பாடம்:02 விவாகம் யாவருக்குள்ளும் கனம் உள்ளதா?
திருமண உறவை தேவன் எதற்காக ஏற்படுத்தினார்?
திருமண உறவுகளை குறித்து உலகம் பெரிதாக கவலைப்படுவதில்லை
ஆனால் தேவனுடைய பிள்ளைகள் தங்களுடைய திருமண உறவுகளில் சரியாக இருக்க வேண்டும் என்று தேவன் விரும்புகிறார்
திருமணம் என்பது தேவனுடைய திட்டத்திலிருந்து வந்த ஒன்றாகும் என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்
அவர் திருமண உறவை ஆதாமுக்கு ஏற்ற துணையாக ஏவாளை சிருஷ்டித்து ஏற்படுத்தினார்
ஆதாமுக்கு ஏற்ற துணை என்பது மிருகங்களோ பறவைகளோ இல்லை என்பதை கவனியுங்கள்
ஆதி 2:20அப்படியே, ஆதாம் சகலவித நாட்டு மிருகங்களுக்கும், ஆகாயத்துப் பறவைகளுக்கும், சகலவித காட்டுமிருகங்களுக்கும் பேரிட்டான். ஆதாமுக்கோ ஏற்ற துணை இன்னும் காணப்படவில்லை.
திருமண உறவை தேவன் எதற்காக உண்டாக்கினார் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டுமா?
1) மனுஷன் தனிமையாக இருப்பது நல்லதல்ல என்பதற்காக உண்டாக்கினார்
ஆதி 2:18 பின்பு, தேவனாகிய கர்த்தர்: மனுஷன் தனிமையாயிருப்பது நல்லதல்ல, ஏற்ற துணையை அவனுக்கு உண்டாக்குவேன் என்றார்.
திருமணம் முடிந்த பின்பு கணவனோ அல்லது மனைவியோ தனிமையாக இருப்பது ஆபத்து தான் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்
(இதைக் குறித்து பின்வரும் பாடங்களில் படிப்போம்)
2) அவர்கள் (புருஷனும் மனைவியும்) கூடி வாழ வேண்டும் என்பதற்காக ஏற்படுத்தினார்
1கொரி 7:5 ,,,,, ஒருவரைவிட்டு ஒருவர் பிரியாதிருங்கள்; ,,,,, மறுபடியும் கூடி வாழுங்கள்.
1கொரி 7:9 ஆகிலும் அவர்கள் விரத்தராயிருக்கக்கூடாதிருந்தால் விவாகம்பண்ணக்கடவர்கள்; வேகிறதைப்பார்க்கிலும் விவாகம்பண்ணுகிறது நலம்.
திருமணமே வேண்டாம் என்று வெந்து கொண்டிருப்பதைப் பார்க்கிலும் திருமணம் செய்வது நலமாயிருக்கும்
கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் பிரியக் கூடாது அவர்கள் கூடி வாழ வேண்டும் என்று தான் தேவன் கட்டளை கொடுக்கிறார்
3) தேவ பக்தியுள்ள் சந்ததியை பெறும்படிக்கு அவர்களை (புருஷனையும் மனைவியையும்) உண்டாக்கினார்
மல் 2:15 அவர் ஒருவனையல்லவா படைத்தார்? ஆவி அவரிடத்தில் பரிபூரணமாயிருந்ததே, பின்னை ஏன் ஒருவனைப் படைத்தார்? தேவபக்தியுள்ள சந்ததியைப் பெறும்படிதானே,,,,,,,
திருமணம் முடிந்து குழந்தைகளை பெற்றுக்கொண்ட உடனே அது தேவ பக்தியுள்ள சந்ததியாக இருக்காது நாம் தான் தேவனுடைய சத்தியத்தை போதித்து அவர்களை தேவ பக்தியுள்ள சந்ததியாக உருவாக்க வேண்டும்
4) அவர்கள் (புருஷனும் மனைவியும்) தங்கள் பிள்ளைகளோடு தொடர்ந்து குடும்பமாக தேவனை சேவிக்க வேண்டும் என்பதற்காக ஏற்படுத்தினார்
யோசுவா 24:15 கர்த்தரைச் சேவிக்கிறது உங்கள் பார்வைக்கு ஆகாததாய்க் கண்டால், பின்னை யாரைச் சேவிப்பீர்கள் என்று இன்று தெரிந்துகொள்ளுங்கள்; நதிக்கு அப்புறத்தில் உங்கள் பிதாக்கள் சேவித்த தேவர்களைச் சேவிப்பீர்களோ? நீங்கள் வாசம்பண்ணுகிற தேசத்துக் குடிகளாகிய எமோரியரின் தேவர்களைச் சேவிப்பீர்களோ? நானும் என் வீட்டாருமோவென்றால், கர்த்தரையே சேவிப்போம் என்றான்.
தேவன் ஆதியிலே மனுஷனுக்கு ஏற்ற துணையை உண்டாக்கினாரா?
ஆதி 2:18 ...... ஏற்ற துணையை அவனுக்கு உண்டாக்குவேன் என்றார்.
தேவன் மனுஷனுக்கு ஏற்ற துணையை உண்டாக்கினார்
மனுஷியை எப்படி உண்டாக்கினார்?
ஆதி 2:21 அப்பொழுது தேவனாகிய கர்த்தர் ஆதாமுக்கு அயர்ந்த நித்திரையை வரப்பண்ணினார், அவன் நித்திரையடைந்தான்; அவர் அவன் விலா எலும்புகளில் ஒன்றை எடுத்து, அந்த இடத்தைச் சதையினால் அடைத்தார்.
ஆதி 2:22 தேவனாகிய கர்த்தர் தாம் மனுஷனில் எடுத்த விலா எலும்பை மனுஷியாக உருவாக்கி, அவளை மனுஷனிடத்தில் கொண்டுவந்தார்.
கீழே உள்ள சத்தியங்களை புருஷர்களும் ஸ்திரீகளும் மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்ள வேண்டும்
ஸ்திரீயானவள் புருஷனுடைய மகிமையாயிருக்கிறாள்.
1கொரி 11:7 ... ஸ்திரீயானவள் புருஷனுடைய மகிமையாயிருக்கிறாள்
புருஷனுக்கு மகிமையே ஸ்திரீயானவள் தான்
ஸ்திரீயே புருஷனிலிருந்து தோன்றினவள்
1கொரி 11:8 புருஷன் ஸ்திரீயிலிருந்து தோன்றினவனல்ல, ஸ்திரீயே புருஷனிலிருந்து தோன்றினவள்.
ஸ்திரீயே புருஷனுக்காகச் சிருஷ்டிக்கப்பட்டவள்.
1கொரி 11:9 புருஷன் ஸ்திரீக்காகச் சிருஷ்டிக்கப்பட்டவனல்ல, ஸ்திரீயே புருஷனுக்காகச் சிருஷ்டிக்கப்பட்டவள்.
ஆதாம் ஏவாளை எப்படி ஏற்றுக் கொண்டார்?
ஆதி 2:23 அப்பொழுது ஆதாம்: இவள் என் எலும்பில் எலும்பும், என் மாம்சத்தில் மாம்சமுமாய் இருக்கிறாள்; இவள் மனுஷனில் எடுக்கப்பட்டபடியினால் மனுஷி என்னப்படுவாள் என்றான்.
எலும்பும் மாம்சமும் தனியாக பிரிக்கப்படும் என்றால் அங்கே உயிரும் இருக்காது உருவமும் இருக்காது
தேவன் திருமண உறவை ஏற்படுத்தி இருக்கும் போது தனிமையாக இருப்பது நல்லதா?
மனுஷன் தனிமையாய் இருப்பது நல்லதல்ல என்று தேவன் அறிந்து இருந்தார்
ஆதி 2:18 பின்பு, தேவனாகிய கர்த்தர்: மனுஷன் தனிமையாயிருப்பது நல்லதல்ல, ஏற்ற துணையை அவனுக்கு உண்டாக்குவேன் என்றார்.
இன்றைக்கு அநேகர் தனிமையை அதிகமாக விரும்புகிறார்கள்
திருமணம் என்றாலும் மனைவி என்றாலும் பிள்ளைகள் என்றாலும் உடனே அவர்கள் அது எல்லாம் தொல்லைகள் என்று சொல்லுகிறார்கள்
தேவன் எதை தொல்லை என்று சொல்கிறார்?
குடும்பம் இல்லாதவன் தான் தீராத தொல்லையில் இருக்கிறான்
பிரசங்கி 4:8 ஒருவன் ஒண்டிக்காரனாயிருக்கிறான்; அவனுக்கு உடனாளியுமில்லை, அவனுக்குப் பிள்ளையும் சகோதரனுமில்லை; அப்படியிருந்தும் அவன் படும் பிரயாசத்துக்கு முடிவில்லை; அவன் கண் ஐசுவரியத்தால் திருப்தியாகிறதுமில்லை; நான் ஒரு நன்மையையும் அநுபவியாமல் யாருக்காகப் பிரயாசப்படுகிறேன் என்று அவன் சிந்திக்கிறதுமில்லை; இதுவும் மாயை, தீராத தொல்லை.
இன்றைக்கு அநேகர் தனிமையாக இருந்து விடுவதையே விரும்புகிறார்கள்
இன்றைக்கு நிறைய குற்றங்களும் அக்கிரமங்களும் பாவங்களும் தனிமையாக இருக்கும் போதுதான் ஏற்படுகிறது
தனிமையாக இருப்பது என்பது சாத்தானுடைய பெரிய கண்ணியாக இருக்கிறது
தனிமையாக இருக்கிற அநேகர் அந்த கண்ணியில் சிக்கி கொள்கிறார்கள்
மனிதன் ஒருபோதும் தனிமையாக இருக்கக்கூடாது
தேவன் ஆதாமுக்கு அவருடைய விலா எலும்பிலிருந்தே ஏற்ற துணையை உருவாக்கினார்
ஆதாமுக்கு ஏற்ற துணையாக அவர் மனுஷியை உருவாக்கினார்
மனுஷி மனுஷனுடைய எலும்பில் எலும்பும் மாம்சத்தில் மாம்சமுமாய் இருக்கிறாள்
தேவன் மனுஷியை உருவாக்கி ஆதாமிடம் கொண்டு வந்தார் ஆதாம் மனுஷியை தன்னுடைய ஏற்ற துணையாக ஏற்று கொண்டார்
தேவனுடைய விருப்பமே ஒரு மனுஷனுக்கு ஒரு மனுஷி என்பது தான் அதனால் தான் ஒரு மனுஷனுக்கு ஒரு மனுஷியை உருவாக்கினார்
இன்றைக்கு நாம் ஒருவனுக்கு ஒருத்தி என்றால் அவர்கள்(உலகத்தார்) நம்மைப் பார்த்து பிழைக்கத் தெரியாதவர்கள் என்கிறார்கள்
இதற்கு காரணம் என்னவென்றால் திருமண உறவு எதற்காக இருக்கிறது என்கிற அறிவு அவர்களுக்கு இருப்பதில்லை
அநேகர் திருமணம் என்றால் மாம்ச இச்சைகளை நிறைவேற்றுவதற்காக தான் என்கிறார்கள்
ஒருவன் மாம்ச இச்சைகளுக்காக திருமணம் செய்வான் என்றால் அந்த ஆசைகளை நிறைவேற்றி முடித்த பின்பு அவன் தன் மனைவி அல்லாத வேறொரு உறவை தேட ஆரம்பித்து விடுவான்
அவர்களைப் பொறுத்த வரை தொடர்ந்து தங்களுடைய இச்சைகளை நிறைவேற்றிக் கொண்டே இருப்பார்கள்
தேவன் சிருஷ்டித்த போது புருஷனைக் குறித்தும் மனைவியைக் குறித்தும் அவருடைய ஆசை என்ன?
ஆதி 2:24 இதினிமித்தம் புருஷன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு, தன் மனைவியோடே இசைந்திருப்பான்; அவர்கள் ஒரே மாம்சமாயிருப்பார்கள்.
1) புருஷன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு தன் மனைவியோடே இசைந்திருக்க வேண்டும்
2) அவர்கள் ஒரே மாம்சமாய் இருக்க வேண்டும்
அவர்கள் இருவரும் ஒரே மாம்சமாக இருந்தாலும் அதிகாரத்தில் இருவரும் சமம் அல்ல என்பதை பின்வரும் பாடங்களில் படிப்போம்
கர்த்தருக்கு சித்தமானால் தொடர்ந்து கற்றுக் கொள்ளுவோம்
நீங்கள் ஈரோட்டில் இருந்தால் ஜெபிக்கவும் தேவனுடைய சத்தியங்களை இலவசமாகவும் உங்கள் வீடுகளில் கற்றுக்கொள்ள எங்களை அழைக்கவும்
Preacher: Bro Ariyel Barnabas
Church Of Christ
Erode
Call-9025776966
தேவனுடைய சத்தியங்களை தொடர்ந்து வாட்ஸ் ஆப் ல் பெற 9025776966 என்ற இந்த எண்ணுக்கு குறுந் தகவல் அனுப்பவும்
No comments:
Post a Comment