பகுதி:4 ஒய்வு நாள் ஆசரிப்பு கிறிஸ்தவர்களுக்கு கொடுக்கப்பட்டதா?
புதிய உடன்படிக்கையில் ஓய்வுநாளை ஆசாரிக்க வேண்டும் என்ற கட்டளை இருக்கிறதா?
ஏழாம் ஓய்வுநாள் சபையார் கிபி 3ம் நூற்றாண்டில் ரோம சக்கரவர்த்தி ஒருவர் சனிக்கிழமை ஓய்வுநாள் பிரமாணத்தை மாற்றி ஞாயிற்று கிழமை ஆராதனை நாளாக அறிவித்தார் என்று போதித்து கொண்டு இருக்கிறார்கள்
அதனால் ஓய்வு நாளை கிறிஸ்தவர்கள் மாத்திரம் அல்ல உலகத்தார் எல்லாரும் ஆசாரிக்க வேண்டும் என்று சொல்லி கொண்டு இருக்கிறார்கள்
இவர்கள் தேவனுடைய சத்தியங்களை மனப்பூர்வமாய் விசுவாசிப்பது இல்லை
ஒரு விஷயத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும் எப்போது தேவனுடைய சபை ஸ்தாபிக்கப்பட்டதோ அன்றிலிருந்து இன்றுவரை தொடர்ந்து தேவனுடைய சபையின் மீது தாக்குதல்(கள்ள போதகங்கள்) நடந்து கொண்டே இருக்கிறது
தேவனுடைய பிரமாணமாகிய மோசேயின் நியாயப் பிரமாணத்தை குறித்து கிறிஸ்துவின் விசுவாசம் என்னவாக இருந்தது?
மத் 5:18 வானமும் பூமியும் ஒழிந்துபோனாலும், நியாயப்பிரமாணத்திலுள்ளதெல்லாம் நிறைவேறுமளவும், அதில் ஒரு எழுத்தாகிலும், ஒரு எழுத்தின் உறுப்பாகிலும் ஒழிந்து போகாது என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
இயேசு கிறிஸ்து விசுவாசித்தது போல தேவனுடைய சத்தியத்தை யாராலும் மாற்றவும் முடியாது யாராலும் அதை அழித்து போடவும் முடியாது என்பதை நாம் மனப்பூர்வமாக விசுவாசிக்க வேண்டும்
பாபிலோன், மேதிய பெர்சியா, கிரேக்கம் மற்றும் ரோம சாம்ராஜ்யம் போன்ற ராஜ்ஜியங்கள் ஆட்சி செய்த போதும் மோசேயின் நியாயப்பிரமாணத்தில் உள்ள ஒரு எழுத்தையாகிலும் எழுத்தின் உறுப்பை யாகிலும் யாராலும் அழித்து போட முடியவில்லை
இவர்கள் புதிய ஏற்பாடு கிறிஸ்துவின் உபதேசங்களை சரியாக விசுவாசிப்பது இல்லை, இவர்கள் புதிய ஏற்பாட்டில் எங்கு கற்பனை என்ற வார்த்தை இருக்கிறதோ அதை மாத்திரம் மனப்பாடம் செய்து கொள்ளுவார்கள்
வேத வாக்கியத்தில்(குறிப்பாக புதிய ஏற்பாடு) எங்கு எல்லாம் கற்பனை என்ற வார்த்தை வந்து இருக்கிறதோ அது எல்லாம் அவர்களை பொறுத்த வரை பத்து கற்பனைகள் தான்
வேத வாக்கியத்தில் யாராவது ஒருவர் கற்பனையின் படி நடந்தார் என்று வாசித்தால் உடனே பார்த்தீர்களா அவர் பத்து கற்பனையின் நடந்தார் என்று வாதம் செய்வார்கள்
பழைய ஏற்பாட்டுக்கும் புதிய ஏற்பாட்டுக்கும் உள்ள வித்தியாசத்தை நாம் தெரிந்து வைத்து இருக்க வேண்டும்
எந்த பிரமாணத்தை கிறிஸ்து நமக்கு கொடுத்து இருக்கிறார் என்ற சத்தியத்தை உணர்ந்து இருக்க வேண்டும்
இவர்கள் ஏழாம் ஓய்வு நாள் என்கிற கண்ணாடியை அணிந்து கொண்டு வேத வாக்கியத்தை வாசிப்பதால் இந்த ஆவிக்குரிய குருடர்களுக்கு கற்பனைகள் எல்லாம் பத்து கற்பனைகள் போலவே தெரிகிறது
புது உடன்படிக்கையை ஏற்படுத்துவேன் என்று தேவன் வாக்குத்தத்தம் செய்து இருந்தார்
எரே 31:31 இதோ, நாட்கள் வருமென்று கர்த்தர் சொல்லுகிறார், அப்பொழுது இஸ்ரவேல் குடும்பத்தோடும் யூதா குடும்பத்தோடும் புது உடன்படிக்கை பண்ணுவேன்.
எரே 31:32 நான் அவர்கள் பிதாக்களை எகிப்து தேசத்திலிருந்து அழைத்துவரக் கைப்பிடித்த நாளிலே அவர்களோடே பண்ணின உடன்படிக்கையின்படி அல்ல; ஏனெனில் நான் அவர்களுக்கு நாயகராயிருந்தும், அந்த என் உடன்படிக்கையை அவர்கள் மீறி அவமாக்கிப்போட்டார்களே என்று கர்த்தர் சொல்லுகிறார்.
எரே 31:33 அந்நாட்களுக்குப்பிற்பாடு, நான் இஸ்ரவேல் குடும்பத்தோடே பண்ணப்போகிற உடன்படிக்கையாவது; நான் என் நியாயப்பிரமாணத்தை அவர்கள் உள்ளத்திலே வைத்து, அதை அவர்கள் இருதயத்திலே எழுதி, நான் அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
அந்த புது உடன்படிக்கைக்கு கிறிஸ்து மத்தியஸ்தராக இருந்தார்
எபி 8:7 அந்த முதலாம் உடன்படிக்கை பிழையில்லாதிருந்ததானால், இரண்டாம் உடன்படிக்கைக்கு இடம் தேடவேண்டுவதில்லையே.
எபி 8:8 அவர்களைக் குற்றப்படுத்தி, அவர்களை நோக்கி: இதோ, கர்த்தர் சொல்லுகிறதென்னவெனில்: இஸ்ரவேல் குடும்பத்தோடும் யூதா குடும்பத்தோடும் நான் புது உடன்படிக்கையை ஏற்படுத்துங்காலம் வருகிறது.
எபி 8:9 அவர்களுடைய பிதாக்களை எகிப்துதேசத்திலிருந்து கொண்டுவரும்படிக்கு நான் அவர்களுடைய கையைப் பிடித்த நாளிலே அவர்களோடு பண்ணின உடன்படிக்கையைப்போல இது இருப்பதில்லை; அந்த உடன்படிக்கையிலே அவர்கள் நிலைநிற்கவில்லையே, நானும் அவர்களைப் புறக்கணித்தேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
அந்த புது உடன்படிக்கை மனதிலே வைத்து இருதயத்தில் எழுதப்பட்டது
எபி 8:10 அந்த நாட்களுக்குப்பின்பு நான் இஸ்ரவேல் குடும்பத்தாரோடே பண்ணும் உடன்படிக்கையாவது: என்னுடைய பிரமாணங்களை அவர்களுடைய மனதிலே வைத்து, அவர்களுடைய இருதயங்களில் அவைகளை எழுதுவேன்; நான் அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள்.
எபி 8:11 அப்பொழுது சிறியவன் முதற்கொண்டு பெரியவன்வரைக்கும் எல்லாரும் என்னை அறிவார்கள் ஆகையால், கர்த்தரை அறிந்துகொள் என்று ஒருவன் தன் அயலானுக்கும், ஒருவன் தன் சகோதரனுக்கும் போதிக்கவேண்டுவதில்லை.
அந்த பழைய உடன்படிக்கை(நியாயப்பிரமாணம்) கி,பி 70 ல் தேவாலயம் அழிக்கப்பட்ட போது அது உருவழிந்து போயிற்று
எபி 8:12 ஏனெனில் நான் அவர்கள் அநியாயங்களைக் கிருபையாய் மன்னித்து, அவர்கள் பாவங்களையும் அக்கிரமங்களையும் இனி நினையாமலிருப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
எபி 8:13 புது உடன்படிக்கை என்று அவர் சொல்லுகிறதினாலே முந்தினதைப் பழமையாக்கினார்; பழமையானதும் நாள்பட்டதுமாயிருக்கிறது உருவழிந்துபோகக் காலம் சமீபித்திருக்கிறது.
தேவன் நியாயப்பிரமாணத்தை குறித்து உண்டாக்குகிற வாக்குவாதங்களை விட்டு நாம் விலக வேண்டும் என்று எச்சரிக்கிறார்
தீத்து 3:9 புத்தியீனமான தர்க்கங்களையும், வம்சவரலாறுகளையும், சண்டைகளையும், நியாயப்பிரமாணத்தைக்குறித்து உண்டாகிற வாக்குவாதங்களையும் விட்டு விலகு; அவைகள் அப்பிரயோஜனமும் வீணுமாயிருக்கும்.
தீத்து 3:10 வேதப்புரட்டனாயிருக்கிற ஒருவனுக்கு நீ இரண்டொருதரம் புத்தி சொன்னபின்பு அவனை விட்டு விலகு.
தீத்து 3:11 அப்படிப்பட்டவன் நிலைதவறி, தன்னிலேதானே ஆக்கினைத்தீர்ப்புடையவனாய்ப் பாவஞ்செய்கிறவனென்று அறிந்திருக்கிறாயே.
ஓய்வு நாள் பிரமாணம் உலகத்தில் வாழக்கூடிய எல்லாருக்கும் கொடுக்கப்பட்டு இருக்கும் என்றால் புதிய ஏற்பாட்டு கிறிஸ்துவின் பிரமாணத்தில் பாவ அட்டவணையில் ஒய்வுநாளை மீறுவது பாவம் என்று எந்தவொரு வசனமும் ஏன் சொல்லவில்லை?
1) மனிதனுடைய இருதயத்தை தீட்டுப்படுத்தும் 13 பாவங்கள் (மாற் 7:20-23)
2) இப்படிப்பட்ட பாவங்களைச் செய்கிறவர்கள் மரணத்திற்கு பாத்திரராயிருக்கிறார்களென்று 23 பாவங்களை எழுதுகிறார்
(ரோம 1:19-21)
3) இப்படிப்பட்டவர்கள் தேவனுடைய ராஜ்ஜியத்தை சுதந்தரிப்பதில்லை (17பாவங்கள்) (கலா 5:19-21)
4) கிறிஸ்துவின் ராஜ்யத்தில் பிரவேசிக்க தகுதியற்றவர்கள்
(7 பாவங்கள்)(எபே 5:3-7)
5) கடைசி கால கொடிய பாவங்கள் (19 பாவங்கள்) (2தீமோ 3:1-5)
6) இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள் (8 பாவங்கள்) (வெளி 21:8)
7) தேவனுடைய நித்திய ராஜ்யத்துக்கும் அவர் சமூகத்துக்கும் புறம்பே இருப்பார்கள் ( 6வித கொடிய பாவம்) (வெளி 22:15)
இந்த அட்டவணையில் ஒரு வசனத்தில் கூட ஒய்வு நாளை மீறுவது பாவம் என்றோ அக்கிரமம் என்றோ வேத வாக்கியங்களை ஏவின பரிசுத்த ஆவியானவர் வெளிப்படுத்தவில்லை
கர்த்தருக்கு சித்தமானால் இன்னும் ஓய்வு நாள் உபதேசத்தை குறித்து இன்னும் கற்றுக் கொள்வோம்
நீங்கள் ஈரோட்டில் இருந்தால் ஜெபிக்கவும் தேவனுடைய சத்தியங்களை இலவசமாகவும் உங்கள் வீடுகளில் கற்றுக்கொள்ள எங்களை அழைக்கவும்
Preacher: Bro Ariyel Barnabas
Church Of Christ
Erode
Call-9025776966
தேவனுடைய சத்தியங்களை தொடர்ந்து வாட்ஸ் ஆப் ல் பெற 9025776966 என்ற இந்த எண்ணுக்கு குறுந் தகவல் அனுப்பவும்
No comments:
Post a Comment