பகுதி:1 பரிசுத்த ஆவியானவர்
இன்றைக்கு அநேகர் பரிசுத்த
ஆவியானரைப் பற்றி பல தவறான நம்பிக்கை கொண்டு இருக்கிறார்கள். ஒரு சிலர் அவர் சக்தி
என்கிறார்கள்.
இன்னும் சிலர் அவர் வல்லமை என்கிறார்கள். இப்படி அநேகர் ஒவ்வொரு கொள்கைகளை வைத்து இருக்கிறார்கள்
இன்னும் சிலர் அவர் வல்லமை என்கிறார்கள். இப்படி அநேகர் ஒவ்வொரு கொள்கைகளை வைத்து இருக்கிறார்கள்
என்றைக்கு மனுஷனுடைய யூகங்களுக்கு செவி கொடுக்காமல் தேவனுடைய வேத வசனங்கள் என்ன சொல்லுகிறது என்பதை குறித்து நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டும்
பரிசுத்த ஆவியானவரைக் குறித்து இயேசு கிறிஸ்து சொல்லுவதை நாம் எப்போதும் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்
Mat 12:31 ஆதலால், நான்
உங்களுக்குச் சொல்லுகிறேன்: எந்தப் பாவமும் எந்தத்
தூஷணமும் மனுஷருக்கு மன்னிக்கப்படும்; ஆவியானவருக்கு விரோதமான தூஷணமோ மனுஷருக்கு மன்னிக்கப்படுவதில்லை.
Mat 12:32 எவனாகிலும் மனுஷகுமாரனுக்கு விரோதமான வார்த்தை சொன்னால் அது அவனுக்கு மன்னிக்கப்படும்; எவனாகிலும் பரிசுத்த ஆவிக்கு
விரோதமாகப் பேசினால் அது இம்மையிலும் மறுமையிலும் அவனுக்கு மன்னிக்கப்படுவதில்லை.
Mar 3:28 மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்:
மனுஷர்கள் செய்யும் எல்லாப் பாவங்களும்,
அவர்கள் தூஷிக்கும் எந்தத் தூஷணங்களும்,
அவர்களுக்கு மன்னிக்கப்படும்;
Mar 3:29 ஒருவன்
பரிசுத்த ஆவிக்கு விரோதமாகத் தூஷணஞ்சொல்வானாகில், அவன் என்றென்றைக்கும் மன்னிப்படையாமல் நித்திய ஆக்கினைக்குள்ளாயிருப்பான் என்றார்.
- எந்த மனுஷனும் இயேசு கிறிஸ்துவுக்கு விரோதமாகவோ தூஷிப்பார்கள் என்றால் அது அவர்களுக்கு மன்னிக்கப்படும். ஆனால் பரிசுத்த ஆவியானவருக்கு விரோதமான தூஷணம் இம்மையிலும் மறுமையிலும் அவனுக்கு மன்னிக்கப்படுவதில்லை என்று இயேசு எச்சரிக்கிறார்.
இந்த எச்சரிப்பை
நம் மனதில் கொண்டு பரிசுத்த ஆவியானவரைக்குறித்து நாம் கற்றுக் கொள்ளுவோம்.
நம்முடைய
வேதவாக்கியங்கள்(பழைய ஏற்பாடு மற்றும் புதிய ஏற்பாடு) எல்லாம் பரிசுத்த ஆவியினாலே
ஏவப்பட்டு பரிசுத்த மனிதர்களை கொண்டு கொடுக்கப்பட்டது
2Pe 1:20 வேதத்திலுள்ள எந்தத் தீர்க்கதரிசனமும் சுயதோற்றமான பொருளையுடையதாயிராதென்று நீங்கள் முந்தி
அறியவேண்டியது.
2Pe 1:21 தீர்க்கதரிசனமானது ஒருகாலத்திலும் மனுஷருடைய சித்தத்தினாலே உண்டாகவில்லை; தேவனுடைய பரிசுத்த மனுஷர்கள் பரிசுத்த ஆவியினாலே ஏவப்பட்டுப் பேசினார்கள்.
- கொடுக்கப்பட்ட வேத வாக்கியங்கள் சுயமான விளக்கங்களை உடையது அல்ல என்றும் அந்த வேத வாக்கியங்கள் மனுஷனுடைய யோசனையினாலே உண்டானது அல்ல என்றும் பரிசுத்த ஆவியானவரே அவர்களை(பரிசுத்த மனுஷர்கள்) கொண்டு பேசினார் என்றும் இந்த வேத வாக்கியம் நமக்கு போதிக்கிறது
வேத
வாக்கியங்கள் கொடுக்கப்பட்டதான நோக்கம் என்னவென்று பரிசுத்த ஆவியானவரே தம்முடைய
வசனத்தில்
வெளிப்படுத்தி
இருக்கிறார்
2Ti 3:16 வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும்,
எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக,
2Ti 3:17 அவைகள்
உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும், சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது.
வேத வாக்கியம் கொடுக்கப்பட்டதின் நோக்கம் என்ன?
தேவனுடைய
மனுஷன் தேறினவனாகவும்(கிறிஸ்துவைப்போல் பூரண புருஷராக வேண்டும்) எந்த
நற்கிரியையுஞ் செய்ய தகுதியுள்ளவனாக இருக்க வேண்டும் என்பதற்காக கொடுக்கப்பட்டு இருக்கிறது
ஒரு
சிலர் இன்றைக்கு பிரபலமாக இருக்கக்கூடிய சில போதகர்களை காட்டி இவர் தான் தேவனுடைய
மனுஷன் என்று சொல்லி தங்களை மட்டபடுத்த நினைக்கிறார்கள்
வேத
வாக்கியங்கள் ஒருபோதும் நமக்கு அப்படி போதிக்கவில்லை தேவனுடைய வார்த்தைக்கு
கீழ்ப்படியக்கூடிய ஒவ்வொரு மனிதனும் தேவனுடைய மனுஷனாக இருக்கிறான்
வேத வாக்கியங்கள் எப்படி இருக்கிறது?
அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும், சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது.
இயேசு
கிறிஸ்துவினிடத்தில் பரிசுத்த ஆவியானவர் எப்படி கிரியை செய்தார் என்று முதலில்
கவனிப்போம்
இயேசு கிறிஸ்து
ஞானஸ்நானம் பெற்ற போது பரிசுத்த ஆவியானவர் புறாவைப்போல அவர் மேல் வந்து அமர்ந்தார்
Mat 3:16 இயேசு
ஞானஸ்நானம் பெற்று, ஜலத்திலிருந்து கரையேறினவுடனே, இதோ, வானம்
அவருக்குத் திறக்கப்பட்டது; தேவ ஆவி புறாவைப்போல இறங்கி, தம்மேல் வருகிறதைக் கண்டார்.
Mar 1:10 அவர்
ஜலத்திலிருந்து கரையேறினவுடனே, வானம் திறக்கப்பட்டதையும், ஆவியானவர் புறாவைப்போல் தம்மேல் இறங்குகிறதையும் கண்டார்.
இயேசு
கிறிஸ்துவுக்கு பரிசுத்த ஆவியானவர் கொடுக்கப்பட்டதின் நோக்கம் என்ன?
Isa 11:2 ஞானத்தையும் உணர்வையும் அருளும் ஆவியும், ஆலோசனையையும் பெலனையும் அருளும் ஆவியும், அறிவையும் கர்த்தருக்குப் பயப்படுகிற பயத்தையும் அருளும் ஆவியுமாகிய கர்த்தருடைய ஆவியானவர் அவர்மேல் தங்கியிருப்பார்.
இயேசு
கிறிஸ்து ஆவியானவராலே சோதிக்கப்படுவதற்கு வனாந்தரத்திற்கு கொண்டு போகப்பட்டார்
Mat 4:1 அப்பொழுது இயேசு பிசாசினால் சோதிக்கப்படுவதற்கு ஆவியானவராலே வனாந்தரத்திற்குக் கொண்டுபோகப்பட்டார்.
Luk 4:1 இயேசு
பரிசுத்த ஆவியினாலே நிறைந்தவராய் யோர்தானை விட்டுத் திரும்பி, ஆவியானவராலே வனாந்தரத்திற்குக் கொண்டுபோகப்பட்டு,
இயேசு
கிறிஸ்து தேவனுடைய ஆவியினாலே அநேக அற்புதங்களை செய்தார்
Mat 12:28 நான்
தேவனுடைய ஆவியினாலே பிசாசுகளைத் துரத்துகிறபடியால், தேவனுடைய ராஜ்யம் உங்களிடத்தில் வந்திருக்கிறதே.
இயேசு
கிறிஸ்துவுக்கு தேவன் தம்முடைய ஆவியை அளவில்லாமல் கொடுத்து இருந்தார்
Joh 3:34 தேவனால்
அனுப்பப்பட்டவர் தேவனுடைய வார்த்தைகளைப் பேசுகிறார்;
தேவன் அவருக்குத் தமது ஆவியை
அளவில்லாமல் கொடுத்திருக்கிறார்.
பகுதி
2ல் தொடர்ந்து வாசியுங்கள்
No comments:
Post a Comment