Thursday, 21 April 2022

விவாகம் யாவருக்குள்ளும் கனமுள்ளதா?

பாடம்:01 விவாகம் யாவருக்குள்ளும் பரிசுத்தம் உள்ளதா?      
                                    
விவாகம் யாவருக்குள்ளும் கனமுள்ளதா?

நாம் விவாகத்தைப் பற்றி தேவனுடைய ஆலோசனைகளை வேத வாக்கியத்தோடு கற்றுக் கொள்ள போகிறோம்

தேவன் உலகத்தை சிருஷ்டித்த போது மனுஷனை சிருஷ்டித்து அவனுக்கு ஏற்ற துணையாக மனுஷியை உண்டாக்கினார் 

விவாகத்தில் தேவன் புருஷனையும் ஸ்திரீயையும் இணைத்தார்

தேவன் அவர்களை இணைத்து பலுகி பெருகும் படி அவர்களை ஆசீர்வதித்தார்

அவர்கள் எப்படி இருக்க வேண்டும் என்று கட்டளையையும் கொடுத்தார்

புருஷன் ஸ்திரீயை தான் விவாகம் பண்ண வேண்டும் என்பது தேவனுடைய திட்டமாக இருக்கிறது

அவர்கள் இருவரும் சேர்ந்து தேவ பக்தியுள்ள சந்ததியை உருவாக்க வேண்டும் என்பது தான் தேவனுடைய திட்டமாக இருந்தது

ஆனால் இன்றைக்கு உலகத்தில்  திருமணத்தைப் பற்றிய எண்ணங்கள் எப்படி இருக்கிறது?

அநேகர் திருமணத்தை அவமதிக்கிறார்கள்

அநேகர் திருமணத்தை பற்றி கேலி பண்ணுகிறார்கள்

திருமண வாழ்க்கை என்பதை மிகப்பெரிய பாரமாக பார்க்கிறார்கள்

திருமணம் செய்வதை விட ஒண்டியாகவே வாழ்ந்து விடலாம் என்று அநேகர் நினைக்கிறார்கள் 

இதற்கு எல்லாம் என்ன காரணம்?

குடும்பத்தில் கணவனுக்கும் மனைவிக்கும் ஏற்படக்கூடிய ஓயாத  சண்டைகளைப் பார்க்கும்போது பிள்ளைகள் திருமணத்தை வெறுத்து விடுகிறார்கள்

திருமணத்தைக் குறித்து தவறான அபிப்ராயத்தை இப்படிப்பட்ட  பெற்றோர்களே பிள்ளைகளுக்கு  ஏற்படுத்தி விடுகிறார்கள்

இன்னும் ஊடகங்களும் தொலைக்காட்சிகளும் திருமணத்தை தவறான அபிப்ராயங்களை உருவாக்கி விடுகின்றது, இதன் காரணமாக திருமணத்தைப் பற்றி நல்ல அபிப்ராயங்கள் உலகத்தாரிடத்தில் ஏற்படுவதில்லை

இன்றைக்கு  சினிமாக்களின் மூலமாகவும்  தொலைக்காட்சியில் நாடகங்கள் மூலமாகவும் திருமணத்தைக் குறித்து தவறான அபிப்பிராயங்களை கருத்துக்களையும் உருவாக்குகிறார்கள்

அவர்களின் நோக்கம் நீங்கள் ஒரே மனைவியோடு வாழ வேண்டும் என்பதல்ல ஒரே புருஷனோடு வாழ வேண்டும் என்பதும் அல்ல

அவர்களைப் பொருத்தவரை எந்த கள்ள உறவும் தவறானது அல்ல உங்கள் வாழ்க்கையை நீங்கள் எப்படி வேண்டுமானாலும் வாழுங்கள் என்று கற்றுக் கொடுக்கிறார்கள்

அவர்கள் நம்முடைய பிள்ளைகளின் இருதயங்களிலும் இப்படிப்பட்ட விஷத்தை விதைக்கிறார்கள் 

சிறப்பான தம்பதிகளின் வாழ்க்கையைப் பற்றி எத்தனை ஊடகங்களும் தொலைக்காட்சிகளும் மக்களிடத்தில் கொண்டு போய் சேர்க்கின்றார்கள்?

அதையெல்லாம் அவர்கள் ஒருபோதும் செய்யமாட்டார்கள்

நிறைய குடும்பங்கள் கெட்டு போவதற்கு இந்த தொலைக்காட்சியின் நாடகங்களும் நிகழ்ச்சிகளும் தான் காரணமாய் இருக்கிறது

இன்றைக்கு உலகத்தாரிடத்தில் புதிய கலாச்சாரம் உருவாகி இருக்கின்றது அது என்னவென்றால் திருமணம் செய்யாமல் குறிப்பிட்ட காலங்கள் ஒன்றாக சேர்ந்து வாழ்வது இருவருக்கும் ஒத்து வந்தால் திருமணம் செய்து கொள்ளுவது இல்லையென்றால் பிரிந்து விடுவது.

இப்படிப்பட்ட வழிமுறைகள் எல்லாம் வேசித்தனத்திற்கு விபச்சாரத்திற்கும் ஒப்பாயிருக்கிறது

இன்னும் நிறைய அக்கிரமமான காரியங்களை  கலாச்சாரம் என்ற பெயரில் உருவாக்கி வைத்திருக்கிறார்கள் 

தேவனுடைய பார்வையில் இந்த காரியங்கள்  மிகவும் அருவருப்பானது
1) ஆணுக்கு ஆண் திருமணம் செய்வது 
2) பெண்ணுக்கு பெண் திருமணம் செய்வது
3) அண்ணகர்களை திருமணம் செய்வது
4) மிருகங்களை திருமணம் செய்வது

மேலே சொல்லப்பட்ட திருமணங்களில்  கனம்  என்பது எங்கே  இருக்கிறது?

இப்படிப்பட்ட திருமண  கலாச்சாரங்களை  பெருமையாக எண்ணுகிறார்கள் 

இப்படிப்பட்ட திருமண கலாச்சாரங்கள் தேவனுடைய பார்வையில் எப்போதும்  அருவருப்பாய் இருக்கிறது

திருமணத்தை பற்றி உலகத்தாருடைய கண்ணோட்டம் இப்படி  இருந்தாலும் தேவனுடைய பிள்ளைகள் அப்படிப்பட்ட கண்ணோட்டத்தோடு திருமணத்தை பார்க்க  கூடாது

விவாகத்தை நாம் எப்போதும் கனமுள்ளதாக தான் பார்க்க வேண்டும்
எபி 13:4 விவாகம் யாவருக்குள்ளும் கனமுள்ளதாயும், விவாகமஞ்சம் அசுசிப்படாததாயுமிருப்பதாக; வேசிக்கள்ளரையும் விபசாரக்காரரையும் தேவன் நியாயந்தீர்ப்பார்.

தேவனுடைய பார்வையில் விவாகம் எப்படி இருக்கிறது?
எபி 13:4 விவாகம் யாவருக்குள்ளும் கனமுள்ளதாயும்,.......

விவாகம் யாவருக்குள்ளும் கனமுள்ளதாக இருக்கிறது என்கிறார்

நீங்கள் விவாகத்தை எப்படி பார்க்கிறீர்கள்?

விவாக மஞ்சம் (படுக்கை) என்ன ஆக கூடாது என்று தேவன் கட்டளையிடுகிறார்?
எபி 13:4 ......விவாகமஞ்சம் அசுசிப்படாததாயுமிருப்பதாக

தேவன் அது அசுசிப்படக்கூடாது என்கிறார்

விவாக மஞ்சத்தை நாம் எப்படி அசுசிப்படுத்த முடியும்?
எபி 13:4 ……. வேசிக்கள்ளரையும் விபசாரக்காரரையும் தேவன் நியாயந்தீர்ப்பார்.

நாம் நம்முடைய விவாக மஞ்சத்தை எப்படி அசுசிப்படுத்தக் கூடும்?
1) திருமணத்திற்கு முன்பு எந்த ஆணும் பெண்ணும் பாலியல் உறவில் ஈடுபடும் போது அது விபசாரமாய் இருக்கிறது 
2)திருமணத்திற்கு பின்பு எந்த புருஷனும் மனைவியும் இன்னொரு ஆணோடும் பெண்ணோடும் பாலியல் உறவு வைக்கும் போது அது வேசித்தனமாக இருக்கிறது

இப்படிப்பட்ட வேசிக்கள்ளரையும் விபசாரக்காரரையும் தேவன் என்ன செய்வார்?
எபி 13:4 ......வேசிக்கள்ளரையும் விபசாரக்காரரையும் தேவன் நியாயந்தீர்ப்பார்.

தேவனுக்கு சித்தமானால் திருமண உறவுகள் பற்றி தேவன் நமக்கு கொடுக்கக் கூடிய ஆலோசனை என்ன என்பதை குறித்து கற்றுக் கொள்ளுவோம்

நீங்கள் ஈரோட்டில் இருந்தால் ஜெபிக்கவும்  தேவனுடைய சத்தியங்களை இலவசமாகவும்  உங்கள் வீடுகளில் கற்றுக்கொள்ள எங்களை அழைக்கவும்

Preacher: Bro Ariyel Barnabas
Church Of Christ
Erode
Call-9025776966

தேவனுடைய சத்தியங்களை தொடர்ந்து வாட்ஸ் ஆப் ல் பெற 9025776966 என்ற இந்த எண்ணுக்கு குறுந் தகவல் அனுப்பவும்

No comments:

Post a Comment