Sunday, 18 March 2018

அல்லேலூயா என்றால் அர்த்தம் என்ன?



இன்றைக்கு கிறிஸ்தவத்தில் அதிகமாக பயன்படுத்தப்படக்கூடிய வார்த்தைகளில் ஒன்று அல்லேலூயா என்ற வார்த்தை
இந்த வார்த்தைகான அர்த்தம் தெரியாமல் அநேகர் இந்த வார்த்தையை அடிக்கடி உபயோகப்படுத்துவதை நாம் பார்க்க முடியும்

அல்லேலூயா என்ற வார்த்தைகான அர்த்தம் என்ன என்பதை நாம் முதலில் கற்றுக் கொள்ள வேண்டும்

அல்லேலூயா என்ற வார்த்தை வேதாகமத்தில் எத்தனை முறை வந்து இருக்கும் என்று நினைக்கிறீர்கள்?
அல்லேலூயா என்ற வார்த்தை பழைய ஏற்பாட்டிலும் புதிய ஏற்பாட்டிலும் மொத்தம் 26 வார்த்தைகள் இருக்கிறது என்பதை நாம் கவனிக்கும் போது இன்றைய காலகட்டத்தில் அது நமக்கு மிகுந்த ஆச்சரியமே

இந்த அல்லேலூயா என்ற வார்த்தை முதன் முதலில் எந்த வேத வாக்கியத்தில் இடம் பெற்று இருக்கிறது?
சங்கீதம் 104:35 ல் முதன் முதலில் வந்து இருக்கிறது

இந்த அல்லேலூயா என்ற வார்த்தைக்கான அர்த்தம் என்னவென்று நாம் இந்த வேத வாக்கியத்தில் இருந்தே கற்றுக் கொள்ளுவோம்
Psa 104:35 பாவிகள் பூமியிலிருந்து நிர்மூலமாகி, துன்மார்க்கர் இனி இராமற்போவார்கள். என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி, அல்லேலூயா.

தமிழில் அல்லேலூயா என்று மொழி பெயர்க்கப்பட்டு இருந்தாலும் ஆங்கிலத்தில் இந்த வார்த்தை எப்படி வந்து இருக்கிறது என்று கவனியுங்கள்
Psa 104:35  Let the sinnersH2400 be consumedH8552 out ofH4480 the earth,H776 and let the wickedH7563 be noH369 more.H5750 BlessH1288 thou(H853) the LORD,H3068 O my soul.H5315 PraiseH1984 ye the LORD.H3050

அல்லேலூயா என்ற வார்த்தை Praise ye the LORD  என்று மொழி பெயர்த்து இருக்கிறார்கள்
எபிரெய வேதாகமத்தில் Praise என்ற வார்த்தைக்கு H1984 என்ற எபிரெய எண்ணை தேவன் கொடுத்து இருக்கிறார், அதற்கு எபிரெயத்தில் அல்லே
H1984
הלל
hâlal
haw-lal'
A primitive root; to be clear (originally of sound, but usually of color); to shine;
பிரகாசமாய் இருப்பது என்பது தான் இதற்கான அர்த்தமாக இருக்கிறது

எபிரெய வேதாகமத்தில் ye the LORD என்ற வார்த்தைக்கு H3050
என்ற எபிரெய எண்ணை கொடுத்து இருக்கிறார் அதற்கு எபிரெயத்தில் யா என்ற வார்த்தையாக இருக்கிறது
H3050
יהּ
yâhh
yaw
Contracted for H3068, and meaning the same; Jah, the sacred name: - Jah, the Lord, most vehement. Cp. names in “-iah,” “-jah.”

இந்த யா என்றால் என்ன அர்த்தம்?
யொகோவா(yeh-ho-vaw) என்ற வார்த்தையில் யா( yaw) என்ற வார்த்தை வருகிறது இந்த வார்த்தை யெகோவா தேவனை  சுருக்கமாக குறிப்பிடப்படுகிறது
H3068
יהוה
yehôvâh
yeh-ho-vaw'
From H1961; (the) self Existent or eternal; Jehovah, Jewish national name of God: - Jehovah, the Lord. Compare H3050, H3069.

ஹல்லே லூவே என்பதுதான் தமிழில்  அல்லேலூயா என்று மொழி பெயர்த்து இருக்கிறார்கள் அதற்கான யெகோவா(தேவன்) பிரகாசமானவராக (மகிமையாக)இருக்கிறார் என்பது தான்.

தேவன் தம்முடைய நாமத்தை வீணிலே வழங்ககூடாது என்று தேவன் பழைய ஏற்பாட்டில் கட்டளையிட்டு இருந்தார்
Exo 20:7 உன் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தை வீணிலே வழங்காதிருப்பாயாக; கர்த்தர் தம்முடைய நாமத்தை வீணிலே வழங்குகிறவனைத் தண்டியாமல் விடார்.


  1.  பழைய ஏற்பாட்டில் அல்லேலூயா என்ற வார்த்தை 22 வார்த்தைகள் தான் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது என்று நாம் கவனிக்கும் போது பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்கள் அந்த வார்த்தையை மிக குறைவாகவே பயன்படுத்தி இருக்கிறார்கள்
  2. புதிய ஏற்பாட்டில் அல்லேலூயா என்ற வார்த்தை மத்தேயு புஸ்தகத்தில் இருந்து யூதா புஸ்தகம் வரை ஒரு வார்த்தை கூட பரிசுத்த ஆவியானவர் பயன்படுத்தவில்லை


வெளிப்படுத்தின விசேஷத்தில் 19 அதிகாரத்தில் 1,3,4,6 வசனத்தில் மாத்திரம் அல்லேலூயா என்ற வார்த்தை 4 முறை மாத்திரமே பயன்படுத்தப்பட்டு இருக்கிறது

இந்த நான்கு முறையும் இந்த வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டது பரலோகத்தில் இருந்தவர்கள் என்பதை நாம் கவனிக்க வேண்டும்
Rev 19:1 இவைகளுக்குப்பின்பு, பரலோகத்தில் திரளான ஜனக்கூட்டம் இடுகிற ஆரவாரத்தைக் கேட்டேன். அவர்கள்: அல்லேலூயா, இரட்சணியமும் மகிமையும் கனமும் வல்லமையும் நம்முடைய தேவனாகிய கர்த்தருக்கே உரியது; அவருடைய நியாயத்தீர்ப்புகள் சத்தியமும் நீதியுமானவைகள்.
Rev 19:1  AndG2532 afterG3326 these thingsG5023 I heardG191 a greatG3173 voiceG5456 of muchG4183 peopleG3793 inG1722 heaven,G3772 saying,G3004 Alleluia;G239 Salvation,G4991 andG2532 glory,G1391 andG2532 honour,G5092 andG2532 power,G1411 unto the LordG2962 ourG2257 God:G2316

அல்லேலூயா என்ற வார்த்தைக்கு கிரேக்கத்தில் தேவன் பயன்படுத்தின வார்த்தைக்கான கிரேக்க எண் G239
G239
ἀλληλούΐα
allēlouia
al-lay-loo'-ee-ah
Of hebrew origin (imperative of [H1984] and [H3050]); praise ye Jah!, an adoring exclamation: - alleluiah.

எபிரெயத்தில் என்ன அர்த்தம் பயன்படுத்தப்பட்டதோ அதே அர்த்தம் கிரேக்கத்திலும் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது

  1. புதிய ஏற்பாட்டில் நம்முடைய இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவோ அப்போஸ்தலர்களோ அல்லது ஆதி கிறிஸ்தவர்களோ பயன்படுத்தாத வார்த்தையை இன்றைக்கு அநேக போதகர்கள் பயன்படுத்தி ஒட்டு மொத்த கிறிஸ்தவர்களை அல்லேலூயா என்ற வார்த்தைக்கு மயக்கி வைத்து இருக்கிறார்கள்
  2. கிறிஸ்தவத்தில் எந்த கூட்டம் நடத்தாலும் யார் பிரசங்கித்தாலும ஜனங்களை பார்த்து அல்லேலூயா  என்று சொல்லுங்கள் என்று சொல்லி ஓராயிரம் தடவை சொல்லி இன்றைக்கு அல்லேலூயா கூட்டம் என்று அழைக்கப்படக்கூடிய அளவுக்கு ஒட்டு மொத்த கிறிஸ்தவத்தை நிலை குலைய வைத்து இருக்கிறார்கள்
  3.  அல்லேலூயா என்று சொல்லிக் கொண்டே இருங்கள் என்று தேவன் நமக்கு எந்த கட்டளையையும் புதிய ஏற்பாட்டில் நமக்கு கொடுக்கவில்லை
  4. தேவன் நமக்கு செய்த எல்லா நன்மைகளுக்காகவும் அவருக்கு ஸ்தோத்திரம் செலுத்த வேண்டும் தேவன் அதை நம்மிடத்தில் எதிர்பார்க்கிறார்
  5. புதிய ஏற்பாட்டிலே இயேசு கிறிஸ்துவும் அப்போஸ்தலர்களும் தேவனுடைய பிள்ளைகளும் தேவன் செய்த நன்மைகளுக்காகவும் ஈவுகளுக்காகவும் ஸ்தோத்திரம் செலுத்தி நமக்கு மாத்திரியை பின் வைத்து போய் இருக்கிறார்கள் அந்த அடிச்சுவடுகளை தான் நாம் பின்பற்ற வேண்டும்


தேவன் நமக்கு கொடுக்கும் ஆலோசனை இது தான்
Mat 7:21 பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை.
Mat 7:22 அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள்.
Mat 7:23 அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை; அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்றுபோங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்.

  1. நாம் தேவனுடைய சித்தத்தை கண்டுபிடித்து அதற்கு நாம் கீழ்ப்படிய வேண்டும்
  2.  தேவனுடைய சித்தத்தின்படி செய்யாமல் அல்லேலூயா அல்லேலூயா என்று சொல்லிக் கொண்டு இருப்பதினால் எந்த பிரயோஜனமும் இல்லை
  3. நியாயத்தீர்ப்பின் நாளிலே அவருடைய சித்தம் செய்யாதவர்கள் புறம்பாக்கப்படுவார்கள்

No comments:

Post a Comment