Wednesday, 16 September 2015

பரித்த ஆவியின் வரங்களை ஒரு கிறிஸ்தவன் எப்படி பெற்றுக் கொள்ள முடியும்?



பகுதி: 5 பரிசுத்த ஆவியானவர்

பரித்த ஆவியின் வரங்களை ஒரு கிறிஸ்தவன் எப்படி பெற்றுக் கொள்ள முடியும்?

1) ஆவிக்குரிய வரங்கள் எத்தனை என்று முதலில் பார்ப்போம்
1Co 12:4 வரங்களில் வித்தியாசங்கள் உண்டு, ஆவியானவர் ஒருவரே.
1Co 12:7 ஆவியினுடைய அநுக்கிரகம் அவனவனுடைய பிரயோஜனத்திற்கென்று அளிக்கப்பட்டிருக்கிறது.
1Co 12:8 எப்படியெனில், ஒருவனுக்கு ஆவியினாலே ஞானத்தைப் போதிக்கும் வசனமும், வேறொருவனுக்கு அந்த ஆவியினாலேயே அறிவை உணர்த்தும் வசனமும்,
1Co 12:9 வேறொருவனுக்கு அந்த ஆவியினாலேயே விசுவாசமும், வேறொருவனுக்கு அந்த ஆவியினாலேயே குணமாக்கும் வரங்களும்,
1Co 12:10 வேறொருவனுக்கு அற்புதங்களைச் செய்யும் சக்தியும், வேறொருவனுக்குத் தீர்க்கதரிசனம் உரைத்தலும், வேறொருவனுக்கு ஆவிகளைப் பகுத்தறிதலும், வேறொருவனுக்குப் பற்பல பாஷைகளைப் பேசுதலும், வேறொருவனுக்குப் பாஷைகளை வியாக்கியானம்பண்ணுதலும் அளிக்கப்படுகிறது.

பரிசுத்தஆவியின் வரங்கள் ஒன்பது என்று இந்த வேதவாக்கியங்கள் நமக்கு போதிக்கிறது

2) இந்த பரிசுத்த ஆவியானவரின் வரங்கள் பிதாவின் வாக்குத்தத்தமாக இருந்தது
Act 2:39 வாக்குத்தத்தமானது உங்களுக்கும், உங்கள் பிள்ளைகளுக்கும், நம்முடைய தேவனாகிய கர்த்தர் வரவழைக்கும் தூரத்திலுள்ள யாவருக்கும் உண்டாயிருக்கிறது என்று சொல்லி;
இந்த வசனத்தில் அப்போஸ்தலனாகிய பேதுரு வாக்குத்தத்தம் யாருக்கு என்று சொல்லுகிறார் பாருங்கள்
1.       யூதர்களுக்கும்
2.      புறஜாதிகளுக்கும் (கர்த்தர் வரவழைக்கும் தூரத்திலுள்ள யாவருக்கும்)

3) இந்த பரிசுத்த ஆவியின் வரத்தை(வாக்குத்தத்ததை)  பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும்?
Act 2:38 பேதுரு அவர்களை நோக்கி: நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள்.

4) அங்கே கூடியிருந்த யூதர்கள் இந்த வாக்குத்தத்ததை பெறுவதற்கு மனந்திரும்பி பாவமன்னிப்புக்கென்று ஞானஸ்நானம் எடுக்க வேண்டியதாய் இருந்தது.
அவர்கள் இந்த கட்டளைக்கு கீழ்ப்படிக்கின்ற போது தான் தேவன் அவர்களுக்கு வாக்குத்தத்தம் செய்த பரிசுத்த ஆவியின் வரத்தை அவர்களுக்கு கொடுப்பார்.

5) இந்த பரிசுத்த ஆவியின் வரத்தை ஒருவன் எப்படி பெற்றுக் கொள்ள முடியும்?
மனந்திரும்பி பாவ மன்னிப்புகென்று இயேசு கிறிஸ்துவின் அதிகாரத்தினால் ஞானஸ்நானம் பெறும் போது பரிசுத்தஆவியானவர் அப்படியே அவர்கள் மேல் இறங்கி விடுவாரா?
இல்லை புதிய ஏற்பாட்டில் எந்த ஒரு வேத வசனங்களும்  விசுவாசிகளின் மீது நேரடியாக பரிசுத்த ஆவியானவர் இறங்கினார் என்று போதிப்பது இல்லை (அப்படி ஒரு வசனம் இருந்தால் தயவு செய்து எனக்கு காண்பியுங்கள்)

எந்த ஒரு விசுவாசியும் பரிசுத்த ஆவியின் வரத்தை பெற வேண்டும் என்றால் அந்த விசுவாசியின்  தலை மீது கிறிஸ்துவின் அப்போஸ்தலர்களில் யாராவது ஒருவர் கையை வைத்தால் தான் பரிசுத்தஆவியானவர் அவர்கள் இறங்கி ஆவிக்குரிய வரத்தை அவர்களுக்கு கொடுப்பார்

6) பாருங்கள் சமாரியாவிலே பிலிப்பு சுவிசேஷத்தை அறித்த போது அநேகர் கீழ்ப்படிந்து ஞானஸ்நானம் பெற்றார்கள்.
Act 8:12 தேவனுடைய ராஜ்யத்துக்கும் இயேசு கிறிஸ்துவினுடைய நாமத்துக்கும் ஏற்றவைகளைக்குறித்து, பிலிப்பு பிரசங்கித்ததை அவர்கள் விசுவாசித்தபோது, புருஷரும் ஸ்திரீகளும் ஞானஸ்நானம் பெற்றார்கள்.

ஆனால் பரிசுத்த ஆவியின் வரத்தை அவர்கள் பெறவில்லை. ஏனென்றால் பிலிப்புவால் ஆவிக்குரிய வரத்தை கொடுக்க முடியாது, அதனால் தான் எருசலேமிலுள்ள அப்போஸ்தலர்கள் கேள்விப்பட்டு அப்போஸ்தலர்களாகிய பேதுருவையும் யோவானையும் சமாரியாவுக்கு ஆவிக்குரிய வரங்களை இரட்சிக்கப்பட்டவர்களுக்கு கொடுக்கும்படி அனுப்பினார்கள்.
Act 8:14 சமாரியர் தேவவசனத்தை ஏற்றுக்கொண்டதை எருசலேமிலுள்ள அப்போஸ்தலர்கள் கேள்விப்பட்டு, பேதுருவையும் யோவானையும் அவர்களிடத்திற்கு அனுப்பினார்கள்.
Act 8:15 இவர்கள் வந்தபொழுது அவர்களில் ஒருவனும் பரிசுத்த ஆவியைப் பெறாமல் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே ஞானஸ்நானத்தை மாத்திரம் பெற்றிருந்தவர்களாகக் கண்டு,
Act 8:16 அவர்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ளும்படி அவர்களுக்காக ஜெபம்பண்ணி,
Act 8:17 அவர்கள்மேல் கைகளை வைத்தார்கள், அப்பொழுது அவர்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றார்கள்.

7) மாயவித்தைகாரனாகிய சீமோன் அப்போஸ்தலர்கள் கைகளை வைக்கிறதினால் பரிசுத்த ஆவி தந்தருளப்படுகிறதை கண்டான்.
Act 8:18 அப்போஸ்தலர் தங்கள் கைகளை அவர்கள்மேல் வைத்ததினால் பரிசுத்த ஆவி தந்தருளப்படுகிறதைச் சீமோன் கண்டபோது, அவர்களிடத்தில் பணத்தைக் கொண்டுவந்து:,,,,,,,,

8) சீமோன் பணத்தை பிலிப்புவிடத்தில் கொண்டு வந்து கொடுக்கவில்லை மாறாக அப்போஸ்தலர்களிடத்தில் கொண்டு வந்து கொடுத்தான் ஏனென்றால் பிலிப்புவால் கைகளை வைத்து பரிசுத்த ஆவியை கொடுக்க முடியாது என்று மாயவித்தைகாரனாகிய சீமோன் நன்றாக அறிந்து இருந்தான்
Act 8:19 நான் எவன்மேல் என் கைகளை வைக்கிறேனோ, அவன் பரிசுத்த ஆவியைப் பெறத்தக்கதாக எனக்கும் இந்த அதிகாரத்தைக் கொடுக்கவேண்டும் என்றான்.

9) மேலும் அப்போஸ்தலர்கள் கைகளை வைத்ததினால் தான் பரிசுத்தஆவியின் வரம் கொடுக்கப்பட்டது என்பதற்கான  சில வசன ஆதாரங்கள்:
Act 6:6 அவர்களை அப்போஸ்தலருக்குமுன்பாக நிறுத்தினார்கள். இவர்கள் ஜெபம்பண்ணி, அவர்கள்மேல் கைகளை வைத்தார்கள்.
Act 6:8 ஸ்தேவான் விசுவாசத்தினாலும் வல்லமையினாலும் நிறைந்தவனாய் ஜனங்களுக்குள்ளே பெரிய அற்புதங்களையும் அடையாளங்களையும் செய்தான்.

ஸ்தேவான் அற்புதங்களை அடையாளங்களையும் செய்யும் பரிசுத்த ஆவியின் வரமாகிய வல்லமையை எப்படி பெற்றுக் கொண்டார் பாருங்கள் அப்போஸ்தலர்கள் ஸ்தேவான் மீது கைகளை வைத்ததினால் அந்த வரத்தை பெற்றுக் கொண்டார்.

10) பவுல் எபேசுவில் சுவிசேஷத்தை அறிவித்த எபேசு சபையின் விசுவாசிகள் எப்படி பரிசுத்த ஆவியின் வரத்தை பெற்றுக் கொண்டார்கள் என்று பாருங்கள்
Act 19:5 அதைக் கேட்டபோது அவர்கள் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றார்கள்.
Act 19:6 அல்லாமலும் பவுல் அவர்கள்மேல் கைகளை வைத்தபோது, பரிசுத்த ஆவி அவர்கள்மேல் வந்தார்; அப்பொழுது அவர்கள் அந்நியபாஷைகளைப் பேசித் தீர்க்கதரிசனஞ் சொன்னார்கள்.
Act 19:7 அந்த மனுஷரெல்லாரும் ஏறக்குறையப் பன்னிரண்டு பேராயிருந்தார்கள்.

பவுல் இங்கு அவர்கள் மேல் கைகளை வைத்த போது பரிசுத்த ஆவி அவர்கள் மேல் வந்தார் அதற்கான அடையாளம் என்னவென்றால் அந்நியபாஷைகளை பேசி தீர்க்கதரிசனம் சொன்னார்கள்.

11) ரோமபுரியில் இரட்சிக்கப்பட்ட சிலருக்கு ஆவிக்குரிய வரங்களை கொடுப்பதற்கு அப்போஸ்தலனாகிய பவுல் வருகிறேன் என்று ரோமபுரி சபையாருக்கு சொல்லுவதை இந்த வேத வசனங்களில் அறிந்து கொள்ள முடியும்.
Rom 1:10 நீங்கள் ஸ்திரப்படுவதற்காக ஆவிக்குரிய சில வரங்களை உங்களுக்குக் கொடுக்கும்படிக்கும்,
Rom 1:12 எவ்விதத்திலாவது நான் உங்களிடத்தில் வருகிறதற்குத் தேவனுடைய சித்தத்தினாலே எனக்கு நல்ல பிரயாணம் சீக்கிரத்தில் கிடைக்கவேண்டுமென்று வேண்டிக்கொள்ளுகிறேன்.
அப்போஸ்தலர்கள் ஜெபம் பண்ணி கைகளை வைத்தால் மாத்திரமே இந்த ஆவிக்குரிய வரங்களை பெற்றுக் கொள்ள முடியும் என்று இந்த வேத வசனங்கள் நமக்கு தேவனுடைய சாட்சியாக இருக்கிறது.

12) புறஜாதிகளை தேவன் அங்கிகரிக்கும்படி சுத்தமான புறஜாதியாய் இருந்த கொர்நேலியுவின் வீட்டாருக்கு பரிசுத்த ஆவியின் வரம் அப்போஸ்தலனாகிய பேதுரு கைகளை வைக்காமல் நேரடியாக கொடுப்பட்டது.
ஏனென்றால் யூதர்களாகிய அப்போஸ்தலர்கள் எப்படி நேரடியாக பரிசுத்த ஆவியானவரை பெற்றுக் கொண்டார்களோ அதைப் போல புறஜாதியாகிய கொர்நேலியுவின் வீட்டாரும் ஆவிக்குரிய வரத்தை பெற்றுக் கொண்டார்கள். இதன்  மூலம் தேவன் யூதர்களும் புறஜாதிகளுக்கும் எந்தவொரு வித்தியாசமும் இல்லாமல் செய்தார்.
Act 10:44 இந்த வார்த்தைகளைப் பேதுரு பேசிக்கொண்டிருக்கையில் வசனத்தைக் கேட்டவர்கள் யாவர்மேலும் பரிசுத்த ஆவியானவர் இறங்கினார்.
Act 10:45 அவர்கள் பல பாஷைகளைப் பேசுகிறதையும், தேவனைப் புகழுகிறதையும்,
Act 10:46 பேதுருவோடேகூட வந்திருந்த விருத்தசேதனமுள்ள விசுவாசிகள் கேட்கும்போது, பரிசுத்த ஆவியின் வரம் புறஜாதிகள்மேலும் பொழிந்தருளப்பட்டதைக்குறித்துப் பிரமித்தார்கள்.

13) இதைக்குறித்து விருத்தசேதனமுள்ளவர்கள் பேதுருவோடு வாக்குவாதம் பண்ணின போது அவர் தெளிவாக நடந்த காரியங்களை அவர்களுக்கு விவரித்தார்.
Act 11:15 நான் பேசத்தொடங்கினபோது, பரிசுத்த ஆவியானவர் ஆதியிலே நம்மேல் இறங்கினதுபோலவே, அவர்கள்மேலும் இறங்கினார்.
Act 11:16 யோவான் ஜலத்தினாலே ஞானஸ்நானங் கொடுத்தான், நீங்களோ பரிசுத்த ஆவியினாலே ஞானஸ்நானம் பெறுவீர்கள் என்று கர்த்தர் சொன்ன வார்த்தையை அப்பொழுது நினைவுகூர்ந்தேன்.
Act 11:17 ஆதலால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசித்திருக்கிற நமக்குத் தேவன் வரத்தை அநுக்கிரகம்பண்ணினதுபோல அவர்களுக்கும் அந்த வரத்தையே அநுக்கிரகம்பண்ணியிருக்கும்போது தேவனைத் தடுக்கிறதற்கு நான் எம்மாத்திரம் என்றான்.

14) அப்போஸ்தலனாகிய பேதுரு அவர்களிடத்தில் தான் கைகளை வைக்கவில்லை மாறாக பரிசுத்த ஆவியானவரே நேரடியாக இறங்கினார் என்று சொன்ன போது அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள்.
Act 11:18 இவைகளை அவர்கள் கேட்டபொழுது அமர்ந்திருந்து: அப்படியானால் ஜீவனுக்கேதுவான மனந்திரும்புதலைத் தேவன் புறஜாதியாருக்கும் அருளிச்செய்தார் என்று சொல்லி, தேவனை மகிமைப்படுத்தினார்கள்.

அப்போஸ்தல நடபடிகள் 2ம் அதிகாரத்தில் பரிசுத்த ஆவியினால் ஞானஸ்நானம் பெற்ற அப்போஸ்தலர்களுக்கு ஒன்பது ஆவிக்குரிய வரங்களையும் தேவன் அவர்களுக்கு கொடுத்து இருந்தார், ஆனால் விசுவாசிகளுக்கு ஒன்று அல்லது இரண்டு வரங்கள் மாத்திரம் கொடுக்கப்பட்டு இருந்தது, இதற்கு அநேக வேத வசனங்கள் ஆதாரத்தோடு இருக்கிறது

15) பாருங்கள் அப்போஸ்தலர்கள் விசுவாசிகள் மீது ஜெபம் பண்ணி கைகளை மாத்திரம் தான் வைப்பார்கள் ஆனால் யாருக்கு என்ன வரம் கொடுக்க வேண்டும் என்று தீர்மானிப்பவர் பரிசுத்த ஆவியானவர்.
1Co 12:11 இவைகளையெல்லாம் அந்த ஒரே ஆவியானவர் நடப்பித்து, தமது சித்தத்தின்படியே அவனவனுக்குப் பகிர்ந்து கொடுக்கிறார்.

பகுதி 6ல் இந்த ஆவிக்குரிய வரங்கள் எதற்காக கொடுக்கப்பட்டது என்று தொடர்ந்து படியுங்கள்






















No comments:

Post a Comment