Monday, 13 April 2015

666 (அறுநூற்றறுபத்தாறு) என்ன என்பது உங்களுக்கு தெரியுமா?




666 (அறுநூற்றறுபத்தாறு) என்ன என்பது உங்களுக்கு தெரியுமா?

Rev 13:18 இதிலே ஞானம் விளங்கும்; அந்த மிருகத்தின் இலக்கத்தைப் புத்தியுடையவன் கணக்குப்பார்க்கக் கடவன்; அது மனுஷனுடைய இலக்கமாயிருக்கிறது; அதினுடைய இலக்கம் அறுநூற்றறுபத்தாறு.

  • இந்த 666 என்ற இந்த எண்ணை வைத்து பல ஆண்டுகளாக அநேகர் அநேக விளக்கங்களை கொடுத்து இருக்கிறார்கள். இப்போதும் கொடுக்கிறார்கள். இனி வருகிற நாட்களிலும் கொடுப்பார்கள்

சுமார் இரண்டாயிரம் வருடங்களாக இந்த எண்ணுக்கு அநேகர் விளக்கம் கொடுத்து ஏமாந்து தான் போயிருக்கிறார்கள்

உங்களுக்கு ஒரு உண்மை நிச்சயமாக விளங்கி இருக்கும் இது நாள் வரையும் யாரும் இந்த எண்ணுக்கு(666) சரியான அர்த்தத்தை கொடுத்து இருக்கமாட்டார்கள். உங்களுடைய மனச்சாட்சிக்கு  இது நிச்சயம் தெரியும். உண்மை தானே?

இந்த எண்(666) அந்திகிறிஸ்து எண் என்று சொல்லி அநேகருடைய விசுவாசத்தை கவிழ்த்து இருக்கிறார்கள். கொஞ்சம் சிந்தித்து பாருங்கள் இந்த வெளிப்படுத்தின விசேஷத்தில் எந்த ஒரு இடத்திலாவது அந்தி கிறிஸ்து என்ற பெயர் வந்து இருக்கிறதா?

இவர்கள் இந்த எண்ணோடு(666) அந்தி கிறிஸ்து என்ற வார்த்தையை சேர்த்து போதிக்கும் போது அவர்கள் என்ன செய்கிறார்கள். தேவனுடைய வசனத்தோடு இவர்களுடைய சொந்த வார்த்தையை கூட்டுகிறார்கள். அப்படியென்றால் அவர்கள் தங்களுடைய செயல்களில் நீதியுள்ளவர்களா?  
அப்படியென்றால் இதற்கு முன்பு இந்த எண்ணுக்கு தவறான விளக்கத்தை கொடுத்தவர்களின் கதி என்னவாயிருக்கும் என்று யோசித்து இருக்கிறீர்களா?
Rev 22:18 இந்தப் புஸ்தகத்திலுள்ள தீர்க்கதரிசன வசனங்களைக் கேட்கிற யாவருக்கும் நான் சாட்சியாக எச்சரிக்கிறதாவது: ஒருவன் இவைகளோடே எதையாகிலும் கூட்டினால், இந்தப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிற வாதைகளை தேவன் அவன்மேல் கூட்டுவார்.
Rev 22:19 ஒருவன் இந்தத் தீர்க்கதரிசன புஸ்தகத்தின் வசனங்களிலிருந்து எதையாகிலும் எடுத்துப்போட்டால், ஜீவபுஸ்தகத்திலிருந்தும், பரிசுத்த நகரத்திலிருந்தும், இந்தப் புஸ்தகத்தில் எழுதப்பட்டவைகளிலிருந்தும், அவனுடைய பங்கை தேவன் எடுத்துப்போடுவார்.

இந்த பரிசுத்த ஆவியானவரின் எச்சரிப்பின் படி முதலாவது தேவனுடைய ஆசீர்வாதமான பங்கையும் இழந்து போய் இருப்பார்கள்  இரண்டாவது தேவன் அவர்கள் மேல் வாதைகளை கூட்டி இருப்பார்

அநேகர் இப்படி விவாதிக்கிறார்கள் அந்த மிருகத்தின் இலக்கத்தைப் புத்தியுடையவன் கணக்குப்பார்க்கக் கடவன் என்று தேவன் சொல்லியிருக்கிறார். ஆகையால் நாம் அதை கணக்கு பார்க்க வேண்டும் என்று சொல்லுகிறார்கள்

நீங்கள் அந்த எண்ணை(666) கணக்கு பார்க்கிறீர்கள் அதை பார்த்த முடித்தவுடன் அது சரியென்று உங்களுக்கு எப்படி தெரியும்? உங்களுடைய கணக்கு தவறாக கூடிய பட்சத்தில் என்னவாகும் என்பது உங்களுக்கு தெரியுமா? நித்திய ஜீவனையும் தேவன் கொடுக்கக்கூடிய நித்திய பங்கையும் இழந்து போவீர்கள்

நம்முடைய நினைவுகளுக்கும் தேவனுடைய நினைவுகளுக்கும் உள்ள வித்தியாசத்தை பாருங்கள்
Isa 55:8 என் நினைவுகள் உங்கள் நினைவுகள் அல்ல; உங்கள் வழிகள் என் வழிகளும் அல்லவென்று கர்த்தர் சொல்லுகிறார்.
Isa 55:9 பூமியைப்பார்க்கிலும் வானங்கள் எப்படி உயர்ந்திருக்கிறதோ, அப்படியே உங்கள் வழிகளைப்பார்க்கிலும் என் வழிகளும், உங்கள் நினைவுகளைப்பார்க்கிலும் என் நினைவுகளும் உயர்ந்திருக்கிறது.

அப்படியென்றால் 666 என்ற எண்ணுக்கு அர்த்தம் தான் என்ன?
Deu 29:29 மறைவானவைகள் நம்முடைய தேவனாகிய கர்த்தருக்கே உரியவைகள்; வெளிப்படுத்தப்பட்டவைகளோ, .............நமக்கும் நம்முடைய பிள்ளைகளுக்கும் என்றென்றைக்கும் உரியவைகள்.

நீங்கள் இந்த எண்ணை குறித்து சுய விளக்கம் கொடுக்கக்கூடிய நபர்களுக்கு எச்சரிக்கையாய் இருங்கள். ஏனெனில் இவர்கள் காணாதவைகளில் துணிவாய் நுழைந்து உங்கள் பந்தய பொருளை இழந்து போகும்படி உங்களை வஞ்சிப்பார்கள்
Col 2:19 ,,,,,,,,,,,,,காணாதவைகளிலே துணிவாய் நுழைந்து, தன் மாம்சசிந்தையினாலே வீணாய் இறுமாப்புக்கொண்டிருக்கிற எவனும் உங்கள் பந்தயப்பொருளை நீங்கள் இழந்துபோகும்படி உங்களை வஞ்சியாதிருக்கப்பாருங்கள்.










No comments:

Post a Comment