Thursday, 13 June 2024

தொழுது கொள்ளுதல் அல்லது ஆராதனை என்றால் அர்த்தம் என்ன?

பகுதி:01 மெய்யான ஆராதனை                               
தொழுது கொள்ளுதல் அல்லது ஆராதனை என்றால் அர்த்தம் என்ன?

அந்த ஒன்றான மெய் சபையிலே தொழுது கொள்ளுதல் எப்படி இருக்க வேண்டும் என்பதைப் பற்றி வேத வாக்கியங்களோடு கற்றுக் கொள்ளப்போகிறோம் போகிறோம்

நாம் பிதாவாகிய தேவனை தொழுது கொள்ளுகிறோம் என்றால் தொழுது கொள்ளுதலைப்பற்றி அறிவு கிறிஸ்தவர்களாகிய நமக்கு இருக்க வேண்டும் , அப்படி இல்லாதபட்சத்தில் நாம் தேவனை தொழுது கொள்வோம் என்றால் அது வீணான தொழுது கொள்ளுதலாக தான் இருக்கும் 

இன்றைய காலகட்டத்தில் அநேக பொய்யான சபைகள் எவ்வளவு பெருகி இருக்கிறது போல் அநேக கள்ளப் போதகனைகளும் பெருகி இருக்கிறது

 நாம் மனுஷரால் ஸ்தாபிக்கப்பட்ட சபைகளில் இருந்து கொண்டு மனுஷர்களுடைய போதனைகளின்படி தொழுது கொள்வோம் என்றால் அந்த தொழுது கொள்ளுதலை தேவன் ஏற்றுக் கொள்ளமாட்டார் என்பதை நாம் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்

ஆராதனை என்றால் என்ன என்பதற்கு இன்றைக்கு இருக்கக்கூடிய கள்ளபோதகர்கள் அநேக சுய விளக்கங்களை கொடுக்கிறார்கள்

இன்னும் அநேகர் நாங்கள் இப்படித்தான் ஆராதனை செய்வோம் தேவன் எங்கள் ஆராதனையை ஏற்றுக் கொள்ளுவார் என்றும் போதிக்கிறார்கள்  

ஆராதனை என்பதற்கு அநேக பிரசங்கியார்கள் கொடுக்கும் விளக்கம் இது தான்

வாரத்தின் முதல் நாளில் (ஞாயிற்று கிழமை) கூடி வந்து கைகளை பலமாய் தட்டி ஆர்ப்பரித்து இசையோடு பாடுவது தான் ஆராதனை

அந்நிய பாஷை பேசுவது தான் ஆராதனை

பிசாசுகளை விரட்டுவது தான் ஆராதனை

பில்லிய சூன்ய கட்டை எடுப்பது தான் ஆராதனை

அற்புதங்கள் செய்வது தான் ஆராதனை

காணிக்கை கொடுப்பது தான் ஆராதனை

இன்று சினிமாக்காரர்களைப் போல நடனம் ஆடி சினிமாக்காரர்களைப் போல பாடல் பாடி குதிக்க வைத்தால் தான் அது ஆராதனை என்று சொல்கிறார்கள் 

அநேகர் இது போன்ற அநேக காரியங்களை ஆராதனை என்கிறார்கள் 

இப்படிப்பட்ட போதகர்கள் ஆராதனையில் பலவகைகளை பிரித்து வைத்து yமுழு இரவு ஜெப கூட்ட ஆராதனைகள்

அபிஷேக ஆராதனைகள்

உபவாச கூட்ட ஆராதனைகள்

அமாவாசை ஜெப கூட்ட ஆராதனைகள்

பிரதிஷ்டை ஆராதனைகள்

தசமபாக காணிக்கை ஆராதனைகள்

பண்டிகை ஆராதனைகள்

பரிசுத்த ஆவியைப் பெற்றும் கொள்ளும் ஆராதனைகள்

அந்நிய பாஷை ஆராதனைகள்

வல்லமையால் நிரம்பி மயக்கம் போட்டும் விழும் ஆராதனைகள்

சபையாக கூடி வந்து தேவனிடத்தில் கதறி அழும் ஆராதனைகள் இருக்கிறது

அல்லேலூயா ஆராதனைகள்

இப்படி அநேக ஆராதனைகளை செய்து கொண்டு வருகிறார்கள் 

 இன்னும் அநேகர் ஆராதனை என்பதை பலவிதமாக புரிந்து வைத்து இருக்கிறார்கள்

 ஞாயிற்றுக்கிழமை அவர்கள் ஆராதனை நாள் என்கிறார்கள் அதில் என்ன செய்கிறார்கள்?

காலையில் கூடி வருகிறார்கள்

ஆண் பெண் இருவரும் ஜெபம் பண்ணுகிறார்கள்

இசையோடு ஆர்ப்பரித்து கைகளை வேகமாய் தட்டிக் கொண்டு பாடுகிறார்கள்
 (ஒரு சில சபைகளில் நடனமும் உண்டு) 

பாஸ்டர்(?) எழுந்து போதிக்கிறார் 

அநேகர் சாட்சி சொல்லுகிறார்கள்
அந்நிய பாஷை பேசுகிறார்கள்

காணிக்கை அல்லது தசமபாக காணிக்கை வாங்கிறார்கள் 

ஜெபித்து முடித்து விட்டு வீட்டுக்கு போய்விடுகிறார்கள் 

பண்டிகை நாட்களில் விசேஷித்த ஜெப கூட்டமும் விசேஷித்த காணிக்கையும் வாங்குவார்கள்

 இது தான் வருடம் முழுவதும் செய்வார்கள்.

தங்களுடைய மனதில் தேவனுக்கு ஆராதனை சரியாக செய்கிறோம் என்று திருப்திப்பட்டு கொள்ளுவார்கள்

இது தான் ஆராதனையா?

இதை தான் தேவன் நம்மிடத்தில் எதிர்பார்க்கிறாரா?

தேவனை ஆராதிப்பதின் நோக்கம் என்ன என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டாமா?

நீங்கள் செய்யக்கூடிய ஆராதனை வீணான ஆராதனையாக இருக்கும் என்றால் என்ன செய்வீர்கள்?
மாற் 7:7 மனுஷருடைய கற்பனைகளை உபதேசங்களாகப் போதித்து, வீணாய் எனக்கு ஆராதனை செய்கிறார்கள் என்றும், எழுதியிருக்கிறபிரகாரம், மாயக்காரராகிய உங்களைக் குறித்து, ஏசாயா நன்றாய்த் தீர்க்கதரிசனம் சொல்லியிருக்கிறான்.

நாம் மனுஷர்களுடைய கற்பனைகளின் படி ஆராதனை செய்வோம் என்றால் அது வீணான ஆராதனையாக தான் இருக்கும்

அதினால் நமக்கு பிரயோஜனம் என்ன?

நாம் மனுஷர்களுடைய கற்பனைகளின்படி ஆராதனை செய்கின்ற போது நம்முடைய இருதயம் தேவனை விட்டு தூரமாய் விலகி இருக்கும் என்பதை அதினால் எந்த பிரயோஜனமும் இல்லை என்பதை ஒரு போதும் மறந்து விடாதீர்கள்

நீங்கள் செய்யக்கூடிய ஆராதனை தேவ தூதர்களுக்கு செய்யும் ஆராதனையாக இருக்கும் என்றால் என்ன செய்வீர்கள்?
கொலோ 2:19 மாயமான தாழ்மையிலும், தேவதூதர்களுக்குச் செய்யும் ஆராதனையிலும் விருப்பமுற்று, காணாதவைகளிலே துணிவாய் நுழைந்து, தன் மாம்சசிந்தையினாலே வீணாய் இறுமாப்புக்கொண்டிருக்கிற எவனும் *உங்கள் பந்தயப்பொருளை நீங்கள் இழந்துபோகும்படி உங்களை வஞ்சியாதிருக்கப்பாருங்கள்.* 

நாம் செய்யக்கூடிய ஆராதனை
தேவதூதர்களுக்கு செய்யும் ஆராதனையாக இருக்கும் என்றால் அதினால் நமக்கு பிரயோஜனம் என்ன?
தேவ தூதர்களுக்கு செய்யும் ஆராதனையினால் நாம் நம்முடைய பந்தயப்பொருளை இழந்து போய் விடுவோம் என்பதை கவனியுங்கள்

நீங்கள் செய்யக்கூடிய ஆராதனை சுய இஷ்டமான ஆராதனையாக இருக்கும் என்றால் என்ன செய்வீர்கள்?
கொலோ 2:23 இப்படிப்பட்ட போதனைகள் சுய இஷ்டமான ஆராதனையையும், மாயமான தாழ்மையையும், சரீர ஒடுக்கத்தையும் பற்றி ஞானமென்கிற பேர்கொண்டிருந்தாலும், இவைகள் மாம்சத்தைப் பேணுகிறதற்கே ஒழிய மற்றொன்றிற்கும் பிரயோஜனப்படாது.

நாம் செய்யக்கூடிய ஆராதனை சுய இஷ்டமான ஆராதனையாக இருக்கும் என்றால் தேவன் அப்படிப்பட்ட ஆராதனைகளை ஒருபோதும் கவனிப்பது இல்லை 

சுய இஷ்டமான ஆராதனையில் மாயமான தாழ்மை, சரீர ஒடுக்கம் இவைகள் இருந்தாலும் மாம்சத்தை பேணுகிறதற்கு தான் பிரயோஜனப்படுமே தவிர ஆவிக்குரிய காரியங்களுக்கு இவைகள் எந்த பிரயோஜனத்தையும் அளிக்காது

எது உண்மையான ஆராதனை? நாம் சபையாக கூடிவருவதின் நோக்கம் என்ன?

கர்த்தருக்கு சித்தமானால் ஆராதனைக்குரிய சகல சத்தியங்களையும் கற்றுக் கொள்ளுவோம்

தேவனுடைய சத்தியங்களை தொடர்ந்து வாட்ஸ் ஆப் ல் பெற 9025776966 என்ற எண்ணுக்கு குறுந்தகவல் அனுப்பவும்

No comments:

Post a Comment