Sunday, 10 May 2015

தேவன் யாருக்கு கிருபைகளை தருகிறார்?



பகுதி:4 கிருபையின் உபதேசம்

தேவன் யாருக்கு கிருபைகளை தருகிறார்?

இந்த கிருபையின் உபதேசத்தை போதிக்கக்கூடிய கள்ள போதகர்கள் தேவன் நமக்கு எந்த கிரியையையும் செய்யாமல் நமக்கு கிருபைகளை தருவார் என்று போதிக்கிறார்கள்

நம்முடைய வேத வாக்கியத்தில் எங்கேயாவது உம்முடைய கிருபைகளை எங்களுக்கு தாரும் என்று யாராவது ஜெபம் பண்ணி இருக்கிறார்களா என்று தேடிப்பாருங்கள் ஒரு வசனத்தை கூட உங்களால் கண்டு பிடிக்க முடியாது

யாருக்காவது தேவன் எந்த கிரியைகளையும் செய்யாமல் கிருபையை கொடுத்து இருக்கிறாரா என்று வேதவாக்கியங்களில் தேடிப்பாருங்கள் அதையும் உங்களால் கண்டுபிடிக்க முடியாது
தேவன் தம்முடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை எல்லாருக்காகவும் ஒப்புக் கொடுத்தார் இது தேவனுடைய ஒரே கிருபை

கீழே உள்ள இந்த வசனத்தில் அவருடைய கிருபையினால் வரும் அந்த ஓரே ஈவு கிறிஸ்துவின் சிலுவை மரணமாய் இருக்கிறது
Rom 5:15 ஆனாலும் மீறுதலின் பலன் கிருபை வரத்தின் பலனுக்கு ஒப்பானதல்ல. எப்படியெனில், ஒருவனுடைய மீறுதலினாலே அநேகர் மரித்திருக்க, தேவனுடைய கிருபையும் இயேசு கிறிஸ்து என்னும் ஒரே மனுஷனுடைய கிருபையினாலே வரும் ஈவும் அநேகர்மேல் அதிகமாய்ப் பெருகியிருக்கிறது.
2Co 5:14 கிறிஸ்துவினுடைய அன்பு எங்களை நெருக்கி ஏவுகிறது; ஏனென்றால், எல்லாருக்காகவும் ஒருவரே மரித்திருக்க.....

ஈவாகிய இரட்சிப்பு இலவசமாக இருக்கிறது ஆனால் அந்த இரட்சிப்பை பெறுவதற்கு நாம் தேவனுக்கேற்ற கிரியை செய்தே ஆக வேண்டும்

Rom 3:24 இலவசமாய் அவருடைய கிருபையினாலே கிறிஸ்து இயேசுவிலுள்ள மீட்பைக்கொண்டு நீதிமான்களாக்கப்படுகிறார்கள்;

அப்படியென்றால் எப்படி நாம் மீட்கப்படுகிறோம்?
Rom 3:22 அது இயேசு கிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தினாலே பலிக்கும் தேவநீதியே; விசுவாசிக்கிற எவர்களுக்குள்ளும் எவர்கள்மேலும் அது பலிக்கும், வித்தியாசமே இல்லை.
Rom 3:26 கிறிஸ்து இயேசுவினுடைய இரத்தத்தைப்பற்றும் விசுவாசத்தினாலே பலிக்கும் கிருபாதார பலியாக அவரையே ஏற்படுத்தினார்.

நம்முடைய விசுவாசத்தைக் கொண்டு தான் நாம் மீட்கப்படுகிறோம்
Eph 2:8 கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு;

நம்முடைய விசுவாசம் கிரியையில்லாமல் இருந்தால் எப்படி இருக்கும்?
Jam 2:17 அப்படியே விசுவாசமும் கிரியைகளில்லாதிருந்தால் தன்னிலேதானே செத்ததாயிருக்கும்.
Jam 2:20 வீணான மனுஷனே, கிரியைகளில்லாத விசுவாசம் செத்ததென்று நீ அறியவேண்டுமோ?

கிரியையுள்ள விசுவாசம் மாத்திரமே நம்மை நீதிமானாக்கும்
Jam 2:24 ஆதலால், மனுஷன் விசுவாசத்தினாலேமாத்திரமல்ல, கிரியைகளினாலேயும் நீதிமானாக்கப்படுகிறானென்று நீங்கள் காண்கிறீர்களே.

யாருக்கு தேவன் தம்முடைய கிருபைகளை கொடுக்கிறார்
1Pe 5:5 ..... தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார்.
Jam 4:6 அவர் அதிகமான கிருபையை அளிக்கிறாரே,,,,, தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறாரென்று சொல்லியிருக்கிறது.

தாழ்மை என்பது ஒரு தேவனுக்கேற்ற கிரியை. தாழ்மையுள்ளவர்கள் தான் தேவனுடைய கட்டளைகளுக்கு கீழ்ப்படிவார்கள்


தேவனுக்காக உபத்திரவப்பட்டு  நன்மை செய்வது போன்ற கிரியைகளை செய்யும் போது தான் தேவன் நமக்கு கிருபைகளை தருகிறார்
1Pe 2:19 ஏனெனில், தேவன்மேல் பற்றுதலாயிருக்கிற மனச்சாட்சியினிமித்தம் ஒருவன் அநியாயமாய்ப் பாடுபட்டு உபத்திரவங்களைப் பொறுமையாய்ச் சகித்தால் அதுவே பிரீதியாயிருக்கும்.

தேவன் மேல் இருக்கக்கூடிய விசுவாசத்தின் நிமித்தம் ஒருவன் உபத்திரவங்களை பொறுமையாக சகித்தால் அவனுக்கு தேவன் கிருபையை கொடுக்கிறார்
தமிழில் பிரீதியாயிருக்கும் என்று இருக்கிறது ஆனால் கிரேக்க வேதாகமத்தில் கிருபை என்ற வார்த்தை தான் இருக்கிறது

1Pe 2:20 நீங்கள் குற்றஞ்செய்து அடிக்கப்படும்போது பொறுமையோடே சகித்தால், அதினால் என்ன கீர்த்தியுண்டு? நீங்கள் நன்மைசெய்து பாடுபடும்போது பொறுமையோடே சகித்தால் அதுவே தேவனுக்குமுன்பாகப் பிரீதியாயிருக்கும்.
நன்மை செய்து ஒருவன் பாடும்படும் போது தேவனுக்கு முன்பாக அது கிருபையாக இருக்கும்

தேவனுடைய கிருபையை எந்தவொரு மனிதனும் இலவசமாக பெற முடியாது அதற்கு தேவனுக்கேற்ற கிரியைகளை செய்தே ஆக வேண்டும்

நாம் இரட்சிக்கப்பட வேண்டும் என்றாலும் தேவனுடைய வார்த்தைகளுக்கு கீழ்ப்படிய வேண்டும். நித்திய ஜீவனையும் பலன்களையும் பெற வேண்டும் என்றாலும் நாம்  தேவனுடைய எல்லா கட்டளைகளுக்கும் கீழ்ப்படிந்தே ஆக வேண்டும்

எந்தவொரு தேவனுக்கேற்ற கிரியை செய்யாமல் தேவனுடைய கிருபையை எதிர்பார்த்து கொண்டும் நம்பிக் கொண்டும் இருக்கிறவர்கள் சோம்பேறிகள். இவர்களுக்கு எந்த பலனும் கிடைக்கப்போவது இல்லை
Mat 25:24 ஒரு தாலந்தை வாங்கினவன் வந்து: ஆண்டவனே, நீர் விதைக்காத இடத்தில் அறுக்கிறவரும், தெளிக்காத இடத்தில் சேர்க்கிறவருமான கடினமுள்ள மனுஷன் என்று அறிவேன்.
Mat 25:25 ஆகையால், நான் பயந்து, போய், உமது தாலந்தை நிலத்தில் புதைத்து வைத்தேன்; இதோ, உம்முடையதை வாங்கிக்கொள்ளும் என்றான்.
Mat 25:26 அவனுடைய எஜமான் பிரதியுத்தரமாக: பொல்லாதவனும் சோம்பனுமான ஊழியக்காரனே, நான் விதைக்காத இடத்தில் அறுக்கிறவனென்றும், தெளிக்காத இடத்தில் சேர்க்கிறவனென்றும் அறிந்திருந்தாயே.
Mat 25:27 அப்படியானால், நீ என் பணத்தைக் காசுக்காரர் வசத்தில் போட்டுவைக்க வேண்டியதாயிருந்தது; அப்பொழுது, நான் வந்து என்னுடையதை வட்டியோடே வாங்கிக்கொள்வேனே, என்று சொல்லி,
Mat 25:28 அவனிடத்திலிருக்கிற தாலந்தை எடுத்து, பத்துத் தாலந்துள்ளவனுக்குக் கொடுங்கள்.
Mat 25:29 உள்ளவனெவனோ அவனுக்குக் கொடுக்கப்படும், பரிபூரணமும் அடைவான்; இல்லாதவனிடத்திலிருந்து உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும்.


தேவனுடைய கிருபை நம்மை இரட்சிக்கும் என்று தேவனுடைய எந்த கட்டளைகளுக்கும் கீழ்ப்படியாத சோம்பேறிகளுக்கு எங்கே இடம் இருக்கிறது என்று பாருங்கள்
பயப்படுகிறவர்கள் தான் சோம்பேறிகளாக இருக்கிறார்கள்
Mat 25:30 பிரயோஜனமற்ற ஊழியக்காரனாகிய இவனைப் புறம்பான இருளிலே தள்ளிப்போடுங்கள்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும் என்றான்.
Rev 21:8 பயப்படுகிறவர்களும், அவிசுவாசிகளும், அருவருப்பானவர்களும், கொலைபாதகரும், விபசாரக்காரரும், சூனியக்காரரும், விக்கிரகாராதனைக்காரரும், பொய்யர் அனைவரும் இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள் என்றார்.

ஜெயங்கொள்ளுகிறவன் தான் எல்லாவற்றையும் சுதந்தரித்து கொள்ளுவான்
Rev 21:7 ஜெயங்கொள்ளுகிறவன் எல்லாவற்றையும் சுதந்தரித்துக்கொள்ளுவான்; நான் அவன் தேவனாயிருப்பேன், அவன் என் குமாரனாயிருப்பான்.
























No comments:

Post a Comment