பழைய ஏற்பாட்டில் உபவாசத்தைக் குறித்து தேவன் நியாயப்பிரமாணத்தில் எதுவும் கட்டளை கொடுக்கவில்லை
ஆனால் இஸ்ரவேல் ஜனங்களும் சில புறஜாதி ஜனங்களும் மனந்திரும்பி தங்களை வருத்தி தாழ்மைப்படுத்திய போது தேவன் அதை கண்டு மனம் இறங்கி
அவர்களுடைய
ஜெபத்திற்கு பதில் கொடுத்து
இருக்கிறார்எது உண்மையான உபதேசம் என்று தேவன் அறிவித்து இருக்கிறார்
Isa 58:6 அக்கிரமத்தின் கட்டுகளை அவிழ்க்கிறதும், நுகத்தடியின் பிணையல்களை நெகிழ்க்கிறதும், நெருக்கப்பட்டிருக்கிறவர்களை விடுதலையாக்கிவிடுகிறதும், சகல நுகத்தடிகளையும் உடைத்துப் போடுகிறதும்,
Isa 58:7 பசியுள்ளவனுக்கு உன் ஆகாரத்தைப் பகிர்ந்துகொடுக்கிறதும், துரத்துண்ட சிறுமையானவர்களை வீட்டிலே சேர்த்துக்கொள்ளுகிறதும், வஸ்திரமில்லாதவனைக் கண்டால் அவனுக்கு வஸ்திரங் கொடுக்கிறதும், உன் மாம்சமானவனுக்கு உன்னை ஒளிக்காமலிருக்கிறதும் அல்லவோ எனக்கு உகந்த உபவாசம்.
இஸ்ரவேல் ஜனங்கள் எப்படி உபவாசம் இருந்தார்கள்?
1) இச்சையின் படி செய்வதற்காக இஸ்ரவேலர்கள் உபவாசம் இருந்தார்கள்
Isa 58:3 நாங்கள் உபவாசம்பண்ணும்போது நீர் நோக்காமலிருக்கிறதென்ன? நாங்கள் எங்கள் ஆத்துமாக்களை ஒடுக்கும்போது நீர் அதை அறியாமலிருக்கிறதென்ன என்கிறார்கள்; இதோ, நீங்கள் உபவாசிக்கும் நாளிலே உங்கள் இச்சையின்படி நடந்து, உங்கள் வேலைகளையெல்லாம் கட்டாயமாய்ச் செய்கிறீர்கள்.
2) கூக்குரலை உயரத்திலே கேட்கப்பண்ணும்படிக்கு
உபவாசித்தார்கள்
Isa 58:4 இதோ, வழக்குக்கும் வாதுக்கும் துஷ்டத்தனத்தையுடைய கையினால் குத்துகிறதற்கும் உபவாசிக்கிறீர்கள்; நீங்கள் உங்கள் கூக்குரலை உயரத்திலே கேட்கப்பண்ணும்படியாய், இந்நாளில் உபவாசிக்கிறதுபோல் உபவாசியாதிருங்கள்.
3) இப்படிப்பட்ட உபவாசம் தேவன் தனக்கு
பிரியமில்லை என்று சொல்லுகிறார்
Isa 58:5 மனுஷன் தன் ஆத்துமாவை ஒடுக்குகிறதும், தலைவணங்கி நாணலைப்போல் இரட்டிலும் சாம்பலிலும் படுத்துக்கொள்ளுகிறதும், எனக்குப் பிரியமான உபவாச நாளாயிருக்குமோ? இதையா உபவாசமென்றும் கர்த்தருக்குப் பிரியமான நாளென்றும் சொல்லுவாய்?
இஸ்ரவேல் ஜனங்கள் பாபிலோன் தேசத்தில் அடிமையாக
இருந்த போது எழுபது வருஷங்களும்
ஐந்தாம் மாதத்திலும்
ஏழாம் மாதத்திலும் உபவாசம் இருந்தார்கள்
அதைக்குறித்து தேவன் என்ன சொல்லுகிறாா்?
Zec 7:5 நீ தேசத்தின் எல்லா ஜனத்தோடும் ஆசாரியர்களோடும் சொல்லவேண்டியது என்னவென்றால், நீங்கள் இந்த எழுபது வருஷமாக ஐந்தாம் மாதத்திலும் ஏழாம் மாதத்திலும் உபவாசம்பண்ணி துக்கங்கொண்டாடினபோது நீங்கள் எனக்கென்றுதானா உபவாசம்பண்ணினீர்கள்?
Zec 7:6 நீங்கள் புசிக்கிறபோதும் குடிக்கிறபோதும் உங்களுக்கென்றல்லவா புசிக்கிறீர்கள்? உங்களுக்கென்றல்லவா குடிக்கிறீர்கள்?
இஸ்ரவேல் ஜனங்களின் எழுபது வருஷ உபவாசத்தை தேவன்
கவனிக்கவே இல்லை. காரணம் தேவனுடைய கட்டளைகளுக்கு அவர்கள் கீழ்ப்படியவில்லை
Zec 7:12 வேதத்தையும் சேனைகளின் கர்த்தர் தம்முடைய ஆவியின் மூலமாய் முந்தின தீர்க்கதரிசிகளைக்கொண்டு சொல்லியனுப்பின வார்த்தைகளையும் கேளாதபடிக்குத் தங்கள் இருதயத்தை வைரமாக்கினார்கள்; ஆகையால் மகா கடுங்கோபம் சேனைகளின் கர்த்தரிடத்திலிருந்து உண்டாயிற்று.
புதிய ஏற்பாட்டில் உபவாசத்தைக்குறித்து தேவனுடைய
கட்டளை என்ன?
உபவாசத்தைக் குறித்து கிறிஸ்துவின் கட்டளை இது
தான்
Mat 6:16 நீங்கள் உபவாசிக்கும்போது, மாயக்காரரைப்போல முகவாடலாய் இராதேயுங்கள்; அவர்கள் உபவாசிக்கிறதை மனுஷர் காணும்பொருட்டாக, தங்கள் முகங்களை வாடப்பண்ணுகிறார்கள்; அவர்கள் தங்கள் பலனை அடைந்து தீர்ந்ததென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
Mat 6:17 நீயோ உபவாசிக்கும்போது, அந்த உபவாசம் மனுஷர்களுக்குக் காணப்படாமல், அந்தரங்கத்தில் இருக்கிற உன் பிதாவுக்கே காணப்படும்படியாக, உன் தலைக்கு எண்ணெய் பூசி, உன் முகத்தைக் கழுவு.
Mat 6:18 அப்பொழுது, அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா உனக்கு வெளியரங்கமாய்ப் பலனளிப்பார்.
கொர்நேலியு தன் வீட்டிலே உபவாசித்து ஜெபம்
பண்ணின போது தேவன் அந்த ஜெபத்திற்கு பதில் கொடுத்தார்
Act 10:30 அதற்குக் கொர்நேலியு: நாலு நாளைக்கு முன்னே இந்நேரத்திலே நான் உபவாசித்து, ஒன்பதாம்மணி நேரத்தில் என் வீட்டிலே ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தேன்; அப்பொழுது பிரகாசமுள்ள வஸ்திரந்தரித்த மனுஷன் ஒருவன் எனக்கு முன்பாக நின்று:
Act 10:31 கொர்நேலியுவே, உன் ஜெபம் கேட்கப்பட்டது, உன் தானதருமங்கள் தேவசந்நிதியில் நினைத்தருளப்பட்டது.
தன்னுடைய உபவாசத்தைக் குறித்து பெருமையாக இருந்த
பரிசேயனுடைய ஜெபத்திற்கு தேவன் பதில் கொடுக்கவில்லை
Luk 18:12 வாரத்தில் இரண்டுதரம் உபவாசிக்கிறேன்; என் சம்பாத்தியத்திலெல்லாம் தசமபாகம் செலுத்தி வருகிறேன் என்று, தனக்குள்ளே ஜெபம்பண்ணினான்.
Luk 18:12 வாரத்தில் இரண்டுதரம் உபவாசிக்கிறேன்; என் சம்பாத்தியத்திலெல்லாம் தசமபாகம் செலுத்தி வருகிறேன் என்று, தனக்குள்ளே ஜெபம்பண்ணினான்.
Luk 18:13 ஆயக்காரன் தூரத்திலே நின்று, தன் கண்களையும் வானத்துக்கு ஏறெடுக்கத் துணியாமல், தன் மார்பிலே அடித்துக்கொண்டு: தேவனே! பாவியாகிய என்மேல் கிருபையாயிரும் என்றான்.
Luk 18:14 அவனல்ல, இவனே நீதிமானாக்கப்பட்டவனாய்த் தன் வீட்டுக்குத் திரும்பிப்போனான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஏனெனில் தன்னை உயர்த்துகிறவனெவனும் தாழ்த்தப்படுவான், தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான் என்றார்.
உபவாசம் என்பது பழைய ஏற்பாட்டிலும் புதிய
ஏற்பாட்டிலும் கட்டாயம் கிடையாது என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். தேவனுடைய
பிரமாணத்திற்கு கீழ்ப்படிந்து அவருடைய கட்டளைகளின்படி உபவாசம் இருக்கும் போது தான்
தேவன் அதற்கு பலன் அளிக்கிறார்
இன்றைக்கு பெரிய பேனர்கள் மூலம் உபவாச திருவிழா
உபவாச பெருவிழா என்று அறிவித்து விளம்பரப்படுத்துகிறார்களே அவர்களை பற்றி என்ன?
Mat 6:16 நீங்கள் உபவாசிக்கும்போது, மாயக்காரரைப்போல முகவாடலாய் இராதேயுங்கள்; அவர்கள் உபவாசிக்கிறதை மனுஷர் காணும்பொருட்டாக, தங்கள் முகங்களை வாடப்பண்ணுகிறார்கள்; அவர்கள் தங்கள் பலனை அடைந்து தீர்ந்ததென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
No comments:
Post a Comment