Thursday, 28 April 2022

ஆதியாக புஸ்தகத்தின் காலத்தில் வாழ்ந்த ஜனங்களுக்கு ஒய்வுநாள் பிரமாணம் கொடுக்கப்பட்டு இருந்ததா?

பாடம் :5 ஒய்வு நாள் ஆசரிப்பு கிறிஸ்தவர்களுக்கு கொடுக்கப்பட்டதா?

ஆதியாக புஸ்தகத்தின் காலத்தில் வாழ்ந்த ஜனங்களுக்கு ஒய்வுநாள் பிரமாணம் கொடுக்கப்பட்டு இருந்ததா?

ஆதியாகமம் புஸ்தகம் மாத்திரம் சுமார் 2500 வருட சம்பவங்களை உள்ளடக்கியது 

ஏழாம் ஓய்வு நாள் வருகை ஆசரிப்பு சபையார் ஆதாம் முதற்கொண்டு ஓய்வு நாளை ஆசரித்தார்கள் என்று சொல்லுகிறார்கள் 

முதலில் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய சத்தியம் என்னவென்றால் நம்முடைய நினைவுகளும் தேவனுடைய நினைவுகளும் நம்முடைய வழிகளும் தேவனுடைய வழிகளும் இரண்டும் ஒன்றல்ல என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும்
ஏசாயா 55:8 என் நினைவுகள் உங்கள் நினைவுகள் அல்ல; உங்கள் வழிகள் என் வழிகளும் அல்லவென்று கர்த்தர் சொல்லுகிறார். 

தேவனுடைய நினைவுகளும் தேவனுடைய வழிகளும் பூமியைப்பார்க்கிலும் வானங்கள் எப்படி உயர்ந்திருக்கிறதோ அது போல உயர்ந்து இருக்கிறது
ஏசா 55:9 பூமியைப்பார்க்கிலும் வானங்கள் எப்படி உயர்ந்திருக்கிறதோ, அப்படியே உங்கள் வழிகளைப்பார்க்கிலும் என் வழிகளும், உங்கள் நினைவுகளைப்பார்க்கிலும் என் நினைவுகளும் உயர்ந்திருக்கிறது.

தேவனுடைய வழிகளும் நினைவுகளும் வேத வாக்கியத்தில் மாத்திரமே வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது

நாமாக எது ஒன்றையும் யூகித்துக் கொள்ளக்கூடாது அப்படி யூகித்துக் கொண்டு கர்த்தருடைய வார்த்தையோடு ஒரு வார்த்தையை கூட்டுகின்ற போது நாம் பொய்யராக இருக்கிறோம்
நீதி 30:5 தேவனுடைய வசனமெல்லாம் புடமிடப்பட்டவைகள்; தம்மை அண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு அவர் கேடகமானவர். 
நீதி30:6 அவருடைய வசனங்களோடு ஒன்றையும் கூட்டாதே, கூட்டினால் அவர் உன்னைக் கடிந்துகொள்வார், நீ பொய்யனாவாய்.

நாம் சத்தியத்தை விசுவாசித்து போதிக்கிறோம் என்றால் அதற்கான வேத வசனத்தை ஆதாரமாக காண்பிக்க வேண்டும்

அப்படி காண்பிக்காமல் நாமே யூகித்து இப்படித்தான் இருக்கும் என்று போதிக்கின்ற போது
புடமிடப்பட்ட வசனத்தோடு நாம் ஒன்றை கூட்டுகிறோம் அப்படி வசனத்தை கூட்டுகின்ற போது நாம் பொய்யராய் இருக்கிறோம்

ஆதியாக புஸ்தகத்தில் ஆதாமுக்கு தேவன் ஒய்வுநாள் கட்டளையை கொடுத்தாரா?

கீழே உள்ள இந்த வசனத்தில் தேவன் தம்முடைய கிரியை எல்லாம் முடித்து ஏழாம் நாளை ஆசீர்வதித்து அதை பரிசுத்தமாக்கினார்
ஆதி 2:2 தேவன் தாம் செய்த தம்முடைய கிரியையை ஏழாம் நாளிலே நிறைவேற்றி, தாம் உண்டாக்கின தம்முடைய கிரியைகளையெல்லாம் முடித்தபின்பு, ஏழாம் நாளிலே ஓய்ந்திருந்தார்.

கீழே உள்ள வசனத்தில் ஓய்வுநாளை பரிசுத்தப்படுத்தி அதில் ஓய்ந்து இருந்தவர் யார்?
ஆதி 2:3 தேவன் தாம் சிருஷ்டித்து உண்டுபண்ணின தம்முடைய கிரியைகளையெல்லாம் முடித்தபின்பு அதிலே ஓய்ந்திருந்தபடியால், தேவன் ஏழாம் நாளை ஆசீர்வதித்து, அதைப் பரிசுத்தமாக்கினார்.

ஆதியாகம புஸ்தகத்தில் ஏழாம் நாளில் தம்முடைய சிருஷ்டிப்பை முடித்து ஏழாம் நாளில் ஓய்திருந்தது நம்முடைய தேவன் மாத்திரமே

நாம் வசனத்தை கூட்டவும் இல்லை குறைக்கவும் இல்லை அங்கே என்ன நமக்கு வெளிப்படுத்தப்பட்டு இருக்கிறதோ அதை மாத்திரமே நாம் கற்றுக் கொண்டிருக்கிறோம்

தேவன் ஓய்ந்திருந்த அந்த நாளைக் குறித்து தான் தேவன் மோசேயின் மூலமாக நியாயப்பிரமணத்தில் வெளிப்படுத்தி இஸ்ரவேல் ஜனங்களுக்கு கட்டளையிட்டார் 

ஆதாமுக்கு தேவன் ஒய்வு நாளை ஆசரி என்று கட்டளையிட்டார் என்றால் அதற்கான வசன ஆதாரம் எங்கே இருக்கிறது?
1கொரி 4:6 சகோதரரே, எழுதப்பட்டதற்கு மிஞ்சி எண்ணவேண்டாமென்று நீங்கள் எங்களாலே கற்றுக்கொள்ளவும், ,,,, நான் உங்கள்நிமித்தம் என்னையும் அப்பொல்லோவையும் திருஷ்டாந்தமாக வைத்து, இவைகளை எழுதினேன்.
மத் 5:37 உள்ளதை உள்ளதென்றும், இல்லதை இல்லதென்றும் சொல்லுங்கள்; இதற்கு மிஞ்சினது தீமையினால் உண்டாயிருக்கும்.
யாக் 5:12 ,,, நீங்கள் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படாதபடிக்கு உள்ளதை உள்ளதென்றும், இல்லதை இல்லதென்றும் சொல்லக்கடவீர்கள்.

தேவன் ஆதாமுக்கு என்ன கட்டளையை கொடுத்தார்? 

இந்த கட்டளையை தான் வேத வாக்கியம் போதிக்கிறது
ஆதி 2:16 தேவனாகிய கர்த்தர் மனுஷனை நோக்கி: நீ தோட்டத்திலுள்ள சகல விருட்சத்தின் கனியையும் புசிக்கவே புசிக்கலாம்.
ஆதி 2:17 ஆனாலும் நன்மைதீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்கவேண்டாம்; அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய் என்று கட்டளையிட்டார்.

இந்த கட்டளையை தான் ஆதாம் மீறினார் அதற்கான விளைவுகளையும் அவர் பெற்று கொண்டார் அதை தவிர வேறு எதையும் மீறினதாக எந்த ஒரு வேத வாக்கியமும் இல்லை 

இன்னும் சிலர் பரிசுத்த ஆவியானவர் எங்களுக்கு வெளிப்படுத்தி இருக்கிறார் என்று சொல்லி பத்து கற்பனைகளை எடுத்து ஆதியாகமம் மூன்றாம் அதிகாரத்தில் இணைத்து போதிக்க கூடியவர்களும் இருக்கிறார்கள்

இது எல்லாமே இவர்களுடைய யூகங்களே தவிர தேவனுடைய சத்தியங்கள் இல்லை
ஏனென்றால் அது தேவனுடைய நினைவுகளும் தேவனுடைய வழிகளும் அல்ல

இதை தவிர தேவனுடைய வார்த்தைகளை கூட்டி குறைத்து போதிக்கும் போது நாம் பொய்யராகிவிடுகிறோம்

அவருடைய வார்த்தையோடு ஒரு வார்த்தையை கூட்டவும் கூடாது குறைக்கவும் கூடாது என்று நாம் எச்சரிக்கப்பட்டு இருக்கிறோம்
நீதி 30:5 தேவனுடைய வசனமெல்லாம் புடமிடப்பட்டவைகள்;தம்மை அண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு அவர் கேடகமானவர்.
நீதி 30:6 அவருடைய வசனங்களோடு ஒன்றையும் கூட்டாதே, கூட்டினால் அவர் உன்னைக் கடிந்துகொள்வார், நீ பொய்யனாவாய்.

தேவனுடைய வசனத்தை கூட்டி குறைக்கக் கூடிய பொய்யர் அனைவரும் இரண்டாம் மரணமாகிய அக்கினி கடலிலே பங்கடைவார்கள்
வெளி 21:8 பயப்படுகிறவர்களும், அவிசுவாசிகளும், அருவருப்பானவர்களும், கொலைபாதகரும், விபசாரக்காரரும், சூனியக்காரரும், விக்கிரகாராதனைக்காரரும், பொய்யர் அனைவரும் இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள் என்றார். 

ஆபிரகாம் ஒய்வுநாள் பிரமாணத்தை ஆசரித்தாரா?
ஆதி 18:19 கர்த்தர் ஆபிரகாமுக்குச் சொன்னதை நிறைவேற்றும்படியாய் அவன் தன் பிள்ளைகளுக்கும், தனக்குப் பின்வரும் தன் வீட்டாருக்கும்: நீங்கள் நீதியையும் நியாயத்தையும் செய்து, கர்த்தருடைய வழியைக் காத்து நடவுங்கள் என்று கட்டளையிடுவான் என்பதை அறிந்திருக்கிறேன் என்றார்.

இங்கே சொல்லக்கூடிய நீதி நியாயம் கர்த்தருடைய வழி இது ஒய்வுநாள் பிரமாணம் என்று அவர்கள் சொல்லுகிறார்கள்

 அப்படி என்றால் வேத வாக்கியத்தில் நீதி நியாயம் கர்த்தருடைய வழி என்ற வார்த்தை வந்தால் எல்லாம் ஓய்வுநாளை குறித்தா பேசுகிறது?

ஆபிரகாமுக்கு சொன்ன இந்த வேத வாக்கியம் ஒய்வுநாள் பிரமாணத்தை பற்றி தான் பேசுகிறது என்பதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது?

கீழே உள்ள வேத வாக்கியத்தை கவனியுங்கள்

ஆபிராகம் தன் பிள்ளைகளுக்கும் தன் வீட்டாருக்கும் என்ன கட்டளையிட்டார்?
1) நீதியையும் நியாயத்தையும் செய்யுங்கள்
2) கர்த்தருடைய வழியை காத்து நடவுங்கள்

இதற்கும் ஒய்வுநாளுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது?

ஒய்வுநாள் பிரமாணத்தைக் குறித்து தேவன் ஆபிரகாமுக்கு போதித்தார் என்பதை வசன ஆதாரத்தோடு இவர்களால் காண்பிக்க முடியாது 

சுமார் 2500 வருஷங்களை உள்ளடக்கிய ஆதியாகம புஸ்தகத்தில் எந்த ஒரு பரிசுத்தவான்களும் (ஆபேல் முதற்கொண்டு யோசேப்பு வரை) ஒய்வு நாள் ஆசரித்ததாக எந்த ஒரு வேத வாக்கியமும் போதிக்கவில்லை

அப்படி இருக்கும் என்றால் ஆதியாகம புத்தகத்தில் இரண்டு மூன்று வசனங்களை ஆதாரமாக காண்பியுங்கள்

சுமார் 1500 வருஷங்களை உள்ளடக்கிய யாத்திராகமம் முதல் மல்கியா வரை சுமார் 50 வசனங்களுக்கு மேல் இஸ்ரவேல் ஜனங்களுக்கு தான் அந்த ஒய்வுநாள் பிரமாணத்தை கொடுத்தார் என்பதை பட்டியல் இட்டு காட்ட முடியும் 

இந்த ஓய்வு நாள் ஆசரிப்பு வருகை சபையார் தேவனுடைய வார்த்தைகளை கூட்டி தங்கள் சொந்த கற்பனைகளை உபதேசங்களாக போதித்து வருகிறார்கள் 

இவர்கள் தங்களுடைய சொந்த யூகங்களை போதித்து ஆராதனை செய்கிறபடியால் இவர்கள் செய்யக்கூடிய ஆராதனை வீணான ஆராதனையாக தான் இருக்கிறது

இவர்களுடைய உபதேசங்கள் எல்லாம் எழுதப்பட்டதற்கு மிஞ்சி தான் இருக்கும்
1கொரி 4:6 சகோதரரே, எழுதப்பட்டதற்கு மிஞ்சி எண்ணவேண்டாமென்று நீங்கள் எங்களாலே கற்றுக்கொள்ளவும், ,,,, 
மத் 5:37 உள்ளதை உள்ளதென்றும், இல்லதை இல்லதென்றும் சொல்லுங்கள் இதற்கு மிஞ்சினது தீமையினால் உண்டாயிருக்கும்.
யாக் 5:12 ,,, நீங்கள் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படாதபடிக்கு உள்ளதை உள்ளதென்றும், இல்லதை இல்லதென்றும் சொல்லக்கடவீர்கள்.

கர்த்தருக்கு சித்தமானால் இன்னும் ஓய்வு நாள் பிரமாணத்தை குறித்து தொடர்ந்து கற்றுக் கொள்வோம் 

நீங்கள் ஈரோட்டில் இருந்தால் ஜெபிக்கவும் தேவனுடைய சத்தியங்களை இலவசமாகவும் உங்கள் வீடுகளில் கற்றுக்கொள்ள எங்களை அழைக்கவும்

Preacher: Bro Ariyel Barnabas
Church Of Christ
Erode
Call-9025776966

தேவனுடைய சத்தியங்களை தொடர்ந்து வாட்ஸ் ஆப் ல் பெற 9025776966 என்ற இந்த எண்ணுக்கு குறுந் தகவல் அனுப்பவும்

No comments:

Post a Comment