அப் 2:42 அவர்கள் அப்போஸ்தலருடைய உபதேசத்திலும், அந்நியோந்நியத்திலும்,அப்பம் பிட்குதலிலும், ஜெபம்பண்ணுதலிலும் உறுதியாய்த் தரித்திருந்தார்கள்.
நாம் தேவனுடைய வார்த்தையோடு ஒன்றையும் கூட்டவும் கூடாது குறைக்கவும் கூடாது
நீதி 30:6 அவருடைய வசனங்களோடு ஒன்றையும் கூட்டாதே, கூட்டினால் அவர் உன்னைக் கடிந்துகொள்வார், நீ பொய்யனாவாய்.
உபா 4:2 நான் உங்களுக்குக் கற்பிக்கும் உங்கள் தேவனாகிய கர்த்தரின் கட்டளைகளை நீங்கள் கைக்கொள்ளும்படி, நான் உங்களுக்குக் கற்பிக்கிற வசனத்தோடே நீங்கள் ஒன்றும் கூட்டவும் வேண்டாம், அதில் ஒன்றும் குறைக்கவும் வேண்டாம்.
வெளி 22:18 இந்தப் புஸ்தகத்திலுள்ள தீர்க்கதரிசன வசனங்களைக் கேட்கிற யாவருக்கும் நான் சாட்சியாக எச்சரிக்கிறதாவது: ஒருவன் இவைகளோடே எதையாகிலும் கூட்டினால், இந்தப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிற வாதைகளை தேவன் அவன்மேல் கூட்டுவார்.
வெளி 22:19 ஒருவன் இந்தத் தீர்க்கதரிசன புஸ்தகத்தின் வசனங்களிலிருந்து எதையாகிலும் எடுத்துப்போட்டால், ஜீவபுஸ்தகத்திலிருந்தும், பரிசுத்த நகரத்திலிருந்தும், இந்தப் புஸ்தகத்தில் எழுதப்பட்டவைகளிலிருந்தும், அவனுடைய பங்கை தேவன் எடுத்துப்போடுவார்.
தேவனுடைய வசனத்தோடு ஒன்றையும் கூட்டுவதற்கும் ஒன்றையும் குறைப்பதற்கும் நமக்கு எந்த அதிகாரமும் தேவனிடத்தில் இருந்து கொடுக்கப்பட வில்லை
ஒய்வுநாள் ஆசாரிப்பை நமக்கு தேவன் கொடுத்தாரா?
தேவன் ஒய்வு நாள் ஆசாரிப்பை நமக்கு கொடுக்கவில்லை அதை இஸ்ரவேல் ஜனங்களுக்கு கட்டளையிட்டார்
ஒய்வு நாள் ஆசாரிப்பு என்பது தேவனுக்கும் இஸ்ரவேலருக்குமுள்ள உடன்படிக்கையின் அடையாளமாக இருந்தது
யாத் 31:12 மேலும், கர்த்தர் மோசேயினிடத்தில்:
யாத் 31:13 நீ இஸ்ரவேல் புத்திரரை நோக்கி, நீங்கள் என் ஓய்வுநாட்களை ஆசரிக்க வேண்டும்; உங்களைப் பரிசுத்தப்படுத்துகிற கர்த்தர் நான் என்பதை நீங்கள் அறியும்படி,இது உங்கள் தலைமுறைதோறும் எனக்கும் உங்களுக்கும் அடையாளமாயிருக்கும்.
எசே 20:12 நான் தங்களைப் பரிசுத்தம்பண்ணுகிற கர்த்தர் என்று அவர்கள் அறியும்படிக்கு, எனக்கும் அவர்களுக்கும் அடையாளமாய் இருப்பதற்கான என் ஓய்வுநாட்களையும் அவர்களுக்குக் கட்டளையிட்டேன்.
எசே 20:20 என் ஓய்வுநாட்களைப் பரிசுத்தமாக்குங்கள்; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர் என்று நீங்கள் அறியும்படிக்கு அவைகள் எனக்கும் உங்களுக்கும் அடையாளமாயிருக்கும் என்றேன்.
எதற்காக ஒய்வு நாளை இஸ்ரவேலர்கள் ஆசாரிக்க வேண்டும்?
இஸ்ரவேல் ஜனங்களை பரிசுத்தப்படுத்துகிறவர் கர்த்தர் என்பதை அவர்கள் அறியும்படிக்கு அதை ஆசாரிக்க வேண்டும்
யாத் 31:13 ... உங்களைப் பரிசுத்தப்படுத்துகிற கர்த்தர் நான் என்பதை நீங்கள் அறியும்படி, இது உங்கள் தலைமுறைதோறும் எனக்கும் உங்களுக்கும் அடையாளமாயிருக்கும்
ஒய்வுநாளை தேவனுடைய பிரமாணத்தின்படி ஆசாரிக்காதவன் கொலை செய்யப்பட வேண்டும் என்று தேவன் இஸ்ரவேல் ஜனங்களுக்கு கட்டளை கொடுத்தார்
யாத் 31:14 ஆகையால், ஓய்வுநாளை ஆசரிப்பீர்களாக; அது உங்களுக்குப் பரிசுத்தமானது; அதைப் பரிசுத்தக் குலைச்சலாக்குகிறவன் கொலையுண்கக்கடவன்; அதிலே வேலைசெய்கிற எந்த ஆத்துமாவும் தன் ஜனத்தின் நடுவில் இராதபடிக்கு அறுப்புண்டுபோவான்.
யாத் 31:15 ஆறுநாளும் வேலைசெய்யலாம்; ஏழாம் நாளோ வேலை ஒழிந்திருக்கும் ஓய்வுநாள்; அது கர்த்தருக்குப் பரிசுத்தமானது; ஓய்வுநாளில் வேலைசெய்கிறவன் எவனும் கொலைசெய்யப்படவேண்டும்.
இந்த வசனத்தின் படி ஒய்வு நாள் பிரமாணங்களை ஓய்வு நாள் சபையார்(7th day church) சரியாக பின்பற்றுகிறார்களா?
இந்த ஓய்வுநாள் உடன்படிக்கை இஸ்ரவேலர்களுக்கு நித்திய உடன்படிக்கையாக கொடுக்கப்பட்டது
யாத் 31:16 ஆகையால், இஸ்ரவேல் புத்திரர் தங்கள் தலைமுறைதோறும் ஓய்வுநாளை நித்திய உடன்படிக்கையாக ஆசரிக்கும்படி அதைக் கைக்கொள்ளக்கடவர்கள்.
ஓய்வுநாள் குறித்தான சகல சத்தியங்களையும் வேத ஆதாரத்தோடு கற்றுக் கொள்ள போகிறோம்
ஒரு வேளை இந்த சத்தியங்களை பற்றி கேள்விகள் இருக்குமானால் பின்வரும் பாடங்கள் அதற்கு பதில் தரும்
கர்த்தருக்கு சித்தமானால் தொடர்ந்து ஒய்வுநாள் பிரமாணத்தைக் குறித்து கற்றுக் கொள்ளுவோம்