பகுதி:3 பரிசுத்த ஆவியானவர்
பரிசுத்த ஆவியானவர் என்பவர் ஒரு ஆவிக்குரிய
நபரா?
பரிசுத்த ஆவியினால் ஏவப்பட்ட
நம்முடைய வேத வசனங்களில் பரிசுத்த ஆவியானவர் ஒரு ஆவிக்குரிய நபராக தான்
வெளிப்படுத்தப்பட்டு இருக்கிறார்
Joh 16:13 சத்திய
ஆவியாகிய அவர் வரும்போது, சகல
சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்;
அவர் தம்முடைய சுயமாய்ப் பேசாமல், தாம்
கேள்விப்பட்டவைகள் யாவையுஞ்சொல்லி, வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார்.
Joh 16:14 அவர்
என்னுடையதில் எடுத்து உங்களுக்கு அறிவிப்பதினால் என்னை மகிமைப்படுத்துவார்.
Joh 16:15 பிதாவினுடையவைகள் யாவும் என்னுடையவைகள்; அதினாலே
அவர் என்னுடையதில் எடுத்து உங்களுக்கு அறிவிப்பார் என்றேன்.
Joh 16:8 அவர்
வந்து,
பாவத்தைக்குறித்தும், நீதியைக்குறித்தும், நியாயத்தீர்ப்பைக்குறித்தும், உலகத்தைக் கண்டித்து உணர்த்துவார்.
இயேசு
கிறிஸ்து பரிசுத்த ஆவியானவரைப் பற்றி சொல்லும் போது அவர் என்கிற ஒரு வார்த்தையை
பயன்படுத்துகிறார். இந்த அவர் என்கிற வார்த்தை கிரேக்க வேதாகமத்தில் ஆண்பாலில்
சொல்லப்பட்டு இருக்கிறார்
இப்படி
அநேக வசனங்களில் பரிசுத்த ஆவியானவர் ஆண்பாலில் தான் சொல்லப்பட்டு இருக்கிறார்
1) பரிசுத்த
ஆவியானவரைக் குறித்து பேதுருவைக் கொண்டு பரலோகத்தின் பிதா சொல்லும் போது அவர்
தேவன் என்று சொல்லுகிறார்
Act 5:3 பேதுரு
அவனை நோக்கி: அனனியாவே, நிலத்தின் கிரயத்தில் ஒரு
பங்கை வஞ்சித்துவைத்து, பரிசுத்த ஆவியினிடத்தில் பொய்சொல்லும்படி,
சாத்தான் உன் இருதயத்தை நிரப்பினதென்ன?
Act 5:4 அதை
விற்குமுன்னே அது உன்னுடையதாயிருக்கவில்லையோ? அதை
விற்றபின்பும் அதின் கிரயம் உன்
வசத்திலிருக்கவில்லையோ? நீ உன் இருதயத்திலே இப்படிப்பட்ட எண்ணங்கொண்டதென்ன? நீ
மனுஷரிடத்தில் அல்ல, தேவனிடத்தில் பொய்சொன்னாய் என்றான்.
2) பரிசுத்த
ஆவியானவர் தேவனுடைய ஊழியக்காரர்களுக்கு கட்டளை கொடுத்தார்
Act 8:29 ஆவியானவர்:
நீ போய், அந்த இரதத்துடனே சேர்ந்துகொள் என்று பிலிப்புடனே சொன்னார்.
3)
பரிசுத்த ஆவியானவர் ஊழியக்காரர்களை தடை செய்ய முடியும்
Act 16:6 அவர்கள்
பிரிகியா கலாத்தியா நாடுகளைக் கடந்துபோனபோது,
ஆசியாவிலே வசனத்தைச் சொல்லாதபடிக்குப் பரிசுத்த ஆவியினாலே தடைபண்ணப்பட்டு,
Act 16:7 மீசியா
தேசமட்டும் வந்து, பித்தினியா நாட்டுக்குப் போகப்
பிரயத்தனம் பண்ணினார்கள்; ஆவியானவரோ அவர்களைப் போகவொட்டாதிருந்தார்.
4)
பரிசுத்த ஆவியானவர் நடப்போகிற காரியங்களை தம்முடைய தீர்க்கதரிசிகளுக்கு
முன்னறிவித்தார்
Act 21:10 நாங்கள்
அநேகநாள் அங்கே தங்கியிருக்கையில், அகபு
என்னும் பேர்கொண்ட ஒரு தீர்க்கதரிசி யூதேயாவிலிருந்து வந்தான்.
Act 21:11 அவன்
எங்களிடத்தில் வந்து, பவுலினுடைய கச்சையை எடுத்துத் தன் கைகளையும் கால்களையும் கட்டிக்கொண்டு: இந்தக் கச்சையையுடையவனை எருசலேமிலுள்ள யூதர் இவ்விதமாய்க் கட்டிப்
புறஜாதியார் கைகளில் ஒப்புக்கொடுப்பார்கள் என்று
பரிசுத்த ஆவியானவர் சொல்லுகிறார் என்றான்.
5) பரிசுத்த
ஆவியானவர் பிதாவுடைய ஆழங்களையும் ஆராய்ந்து இருக்கிறார்
1Co 2:10 நமக்கோ
தேவன் அவைகளைத் தமது ஆவியினாலே வெளிப்படுத்தினார்; அந்த ஆவியானவர் எல்லாவற்றையும்,
தேவனுடைய ஆழங்களையும், ஆராய்ந்திருக்கிறார்.
6) நாம்
தேவனுடைய பிள்ளைகளாய் இருக்கிறோம் என்று நம்முடைய ஆவியுடனே கூட சாட்சி
கொடுக்கிறார்
Rom 8:16 நாம்
தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோமென்று ஆவியானவர்தாமே நம்முடைய ஆவியுடனேகூடச் சாட்சி கொடுக்கிறார்.
7)
பரிசுத்த ஆவியானவர் நமக்காக வேண்டுதல் செய்கிறார்
Rom 8:26 அந்தப்படியே ஆவியானவரும் நமது பலவீனங்களில் நமக்கு உதவிசெய்கிறார். நாம்
ஏற்றபடி வேண்டிக்கொள்ள வேண்டியதின்னதென்று அறியாமலிருக்கிறபடியால், ஆவியானவர்தாமே வாக்குக்கடங்காத பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல்செய்கிறார்.
8)
பரிசுத்த ஆவியானவர் நமக்காக வேண்டுதல் செய்ய வேண்டும் என்பது தேவனுடைய சித்தமாக
இருக்கிறது
Rom 8:27 ஆவியானவர் தேவனுடைய சித்தத்தின்படியே பரிசுத்தவான்களுக்காக வேண்டுதல் செய்கிறபடியால், இருதயங்களை ஆராய்ந்துபார்க்கிறவர் ஆவியின் சிந்தை
இன்னதென்று அறிவார்.
9) நாம்
பாவம் செய்வதின் மூலம் பரிசுத்த ஆவியானவரை துக்கப்படுத்த முடியும்
Eph 4:30 அன்றியும்,
நீங்கள் மீட்கப்படும் நாளுக்கென்று முத்திரையாகப் பெற்ற தேவனுடைய பரிசுத்த ஆவியைத் துக்கப்படுத்தாதிருங்கள்.
10)
பரிசுத்த ஆவிக்குள் எபேசு சபையின்
கிறிஸ்தவர்கள் முத்திரைப் போடப்பட்டு இருந்தார்கள்
Eph 1:13 நீங்களும் உங்கள் இரட்சிப்பின் சுவிசேஷமாகிய சத்திய வசனத்தைக் கேட்டு, விசுவாசிகளானபோது, வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட பரிசுத்த ஆவியால்
அவருக்குள் முத்திரைபோடப்பட்டீர்கள்.
11)
பரிசுத்த ஆவியானவர் நம்முடைய சுதந்தரத்தின் அச்சாரமாக இருக்கிறார்
Eph 1:14 அவருக்குச் சொந்தமானவர்கள் அவருடைய மகிமைக்குப் புகழ்ச்சியாக மீட்கப்படுவார்கள் என்பதற்கு ஆவியானவர் நம்முடைய சுதந்தரத்தின் அச்சாரமாயிருக்கிறார்.
12) நாம்
ஞான்ஸ்நானம் பெறும் போது பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்தினாலே ஞானஸ்நானம்
பெற வேண்டியது அவசியமாய் இருக்கிறது
பரிசுத்த
ஆவியானவருக்கொன்று நாமம்(அதிகாரம்) இருக்கிறது
Mat 28:19 ஆகையால், நீங்கள்
புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி,
பிதா குமாரன் பரிசுத்த ஆவியின்
நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,
Mat 28:20 நான்
உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள்
கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம்பண்ணுங்கள். இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார். ஆமென்.
Rev 3:22 ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்றெழுது என்றார்.
ஆனாலும்
இதை அநேகர் இந்த சத்தியங்களை ஏற்றுக் கொள்ளப்போவதில்லை
1Co 2:14 ஜென்மசுபாவமான மனுஷனோ தேவனுடைய ஆவிக்குரியவைகளை ஏற்றுக்கொள்ளான்; அவைகள் அவனுக்குப் பைத்தியமாகத் தோன்றும்; அவைகள் ஆவிக்கேற்றபிரகாரமாய் ஆராய்ந்து நிதானிக்கப்படுகிறவைகளானதால், அவைகளை அறியவுமாட்டான்.
1Co 2:15 ஆவிக்குரியவன் எல்லாவற்றையும் ஆராய்ந்து நிதானிக்கிறான்; ஆனாலும் அவன் மற்றொருவனாலும் ஆராய்ந்து நிதானிக்கப்படான்.