பகுதி:6 பரிசுத்த ஆவியானவர்
பரிசுத்த ஆவியின் ஒன்பது வரங்கள் எதற்காக கொடுக்கப்பட்டது?
1) பாருங்கள் முதல் நுற்றாண்டு காலத்தில் கி,பி 50 மேல் தான் சுவிசேஷ
புத்தகங்களும் நிருபங்களும் எழுதப்பட்டன, ஆனால் சபையானது சுமார் கி,பி 33ல்
எருசலேமில் ஸ்தாபிக்கப்பட்டது. அப்படியானல் சுமார் 30 வருடங்கள் எருசலேமிலும்.
யூதேயாவிலும், சமாரியாவிலும், மற்றும் அப்போஸ்தலனாகிய பவுலால் ஸ்தாபிக்கப்பட்ட
ஆசிய சபைகளில் இருந்த ஜனங்கள் எப்படி ஒரே
சத்தியத்தை பேச முடியும் ஓரே சத்தியத்தில் நடக்க முடியும்? அதற்காக தான் தேவன்
இந்த ஆவிக்குரிய வரங்களை கொடுத்தார்
1Co 1:9 தம்முடைய குமாரனும் நம்முடைய கர்த்தருமாயிருக்கிற இயேசு கிறிஸ்துவுடனே ஐக்கியமாயிருப்பதற்கு உங்களை அழைத்த தேவன் உண்மையுள்ளவர்.
1Co 1:10 சகோதரரே, நீங்களெல்லாரும் ஒரே காரியத்தைப் பேசவும், பிரிவினைகளில்லாமல் ஏகமனதும் ஏகயோசனையும் உள்ளவர்களாய்ச் சீர்பொருந்தியிருக்கவும் வேண்டுமென்று, நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன்.
2) எதற்காக இந்த
அடையாள அற்புத வரங்கள்?
Joh 20:30 இந்தப் புஸ்தகத்தில் எழுதியிராத வேறு அநேக அற்புதங்களையும் இயேசு தமது சீஷருக்கு முன்பாகச் செய்தார்.
Joh 20:31 இயேசு தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நீங்கள் விசுவாசிக்கும்படியாகவும், விசுவாசித்து அவருடைய நாமத்தினாலே நித்தியஜீவனை அடையும்படியாகவும், இவைகள் எழுதப்பட்டிருக்கிறது.
Mar 16:20 அவர்கள் புறப்பட்டுப்போய், எங்கும் பிரசங்கம்பண்ணினார்கள். கர்த்தர் அவர்களுடனேகூடக் கிரியையை நடப்பித்து, அவர்களால் நடந்த அடையாளங்களினாலே வசனத்தை உறுதிப்படுத்தினார். ஆமென்.
பாருங்கள் இந்த அற்புத வரங்கள் தேவனுடைய சாட்சியாக இருந்தது, இதன்
மூலமாக அநேக ஜனங்கள் தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவையும் அவருடைய சுவிசேஷத்தையும்
ஏற்றுக் கொண்டார்கள்,
3) பாருங்கள் நாம் ஏற்கனவே பார்த்து இருக்கிறோம் அப்போஸ்தலர்கள்
விசுவாசிகளின் தலையின் மீது கை வைக்காவிட்டால் இந்த பரிசுத்த ஆவியின் வரங்களை
ஒருவரும் பெற முடியாது என்று பார்த்து இருக்கிறோம்
இந்த ஆவிக்குரிய வரங்களை குறித்து பரிசுத்த ஆவியானவர் என்ன
சொல்லுகிறார் பாருங்கள்
1Co 13:8 அன்பு ஒருக்காலும் ஒழியாது. தீர்க்கதரிசனங்களானாலும் ஒழிந்துபோம், அந்நிய பாஷைகளானாலும் ஓய்ந்துபோம், அறிவானாலும் ஒழிந்துபோம்.
1Co 13:9 நம்முடைய அறிவு குறைவுள்ளது, நாம் தீர்க்கதரிசனஞ் சொல்லுதலும் குறைவுள்ளது.
இந்த வசனத்தில் சொல்லப்பட்ட தீர்க்கதரிசனங்கள், அந்நிய பாஷைகள், அறிவு
(இந்த அறிவு மனுஷனுடைய அறிவு அல்ல ஆவிக்குரிய வரங்களில் ஒன்று) இதெல்லாம்
ஆவிக்குரிய வரங்களில் இருக்கிறது இதெல்லாம் பரிசுத்த ஆவியானவர் ஓழிந்து போகும்
என்கிறார்,
ஏனென்றால் இந்த கால கட்டம் வரை புதிய ஏற்பாட்டு புஸ்தகங்கள் முழுமை
பெறாமல் இருந்தது
5) மேலும் பரிசுத்த ஆவியானவர் சொல்லுவதை கவனியுங்கள்
1Co 13:10 நிறைவானது வரும்போது குறைவானது ஒழிந்துபோம்.
நிறைவானது என்று அநேகர் சொல்லும் போது கிறிஸ்துவின் வருகை வரும் போது
இந்த வரங்கள் ஓழிந்து போய் விடும் என்கிறார்கள் ஆனால் இந்த வேத வசனம் நிறைவானது
என்று சொல்லும் போது பூரணமான புதிய ஏற்பாட்டை பற்றி பேசுகிறது, இந்த வார்த்தை
கிரேக்கத்தில் பலவின்பாலில் தான் இருக்கிறது,
Jam 1:25 சுயாதீனப்பிரமாணமாகிய பூரணப்பிரமாணத்தை உற்றுப்பார்த்து, அதிலே நிலைத்திருக்கிறவனே கேட்கிறதை மறக்கிறவனாயிராமல், அதற்கேற்ற கிரியை செய்கிறவனாயிருந்து, தன் செய்கையில் பாக்கியவானாயிருப்பான்.
6) பவுல் இந்த ஆவிக்குரிய வரத்தை குறித்து என்ன சொல்லுகிறார்
பாருங்கள்
1Co 13:11 நான் குழந்தையாயிருந்தபோது குழந்தையைப்போலப் பேசினேன், குழந்தையைப்போலச் சிந்தித்தேன், குழந்தையைப்போல யோசித்தேன்; நான் புருஷனானபோதோ குழந்தைக்கேற்றவைகளை ஒழித்துவிட்டேன்.
இந்த ஆவிக்குரிய வரங்கள் எல்லாம் குழந்தையைப் போல் என்கிறார்
மேலும் அவர் என்ன சொல்லுகிறார் பாருங்கள்
1Co 13:12 இப்பொழுது கண்ணாடியிலே நிழலாட்டமாய்ப் பார்க்கிறோம், அப்பொழுது முகமுகமாய்ப் பார்ப்போம்; இப்பொழுது நான் குறைந்த அறிவுள்ளவன், அப்பொழுது நான் அறியப்பட்டிருக்கிறபடியே அறிந்துகொள்ளுவேன்.
பாருங்கள் அப்போஸ்தலனாகிய பவுல் ஆவிக்குரிய ஒன்பது வரங்களையும்
பெற்றுக் கொண்டவர் அவர் சொல்லும் போது தான் ஓரு குழந்தை என்றும் நான் குறைந்த
அறிவுள்ளவன் என்றும் கூறுகிறார் ஏனென்றால் புதிய சத்தியங்கள் எழுதி முடிக்கப்பட்டு
இருக்கவில்லை அந்த எல்லா புஸ்தகங்களும் எழுதி முடிக்கப்பட்டு எல்லாருடைய கைகளில்
கிடைக்கும் போது தேவனுடைய முழுமையான வெளிப்பாடு அப்போது வெளிப்படும்
7) சுமார் கி,பி 68 ல் புதிய ஏற்பாட்டு சத்தியங்கள் எல்லாம் தேவனால்
ஏவப்பட்டு எழுதி முடிக்கப்பட்டு எல்லாருடைய கைகளில் அந்த சுவிசேஷ புஸ்தகங்களும்.
நிருபங்களும் கிடைத்த போது பவுல் என்ன சொல்லுகிறார் பாருங்கள்
2Ti 3:16 வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக,
2Ti 3:17 அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும், சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது.
8) கிபி 69ல் தேவன் எபிரெய ஆசிரியரைக் கொண்டு என்ன சொல்லுகிறார்
பாருங்கள
Heb 2:3 முதலாவது கர்த்தர் மூலமாய் அறிவிக்கப்பட்டு, பின்பு அவரிடத்தில் கேட்டவர்களாலே நமக்கு உறுதியாக்கப்பட்டதும்,
Heb 2:4 அடையாளங்களினாலும் அற்புதங்களினாலும் பலவிதமான பலத்த செய்கைகளினாலும், தம்முடைய சித்தத்தின்படி பகிர்ந்துகொடுத்த பரிசுத்த ஆவியின் வரங்களினாலும், தேவன் தாமே சாட்சி கொடுத்ததுமாயிருக்கிற இவ்வளவு பெரிதான இரட்சிப்பைக்குறித்து நாம் கவலையற்றிருப்போமானால் தண்டனைக்கு எப்படித் தப்பித்துக்கொள்ளுவோம்.
இந்த வேத வசனங்கள் தேவன் இரட்சிப்புக்காக என்ன செய்து இருக்கிறார்
என்றும் அவர் அதற்கு எப்படி சாட்சி கொடுத்து முடித்து விட்டார் என்றும் இந்த வேத
வசனங்கள் நமக்கு தெளிவாக போதிக்கிறது
9) இந்த பரிசுத்த ஆவியின் வரங்கள் எப்போது முடிவுக்கு வந்தது?
அப்போஸ்தலர்கள் கைகளை வைத்தால் தான் இந்த பரிசுத்த ஆவியின் வரங்களை
பெற்றுக் கொள்ள முடியும் என்று வசன ஆதாரத்தோடு பார்த்து இருக்கிறோம்
அப்படியானால் கடைசி அப்போஸ்தலன் மரித்த போது என்னாயிற்று?
இந்த வரங்கள் எல்லாம் முடிவுக்கு வந்து விட்டது அதனால் தான் பரிசுத்த
ஆவியானவர் தீர்க்கதரிசனங்களும் அந்நியபாஷைகளும் ஓழிந்து போய் விடும் என்கிறார்
10) இன்றைக்கு தேவன் நமக்கு சாட்சி கொடுத்ததுமாயிருக்கிற பூரண
பிரமாணமாகிய புதிய ஏற்பாடு இருக்கிறது. இதை ஒருவன் தள்ளும் போது அவனுக்கு
வரக்கூடிய ஆக்கினை கொடியதாக தான் இருக்கும்
Heb 10:28 மோசேயினுடைய பிரமாணத்தைத் தள்ளுகிறவன் இரக்கம்பெறாமல் இரண்டு மூன்று சாட்சிகளின் வாக்கினாலே சாகிறானே;
Heb 10:29 தேவனுடைய குமாரனைக் காலின் கீழ் மிதித்து, தன்னைப் பரிசுத்தஞ்செய்த உடன்படிக்கையின் இரத்தத்தை அசுத்தமென்றெண்ணி, கிருபையின் ஆவியை நிந்திக்கிறவன் எவ்வளவு கொடிதான ஆக்கினைக்குப் பாத்திரவானாயிருப்பான் என்பதை யோசித்துப்பாருங்கள்.
கர்த்தருக்கு சித்தமானால் தொடரும்
No comments:
Post a Comment