பகுதி:2
பரிசுத்த ஆவியானவர்
பரிசுத்த
ஆவியானரைக்குறித்து இயேசு கிறிஸ்து என்ன போதித்தார்?
Joh 14:16 நான்
பிதாவை வேண்டிக்கொள்ளுவேன், அப்பொழுது என்றென்றைக்கும் உங்களுடனேகூட இருக்கும்படிக்குச் சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை அவர்
உங்களுக்குத் தந்தருளுவார்.
பரிசுத்த
ஆவியானவர் இன்னொரு சத்திய ஆவியாகிய வெறொரு தேற்றரவாளன் என்று சொன்னார்,
இந்த
தேற்றரவாளனை அப்போஸ்தலர்களுக்கு கொடுப்பது யார் என்றால் பிதாவாகிய தேவன். (அவர்
உங்களுக்குத் தந்தருளுவார்)
1) பரிசுத்த
ஆவியாகிய தேற்றரவாளன் வரும் போது அவர் இயேசு கிறிஸ்துவைக் குறித்து சாட்சி
கொடுப்பார்
Joh 15:26 பிதாவினிடத்திலிருந்து நான் உங்களுக்கு அனுப்பப்போகிறவரும், பிதாவினிடத்திலிருந்து புறப்படுகிறவருமாகிய சத்திய
ஆவியான தேற்றரவாளன் வரும்போது, அவர்
என்னைக்குறித்துச் சாட்சி கொடுப்பார்.
2) பரிசுத்த
ஆவியானவர் வரும் போது இயேசு கிறிஸ்து எப்படி சுயமாய் போதிக்கவில்லையோ அதை போல்
அவரும் சுயமாய் எதுவும் போதிக்கமாட்டார் என்று கிறிஸ்து போதித்தார்
Joh 16:13 சத்திய
ஆவியாகிய அவர் வரும்போது, சகல
சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்;
அவர் தம்முடைய சுயமாய்ப் பேசாமல், தாம்
கேள்விப்பட்டவைகள் யாவையுஞ்சொல்லி, வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார்.
3) இயேசு
கிறிஸ்து என்ன காரியங்களை போதித்தாரே அந்த காரியங்களை எடுத்து அவர் அறிவிப்பதின்
மூலம் கிறிஸ்துவை மகிமைப்படுத்துவார்
Joh 16:14 அவர்
என்னுடையதில் எடுத்து உங்களுக்கு அறிவிப்பதினால் என்னை மகிமைப்படுத்துவார்.
Joh 16:15 பிதாவினுடையவைகள் யாவும் என்னுடையவைகள்; அதினாலே
அவர் என்னுடையதில் எடுத்து உங்களுக்கு அறிவிப்பார் என்றேன்.
4) இயேசு
கிறிஸ்து சொன்ன எல்லா சத்தியங்களையும் அப்போஸ்தலர்களுக்கு பரிசுத்த ஆவியானவர்
நினைப்பூட்டுவார் (ஞாபகப்படுத்துவார்)
Joh 14:26 என்
நாமத்தினாலே பிதா அனுப்பப்போகிற பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளனே எல்லாவற்றையும் உங்களுக்குப் போதித்து, நான்
உங்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் உங்களுக்கு நினைப்பூட்டுவார்.
5) கிறிஸ்து
பரலோகத்திற்கு போய் பரிசுத்த ஆவியானவரை அனுப்புவதாக அவர் அப்போஸ்தலர்களுக்கு
வாக்குத்தத்தம் செய்தார்
Joh 16:7 நான்
உங்களுக்கு உண்மையைச் சொல்லுகிறேன்; நான்
போகிறது உங்களுக்குப் பிரயோஜனமாயிருக்கும்; நான்
போகாதிருந்தால், தேற்றரவாளன் உங்களிடத்தில் வரார்; நான்
போவேனேயாகில் அவரை உங்களிடத்திற்கு அனுப்புவேன்.
6) பரிசுத்த
ஆவியானவர் அப்போஸ்தலர்களிடத்தில் வரும் போது என்னென்ன காரியங்களை செய்வார் என்று அவர்களுக்கு
போதித்தார்
Joh 16:8 அவர்
வந்து,
பாவத்தைக்குறித்தும், நீதியைக்குறித்தும், நியாயத்தீர்ப்பைக்குறித்தும், உலகத்தைக் கண்டித்து உணர்த்துவார்.
Joh 16:9 அவர்கள்
என்னை விசுவாசியாதபடியினாலே பாவத்தைக்குறித்தும்,
Joh 16:10 நீங்கள்
இனி என்னைக் காணாதபடிக்கு நான்
என் பிதாவினிடத்திற்குப் போகிறபடியினாலே நீதியைக்குறித்தும்,
Joh 16:11 இந்த
உலகத்தின் அதிபதி நியாயந்தீர்க்கப்பட்டதினாலே நியாயத்தீர்ப்பைக்குறித்தும், கண்டித்து உணர்த்துவார்.
பரிசுத்த
ஆவியானவர் செய்யக்கூடிய கிரியைகள் என்ன?
1)
பாவத்தைக்குறித்து கண்டித்து உணர்த்துவார்
2)
நீதியைக்குறித்து உணர்த்துவார்
3)
நியாயத்தீர்ப்பைக் குறித்து கண்டித்து உணர்த்துவார்
7) இயேசு
கிறிஸ்து தம்முடைய அப்போஸ்தலர்கள் எப்படி பேச வேண்டும் என்று கட்டளையிட்டார் பாருங்கள்
Mat 10:17 மனுஷரைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்; அவர்கள் உங்களை ஆலோசனைச் சங்கங்களுக்கு ஒப்புக்கொடுத்து, தங்கள்
ஜெப ஆலயங்களில் உங்களை வாரினால் அடிப்பார்கள்.
Mat 10:18 அவர்களுக்கும் புறஜாதியாருக்கும் சாட்சியாக என்னிமித்தம் அதிபதிகளுக்கு முன்பாகவும், ராஜாக்களுக்கு முன்பாகவும் கொண்டுபோகப்படுவீர்கள்.
Mat 10:19 அவர்கள்
உங்களை ஒப்புக்கொடுக்கும்போது: எப்படிப் பேசுவோம் என்றும், என்னத்தைப் பேசுவோம் என்றும் கவலைப்படாதிருங்கள்; நீங்கள் பேசவேண்டுவது அந்நேரத்தில் உங்களுக்கு அருளப்படும்.
Mat 10:20 பேசுகிறவர்கள் நீங்கள் அல்ல, உங்கள்
பிதாவின் ஆவியானவரே உங்களிலிருந்து பேசுகிறவர்.
அப்போஸ்தலர்கள்
ராஜாக்களுக்கு முன்பாகவும் அதிபதிகளுக்கு
முன்பாகவும் கொண்டு போகப்படும் போது என்ன பேசுவோம் என்று அவர்கள் யோசித்தால்
அவர்கள் தேவனுடைய வார்த்தைகளை சுய தோற்றமாக தான் பேசுவார்கள். அதனால் தான்
கிறிஸ்து முன்பதாகவே சொல்லி விட்டார் (எப்படிப் பேசுவோம் என்றும், என்னத்தைப் பேசுவோம் என்றும்
கவலைப்படாதிருங்கள்; நீங்கள் பேசவேண்டுவது அந்நேரத்தில் உங்களுக்கு அருளப்படும்)
பிதாவின்
ஆவியானரே அப்போஸ்தலர்களிடமிருந்து பேசுகிறவர் என்று கிறிஸ்து சொன்னார்
ஒரு
உதாரணம் ஒன்றை பாருங்கள்
அப்போஸ்தலனாகிய
பவுல் தேசாதிபதியாகிய பேலிக்ஸ் முன்பதாக கொண்டு போகப்பட்ட போது என்ன பேசினார்
என்று பாருங்கள்
Act 24:24 சில
நாளைக்குப்பின்பு பேலிக்ஸ் யூதஸ்திரீயாகிய தன்
மனைவி துருசில்லாளுடனேகூட வந்து, பவுலை
அழைப்பித்து, கிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தைக் குறித்து அவன் சொல்லக்கேட்டான்.
இயேசு
கிறிஸ்து பரிசுத்த ஆவியானவர் என்ன போதிப்பார் என்று சொன்னாரோ அதை காரியத்தை தான்
பவுல் மூலமாக பரிசுத்த ஆவியானவர் செய்தார்
Joh 16:8 அவர்
வந்து,
பாவத்தைக்குறித்தும், நீதியைக்குறித்தும், நியாயத்தீர்ப்பைக்குறித்தும், உலகத்தைக் கண்டித்து உணர்த்துவார்.
Act 24:25 அவன், நீதியையும், இச்சையடக்கத்தையும், இனிவரும் நியாயத்தீர்ப்பையும்குறித்துப் பேசுகையில், பேலிக்ஸ் பயமடைந்து: இப்பொழுது நீ போகலாம், எனக்குச் சமயமானபோது உன்னை அழைப்பிப்பேன் என்றான்.
பவுல் மூலமாக இங்கே பேலிக்ஸ்க்கு
சத்தியத்தை போதித்தவர் யார்?
பரிசுத்த ஆவியானவர்
Mat 10:20 பேசுகிறவர்கள் நீங்கள் அல்ல, உங்கள்
பிதாவின் ஆவியானவரே உங்களிலிருந்து பேசுகிறவர்
பகுதி
3ல் தொடர்ந்து வாசியுங்கள்
No comments:
Post a Comment