யேகோவா சாட்சிக்காரரர்களுக்கு எச்சரிக்கையாய் இருங்கள்
யேகோவா சாட்சிக்காரரர்கள் உலகமெங்கும் கோடிக்காணக்கான ஜனங்கள் பரம்பி
இருக்கிறார்கள்
இவர்கள் காவற்கோபுரம் என்ற கைப்பிரதி மூலம் தான் ஜனங்களை
சந்திப்பார்கள்
தாங்கள் யேகோவாவுக்கு சாட்சிகள் என்று சொல்லிக் கொள்ளுவார்கள்
பெரும் பாலும் பெண்கள் தான் இந்த பணியில் ஈடுப்படுத்தப்படுவார்கள்
இவர்களுடைய சில போதனைகள்
1) யேகோவா தேவன் மட்டும் தான் இருக்கிறார் என்பார்கள்
2) இயேசு கிறிஸ்து சிருஷ்டிக்கப்பட்டவர் என்பார்கள்
3) பரதீசு மற்றும் அக்கினி கடல்(நரகம்) போன்றவற்றை விசுவாசிக்க
மாட்டார்கள்
4) மனிதன் மரித்து போய் விட்டான் என்றால் அவன் தேவனுடைய நினைவுகளில்
இருக்கிறான் என்பார்கள்
5) இயேசு கிறிஸ்து வருகையின் போது தேவனுடைய நினைவுகளில் அவன்
இருக்கிறபடியால் அவனை உயிர்த்தெழ வைப்பார் என்பார்கள்
6) இவர்களுடைய பெரும்பாலான போதனைகள் பூமியில் ஆயிரம் வருடம் அரசாட்சி
செய்வதைப் பற்றித்தான் இருக்கும் அதைப்பற்றி தங்கள் காவற்கோபுர கைப்பிரதிகளில் அதிமாக
எழுதுவார்கள்
இப்படி
அநேக போதனைகளை இவர்கள் போதித்து ஜனங்களை தங்கள் வசப்படுத்துவார்கள்
2Ti 3:7 எப்போதும் கற்றாலும் ஒருபோதும் சத்தியத்தை அறிந்து உணராதவர்களாயிருக்கிற பெண்பிள்ளைகளுடைய வீடுகளில் இப்படிப்பட்டவர்கள் நுழைந்து, அவர்களை வசப்படுத்திக்கொள்ளுகிறார்கள்.
முதலில் இவர்கள் யேகோவாவுக்கு எப்படி சாட்சிகளாக இருக்க முடியும்
என்று பார்ப்போம்?
சாட்சி என்றால் என்னவென்று நம்முடைய புதிய ஏற்பாட்டு தெளிவாக
சொல்லுகிறது
1Jo 1:1 ஆதிமுதல் இருந்ததும், நாங்கள் கேட்டதும், எங்கள் கண்களினாலே கண்டதும், நாங்கள் நோக்கிப்பார்த்ததும், எங்கள் கைகளினாலே தொட்டதுமாயிருக்கிற ஜீவவார்த்தையைக்குறித்து உங்களுக்கு அறிவிக்கிறோம்.
1Jo 1:2 அந்த ஜீவன் வெளிப்பட்டது; பிதாவினிடத்திலிருந்ததும், எங்களுக்கு வெளிப்பட்டதுமான நித்தியமாயிருக்கிற அந்த ஜீவனை நாங்கள் கண்டு, அதைக்குறித்துச் சாட்சிகொடுத்து, அதை உங்களுக்கு அறிவிக்கிறோம்.
1Jo 1:3 நீங்களும் எங்களோடே ஐக்கியமுள்ளவர்களாகும்படி, நாங்கள் கண்டும் கேட்டும் இருக்கிறதை உங்களுக்கும் அறிவிக்கிறோம்; எங்களுடைய ஐக்கியம் பிதாவோடும் அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவோடும் இருக்கிறது.
சாட்சிக்கு தேவன் கொடுக்கும் அர்த்தம் இது
தான்
1) கேட்டு இருக்க வேண்டும்
2) கண்களினால் கண்டு இருக்க வேண்டும்
3) நோக்கி பார்த்து இருக்க வேண்டும்
4) கைகளினால் தொட்டு இருக்க வேண்டும்
5) கண்டும் கேட்டும் இருக்க வேண்டும்
ஒருவர் யார் ஒருவரைப் பற்றி சாட்சி கொடுக்க
வேண்டும் என்றால் இந்த தகுதிகள் இருக்க வேண்டும்
யேகோவா தேவனுக்கு சாட்சிகளாய் இருப்பதற்கு
இவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது?
யேகோவா தேவனை யாராவது பார்த்து
இருக்கிறார்களா?
இயேசு கிறிஸ்துவை தவிர யார் ஒருவரும்
யேகோவா தேவனை கண்டதில்லை
எந்த ஒரு
சத்தியமும் இரண்டு அல்லது மூன்று சாட்சிகளின் வாக்கினாலே நிலைவரப்படும் என்று
நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து சொல்லியிருக்கிறார்
Mat
18:16 அவன் செவிகொடாமற்போனால், இரண்டு மூன்று சாட்சிகளுடைய வாக்கினாலே சங்கதிகளெல்லாம் நிலைவரப்படும்படி, இரண்டொருவரை உன்னுடனே கூட்டிக்கொண்டு போ.
இன்றைக்கு எந்த ஒரு மனிதனும் தேவனை தரிசிக்க முடியுமா என்று
மூன்று சாட்சிகளின் வாக்கினால் பரிசுத்த ஆவியானவரால் ஏவப்பட்ட வேத வாக்கியத்தின்
வசனங்களோடு கற்றுக் கொள்ளுவோம்
முதல் சாட்சி;
நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து
Joh 1:18
தேவனை ஒருவனும் ஒருக்காலுங் கண்டதில்லை, பிதாவின் மடியிலிருக்கிற ஒரேபேறான குமாரனே அவரை வெளிப்படுத்தினார்.
Joh 5:37
என்னை அனுப்பின பிதா தாமே என்னைக்குறித்துச் சாட்சி கொடுத்திருக்கிறார்; நீங்கள் ஒருக்காலும் அவர் சத்தத்தைக் கேட்டதுமில்லை, அவர் ரூபத்தைக் கண்டதுமில்லை.
Joh 6:46 தேவனிடத்தினின்று வந்தவரே தவிர வேறொருவரும் பிதாவைக் கண்டதில்லை, இவரே பிதாவைக் கண்டவர்.
இயேசு கிறிஸ்து இந்த பூமியில் இருந்த போது எந்த மனுஷனும் யேகோவா தேவனை
தரிசித்தது இல்லை என்கிறார்
எந்த மனுஷனும் பிதாவாகிய யேகோவா தேவனை தரிசித்தது இல்லை என்று நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து கொடுத்த
சாட்சிகள் தான் இது
இரண்டாவது சாட்சி: கிறிஸ்துவின் அப்போஸ்தலனாகிய பவுலுடைய சாட்சியை
கவனியுங்கள்
1Ti 1:17
நித்தியமும் அழிவில்லாமையும் அதரிசனமுமுள்ள ராஜனுமாய், தாம் ஒருவரே ஞானமுள்ள தேவனுமாயிருக்கிறவருக்கு, கனமும் மகிமையும் சதாகாலங்களிலும் உண்டாயிருப்பதாக. ஆமென்.
1Ti 6:15
அந்தப் பிரசன்னமாகுதலைத் தேவன் தம்முடைய காலங்களில் வெளிப்படுத்துவார். அவரே நித்தியானந்தமுள்ள ஏக சக்கராதிபதியும், ராஜாதி ராஜாவும், கர்த்தாதி கர்த்தாவும்,
1Ti 6:16
ஒருவராய், சாவாமையுள்ளவரும், சேரக்கூடாத ஒளியில் வாசம்பண்ணுகிறவரும், மனுஷரில் ஒருவரும் கண்டிராதவரும், காணக்கூடாதவருமாயிருக்கிறவர்; அவருக்கே கனமும் நித்திய வல்லமையும் உண்டாயிருப்பதாக. ஆமென்.
அப்போஸ்தலனாகிய
பவுல் எந்தவொரு மனிதனும் யெகோவா தேவனை தரிசித்தது இல்லை என்கிறார்
மூன்றாவது சாட்சி: கிறிஸ்துவின் அப்போஸ்தலனாகிய யோவானுடைய சாட்சியை
கவனியுங்கள்
1Jo 4:12
தேவனை ஒருவரும் ஒருபோதும் கண்டதில்லை; நாம் ஒருவரிடத்தில் ஒருவர் அன்புகூர்ந்தால் தேவன் நமக்குள் நிலைத்திருக்கிறார்; அவருடைய அன்பும் நமக்குள் பூரணப்படும்.
அப்போஸ்தலனாகிய யோவான் யேகோவா தேவனை ஒருவரும் ஒரு போதும் கண்டதில்லை
என்கிறார்
இயேசு கிறிஸ்து தவிர எந்த ஒரு மனிதனும் யேகோவா தேவனை தரிசித்து இல்லை என்று
வேத வாக்கியம் நமக்கு தெளிவாக போதிக்கும் போது இதில் எந்தவொரு தகுதியும் இல்லாத
இவர்கள் எப்படி யெகோவாவுக்கு சாட்சிகளாய் இருக்க முடியும்
யெகோவாவுக்கு சாட்சிகள் என்ற இந்த பெயரே மிகப்பெரிய கள்ள உபதேசமாக
இருக்கிறது
இவர்களுக்கு மிகவும் எச்சரிக்கையாக இருங்கள்
2Jo 1:9 கிறிஸ்துவின் உபதேசத்திலே நிலைத்திராமல் மீறி நடக்கிற எவனும் தேவனை உடையவனல்ல; கிறிஸ்துவின் உபதேசத்தில் நிலைத்திருக்கிறவனோ பிதாவையும் குமாரனையும் உடையவன்.
2Jo 1:10 ஒருவன் உங்களிடத்தில் வந்து இந்த உபதேசத்தைக் கொண்டுவராமலிருந்தால், அவனை உங்கள் வீட்டிலே ஏற்றுக்கொள்ளாமலும், அவனுக்கு வாழ்த்துதல் சொல்லாமலும் இருங்கள்.
2Jo 1:11 அவனுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறவன் அவனுடைய துர்க்கிரியைகளுக்கும் பங்குள்ளவனாகிறான்.
No comments:
Post a Comment