Wednesday, 16 September 2015

பெந்தெகொஸ்தோ நாளிலே பரிசுத்த ஆவியினால் ஞானஸ்நானம் பெற்றுக் கொண்டவர்கள் 120 பேர்களா?



பகுதி; 4 பரிசுத்த ஆவியானவர்

பெந்தெகொஸ்தோ நாளிலே பரிசுத்த ஆவியினால் ஞானஸ்நானம் பெற்றுக் கொண்டவர்கள் 120 பேர்களா?

முதலில் பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானம் யாருக்கு வாக்குத்தத்தம் பண்ணப்பட்டது என்று பார்ப்போம்  

1) இயேசு கிறிஸ்துவின் அப்போஸ்தலர்களுக்கு பரிசுத்த ஆவியானவரைக் குறித்து கிறிஸ்து அவர்களுக்கு வெளிப்படுத்தினார்
Joh 14:16 நான் பிதாவை வேண்டிக்கொள்ளுவேன், அப்பொழுது என்றென்றைக்கும் உங்களுடனேகூட இருக்கும்படிக்குச் சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்.
Joh 14:17 உலகம் அந்தச் சத்திய ஆவியானவரைக் காணாமலும் அறியாமலும் இருக்கிறபடியால் அவரைப் பெற்றுக்கொள்ளமாட்டாது; அவர் உங்களுடனே வாசம்பண்ணி உங்களுக்குள்ளே இருப்பதால், நீங்கள் அவரை அறிவீர்கள்.

இந்த வசனத்தை பகுதியை வாசிக்கும்போது என்றென்றைக்கும் உங்களுடனே கூட இருக்கும் படி பரிசுத்த ஆவியானவரை பிதா உங்களுக்கு தந்தருளுவார் என்று அப்போஸ்தலர்களுக்கு வாக்குத்தத்தம் செய்தார்.

2) பரிசுத்த ஆவியானவர் கிறிஸ்துவைக் குறித்து சாட்சிக் கொடுப்பார் அவரோடு சேர்ந்து அப்போஸ்தலர்களும் சாட்சிகளாய் இருப்பார்கள் என்று கிறிஸ்து போதித்தார்
Joh 15:26 பிதாவினிடத்திலிருந்து நான் உங்களுக்கு அனுப்பப்போகிறவரும், பிதாவினிடத்திலிருந்து புறப்படுகிறவருமாகிய சத்திய ஆவியான தேற்றரவாளன் வரும்போது, அவர் என்னைக்குறித்துச் சாட்சி கொடுப்பார்.
Joh 15:27 நீங்களும் ஆதிமுதல் என்னுடனேகூட இருந்தபடியால் எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள்.
Joh 14:26 என் நாமத்தினாலே பிதா அனுப்பப்போகிற பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளனே எல்லாவற்றையும் உங்களுக்குப் போதித்து, நான் உங்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் உங்களுக்கு நினைப்பூட்டுவார்.

3) பரிசுத்த ஆவியானவர் இரண்டு காரியங்களை அப்போஸ்தலர்களுக்கு செய்வார்
1. எல்லாவற்றையும் அப்போஸ்தலர்களுக்கு போதிப்பார்
2. கிறிஸ்து சொன்ன எல்லா சத்தியங்களையும் அப்போஸ்தலர்களுக்கு   நினைப்பூட்டுவார்

4) பரிசுத்த ஆவியானவர் என்ன கிரியை செய்வார் என்று கிறிஸ்து போதித்தார் பாருங்கள
Joh 16:7 நான் உங்களுக்கு உண்மையைச் சொல்லுகிறேன்; நான் போகிறது உங்களுக்குப் பிரயோஜனமாயிருக்கும்; நான் போகாதிருந்தால், தேற்றரவாளன் உங்களிடத்தில் வரார்; நான் போவேனேயாகில் அவரை உங்களிடத்திற்கு அனுப்புவேன்.
Joh 16:8 அவர் வந்து, பாவத்தைக்குறித்தும், நீதியைக்குறித்தும், நியாயத்தீர்ப்பைக்குறித்தும், உலகத்தைக் கண்டித்து உணர்த்துவார்.

5) பரிசுத்த ஆவியானவர் சுயமாய் பேசினாரா?
Joh 16:13 சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்; அவர் தம்முடைய சுயமாய்ப் பேசாமல், தாம் கேள்விப்பட்டவைகள் யாவையுஞ்சொல்லி, வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார்.
பரிசுத்த ஆவியானவர் சுயமாய் ஒரு வார்த்தை கூட அவர் பேசவில்லை, அவர் பேசின ஒவ்வொரு வார்த்தையும் பிதாவினுடையது

6) பரிசுத்த ஆவியானவர் கிறிஸ்துவை எப்படி மகிமைப்படுத்தினார் பாருங்கள்
Joh 16:14 அவர் என்னுடையதில் எடுத்து உங்களுக்கு அறிவிப்பதினால் என்னை மகிமைப்படுத்துவார்.
Joh 16:15 பிதாவினுடையவைகள் யாவும் என்னுடையவைகள்; அதினாலே அவர் என்னுடையதில் எடுத்து உங்களுக்கு அறிவிப்பார் என்றேன்.

7) பரிசுத்த ஆவியின் வாக்குத்தத்தம் பிதாவின் வாக்குத்தத்தமாக இருக்கிறது
Luk 24:49 என் பிதா வாக்குத்தத்தம்பண்ணினதை, இதோ, நான் உங்களுக்கு அனுப்புகிறேன். நீங்களோ உன்னதத்திலிருந்து வரும் பெலனால் தரிப்பிக்கப்படும்வரைக்கும் எருசலேம் நகரத்தில் இருங்கள் என்றார்.
Act 1:4 அன்றியும், அவர் அவர்களுடனே கூடிவந்திருக்கும்போது, அவர்களை நோக்கி: யோவான் ஜலத்தினாலே ஞானஸ்நானங் கொடுத்தான்; நீங்கள் சில நாளுக்குள்ளே பரிசுத்த ஆவியினாலே ஞானஸ்நானம் பெறுவீர்கள்.
Act 1:5 ஆகையால் நீங்கள் எருசலேமை விட்டுப் போகாமல் என்னிடத்தில் கேள்விப்பட்ட பிதாவின் வாக்குத்தத்தம் நிறைவேறக் காத்திருங்கள் என்று கட்டளையிட்டார்.

பிதாவின் வாக்குத்தத்தம் சில நாளைக்குள்ளே நிறைவேறும் என்று அப்போஸ்தலர்களுக்குத் தான் கிறிஸ்து வாக்குத்தத்தம் செய்தார்

8) பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானம் பெற்றுக் கொண்ட பிற்பாடு அப்போஸ்தலர்கள் என்ன  செய்ய வேண்டும் என்று கிறிஸ்து அவர்களுக்கு கட்டளையிட்டார்
Act 1:8 பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார்.

9) இயேசு கிறிஸ்து சொன்ன வார்த்தையின்படி அவர்கள் எருசலேமுக்கு திரும்பி ஒரு மேல் வீட்டில் தங்கினார்கள்
Act 1:12 அப்பொழுது அவர்கள் எருசலேமுக்குச் சமீபமாய் ஒரு ஓய்வுநாள் பிரயாண தூரத்திலிருக்கிற ஒலிவமலை என்னப்பட்ட மலையிலிருந்து எருசலேமுக்குத் திரும்பிப்போனார்கள்.
Act 1:13 அவர்கள் அங்கே வந்தபோது மேல்வீட்டில் ஏறினார்கள்;,,,,,,,,,,

அந்த வீட்டிலே அப்போஸ்தலர்கள் பதினோரு பேரும்  ஏறக்குறைய 120 சீஷர்களும் (ஆண்கள்)  கூடியிருந்தார்கள்,

10) அப்போஸ்தலனாகிய பேதுரு எதற்காக கூடியிருக்கிறோம் என்ற நோக்கத்தை சொல்லுகிறார் பாருங்கள்
.Act 1:15 அந்நாட்களிலே, சீஷர்களில் ஏறக்குறைய நூற்றிருபதுபேர் கூடியிருந்தபோது, அவர்கள் நடுவிலே பேதுரு எழுந்து நின்று:
Act 1:20 சங்கீத புஸ்தகத்திலே: அவனுடைய வாசஸ்தலம் பாழாகக்கடவது, ஒருவனும் அதில் வாசம்பண்ணாதிருப்பானாக என்றும்; அவனுடைய கண்காணிப்பை வேறொருவன் பெறக்கடவன் என்றும் எழுதியிருக்கிறது.

11) யூதாஸ் இழந்து போன அப்போஸ்தல பட்டத்திற்கு இன்னொரு அப்போஸ்தனை சீட்டு போட்டு தெரிந்தெடுப்பதற்காக அங்கே கூடியிருந்தார்கள். சீட்டு மத்தியாவின் பெயருக்கு விழுந்தது, அவர் அப்போஸ்தலருடனே சேர்த்துக் கொள்ளப்பட்டார்.
Act 1:24 எல்லாருடைய இருதயங்களையும் அறிந்திருக்கிற கர்த்தாவே, யூதாஸ் என்பவன் தனக்குரிய இடத்துக்குப் போகும்படி இழந்துபோன இந்த ஊழியத்திலும் இந்த அப்போஸ்தலப்பட்டத்திலும் பங்கு பெறுவதற்காக,
Act 1:25 இவ்விரண்டு பேரில் தேவரீர் தெரிந்துகொண்டவனை எங்களுக்குக் காண்பித்தருளும் என்று ஜெபம்பண்ணி;
Act 1:26 பின்பு, அவர்களைக்குறித்துச் சீட்டுப்போட்டார்கள்; சீட்டு மத்தியாவின் பேருக்கு விழுந்தது; அப்பொழுது அவன் பதினொரு அப்போஸ்தலருடனே சேர்த்துக்கொள்ளப்பட்டான்.

12) அப்போஸ்தலர் 1ம் அதிகாரத்திற்கும் 2ம் அதிகாரத்திற்கும் சில நாள் வித்தியாசம் இருப்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
Act 2:1 பெந்தெகொஸ்தே என்னும் நாள் வந்தபோது, அவர்களெல்லாரும் ஒருமனப்பட்டு ஓரிடத்திலே வந்திருந்தார்கள்.
இங்கே அவர்களெல்லாரும் என்று பரிசுத்த ஆவியானவர் குறிப்பிடும் போது அப்போஸ்தலர்களை பற்றி தான் இங்கு பேசிக் கொண்டு இருக்கிறார், அது எப்படி நமக்கு தெரியும்? கீழே உள்ள வசனங்களே சாட்சியாக இருக்கிறது

Act 2:7 எல்லாரும் பிரமித்து ஆச்சரியப்பட்டு, ஒருவரையொருவர் பார்த்து: இதோ, பேசுகிற இவர்களெல்லாரும் கலிலேயரல்லவா?
பாருங்கள் இயேசு கிறிஸ்துவின் சீஷர்கள் எல்லாரும் கலிலேயராக இருந்தார்கள்.

13) இந்த வசனத்தை பாருங்கள் பேதுரு 120 பேரோடுங்கூட நின்று என்று வசனம் சொல்லவில்லை மாறாக பதினோருவரோடுங்கூட நின்று என்று தான் வசனம் சொல்லுகிறது
Act 2:14 அப்பொழுது பேதுரு பதினொருவரோடுங்கூட நின்று, அவர்களை நோக்கி, உரத்த சத்தமாய்: யூதர்களே, எருசலேமில் வாசம்பண்ணுகிற ஜனங்களே, நீங்களெல்லாரும் அறிந்துகொள்வீர்களாக, என் வார்த்தைகளுக்குச் செவிகொடுங்கள்.

14) கிறிஸ்து இவர்களை தான் சாட்சியாக ஏற்படுத்தினார் என்று யோவான் 15:27லும் அப்போஸ்தலர் 1:8 நமக்கு சொல்லுகிறது.
Act 2:32 இந்த இயேசுவைத் தேவன் எழுப்பினார்; இதற்கு நாங்களெல்லாரும் சாட்சிகளாயிருக்கிறோம்.

கீழே உள்ள வசனப்பகுதியில் இருதயத்தில் குத்தப்பட்டவர்கள் நாங்கள் என்ன செய்ய வேண்டும் 120 பேரைப் பார்த்து கேட்கவில்லை ஏனென்றால் அங்கே பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தை பெற்றுக் கொண்டவர்கள் அப்போஸதலர்களாய் மாத்திரம் இருந்த படியால் அவர்களை பார்த்து தான் கேட்டார்கள்.
Act 2:37 இதை அவர்கள் கேட்டபொழுது, இருதயத்திலே குத்தப்பட்டவர்களாகி, பேதுருவையும் மற்ற அப்போஸ்தலரையும் பார்த்து: சகோதரரே, நாங்கள் என்ன செய்யவேண்டும் என்றார்கள்.

ஆகையால் பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தை பெற்றுக் கொண்டவர்கள் 12 அப்போஸ்தலர்கள் மாத்திரமே.

Mat 13:9 கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்றார்.

Rev 2:7 ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்;..........

பகுதி 5ல் தொடர்ந்து படிக்கவும்







No comments:

Post a Comment