பகுதி:2 ஓய்வு நாள் பிரமாண
உபதேசங்கள்
இஸ்ரவேலர்களுக்கு தேவன் சகல ஆசீர்வாதங்களையும் கொடுத்து இருந்தார்
Rom 9:4 அவர்கள் இஸ்ரவேலரே; புத்திரசுவிகாரமும், மகிமையும், உடன்படிக்கைகளும், நியாயப்பிரமாணமும், தேவாராதனையும், வாக்குத்தத்தங்களும் அவர்களுடையவைகளே;
Rom 9:5 பிதாக்கள் அவர்களுடையவர்களே; மாம்சத்தின்படி கிறிஸ்துவும் அவர்களில் பிறந்தாரே, இவர் என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்ட சர்வத்திற்கும் மேலான தேவன். ஆமென்.
இஸ்ரவேலர்களுக்கு இருந்த ஆசீர்வாதங்கள்
என்ன?
- தேவனுடைய ஜனங்கள்
- புத்திரசுவிகாரம்
- மகிமை
- உடன்படிக்கைகள்
- நியாயப்பிரமாணம்
- தேவ ஆராதனைகள்
- வாக்குத்தத்தங்கள்
- முற்பிதாக்கள்
- மாம்சத்தின்படி கிறிஸ்துவும் அவர்களில் பிறந்தார்
புறஜாதிகளாகிய நாம் கிறிஸ்துவை சேராதவர்களும் இஸ்ரவேலர்களுடைய காணியாட்சிகளுக்கு புறம்பானவர்களாக தான் இருந்தோம்
Eph 2:11 ஆனபடியினால் முன்னே மாம்சத்தின்படி புறஜாதியாராயிருந்து, மாம்சத்தில் கையினாலே செய்யப்படுகிற விருத்தசேதனமுடையவர்களால் விருத்தசேதனமில்லாதவர்களென்னப்பட்ட நீங்கள்,
Eph 2:12 அக்காலத்திலே கிறிஸ்துவைச் சேராதவர்களும், இஸ்ரவேலுடைய காணியாட்சிக்குப் புறம்பானவர்களும், வாக்குத்தத்தத்தின் உடன்படிக்கைகளுக்கு அந்நியரும், நம்பிக்கையில்லாதவர்களும், இவ்வுலகத்தில் தேவனற்றவர்களுமாயிருந்தீர்களென்று நினைத்துக்கொள்ளுங்கள்.
தேவன் பத்துக்கட்டளைகளை இஸ்ரவேலர்களுக்கு
கொடுக்கும் போது ஒய்வுநாள் பிரமாணத்தையும் அவர்களுக்கு கொடுத்தார்
Exo 20:8 ஓய்வுநாளைப் பரிசுத்தமாய் ஆசரிக்க நினைப்பாயாக;
Exo 20:9 ஆறுநாளும் நீ வேலைசெய்து, உன் கிரியைகளையெல்லாம் நடப்பிப்பாயாக;
Exo 20:10 ஏழாம்நாளோ உன் தேவனாகிய கர்த்தருடைய ஓய்வுநாள்; அதிலே நீயானாலும், உன் குமாரனானாலும், உன் குமாரத்தியானாலும், உன் வேலைக்காரனானாலும், உன் வேலைக்காரியானாலும், உன் மிருகஜீவனானாலும், உன் வாசல்களில் இருக்கிற அந்நியனானாலும், யாதொரு வேலையும் செய்யவேண்டாம்.
Exo 20:11 கர்த்தர் ஆறுநாளைக்குள்ளே வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் அவைகளிலுள்ள எல்லாவற்றையும் உண்டாக்கி, ஏழாம்நாளிலே ஓய்ந்திருந்தார்; ஆகையால், கர்த்தர் ஓய்வுநாளை ஆசீர்வதித்து, அதைப் பரிசுத்தமாக்கினார்.
கேள்வி என்னவென்றால் ஒய்வுநாள் பிரமாணத்தின்
சட்டத்திட்டங்கள் இந்த பிரமாணத்தோடு முடிந்து போய்விட்டதா அல்லது மோசே ஒய்வுநாளுக்கான
மற்ற பிரமாணங்களை எழுதினாரா?
ஒய்வுநாள் பிரமாணத்திற்கான மற்ற சட்டத்திட்டங்களை
மோசே தான் எழுதினார்
அந்த ஒய்வுநாள் பிரமாணத்திற்கான சட்டத்திட்டங்கள் என்ன என்பதை
தான் நாம் இங்கே பார்க்கப்போகிறோம்
ஓய்வு நாட்களின் பிரிவுகள் எத்தனை?
- வாரத்தின் ஏழாம் நாள் நாட்களின் ஓய்வு
- 7*7= 49ம் நாள் முடிந்து 50ம் நாள் (பெந்தெகொஸ்தே நாள்) வாரங்களின் முடிவு
- ஆறுவருடம் முடிந்து ஏழாம் வருடம் (ஒரு வருடம் முழுவதும்) வருஷங்களின் ஓய்வு
- 7*7=49 வருடங்கள் முடிந்து 50வது வருடம் யூபிலி வருஷ ஓய்வு
ஓய்வு நாளில் செய்ய வேண்டிய கட்டளைகள்
- ஓய்வு நாளில் 12 அப்பங்களை பரிசுத்த மேஜையில் இரண்டு அடுக்காக அடுக்கி வைக்க வேண்டும் (லேவி 24:5-8, 1நாளா 9:32)
- சர்வாங்க தகனபலி செலுத்த வேண்டும் ( எண் 28:10, 2நாளா 8:13, 31:9)
- விருத்தசேதனம் பண்ணுவார்கள் ( யோவா 7:22,23)
- மோசேயின் ஆகமங்களை ஓய்வுநாளில் வாசிப்பார்கள்(அப் 15:21,27)
ஓய்வுநாளில் செய்யக்கூடாத
கட்டளைகள்
- விறகு பொறுக்கக்கூடாது (எண் 15:32-36)
- அடுப்பில் நெருப்பு மூட்டக்கூடாது (யாத் 16:22,23)
- சொந்தப் பேச்சை பேசக்கூடாது (ஏசா 58:13, 56:2,6-8)
- வேலை செய்யக்கூடாது (யாத் 31:12-16)
- விதைக்கவோ அறுக்கவோ கூடாது (யாத் 34:21)
- சுமையை வெளியே கொண்டு போகவோ உள்ளே கொண்டு வரவோ கூடாது (எரே 17:20-23, நெகே 13:19,20) சுமார் ஒரு கீலோ மீட்டர் துரம் தான் நடக்க வேண்டும் (அப் 1;12)
இந்த பிரமாணங்கள் எல்லாம் மோசேயின் நியாயப்பிரமாணத்தில்
தான் கட்டளையிடப்பட்டு இருக்கிறது
இஸ்ரவேலுக்கு
சிறப்பான ஆசீர்வாதத்தை தேவன் கொடுத்து இருந்தார்
- கர்த்தர் ஆறாம் நாளில் இரண்டு நாளுக்கும் சேர்த்து போஜனம் கொடுத்தார் ( யாத் 16:29,30)
- வருஷங்களில் ஓய்வுகளில் மூன்று வருஷத்துக்கான பலனை ஆறாம் வருஷத்திலே கொடுத்து விடுவார் (லேவி 25:20-22)
ஓய்வு
வருஷத்தில் செய்ய வேண்டியவையும் செய்யக்கூடாதவையும்
- ஏழாம் வருஷம் அடிமையை விட்டு விட வேண்டும் (யாத் 21:1-6)
- ஏழாம் வருஷத்தில் நிலத்தை தரிசாக விட்டுவேண்டும் (லேவி 25:1-7)
யூபிலி
வருஷ ஓய்வு வருடத்தில் செய்ய வேண்டியவையும் செய்யக் கூடாதவையும்
- தன்தன் காணியாட்சிக்கும் தன்தன் குடும்பத்துக்கும் திரும்பி போக வேண்டும் (லேவி 25:8-10)
- அந்த வருஷத்தில் வயல்வெளியில் விளைந்தவைகளை புசிக்க வேண்டும் (லேவி 25:11-13)
- எக்களாம் ஊதி தெரியப்படுத்த வேண்டும் (லேவி 25:8-28,50,52)
ஓய்வுநாளை
தேவன் யாருக்கு கட்டளையிட்டார்?
இஸ்ரவேல் ஜனங்களுக்கு தேவன் அதை கட்டளையிட்டார் அது இஸ்ரவேலுக்கு
தேச சட்டமாக இருந்தது
Deu 5:15 நீ எகிப்து தேசத்தில் அடிமையாயிருந்தாய் என்றும், உன் தேவனாகிய கர்த்தர் உன்னை அவ்விடத்திலிருந்து வல்லமையுள்ள கரத்தினாலும் ஓங்கிய புயத்தினாலும் புறப்படப்பண்ணினார் என்றும் நினைப்பாயாக; ஆகையால் ஓய்வு நாளை ஆசரிக்க உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கட்டளையிட்டார்.
Exo 20:9 ஆறுநாளும் நீ வேலைசெய்து, உன் கிரியைகளையெல்லாம் நடப்பிப்பாயாக;
Exo 20:10 ஏழாம்நாளோ உன் தேவனாகிய கர்த்தருடைய ஓய்வுநாள்; அதிலே நீயானாலும், உன் குமாரனானாலும், உன் குமாரத்தியானாலும், உன் வேலைக்காரனானாலும், உன் வேலைக்காரியானாலும், உன் மிருகஜீவனானாலும், உன் வாசல்களில் இருக்கிற அந்நியனானாலும், யாதொரு வேலையும் செய்யவேண்டாம்.
- எகிப்திலிருந்து யார் விடுதலையாகிப் போனார்களோ அவர்களுக்கு தான் தேவன் ஒய்வுநாள் பிரமாணத்தை கொடுத்தார்
மேலும் மோசே இஸ்ரவேலர்களுக்கு ஒய்வுநாளில் என்ன செய்ய வேண்டும் என்ன செய்யக் கூடாது
என்று பிரமாணத்தை கொடுப்பதை கவனியுங்கள்
Exo 34:21 ஆறுநாள் வேலைசெய்து, ஏழாம் நாளிலே ஓய்ந்திருப்பாயாக; விதைப்புக் காலத்திலும் அறுப்புக் காலத்திலும் ஓய்ந்திருப்பாயாக.
Exo 16:29 பாருங்கள், கர்த்தர் உங்களுக்கு ஓய்வுநாளை அருளினபடியால், அவர் உங்களுக்கு ஆறாம்நாளில் இரண்டு நாளுக்கு வேண்டிய ஆகாரத்தைக் கொடுக்கிறார்; ஏழாம்நாளில் உங்களில் ஒருவனும் தன் தன் ஸ்தானத்திலிருந்து புறப்படாமல், அவனவன் தன் தன் ஸ்தானத்திலே இருக்கவேண்டும் என்றார்.
Exo 16:30 அப்படியே ஜனங்கள் ஏழாம்நாளில் ஓய்ந்திருந்தார்கள்.
- ஓய்வுநாள் பிரமாணம் யாருக்கு கொடுக்கப்பட்டது என்பதை இந்த வேத வாக்கியங்களில் தேவன் தெளிவாக சொல்லுவதை கவனியுங்கள்
- கர்த்தர் உங்களுக்கு(இஸ்ரவேலர்கள்) ஒய்வுநாளை அருளினார் என்று சொல்லுகிறார்
இஸ்ரவேல் புத்திரரர்களுக்கு தேவன் ஏன் இந்த பிரமாணத்தை கொடுத்தார்?
Exo 31:13 நீ இஸ்ரவேல் புத்திரரை நோக்கி, நீங்கள் என் ஓய்வுநாட்களை ஆசரிக்க வேண்டும்; உங்களைப் பரிசுத்தப்படுத்துகிற கர்த்தர் நான் என்பதை நீங்கள் அறியும்படி, இது உங்கள் தலைமுறைதோறும் எனக்கும் உங்களுக்கும் அடையாளமாயிருக்கும்.
Exo 31:14 ஆகையால், ஓய்வுநாளை ஆசரிப்பீர்களாக; அது உங்களுக்குப் பரிசுத்தமானது; அதைப் பரிசுத்தக் குலைச்சலாக்குகிறவன் கொலையுண்கக்கடவன்; அதிலே வேலைசெய்கிற எந்த ஆத்துமாவும் தன் ஜனத்தின் நடுவில் இராதபடிக்கு அறுப்புண்டுபோவான்.
- இஸ்ரவேல் ஜனங்களை பரிசுத்தப்படுத்துகிறவர் கர்த்தர் என்பதை இஸ்ரவேல் ஜனங்கள் அறிந்து கொள்ளும்படியாக தான் ஓய்வுநாள் பிரமாணத்தை அவர்களுக்கு கொடுத்தார்
ஓய்வுநாள்
பிரமாணத்தை தேவன் கிறிஸ்தவர்களுக்கு கொடுக்கவில்லை அந்த பிரமாணத்தை தேவன் இஸ்ரவேல்
ஜனங்களுக்கு கட்டளையிட்டார்
தொடர்ந்து
இந்த ஓய்வு நாள் கட்டளையை குறித்து கற்றுக் கொள்ளுவோம்
No comments:
Post a Comment