Monday, 13 April 2015

யார் அந்த மிருகம்?



யார் அந்த மிருகம்?

ஒரு சிலர் அந்த மிருகம் யார் என்று கேள்வி எழுப்பி இருந்தார்கள் அவர்களுக்காக இந்த பதிவு, ஒருவேளை சில காரியங்களை நான் மேற்கோள் காண்பிக்கும் போது இருக்கலாம் என்று தான் பயன்படுத்தி இருக்கிறேன் என்பதை கவனியுங்கள்

1) வெளிப்படுத்தின விசேஷத்தில் வரக்கூடிய மிருகம் என்ற வார்த்தையை முதன் முதலில் இங்கு தான் வருகிறது
Rev 11:7 அவர்கள் தங்கள் சாட்சியைச் சொல்லி முடித்திருக்கும்போது, பாதாளத்திலிருந்தேறுகிற மிருகம் அவர்களோடே யுத்தம்பண்ணி, அவர்களை ஜெயித்து, அவர்களைக் கொன்றுபோடும்.

இந்த மிருகம் பாதாளத்திலிருந்து ஏறிவருகிறது என்றால் அது ஏறிவருகிறதற்கு அனுமதி கொடுக்கிறவர் யார்?
Rev 1:18 மரித்தேன், ஆனாலும், இதோ, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன், ஆமென்; நான் மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை உடையவராயிருக்கிறேன்.

நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினிடத்தில் தான் பாதாளத்திற்குமுரிய திறவுகோல் இருக்கிறது

அந்த திறவுகோலை கிறிஸ்து பயன்படுத்துகிறாரா?
Rev 20:1 ஒரு தூதன் பாதாளத்தின் திறவுகோலையும் பெரிய சங்கிலியையும் தன் கையிலே பிடித்துக்கொண்டு வானத்திலிருந்திறங்கி வரக்கண்டேன்.
Rev 20:2 பிசாசென்றும் சாத்தானென்றும் சொல்லப்பட்ட பழைய பாம்பாகிய வலுசர்ப்பத்தை அவன் பிடித்து, அதை ஆயிரம் வருஷமளவுங் கட்டிவைத்து, அந்த ஆயிரம் வருஷம் நிறைவேறும்வரைக்கும் அது ஜனங்களை மோசம்போக்காதபடிக்கு அதைப் பாதாளத்திலே தள்ளியடைத்து, அதின்மேல் முத்திரைபோட்டான்.


2) இங்கே சொல்லக்கூடிய மிருகம் எங்கே இருந்து வருகிறது என்று பாருங்கள்
Rev 13:1 பின்பு நான் கடற்கரை மணலின்மேல் நின்றேன். அப்பொழுது சமுத்திரத்திலிருந்து ஒரு மிருகம் எழும்பிவரக் கண்டேன்; அதற்கு ஏழு தலைகளும் பத்துக் கொம்புகளும் இருந்தன; அதின் கொம்புகளின்மேல் பத்து முடிகளும், அதின் தலைகளின்மேல் தூஷணமான நாமமும் இருந்தன.

இந்த மிருகம் சமுத்திரத்திலிருந்து எழும்பி வருகிறது

அந்த மிருகத்திற்கு பலத்தையும் அதிகாரத்தையும் கொடுத்தது யார்?
Rev 13:2 ..... வலுசர்ப்பமானது தன் பலத்தையும் தன் சிங்காசனத்தையும் மிகுந்த அதிகாரத்தையும் அதற்குக் கொடுத்தது.

வலு சர்ப்பம்(சாத்தான்) தான் அதற்கு அதிகாரத்தையும் பலத்தையும் கொடுக்கிறது

பூமியிலுள்ள ஜனங்கள் வலுசர்ப்பத்தையும் மிருகத்தையும் வணங்கினார்கள்
Rev 13:4 அந்த மிருகத்திற்கு அப்படிப்பட்ட அதிகாரங்கொடுத்த வலுசர்ப்பத்தை வணங்கினார்கள். அல்லாமலும்: மிருகத்திற்கு ஒப்பானவன் யார்? அதினோடே யுத்தம்பண்ணத்தக்கவன் யார்? என்று சொல்லி, மிருகத்தையும் வணங்கினார்கள்.

பரிசுத்தவான்களை அவர்களிடத்தில் தேவன் ஏன் ஒப்புக் கொடுத்தார்?
Rev 13:10 ... பரிசுத்தவான்களுடைய பொறுமையும் விசுவாசமும் இதிலே விளங்கும்.

3) வேறொரு மிருகம் எங்கே இருந்து வருகிறது?
Rev 13:11 பின்பு, வேறொரு மிருகம் பூமியிலிருந்து எழும்பக் கண்டேன்; அது ஒரு ஆட்டுக்குட்டிக்கு ஒப்பாக இரண்டு கொம்புகளையுடையதாயிருந்து, வலுசர்ப்பத்தைப்போலப் பேசினது.

இந்த மிருகம் ஒரு ஆட்டுக்குட்டிக்கு ஒப்பாக இரண்டு கொம்புகளையுடையதாயிருந்து
ஆனால் வலுசர்ப்பத்தைப் போலப் பேசினது

ஒருவேளை இது ஆட்டுத்தோலை போர்த்து கொண்டு இருக்கும் ஓநாயாக இருக்கலாம்
அதாவது கிறிஸ்துவின் நாமத்தை தரித்து கொண்டு இருக்கும் கள்ள போதனைகளை போதிக்கும் கள்ளபோதகர்களாக இருக்கலாம்

ஆட்டுக்குட்டிக்கு ஒப்பாக இருந்த இந்த மிருகம் என்ன செய்தது என்று பாருங்கள்
Rev 13:12 அது முந்தின மிருகத்தின் அதிகாரம் முழுவதையும் அதின் முன்பாக நடப்பித்து, சாவுக்கேதுவான காயம் ஆறச் சொஸ்தமடைந்த முந்தின மிருகத்தைப் பூமியும் அதின் குடிகளும் வணங்கும்படி செய்தது.
Rev 13:13 அன்றியும், அது மனுஷருக்கு முன்பாக வானத்திலிருந்து பூமியின்மேல் அக்கினியை இறங்கப்பண்ணத்தக்கதாகப் பெரிய அற்புதங்களை நடப்பித்து,

மிருகத்திற்கு ஒரு சொரூபம் பண்ண வேண்டும் என்று அந்த ஆட்டுக்குட்டி ஒப்பான மிருகம் போதித்தது
Rev 13:14 மிருகத்தின்முன்பாக அந்த அற்புதங்களைச் செய்யும்படி தனக்குக் கொடுக்கப்பட்ட சத்துவத்தினாலே பூமியின் குடிகளை மோசம்போக்கி, பட்டயத்தினாலே காயப்பட்டுப் பிழைத்த மிருகத்திற்கு ஒரு சொரூபம் பண்ணவேண்டுமென்று பூமியின் குடிகளுக்குச் சொல்லிற்று.

அந்த சொரூபம் என்பது கள்ளபோதகர்களால் ஏற்படுத்தப்பட்ட அந்த பிரசித்தப்பெற்ற சபையாக இருக்கலாம்

அந்த மிருகத்தின் சொரூபம் அநேகரை கொன்று போட்டது
Rev 13:15 மேலும் அம்மிருகத்தின் சொரூபம் பேசத்தக்கதாகவும், மிருகத்தின் சொரூபத்தை வணங்காத யாவரையும் கொலைசெய்யத்தக்கதாகவும், மிருகத்தின் சொரூபத்திற்கு ஆவியைக் கொடுக்கும்படி அதற்குச் சத்துவங்கொடுக்கப்பட்டது.
Rev 13:16 அது சிறியோர், பெரியோர், ஐசுவரியவான்கள், தரித்திரர், சுயாதீனர், அடிமைகள், இவர்கள் யாவரும் தங்கள் தங்கள் வலதுகைகளிலாவது நெற்றிகளிலாவது ஒரு முத்திரையைப் பெறும்படிக்கும்,
Rev 13:17 அந்த மிருகத்தின் முத்திரையையாவது அதின் நாமத்தையாவது அதின் நாமத்தின் இலக்கத்தையாவது தரித்துக்கொள்ளுகிறவன் தவிர வேறொருவனும் கொள்ளவும் விற்கவுங் கூடாதபடிக்கும் செய்தது.

கி,பி 1200க்கு மேல் அந்த பிரசித்தபெற்ற சபை இராணுவத்தை வைத்துக் கொண்டு தங்கள் உபதேசங்களையும் மத தலைவரையும் ஏற்றுக் கொள்ளாத அநேக உண்மையுள்ள கிறிஸ்தவர்களை  கொன்று போட்டார்கள், விசுவாச துரோகம் இவர்கள் மூலமாக ஆரம்பித்தது அது எந்த சபை என்பது உங்களுக்கே தெரியும்

1) வலுசர்ப்பம் – சாத்தான்
2) மிருகம் – கிறிஸ்தவர்களை துன்பப்படுத்தின ரோம சாம்ராஜ்யமாக இருக்கலாம்
3) ஆட்டுக்குட்டிக்கு ஒப்பான மிருகம், சொரூபம் -கள்ள தீர்க்கதரிசிகளையுடைய அந்த பிரசித்தபெற்ற சபையாக இருக்கலாம்

Rev 13:18 இதிலே ஞானம் விளங்கும்; அந்த மிருகத்தின் இலக்கத்தைப் புத்தியுடையவன் கணக்குப்பார்க்கக் கடவன்; அது மனுஷனுடைய இலக்கமாயிருக்கிறது; அதினுடைய இலக்கம் அறுநூற்றறுபத்தாறு.

நம்முடைய பரிசுத்த வேதாகமத்தில் 7 என்ற எண் பூரணத்தை குறிப்பதற்காக பயன்படுத்தப்பட்டு இருக்கிறது

6 என்ற எண் தீமையை குறிப்பதற்கு பயன்படுத்தப்பட்டு இருக்கலாம்
6 தீமை -  வலுசர்ப்பம் (சாத்தான்)
6 தீமை – மிருகம் (ரோம சாம்ராஜ்யம் இருக்கலாம்)
6 தீமை – சொரூபம் (ஆட்டுக்குட்டிக்கு ஒப்பான மிருகம்) கள்ளபோதகர்கள், ரோம சாம்ராஜ்யத்தால் ஏற்படுத்தப்பட்ட சபையாக இருக்கலாம்

Rev 16:13 அப்பொழுது, வலுசர்ப்பத்தின் வாயிலும் மிருகத்தின் வாயிலும் கள்ளத்தீர்க்கதரிசியின் வாயிலுமிருந்து தவளைகளுக்கு ஒப்பான மூன்று அசுத்த ஆவிகள் புறப்பட்டுவரக் கண்டேன்.

இவர்கள் அக்கினி கடலிலே தள்ளப்பட்டார்கள்
Rev 19:20 அப்பொழுது மிருகம் பிடிக்கப்பட்டது; மிருகத்தின் முன்பாகச் செய்த அற்புதங்களால் அதின் முத்திரையைத் தரித்தவர்களையும் அதின் சொரூபத்தை வணங்கினவர்களையும் மோசம்போக்கின கள்ளத்தீர்க்கதரிசியுங்கூடப் பிடிக்கப்பட்டான்; இருவரும் கந்தகம் எரிகிற அக்கினிக்கடலிலே உயிரோடே தள்ளப்பட்டார்கள்.
Rev 20:10 மேலும் அவர்களை மோசம்போக்கின பிசாசானவன், மிருகமும் கள்ளத்தீர்க்கதரிசியுமிருக்கிற இடமாகிய அக்கினியும் கந்தகமுமான கடலிலே தள்ளப்பட்டான். அவர்கள் இரவும் பகலும் சதாகாலங்களிலும் வாதிக்கப்படுவார்கள்.

                    

No comments:

Post a Comment