Tuesday, 18 February 2025

இயேசு மூன்று நாள் பூமியின் இருதயத்தில் இருந்தாரா?


இயேசு தன் பூமியின் இருதயத்தில் இரவும் பகலும் மூன்று நாள் இருப்பேன் என்று சொல்லி இருக்கிறார் 
மத் 12:39 அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: இந்தப் பொல்லாத விபசாரச் சந்ததியார் அடையாளத்தைத் தேடுகிறார்கள்; ஆனாலும் யோனா தீர்க்கதரிசியின் அடையாளமேயன்றி வேறே அடையாளம் இவர்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை.
மத் 12:40 யோனா இரவும் பகலும் மூன்றுநாள் ஒரு பெரிய மீனின் வயிற்றில் இருந்தது போல, மனுஷகுமாரனும் இரவும் பகலும் மூன்றுநாள் பூமியின் இருதயத்தில் இருப்பார்.

அநேகர் மூன்று நாள் என்பதற்கு இந்த வேத வாக்கியத்தை காண்பிக்கிறார்கள் 
ஆதியாகமம் 1:5 தேவன் வெளிச்சத்துக்குப் பகல் என்று பேரிட்டார், இருளுக்கு இரவு என்று பேரிட்டார்; சாயங்காலமும் விடியற்காலமுமாகி முதலாம் நாள் ஆயிற்று.

காலை ஆறு மணியில் இருந்து மாலை ஆறு மணி வரை பகலாக இருக்கிறது 
யோவா 11:9 இயேசு பிரதியுத்தரமாக: பகலுக்குப் பன்னிரண்டு மணிநேரம் இல்லையா? ஒருவன் பகலிலே நடந்தால் அவன் இந்த உலகத்தின் வெளிச்சத்தைக் காண்கிறபடியினால் இடறமாட்டான்.

பகலுக்கு 12 மணி நேரம் 
இரவுக்கு 12 மணி நேரம் 
ஒரு நாளைக்கு 24 மணி நேரம் 
இரவும் பகலும் என்று சொன்னால் இயேசு 24 மணி நேரம் என்று தான் சொல்லி இருக்கிறார் 

இயேசு தம்முடைய ஊழிய நாட்களில் தம்முடைய அப்போஸ்தலர்களுக்கு மூன்று நாளைக்கு பின்பு உயிர்த்தெழுவேன் என்று போதித்து இருக்கிறார் 
மாற் 8:31 அல்லாமலும், மனுஷகுமாரன் பல பாடுகள்பட்டு, மூப்பராலும் பிரதான ஆசாரியராலும் வேதபாரகராலும் ஆகாதவனென்று தள்ளப்பட்டு, கொல்லப்பட்டு, மூன்றுநாளைக்குப்பின்பு உயிர்த்தெழுந்திருக்கவேண்டியதென்று அவர்களுக்குப் போதிக்கத் தொடங்கினார்.

இயேசு கிறிஸ்து ஒய்வுநாளுக்கு முந்தின நாளில் தான் மரித்தார் ஆகையால் அது வெள்ளிக்கிழமை தான் என்று அநேகர் விசுவாசிக்கிறார்கள் 
மாற் 15:42 ஓய்வுநாளுக்கு முந்தினநாள் ஆயத்தநாளாயிருந்தபடியால், சாயங்காலமானபோது,
லூக் 23:54 அந்த நாள் ஆயத்தநாளாயிருந்தது; ஓய்வுநாளும் ஆரம்பமாயிற்று.

யூதர்களுடைய ஓய்வுநாள் சாயந்தரம் ஆறு மணியில் இருந்து மறுநாள் சாயந்தரம் ஆறு மணி வரை இருக்கும் 
லூக் 23:54 அந்த நாள் ஆயத்தநாளாயிருந்தது; ஓய்வுநாளும் ஆரம்பமாயிற்று.
லேவி 23:32 அது உங்களுக்கு விசேஷித்த ஓய்வு நாள்; அதில் உங்கள் ஆத்துமாக்களைத் தாழ்மைப்படுத்தவேண்டும்; அந்த மாதத்தின் ஒன்பதாந்தேதி சாயங்காலம் துவக்கி, மறுநாள் சாயங்காலம்மட்டும் உங்கள் ஓய்வை ஆசரிக்கக்கடவீர்கள் என்றார்.

இயேசு சிலுவையில் அறையப்பட்ட நாள் ஒய்வுநாளுக்கு ஆயத்த நாளாய் இருந்தது அதாவது வெள்ளிக்கிழமை அந்த நாளின் சாயந்தரம் தொடங்கி அடுத்த நாள் அதாவது சனிக்கிழமை சாயங்காலமட்டும் அது ஓய்வுநாளாய் இருக்கிறது
அதனால் இயேசு கிறிஸ்து வெள்ளிக்கிழமை சிலுவையில் அறையப்பட்டு மரித்து அடக்கம் பண்ணப்பட்டு வாரத்தின் முதல் நாளாகிய ஞாயிற்று கிழமையில் உயிர்த்தெழுந்தார் என்று சொல்லுகிறார்கள் 

இயேசு வெள்ளிக்கிழமை அடக்கம் பண்ணப்பட்டு ஞாயிற்றுக் கிழமை அதிகாலை உயிரோடு எழுந்தார் என்று அநேகர் விசுவாசிக்கிறார்கள் 

அவர்கள் சொல்லுவதைப் போல இயேசு வெள்ளிக்கிழமை சாயந்தரம் அடக்கம் பண்ணப்பட்டு ஞாயிற்று கிழமை அதிகாலையில் உயிர்தெழுந்தால் அவர் கல்லறையில் இருந்த நாட்கள் ஏறக்குறைய ஒன்றை நாட்கள் மாத்திரமே 
அப்படியென்றால் இயேசு மனுஷகுமாரன் இரவும் பகலும் மூன்று நாள் பூமியின் இருதயத்தில் இருப்பார் என்று சொன்ன வார்த்தையும் மூன்று நாளைக்கு பின்பு உயிர்த்தெழுவேன் என்று சொன்ன வார்த்தையும் சத்தியமில்லாமல் பொய்யாய் இருக்கும் 
இயேசுவின் வார்த்தைகள் ஒருபோதும் பொய்யாய் இராமல் எப்போதும் அது சத்தியமாக தான் இருக்கும் 


இயேசு கிறிஸ்து வெள்ளிக்கிழமை சிலுவையில் அறையப்படவில்லை என்பதற்கு தேவன் வேதவாக்கியத்தில் ஆதாரம் கொடுத்து இருக்கிறாரா?

இயேசு மூன்று நாளைக்கு பின்பு தான் உயிர்த்தெழுந்தார் என்று அவருடைய சீஷர்களும் சாட்சியாக இருக்கிறார்கள் 
லூக் 24:20 நம்முடைய பிரதான ஆசாரியரும் அதிகாரிகளும் அவரை மரண ஆக்கினைக்குட்படுத்தி, சிலுவையில் அறைந்தார்கள்.
லூக் 24:21 அவரே இஸ்ரவேலை மீட்டிரட்சிப்பவர் என்று நாங்கள் நம்பியிருந்தோம். இவைகள் சம்பவித்து இன்று மூன்று நாளாகிறது.

சீஷர்கள் எம்மாவு கிராமத்திற்கு போகிற போது அந்த நாள் இயேசு உயிர்த்தெழுந்த வாரத்தின் முதல் நாள் 
அவர்கள் இவைகள் சம்பவித்து இன்று மூன்று நாளாகிறது என்று சொல்லுகிறார்கள் 
அப்படியென்றால் இயேசு ஏறக்குறைய இரண்டு நாளில் உயிர்த்தெழவில்லை என்பதற்கு இந்த வசனமே சாட்சியாக இருக்கிறது
அவர் வெள்ளிக்கிழமை மரிக்கவில்லை என்பதை இந்த வசனத்தில் நமக்கு தெளிவாக வெளிப்படுத்தப்பட்டு இருக்கிறது 

இயேசு வெள்ளிக்கிழமை மரிக்கவில்லை என்பதற்கு பிரதான ஆசாரியரும் பரிசேயர்களும் சாட்சியாக இருக்கிறார்கள் 

பிரதான ஆசாரியரும் பரிசேயரும் பிலாத்துவினிடத்தில் என்ன கேட்டுக்கொண்டார்கள்?
மத் 27:62 ஆயத்தநாளுக்குப் பின்னான மறுநாளிலே பிரதான ஆசாரியரும் பரிசேயரும் பிலாத்துவினிடத்தில் கூடிவந்து:
மாற் 15:42 ஓய்வுநாளுக்கு முந்தினநாள் ஆயத்தநாளாயிருந்தபடியால், சாயங்காலமானபோது,

பிரதான ஆசாரியரும் பரிசேயரும் பிலாத்துவினிடத்திற்கு எப்போது போனார்கள்?

ஆயத்த நாள் என்பது அதாவது வெள்ளிக்கிழமை 
ஆயத்தநாளுக்கு பின்னான நாள் என்பது சனிக்கிழமை 
ஆயத்தநாளுக்கு பின்னான மறுநாள் என்பது ஞாயிற்றுக்கிழமை 
அப்படியென்றால் பிரதான ஆசாரியரும் பரிசேயர்களும் இயேசு உயிர்த்தெழுந்த பிறகு (ஞாயிற்று கிழமை) பிலாத்துவினிடத்தில் போனார்களா?

அவர்கள் பிலாத்துவினிடத்தில் மூன்று நாள் வரை கல்லறையை பத்திரப்படுத்தும்படி கட்டளையிட வேண்டும் என்பதற்காக தான் போனார்கள் 
மத் 27:63 ஆண்டவனே, அந்த எத்தன் உயிரோடிருக்கும்போது, மூன்றுநாளைக்குப்பின் எழுந்திருப்பேன் என்று சொன்னது எங்களுக்கு ஞாபகமிருக்கிறது.
மத் 27:64 ஆகையால், அவனுடைய சீஷர்கள் இராத்திரியிலே வந்து, அவனைக் களவாய்க் கொண்டுபோய், மரித்தோரிலிருந்து எழுந்தானென்று ஜனங்களுக்குச் சொல்லாதபடிக்கும், முந்தின எத்தைப்பார்க்கிலும் பிந்தின எத்து கொடிதாகாதபடிக்கும், நீர் மூன்றுநாள்வரைக்கும் கல்லறையைப் பத்திரப்படுத்தும்படி கட்டளையிடவேண்டும் என்றார்கள்.

இயேசு மூன்று நாளைக்கு பின்பு உயிரோடு எழுந்திருப்பேன் என்று சொன்னதாக அவர்கள் சொல்லுகிறார்கள் 
வெள்ளிக்கிழமை இயேசு சிலுவையில் அறையப்பட்டால் அவர்கள் ஏன் மூன்று நாள் என்று சொல்லுகிறார்கள் 
பிரதான ஆசாரியர்களின் சேவர்கள் கல்லுக்கு முத்திரைபோட்டு இயேசு உயிர்தெழும் நாள் வரை அவர்கள் கல்லறையை காவல் காத்தார்கள் 

இரண்டு மூன்று சாட்சிகளின் வாக்கினாலே சகல காரியங்களும் நிலைவரப்படும் 
2கொரி 13:1 இந்த மூன்றாந்தரம் நான் உங்களிடத்திற்கு வருகிறேன்; சகல காரியங்களும் இரண்டு மூன்று சாட்சிகளுடைய வாக்கினால் நிலைவரப்படும்.

அப்படியென்றால் இயேசு கிறிஸ்து வெள்ளிக்கிழமை சிலுவையில் மரிக்கவில்லை என்பது இந்த வசனங்களே நமக்கு ஆதாரமாக இருக்கிறது

அப்படியென்றால் இயேசு எப்போது மரித்து அடக்கம் பண்ணப்பட்டார்? 

இயேசு சிலுவையில் எப்போது அறையப்பட்டார் எப்போது அவர் மரித்தார்? 
மாற் 15:25 அவரைச் சிலுவையில் அறைந்தபோது மூன்றாம்மணி வேளையாயிருந்தது.

எப்போது அந்தகாரம் உண்டாயிற்று?
மத் 27:45 ஆறாம்மணி நேரமுதல் ஒன்பதாம்மணி நேரம்வரைக்கும் பூமியெங்கும் அந்தகாரம் உண்டாயிற்று.

இயேசு சிலுவையில் ஆறு மணி நேரம் தொங்கி இருக்கிறார் 
இயேசு தம்முடைய ஜீவனை விட்ட போது அது ஒன்பதாம் மணி வேளை 

மூன்றாம் மணி வேளை – காலை 9 மணி 
ஆறாம் மணி வேளை – மதியம் 12 மணி 
ஒன்பதாம் மணி வேளை – மாலை 3 மணி 
பனிரெண்டாம் மணி வேளை – மாலை 6 மணி 

ஓய்வு நாளுக்கு முந்தினநாள் ஆயத்தநாளில் தான் இயேசு மரித்து அடக்கம் பண்ணப்பட்டார் 
மாற் 15:42 ஓய்வுநாளுக்கு முந்தினநாள் ஆயத்தநாளாயிருந்தபடியால், சாயங்காலமானபோது,

கேள்வி என்னவென்றால் இயேசு மரித்த போது எந்த ஓய்வுநாளுக்கு ஆயத்தநாள்?

இயேசு சிலுவையில் மரித்த போது அது பெரிய ஒய்வுநாளுக்கான ஆயத்தநாளாய் இருந்தது
யோவா 19:31 அந்த நாள் பெரிய ஓய்வு நாளுக்கு ஆயத்தநாளாயிருந்தபடியினால், உடல்கள் அந்த ஓய்வுநாளிலே சிலுவைகளில் இராதபடிக்கு, யூதர்கள் பிலாத்துவினிடத்தில் போய், அவர்களுடைய காலெலும்புகளை முறிக்கும்படிக்கும், உடல்களை எடுத்துப்போடும்படிக்கும் உத்தரவு கேட்டுக்கொண்டார்கள்.

இயேசு எப்போது சிலுவையில் அறையப்பட்டார் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும் என்றால் நாம் ஒய்வுநாளைக் குறித்த சத்தியங்களை நாம் அறிந்து கொள்ள வேண்டும் 

யூதர்கள் வருஷம் தோறும் வாரத்தில் ஏழாம் நாளில் வரக்கூடிய ஓய்வுநாளை ஆசாரிக்க வேண்டும் 

இது கற்பனையின் படியான ஓய்வுநாள் 
யாத் 31:15 ஆறுநாளும் வேலைசெய்யலாம்; ஏழாம் நாளோ வேலை ஒழிந்திருக்கும் ஓய்வுநாள்; அது கர்த்தருக்குப் பரிசுத்தமானது; ஓய்வுநாளில் வேலைசெய்கிறவன் எவனும் கொலைசெய்யப்படவேண்டும்.

யூதர்களுக்கு ஏழாம் மாதம் பத்தாம் தேதியிலே ஒரு ஓய்வுநாள் வரும் அந்த ஓய்வுநாள் விசேஷித்த ஓய்வுநாள்  
லேவி 16:29 ஏழாம் மாதம் பத்தாம் தேதியிலே, சுதேசியானாலும் உங்களுக்குள் தங்கும் பரதேசியானாலும், தங்கள் ஆத்துமாக்களைத் தாழ்மைப்படுத்துவதுமன்றி, ஒரு வேலையும் செய்யாமல் இருக்கவேண்டும்; இது உங்களுக்கு நித்திய கட்டளையாய் இருக்கக்கடவது.
லேவி 16:30 கர்த்தருடைய சந்நிதியில் உங்கள் பாவமெல்லாம் நீங்கிச் சுத்திகரிக்கப்படும்படி, அந்நாளில் உங்களைச் சுத்திகரிக்கும் பொருட்டு, உங்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யப்படும்.
லேவி 16:31 உங்களுக்கு அது விசேஷித்த ஓய்வு நாள்; அதிலே உங்கள் ஆத்துமாக்களைத் தாழ்மைப்படுத்தக்கடவீர்கள்; இது நித்திய கட்டளை.

இந்த ஏழாம் மாதம் பத்தாம் தேதி எந்த கிழமையில் வேண்டுமானாலும் வரும் 
அந்த ஓய்வுநாள் யூதர்களுக்கு விசேஷித்த ஓய்வுநாளாகும் 

பஸ்கா பண்டிகையின் காலங்களில் வரக்கூடிய முதலாம் நாளும் ஏழாம் நாளும் பரிசுத்தமான சபை கூடுதல் நாள் அந்த நாளில் யாதொரு வேலையும் செய்யக் கூடாது 
லேவி 23:5 முதலாம் மாதம் பதினாலாம் தேதி அந்திநேரமாகிற வேளையிலே கர்த்தரின் பஸ்கா பண்டிகையும்,
லேவி 23:6 அந்த மாதம் பதினைந்தாம் தேதியிலே, கர்த்தருக்குப் புளிப்பில்லா அப்பப் பண்டிகையுமாய் இருக்கும்; ஏழுநாள் புளிப்பில்லா அப்பங்களைப் புசிக்கவேண்டும்.
லேவி 23:7 முதலாம் நாள் உங்களுக்குப் பரிசுத்தமான சபைகூடுதல்; அதிலே சாதாரணமான யாதொரு வேலையும் செய்யவேண்டாம்.
லேவி 23:8 ஏழுநாளும் கர்த்தருக்குத் தகனபலியிடவேண்டும்; ஏழாம்நாள் பரிசுத்தமான சபைகூடுதல்; அதில் சாதாரணமான யாதொரு வேலையும் செய்யலாகாது என்று சொல் என்றார்.

ஏழாம் மாதம் முதலாந்தேதி எக்காள பண்டிகை கொண்டாடுகிற நாளில் சாதாரணமான யாதொரு வேளையும் செய்யாமல் ஓய்வுநாளாய் இருக்க வேண்டும் 
லேவி 23:24 நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: உங்களுக்கு ஏழாம் மாதம் முதலாந்தேதி எக்காளச் சத்தத்தால் ஞாபகக்குறியாகக் கொண்டாடுகிற பண்டிகை என்கிற சபை கூடும் பரிசுத்த ஓய்வுநாளாய் இருப்பதாக.
லேவி 23:25 அதிலே சாதாரணமான யாதொரு வேலையும் செய்யாமல், கர்த்தருக்குத் தகனபலி செலுத்தவேண்டும் என்று சொல் என்றார்.

கூடாரப்பண்டிகை வரும் ஏழாம் மாதம் பதினைந்தாந்தேதியின் முதல் நாள் சபை கூடும் பரிசுத்தநாள் அந்த நாளில் யாதொரு வேலையும் செய்யக் கூடாது 
லேவி 23:34 நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: அந்த ஏழாம் மாதம் பதினைந்தாந்தேதிமுதல் ஏழுநாளளவும் கர்த்தருக்கு ஆசரிக்கும் கூடாரப்பண்டிகையாயிருப்பதாக.
லேவி 23:35 முதலாம் நாள் சபைகூடும் பரிசுத்த நாள்; அதிலே சாதாரணமான யாதொரு வேலையும் செய்யலாகாது.

இந்த கூடாரப்பண்டிகையின் எட்டாம் நாளில் சபை கூடும் பரிசுத்த நாள் அதிலே சாதாரணமான யாதொரு வேலையும் செய்யக் கூடாது 
லேவி 23:36 ஏழுநாளும் கர்த்தருக்குத் தகனபலி செலுத்தக்கடவீர்கள்; எட்டாம் நாள் உங்களுக்குச் சபைகூடும் பரிசுத்தநாள்; அதிலே கர்த்தருக்குத் தகனபலி செலுத்தக்கடவீர்கள்; அது ஆசரிக்கப்படும் நாள்; அதிலே சாதாரணமான யாதொரு வேலையும் செய்யவேண்டாம்.

பஸ்கா பண்டிகையின் காலங்களில் விசேஷித்த ஓய்வுநாள் வரும் 
லூக் 6:1 பஸ்கா பண்டிகையின் இரண்டாம் நாளைக்குப் பின்வந்த முதலாம் ஓய்வுநாளிலே, அவர் பயிர்வழியே நடந்துபோகையில், அவருடைய சீஷர்கள் கதிர்களைக் கொய்து, கைகளினால் நிமிட்டித்தின்றார்கள்.

ஆனால் இயேசு சிலுவையில் அறையப்பட்ட வருஷத்தில் பஸ்கா பண்டிகையும் இந்த பெரிய ஓய்வுநாளும் ஒரே நாளில்தான் தான் வருகிறது 

இயேசு சிலுவையில் மரித்த போது பஸ்கா பண்டிகைக்கும் பெரிய ஓய்வுநாளுக்கும் அது தான் ஆயத்தநாளாய் இருந்தது
யோவா 19:14 அந்த நாள் பஸ்காவுக்கு ஆயத்த நாளும் ஏறக்குறைய ஆறுமணி நேரமுமாயிருந்தது; அப்பொழுது அவன் யூதர்களை நோக்கி: இதோ, உங்கள் ராஜா என்றான்.
யோவா 19:31 அந்த நாள் பெரிய ஓய்வு நாளுக்கு ஆயத்தநாளாயிருந்தபடியினால், உடல்கள் அந்த ஓய்வுநாளிலே சிலுவைகளில் இராதபடிக்கு, யூதர்கள் பிலாத்துவினிடத்தில் போய், அவர்களுடைய காலெலும்புகளை முறிக்கும்படிக்கும், உடல்களை எடுத்துப்போடும்படிக்கும் உத்தரவு கேட்டுக்கொண்டார்கள்.

இயேசு அடக்கம் பண்ணப்பட்டு சாயங்காலத்தில் இருந்து மறு நாள் சாயங்காலம் வரை பெரிய ஓய்வுநாள் ஆரம்பமாயிற்று 

மகதெலேனா மரியாளும் மற்ற மரியாளும் வாரத்தில் வரக்கூடிய கற்பனையின்படியே ஓய்வுநாளில் தான் ஓய்ந்திருந்து வாரத்தின் முதல் நாளில் கல்லறைக்கு வந்தார்கள் 
லூக்கா 23:56 திரும்பிப்போய், கந்தவர்க்கங்களையும் பரிமளதைலங்களையும் ஆயத்தம்பண்ணி, கற்பனையின்படியே ஓய்வுநாளில் ஓய்ந்திருந்தார்கள்.

இயேசு எந்த கிழமை மரித்தார்? 

எம்மாவூருக்கு போன சீஷர்கள் இவைகள் சம்பவித்து இன்று மூன்று நாளாகிறது என்று சொல்லுகிறார்கள்? 
லூக் 24:20 நம்முடைய பிரதான ஆசாரியரும் அதிகாரிகளும் அவரை மரண ஆக்கினைக்குட்படுத்தி, சிலுவையில் அறைந்தார்கள்.
லூக் 24:21 அவரே இஸ்ரவேலை மீட்டிரட்சிப்பவர் என்று நாங்கள் நம்பியிருந்தோம். இவைகள் சம்பவித்து இன்று மூன்று நாளாகிறது.

சனிக்கிழமை ஒருநாள் 
வெள்ளிக்கிழமை ஒருநாள் 
வியாழக்கிழமை ஒருநாள் 

இயேசு கிறிஸ்து வியாழக்கிழமை மரித்து இருந்தால் இரண்டரை நாள் தான் அவர் கல்லறையில் இருந்து இருப்பார் 

வியாழக்கிழமை சாயந்தரம் 6 மணி முதல் வெள்ளிக்கிழமை சாயந்தரம் 6 மணி வரை ஒரு நாள் 
வெள்ளிக்கிழமை சாயந்தரம் 6 மணிமுதல் சனிக்கிழமை சாயந்தரம் 6 மணி வரை இரண்டு நாள் 
சனிக்கிழமை சாயந்தரம் 6 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை காலை ஆறுமணி வரை அரை நாள் 

இயேசு கிறிஸ்து புதன் கிழமை சிலுவையில் மரித்து அவர் மூன்று நாளைக்கு பிறகு வாரத்தின் முதல் நாளில் அவர் உயிர்த்தெழுந்து இருக்கிறார் 
மாற் 8:31 அல்லாமலும், மனுஷகுமாரன் பல பாடுகள்பட்டு, மூப்பராலும் பிரதான ஆசாரியராலும் வேதபாரகராலும் ஆகாதவனென்று தள்ளப்பட்டு, கொல்லப்பட்டு, மூன்றுநாளைக்குப்பின்பு உயிர்த்தெழுந்திருக்கவேண்டியதென்று அவர்களுக்குப் போதிக்கத் தொடங்கினார்.

புதன் கிழமை சாயந்தரம் 6 மணி முதல் வியாழக்கிழமை சாயந்தரம் 6 மணி வரை ஒரு நாள் 
வியாழக்கிழமை சாயந்தரம் 6 மணி முதல் வெள்ளிக்கிழமை சாயந்தரம் 6 மணி வரை இரண்டு நாள் 
வெள்ளிக்கிழமை சாயந்தரம் 6 மணி முதல் சனிக்கிழமை சாயந்தரம் 6 மணி வரை மூன்று நாள் 
இயேசு மூன்று நாளைக்கு பின்பு வாரத்தின் முதல் நாளில் உயிர்த்தெழுந்தார் 

பிரதான ஆசாரியரும் பரிசேயரும் பிலாத்துவினிடத்தில் எப்போது கூடிவந்தார்கள்? 
மத் 27:62 ஆயத்தநாளுக்குப் பின்னான மறுநாளிலே பிரதான ஆசாரியரும் பரிசேயரும் பிலாத்துவினிடத்தில் கூடிவந்து:
மத் 27:63 ஆண்டவனே, அந்த எத்தன் உயிரோடிருக்கும்போது, மூன்றுநாளைக்குப்பின் எழுந்திருப்பேன் என்று சொன்னது எங்களுக்கு ஞாபகமிருக்கிறது.

பஸ்காவுக்கும் பெரிய ஒய்வுநாளுக்கும் ஆயத்தநாள் என்பது அதாவது புதன் கிழமை 

பஸ்காவையும் ஓய்வுநாளையும் ஆசாரித்த பின்னான நாள் என்பது வியாழக்கிழமை 

அதற்கு மறுநாள் என்பது வெள்ளிக்கிழமை 
வெள்ளிக்கிழமை தான் அவர்கள் 
பிலாத்துவினிடத்தில் கூடி வந்து கல்லறையை முத்திரை போட்டு காவல் காக்க வேண்டும் என்று கேட்டார்கள் 

அவர்கள் தங்கள் சேவகர்களை வெள்ளிக்கிழமையில் இருந்து இயேசு உயிரோடு எழுந்த நாள் வரை காவல் வைத்து இருந்தார்கள்  

இயேசு இரவும் பகலும் மூன்று நாள் பூமியின் இருதயத்தில் எப்படி இருந்தார்?
மத் 12:40 யோனா இரவும் பகலும் மூன்றுநாள் ஒரு பெரிய மீனின் வயிற்றில் இருந்தது போல, மனுஷகுமாரனும் இரவும் பகலும் மூன்றுநாள் பூமியின் இருதயத்தில் இருப்பார்.

இரவும் பகலும் எப்படி மூன்று நாள் வருகிறது? 

புதன் கிழமை சாயந்தரம் ஆறு மணி முதல் வியாழக்கிழமை காலை ஆறு மணி வரை ஒரு இரவு 

வியாழக்கிழமை காலை ஆறு மணி முதல் வியாழக்கிமை சாயந்தரம் ஆறு மணி வரை ஒரு பகல் 

வியாழக்கிழமை மாலை ஆறு மணி முதல் வெள்ளிக்கிழமை காலை ஆறு மணி வரை இரண்டு இரவு  

வெள்ளிக்கிழமை காலை 6மணி முதல் வெள்ளிக்கிழமை சாயந்தரம் ஆறு வரை இரண்டு பகல்

வெள்ளிக்கிழமை சாயந்தரம் ஆறு மணி முதல் சனிக்கிழமை காலை ஆறு மணி வரை மூன்று இரவு 

சனிக்கிழமை காலை ஆறு மணி முதல் வரை சாயந்தரம் ஆறு மணி வரை மூன்று பகல்  

சனிக்கிழமை சாயந்தரம் ஆறு மணி முதல் ஞாயிற்று கிழமை காலை வரை (மூன்றுநாளைக்கு பின்பு)

இயேசு மூன்று நாளைக்குப் பின்பு மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்தார்
மாற் 8:31 அல்லாமலும், மனுஷகுமாரன் பல பாடுகள்பட்டு, மூப்பராலும் பிரதான ஆசாரியராலும் வேதபாரகராலும் ஆகாதவனென்று தள்ளப்பட்டு, கொல்லப்பட்டு, மூன்றுநாளைக்குப்பின்பு உயிர்த்தெழுந்திருக்கவேண்டியதென்று அவர்களுக்குப் போதிக்கத் தொடங்கினார்.