Tuesday, 26 April 2022

மாம்ச இச்சைகளுக்காக மாத்திரம் திருமணம் செய்தால் என்ன சம்பவிக்கும்?

பாடம் :03 விவாகம் யாவருக்குள்ளும் கனம் உள்ளதா?

மாம்ச இச்சைகளுக்காக மாத்திரம் திருமணம் செய்தால் என்ன சம்பவிக்கும்?

தேவன் திருமண உறவை எதற்காக ஏற்படுத்தினார் என்பதை நாம் கற்றுக் கொண்டு இருக்கிறோம்

விவாகம் என்பது யாவருக்குள்ளும் கனமுள்ளதாகவும் பரிசுத்தமுள்ளதாகவும் இருக்கிறது என்று வேத வாக்கியம் நமக்கு போதிக்கிறது

இன்றைக்கு அநேகர் தங்கள் சரீர இச்சைகளை தீர்ப்பதற்காக மாத்திரம் திருமணம் செய்கிறார்கள்

இப்படி திருமணம் செய்கிறவர்கள் தேவன் என்ன நோக்கத்திற்காக விவாகத்தை ஏற்படுத்தினாரோ அந்த நோக்கத்தையே அவர்கள் அசுசிப்படுத்துகிறார்கள்

இன்றைக்கு அநேகர் காதல் என்கிற சாத்தானுடைய கண்ணியில் சிக்கிக் கொள்ளுகிறார்கள் அவர்கள் எங்களுடைய காதல் புனிதமானது என்று சொல்லிக் கொள்ளுகிறார்கள்

திருமணத்திற்கு முன்பதாக யாரொவரும் இச்சையோடு பார்க்கின்ற போது அங்கே என்ன சம்பவிக்கிறது?
மத் 5:28 நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளோடே விபசாரஞ்செய்தாயிற்று.

இச்சையோடு பார்க்கின்றபோது அங்கே விபச்சாரமாய் இருக்கிறது என்றால் இன்றைய காலகட்டத்தில் காதல் எப்படி பரிசுத்தமாக இருக்கும்?

பெரும்பாலான காதல்களில் அங்கே இருதயத்தில் தங்கள் துணையை இச்சையோடு பார்க்கின்ற போது அவர்கள் விபசாரக்காரர்களாய் இருக்கிறார்கள்

திருமணத்திற்கு முன்பதாகவே தங்கள் சரீரங்களை அவர்கள் இணைத்து கொள்ளுகின்ற போது அங்கே அது விபசாரமாய் இருக்கிறது

நாம் பழைய ஏற்பாட்டில் இருந்து காதல் என்பது எப்படி இருக்கிறது என்பதை உதாரணமாக பார்க்க போகிறோம் 

இன்றைக்கு காதல் என்கிற மயக்கத்தில் சிக்கிக்கொள்ளுகிற எல்லாருக்கு இந்த சம்பவம் ஒரு எச்சரிக்கையாக இருக்கிறது

தாவீதின் குமாரனாகிய அப்சலோமுக்கு தாமார் என்னும் பேருள்ள சவுந்தரியமுள்ள ஒரு சகோதரி இருந்தாள்
2சாமு 13:1 இதற்குப்பின்பு தாவீதின் குமாரனாகிய அப்சலோமுக்குத் தாமார் என்னும் பேருள்ள சவுந்தரியமுள்ள ஒரு சகோதரி இருந்தாள்; அவள் மேல் தாவீதின் குமாரன் அம்னோன் மோகங்கொண்டான்.

தாமார் மேல் தாவீதின் இன்னொரு குமரனாகிய அம்னோன் என்பவன் மோகங்கொண்டான்

அம்னோன் தாமாரினிமித்தம் ஏக்கங்கொண்டு வியாதிப்பட்டான்
2சாமு 13:2 தன் சகோதரியாகிய தாமாரினிமித்தம் ஏக்கங்கொண்டு வியாதிப்பட்டான்; அவள் கன்னியாஸ்திரீயாயிருந்தாள்; அவளுக்குப் பொல்லாப்புச் செய்ய, அம்னோனுக்கு வருத்தமாய்க் கண்டது

இன்றைக்கு அநேகர் காதலில் மயக்கத்தில் விழுந்து இப்படிப்பட்ட மனநிலையில் தான் இருக்கிறார்கள்

அதாவது ஏக்கம் கொண்டு வியாதிப்பட்டு இருக்கிறார்கள் 

அம்னோனுக்கு தாமாரை விவாகம் பண்ண வேண்டும் என்பது அவனுடைய நோக்கம் அல்ல

அவன் தாமாரை சரீரபிரகாரமாக அநுபவிக்க வேண்டும் என்று தான் அவனுடைய இருதயத்தின் எண்ணமாக இருந்தது

ஏனென்றால் தாமார் அழகுள்ள ரூபாவதியாக (சௌந்தரியமுள்ள) இருந்தாள்

இன்றைக்கு இருக்கக்கூடிய வாலிப ஸ்திரீகளும் இதை புரிந்து கொள்ள வேண்டும் உங்களை விரும்ப கூடியவர்கள் ஒருவேளை அம்னோனைப் போல இருதயம் உடையவர்களாக இருந்து உங்கள் சரீரத்தை இச்சிக்கக் கூடியவர்களாக இருக்கலாம்

இன்றைக்கும் நிறைய வாலிப ஸ்திரீகள் இப்படிப்பட்ட இருதயம் உடையவர்களுடைய கண்ணியில் சிக்கி கொண்டு அவர்கள் அதை வீடியோவாக எடுத்து மிரட்டி அவர்கள் குடும்பத்தையே நாசம் செய்து விடுகிறார்கள்

அம்மோன் கூட இருந்த அவனுடைய சிநேகிதன் யோனதாப் மகா தந்திரவாதியாக இருந்தான்
2சாமு 13:3 அம்னோனுக்குத் தாவீதுடைய தமையன் சிமியாவின் குமாரனாகிய யோனதாப் என்னும் பேருள்ள ஒரு சிநேகிதன் இருந்தான்; அந்த யோனதாப் மகா தந்திரவாதி.

இன்றைக்கும் இப்படிப்பட்ட தந்திரமுள்ள சிநேகிதர்கள் அநேகர் இருக்கிறார்கள் 

அம்மோன் தாமாரின் மேல் கொண்ட ஏக்கத்தினால் நாளுக்கு நாள் மெலிந்து கொண்டே வந்தான்
2சாமு 13:4 அவன் இவனைப் பார்த்து: ராஜகுமாரனாகிய நீ, நாளுக்குநாள் எதினாலே இப்படி மெலிந்துபோகிறாய், எனக்குச் சொல்லமாட்டாயா என்றான். அதற்கு அம்னோன்: என் சகோதரன் அப்சலோமின் சகோதரியாகிய தாமாரின்மேல் நான் ஆசை வைத்திருக்கிறேன் என்றான்.

இன்றைக்கு காதலிக்கிறேன் சொல்லக்கூடியவர்கள் இப்படி நாளுக்கு நாள் மெலிந்து வருவதாக சொல்லி கொள்கிறார்கள்
ஏன் இப்படி மெலிந்து வருகிறீர்கள் என்றால் காதல் ஏக்கம் என்கிறார்கள் 

இதற்கொல்லாம் காரணம் திருமணம் செய்ய வேண்டும் என்கிற எண்ணமா அல்லது வேறு ஏதாவது காரணம் இருக்கிறதா?

தந்திரவாதியான யோனதாப் அம்னோனுக்கு ஒரு ஆலோசனையை கொடுத்தான்
2சாமு 13:5 அப்பொழுது யோனதாப் அவனைப் பார்த்து: நீ வியாதிக்காரனைப்போல உன் படுக்கையின்மேல் படுத்துக்கொள்; உன்னைப் பார்க்கிறதற்கு உன் தகப்பனார் வரும்போது, நீ, என் சகோதரியாகிய தாமார் வந்து, எனக்குப் போஜனம்கொடுத்து, அவள் கையினாலே சாப்பிடும்படிக்கு நான் பார்க்க, என் கண்களுக்கு முன்பாகச் சமைக்கும்படி தயவுசெய்யவேண்டும் என்று சொல் என்றான்.

தாமாரை அம்னோன் இருக்கிற வீட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்பது தான் யோனதாபின் திட்டமாக இருந்தது

யோனதாபின் திட்டத்தின்படியாகவே அம்னோன் நடந்து கொண்டான்
2சாமு 13:6 அப்படியே அம்னோன் வியாதிக்காரன்போல் படுத்துக்கொண்டு, ராஜா தன்னைப் பார்க்கவந்தபோது, ராஜாவை நோக்கி: என் சகோதரியாகிய தாமார் வந்து நான் அவள் கையினாலே சாப்பிடும்படிக்கு, என் கண்களுக்கு முன்பாக இரண்டு நல்ல பணியாரங்களைப் பண்ணும்படி உத்தரவு கொடுக்கவேண்டும் என்றான்.

அவன் சொன்னபடியே தாவீதும் தாமாரிடத்தில் ஆள் அனுப்பி உன் சகோதரனுக்கு சமையல் பண்ணி கொடு என்று சொல்ல சொன்னார்
2சாமு 13:7 அப்பொழுது தாவீது: வீட்டுக்குத் தாமாரிடத்தில் ஆள் அனுப்பி, நீ உன் சகோதரனாகிய அம்னோன் வீட்டுக்குப் போய், அவனுக்குச் சமையல் பண்ணிக்கொடு என்று சொல்லச்சொன்னான்.

தாவீதின் வார்த்தைகளுக்கு கீழ்ப்படிந்து தாமார் அம்னோன் வீட்டுக்குப்போய் பணியாரங்களை சுட்டு கொடுத்தாள்
2சாமு 13:8 தாமார் தன் சகோதரனாகிய அம்னோன் படுத்துக்கொண்டிருக்கிற வீட்டுக்குப்போய், மாவெடுத்துப் பிசைந்து, அவன் கண்களுக்கு முன்பாகத் தட்டி, பணியாரங்களைச் சுட்டு,
2சாமு 13:9 சட்டியை எடுத்து, அவனுக்கு முன்பாக அவைகளை வைத்தாள்; ஆனாலும் அவன் சாப்பிடமாட்டேன் என்றான்; பின்பு அம்னோன்: எல்லாரும் என்னைவிட்டு வெளியே போகட்டும் என்றான்; எல்லாரும் அவனை விட்டு வெளியே போனார்கள்

எல்லாரையும் அம்னோன் வெளியே அனுப்பி தந்திரமாய் நடந்து கொண்டான்
2சாமு 13:10 அப்பொழுது அம்னோன் தாமாரைப் பார்த்து: நான் உன் கையினாலே சாப்பிடும்படிக்கு, அந்தப் பலகாரத்தை அறை வீட்டிலே கொண்டுவா என்றான்; அப்படியே தாமார் தான் செய்த பணியாரங்களை அறை வீட்டில் இருக்கிற தன் சகோதரனாகிய அம்னோனிடத்தில் கொண்டு போனாள்

தாமார் தன்னுடைய சகோதரி என்று பாராமல் என்னோடே சயனி என்றான்
2சாமு 13:11 அவன் சாப்பிடும்படிக்கு அவள் அவைகளைக் கிட்ட கொண்டுவருகையில், அவன் அவளைப் பிடித்து, அவளைப் பார்த்து: என் சகோதரியே, நீ வந்து என்னோடே சயனி என்றான்.

தாமார் அவனிடத்தில் இது மதிகேடான காரியம் என்றாள்
2சாமு 13:12 அதற்கு அவள்: வேண்டாம், என் சகோதரனே, என்னை அவமானப்படுத்தாதே, இஸ்ரவேலிலே இப்படிச் செய்யத்தகாது; இப்படிப்பட்ட மதிகேடான காரியத்தைச் செய்யவேண்டாம்.

தாமார் அவனிடத்தில் தன்னை திருமணம் செய்வதற்கு ராஜாவோடு பேசு என்றாள்
2சாமு 13:13 நான் என் வெட்கத்தோடே எங்கே போவேன்? நீயும் இஸ்ரவேலிலே மதிகெட்டவர்களில் ஒருவனைப்போல ஆவாய்; இப்போதும் நீ ராஜாவோடே பேசு, அவர் என்னை உனக்குத் தராமல் மறுக்க மாட்டார் என்றாள்.

அம்னோனுக்கு தாமாரை திருமணம் செய்ய வேண்டும் என்கிற எண்ணம் எல்லாம் அவனுக்கு இல்லை

அம்னோன் தாமாரை பலவந்தமாய் கற்பழித்தான்
2சாமு 13:14 அவன் அவள் சொல்லைக் கேட்கமாட்டேன் என்று அவளைப் பலவந்தமாய்ப் பிடித்து, அவளோடே சயனித்து, அவளைக் கற்பழித்தான்.

அம்னோன் தாமார் மேல் வைத்து இருந்த மாம்ச இச்சைகள் நிறைவேறின பின்பு எப்படி நடந்து கொண்டான்?
2சாமு 13:15 பிற்பாடு அம்னோன் அவளை மிகவும் வெறுத்தான்; அவன் அவளை விரும்பின விருப்பத்தைப் பார்க்கிலும், அவளை வெறுத்த வெறுப்பு அதிகமாயிருந்தது. ஆகையால்: நீ எழுந்து போய்விடு என்று அம்னோன் அவளோடே சொன்னான்.

இன்றைக்கு நிறைய காதல் திருமணங்களில் இது எல்லாம் நடக்கிறதா? நடக்கிறது

இது எல்லாம் தொடர்ந்து நடக்குமா?
ஆம் நிச்சயமாக இது எல்லாம் தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருக்கும்

காதல் பரிசுத்தமானது என்று இன்றைக்கு திரைப்படங்கள் கற்றுக் கொடுக்கிறது அதையும் இன்றைக்கு இருக்கக்கூடிய வாலிப பிள்ளைகள் நம்பிக் கொண்டு இந்த சாத்தானுடைய கண்ணியில் போய் சிக்கிக் கொள்ளுகிறார்கள்

காதலிக்கும் போது தங்கள் இச்சைகளை நிறைவேற்றின பின்பு அவர்கள் எப்படி நடந்து கொள்ளுவார்கள்?
2சாமு 13:16 அப்பொழுது அவள்: நீ எனக்கு முந்தி செய்த அநியாயத்தைப் பார்க்கிலும், இப்பொழுது என்னைத் துரத்திவிடுகிற அந்த அநியாயம் கொடுமையாயிருக்கிறது என்றாள்; ஆனாலும் அவன் அவள் சொல்லைக் கேட்க மனதில்லாமல்,

இச்சைகளுக்காக திருமணம் செய்யக் கூடியவர்கள் தங்கள் மாம்ச இச்சைகளை நிறைவேறிய பின்பு இப்படித்தான் நடந்து கொள்வார்கள்

அம்னோன் தாமாரை வெளியே தள்ளி கதவை பூட்ட சொன்னான்
2சாமு 13:17 தன்னிடத்தில் சேவிக்கிற தன் வேலைக்காரனைக் கூப்பிட்டு: நீ இவளை என்னை விட்டு வெளியே தள்ளி, கதவைப் பூட்டு என்றான்.
2சாமு 13:18 அப்படியே அவனிடத்தில் சேவிக்கிறவன் அவளை வெளியே தள்ளி, கதவைப் பூட்டினான்; அவள் பலவருணமான வஸ்திரத்தை உடுத்திக்கொண்டிருந்தாள்; ராஜகுமாரத்திகளாகிய கன்னிகைகள் இப்படிக்கொத்த சால்வைகளைத் தரித்துக்கொள்வார்கள்.
2சாமு 13:19 அப்பொழுது தாமார்: தன் தலையின்மேல் சாம்பலை வாரிப் போட்டுக்கொண்டு, தான் தரித்திருந்த பலவருணமான வஸ்திரத்தைக் கிழித்து, தன் கையைத் தன் தலையின்மேல் வைத்து, சத்தமிட்டு அழுதுகொண்டு போனாள்.

காதல் என்கிற சாத்தானுடைய கண்ணியில் சிக்கிக்கொண்டு பெற்றோர்களை உதறிவிட்டவர்களும்
தங்கள் மாம்ச இச்சைகளுக்காக காதலிக்கிறவர்களும் திருமணம் செய்கிறவர்களும் தங்களுடைய மாம்ச இச்சைகள் தீர்ந்த பின் அவர்கள் இப்படித்தான் அவமானப்படுத்தப் படுகிறார்கள்

இப்படி இச்சைக்காக காதல் வயப்பட்டு தன் காதல் கணவனால் அடித்துத் துரத்தப்பட்ட பெண்கள் இன்றைக்கு வாழ வழியின்றி தற்கொலை செய்து கொண்டும் அல்லது தங்கள் பெற்றோர்களை சார்ந்து கண்ணீரோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்

சரீர இச்சைகளுக்காக திருமணம் செய்யக் கூடியவர்களுடைய வாழ்க்கை இப்படித்தான் இருக்கும்

இவர்கள் திருமணத்தை கனமாகவும் பரிசுத்தமாகவும் பார்க்காதவர்கள் அதின் மேன்மையும் உணராதவர்கள்

கர்த்தருக்கு சித்தமானால் இன்னும் விவாகத்தை குறித்து நிறைய சத்தியங்களை கற்றுக் கொள்ளலாம்

நீங்கள் ஈரோட்டில் இருந்தால் ஜெபிக்கவும் தேவனுடைய சத்தியங்களை இலவசமாகவும் உங்கள் வீடுகளில் கற்றுக்கொள்ள எங்களை அழைக்கவும்

Preacher: Bro Ariyel Barnabas
Church Of Christ
Erode
Call-9025776966

தேவனுடைய சத்தியங்களை தொடர்ந்து வாட்ஸ் ஆப் ல் பெற 9025776966 என்ற எண்ணுக்கு குறுந்தகவல் அனுப்பவும்

No comments:

Post a Comment