தேவன் மழையைப்
பெய்யப் பண்ணுகிறார்
Psa 104:10 அவர் பள்ளத்தாக்குகளில் நீரூற்றுகளை வரவிடுகிறார்; அவைகள் மலைகள் நடுவே ஓடுகிறது.
அந்த தண்ணீர் எல்லாருடைய தாகத்தையும்
தணிக்கிறது
Psa 104:11 அவைகள் வெளியின் ஜீவன்களுக்கெல்லாம் தண்ணீர் கொடுக்கும்; அங்கே காட்டுக்கழுதைகள் தங்கள் தாகத்தைத் தீர்த்துக்கொள்ளும்.
Psa 104:12 அவைகளின் ஓரமாய் ஆகாயத்துப் பறவைகள் சஞ்சரித்து, கிளைகள் மேலிருந்து பாடும்.
Psa 104:13 தம்முடைய மேல்வீடுகளிலிருந்து பர்வதங்களுக்குத் தண்ணீர் இறைக்கிறார்; உமது கிரியைகளின் பலனாலே பூமி திருப்தியாயிருக்கிறது.
தேவன் மழையைக் கொண்டு ஆகாரம் உண்டாகும்படி செய்கிறார்
மனுஷருக்கு பயிர்வகைகளையும் மிருகங்களுக்கு புல்லையும் அவர்தான்
முளைப்பிக்கப்பண்ணுகிறார்
Psa 104:14 பூமியிலிருந்து ஆகாரம் உண்டாகும்படி, அவர் மிருகங்களுக்குப் புல்லையும், மனுஷருக்கு உபயோகமான பயிர்வகைகளையும் முளைப்பிக்கிறார்.
Psa 104:15 மனுஷனுடைய இருதயத்தை மகிழ்ச்சியாக்கும் திராட்சரசத்தையும், அவனுக்கு முகக்களையை உண்டுபண்ணும் எண்ணெயையும், மனுஷனுடைய இருதயத்தை ஆதரிக்கும் ஆகாரத்தையும் விளைவிக்கிறார்.
நாம் தேவனிடத்தில் ஆகாரத்திற்காக ஜெபிக்க
வேண்டியது அவசியமாய் இருக்கிறது
Mat 6:11 எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும்.
தேவன் சகல ஜீவன்களுக்கும் குடியிருப்பதற்கு அவர் தான் உதவி
செய்கிறார்
Psa 104:16 கர்த்தருடைய விருட்சங்களும், அவர் நாட்டின லீபனோனின் கேதுருக்களும் சாரத்தினால் நிறைந்திருக்கும்.
Psa 104:17 அங்கே குருவிகள் கூடுகட்டும்; தேவதாருவிருட்சங்கள் கொக்குகளின் குடியிருப்பு.
Psa 104:18 உயர்ந்த பர்வதங்கள் வரையாடுகளுக்கும், கன்மலைகள் குழிமுசல்களுக்கும் அடைக்கலம்.
நம்முடைய கால குறிப்புகளுக்கு சந்திரனை
சூரியனையும் சிருஷ்டித்து இருக்கிறார்
Psa 104:19 சந்திரனைக் காலக்குறிப்புகளுக்காகப் படைத்தார்; சூரியன் தன் அஸ்தமனத்தை அறியும்.
தேவன் இருளையும் கட்டளையிடுகிறார் அதற்கான நோக்கம் சகல காட்டு
ஜீவன்களும் ஆகாரம் தேடும்படியாக அப்படி செய்கிறார்
Psa 104:20 நீர் இருளைக் கட்டளையிடுகிறீர், இராக்காலமாகும்; அதிலே சகல காட்டு ஜீவன்களும் நடமாடும்.
தேவன் தான் சகல
காட்டு ஜீவன்களுக்கும் ஆகாரம் கொடுக்கிறார்
Psa 104:21 பாலசிங்கங்கள் இரைக்காக கெர்ச்சித்து, தேவனால் தங்களுக்கு ஆகாரம் கிடைக்கும்படித் தேடும்.
மனிதன் தன் வேலைக்கு போகும்படிக்கும் விலங்கள் தங்கள்
இருப்பிடங்களிலே படுத்துக் கொள்ளும்படிக்கும் தேவன் சூரியனை உதிக்கப்பண்ணுகிறார்
Psa 104:22 சூரியன் உதிக்கையில் அவைகள் ஒதுங்கி, தங்கள் தாபரங்களில் படுத்துக்கொள்ளும்.
Psa 104:23 அப்பொழுது மனுஷன் சாயங்காலமட்டும் தன் வேலைக்கும், தன் பண்ணைக்கும் புறப்படுகிறான்.
தேவன் சகலத்தையும் ஞானமாய் படைத்து
தம்முடைய கட்டுப்பாட்டுக்குள் வைத்து இருக்கிறார்
Psa 104:24 கர்த்தாவே, உமது கிரியைகள் எவ்வளவு திரளாயிருக்கிறது! அவைகளையெல்லாம் ஞானமாய்ப் படைத்தீர்; பூமி உம்முடைய பொருள்களினால் நிறைந்திருக்கிறது.
சமுத்திரத்தில் இருக்கக்கூடிய சகல ஜீவராசிகளையும் தேவன் தான்
போஷிக்கிறார்
Psa 104:25 பெரிதும் விஸ்தாரமுமான இந்தச் சமுத்திரமும் அப்படியே நிறைந்திருக்கிறது; அதிலே சஞ்சரிக்கும் சிறியவைகளும் பெரியவைகளுமான எண்ணிறந்த ஜீவன்கள் உண்டு.
Psa 104:26 அதிலே கப்பல்கள் ஓடும்; அதிலே விளையாடும்படி நீர் உண்டாக்கின திமிங்கிலங்களும் உண்டு.
சமுத்திரத்தில் இருக்கக்கூடிய சகல
ஜீவராசிகளும் உணவுக்காக தேவனை நோக்கி தான் காத்து இருக்கிறது
Psa 104:27 ஏற்றவேளையில் ஆகாரத்தைத் தருவீர் என்று அவைகளெல்லாம் உம்மை நோக்கிக் காத்திருக்கும்.
Psa 104:28 நீர் கொடுக்க, அவைகள் வாங்கிக்கொள்ளும்; நீர் உம்முடைய கையைத் திறக்க, அவைகள் நன்மையால் திருப்தியாகும்.
Psa 145:15 எல்லா ஜீவன்களின் கண்களும் உம்மை நோக்கிக்கொண்டிருக்கிறது; ஏற்ற வேளையிலே நீர் அவைகளுக்கு ஆகாரங்கொடுக்கிறீர்.
Psa 145:16 நீர் உமது கையைத் திறந்து, சகல பிராணிகளின் வாஞ்சையையும் திருப்தியாக்குகிறீர்.
தேவன் அவைகளுடைய சுவாசத்தை வாங்கிகொள்ள அவைகள் மாண்டு மண்ணுக்கு
திரும்புகிறது
Psa 104:29 நீர் உமது முகத்தை மறைக்க, திகைக்கும்; நீர் அவைகளின் சுவாசத்தை வாங்கிக்கொள்ள, அவைகள் மாண்டு, தங்கள் மண்ணுக்குத் திரும்பும்.
பூமியிலுள்ள சகல ஜீவராசிகளையும் ஆவியை அனுப்பி
சிருஷ்டிக்கிறவர் நம்முடைய தேவன் தான்
Psa 104:30 நீர் உம்முடைய ஆவியை அனுப்பும்போது, அவைகள் சிருஷ்டிக்கப்படும்; நீர் பூமியின் ரூபத்தையும் புதிதாக்குகிறீர்.
Psa 104:31 கர்த்தருடைய மகிமை என்றென்றைக்கும் விளங்கும்; கர்த்தர் தம்முடைய கிரியைகளிலே மகிழுவார்.
அடைக்கலான் குருவிகள் கூட தேவனால் மறக்கப்படுவதில்லை
Mat 10:29 ஒரு காசுக்கு இரண்டு அடைக்கலான் குருவிகளை விற்கிறார்கள் அல்லவா? ஆயினும் உங்கள் பிதாவின் சித்தமில்லாமல், அவைகளில் ஒன்றாகிலும் தரையிலே விழாது.
Luk 12:6 இரண்டு காசுக்கு ஐந்து அடைக்கலான் குருவிகளை விற்கிறார்களல்லவா? அவைகளில் ஒன்றாகிலும் தேவனால் மறக்கப் படுகிறதில்லை.
காகங்களை கூட தேவன் தான் போஷிக்கிறார்
Luk 12:24 காகங்களைக் கவனித்துப்பாருங்கள், அவைகள் விதைக்கிறதுமில்லை அறுக்கிறதுமில்லை, அவைகளுக்குப் பண்டசாலையுமில்லை, களஞ்சியமுமில்லை, இல்லாவிட்டாலும் அவைகளையும் தேவன் பிழைப்பூட்டுகிறார்; பறவைகளைப்பார்க்கிலும் நீங்கள் எவ்வளவோ விசேஷித்தவர்களாயிருக்கிறீர்கள்.
காட்டுப்புஷ்பங்களை கூட தேவன் தான் அழகாக உடுத்துவிக்கிறார்
Luk 12:27 காட்டுப்புஷ்பங்கள் எப்படி வளருகிறதென்று கவனித்துப்பாருங்கள்; அவைகள் உழைக்கிறதுமில்லை, நூற்கிறதுமில்லை, என்றாலும் சாலொமோன் முதலாய்த் தன் சர்வ மகிமையிலும் அவைகளில் ஒன்றைப்போலாகிலும் உடுத்தியிருந்ததில்லை என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
உடைக்காகவும் உணவுக்காகவும் கவலைப்படாதிருங்கள்
Luk 12:29 ஆகையால், என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம் என்று, நீங்கள் கேளாமலும் சந்தேகப்படாமலும் இருங்கள்.
Luk 12:30 இவைகளையெல்லாம் உலகத்தார் நாடித் தேடுகிறார்கள்; இவைகள் உங்களுக்கு வேண்டியவைகளென்று உங்கள் பிதாவானவர் அறிந்திருக்கிறார்.
முதலாவது தேவனுடைய ராஜ்யத்தை தேடுங்கள் அப்பொழுது இவைகள் உங்களுக்கு
கொடுக்கப்படும்
Luk 12:31 தேவனுடைய ராஜ்யத்தையே தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும்.
No comments:
Post a Comment