யெகோவா சாட்சிக்காரர்கள் இயேசு கிறிஸ்து சிருஷ்டிக்கப்பட்டவர்
என்பதற்கு கீழ்கண்ட வசனத்தை கொடுக்கிறார்கள்
Pro 8:22 கர்த்தர் தமது கிரியைகளுக்குமுன் பூர்வமுதல் என்னைத் தமது வழியின் ஆதியாகக் கொண்டிருந்தார்.
Pro 8:23 பூமி உண்டாகுமுன்னும், ஆதிமுதற்கொண்டும் அநாதியாய் நான் அபிஷேகம் பண்ணப்பட்டேன்.
Pro 8:24 ஆழங்களும், ஜலம் புரண்டுவரும் ஊற்றுகளும் உண்டாகுமுன்னே நான் ஜநிப்பிக்கப்பட்டேன்.
Pro 8:25 மலைகள் நிலைபெறுவதற்கு முன்னும், குன்றுகள் உண்டாவதற்கு முன்னும்,
Pro 8:26 அவர் பூமியையும் அதின் வெளிகளையும், பூமியிலுள்ள மண்ணின் திரள்களையும் உண்டாக்குமுன்னும் நான் ஜநிப்பிக்கப்பட்டேன்
Pro 8:27 அவர் வானங்களைப் படைக்கையில் நான் அங்கே இருந்தேன்; அவர் சமுத்திர விலாசத்தை வட்டணிக்கையிலும்,
Pro 8:28 உயரத்தில் மேகங்களை ஸ்தாபித்து, சமுத்திரத்தின் ஊற்றுகளை அடைத்து வைக்கையிலும்,
Pro 8:29 சமுத்திர ஜலம் தன் கரையை விட்டு மீறாதபடிக்கு அதற்கு எல்லையைக் கட்டளையிட்டு, பூமியின் அஸ்திபாரங்களை நிலைப்படுத்துகையிலும்,
Pro 8:30 நான் அவர் அருகே செல்லப்பிள்ளையாயிருந்தேன்; நித்தம் அவருடைய மனமகிழ்ச்சியாயிருந்து, எப்பொழுதும் அவர் சமுகத்தில் களிகூர்ந்தேன்.
Pro 8:31 அவருடைய பூவுலகத்தில் சந்தோஷப்பட்டு, மனுமக்களுடனே மகிழ்ந்து கொண்டிருந்தேன்.
மேற் காண்பித்த வசனத்தைத்தான் அவர்கள்
இயேசு கிறிஸ்து சிருஷ்டிக்கப்பட்டவர் என்பதற்கு ஆதாரமாக சொல்லுகிறார்கள்
ஆனால் இந்த வேத வாக்கியத்தில் ஞானம்
தன்னைப்பற்றி பேசுவதைப் போல் நீதிமொழி ஆசிரியரைக் கொண்டு தேவன் ஏவியிருக்கிறார்
Pro 8:1 ஞானம் கூப்பிடுகிறதில்லையோ? புத்தி சத்தமிடுகிறதில்லையோ?
Pro 8:2 அது வழியருகேயுள்ள மேடைகளிலும், நாற்சந்திகளிலும் நிற்கிறது.
Pro 8:3 அது ஊர்வாசல்களின் ஓரத்திலும், பட்டணத்தின் முகப்பிலும், நடை கூடங்களிலும் நின்று சத்தமிட்டு:
Pro 8:4 மனுஷரே, உங்களை நோக்கிக் கூப்பிடுகிறேன்; என் சத்தம் மனுபுத்திரருக்குத் தொனிக்கும்.
இந்த வேத வாக்கியத்திற்கும் இயேசு கிறிஸ்து
சிருஷ்டிக்கப்பட்டவர் என்று அவர்கள் சொல்லுவதற்கும் எந்தவொரு சம்பந்தமில்லை
இன்னொரு வசனத்தையும் யெகோவா
சாட்சிக்காரர்கள் பயன்படுத்துகிறார்கள்
தேவன் சிருஷ்டிப்பில் முதலில்
சிருஷ்டிக்கப்பட்டவர் இயேசு கிறிஸ்து தான் என்று இந்த வேத வாக்கியத்தை
பயன்படுத்துகிறார்கள்
Rev 3:14 லவோதிக்கேயா சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: உண்மையும் சத்தியமுமுள்ள சாட்சியும், தேவனுடைய சிருஷ்டிக்கு ஆதியுமாயிருக்கிற ஆமென் என்பவர் சொல்லுகிறதாவது;
தேவனுடைய சிருஷ்டிக்கு ஆதியுமாயிருந்தவர்
இயேசு கிறிஸ்து என்கிறார்கள்
நம்முடைய தமிழ் வேதாகமத்தில் தேவனுடைய
சிருஷ்டிக்கு ஆதியுமாயிருக்கிறவர் என்று இருக்கிறது ஆனால் கிரேக்க வேதாகமத்தில்
தேவனுடைய சிருஷ்டிக்கு மூலக்காரணர் என்று தான் இருக்கிறது
Rev 3:14 (KJV+) And2532
unto the3588 angel32 of the3588 church1577
of the Laodiceans2994 write;1125 These things3592
saith3004 the3588 Amen,281 the3588
faithful4103 and2532 true228 witness,3144
the3588 beginning746 of the3588 creation2937
of God;2316
Rev 3:14(TR) kai
tw aggelw thv ekklhsiav laodikewn grayon tade legei o amhn o martuv o pistov
kai alhqinov h arxh thv ktisewv tou qeou
Rev 3:14: லவோதிக்கேயா சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: உண்மையும் சத்தியமுமுள்ள சாட்சியும், தேவனுடைய சிருஷ்டிக்கு ஆதியுமாயிருக்கிற ஆமென் என்பவர் சொல்லுகிறதாவது;
ஆதியுமாய் என்ற வார்த்தை கிரேக்க எண் 746
G746
ἀρχή
archē
ar-khay'
From G756; (properly abstract) a commencement,
or (concrete) chief
இயேசு
கிறிஸ்து தேவனுடைய சகல சிருஷ்டிப்புக்கும் மூலக்காரணர் என்று தான் இந்த வசனம்
நமக்கு போதிக்கிறது
இயேசு
கிறிஸ்து சிருஷ்டிக்கப்பட்டவர் என்று எந்தவொரு வேதவாக்கியமும் நமக்கு
போதிப்பதில்லை
1) பிதாவாகிய
தேவன் குமாரனாகிய இயேசு கிறிஸ்து மூலம் சகலத்தையும் சிருஷ்டித்து இருக்கிறார்
Joh 1:1 ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது.
Joh 1:2 அவர் ஆதியிலே தேவனோடிருந்தார்.
Joh 1:3 சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை.
2) இயேசு கிறிஸ்து மூலமாய் நாமும்
உண்டாயிருக்கிறோம்
1Co 8:6 பிதாவாகிய ஒரே தேவன் நமக்குண்டு, அவராலே சகலமும் உண்டாயிருக்கிறது; அவருக்கென்று நாமும் உண்டாயிருக்கிறோம். இயேசு கிறிஸ்து என்னும் ஒரே கர்த்தரும் நமக்குண்டு; அவர் மூலமாய்ச் சகலமும் உண்டாயிருக்கிறது, அவர் மூலமாய் நாமும் உண்டாயிருக்கிறோம்.
3) சகலமும் இயேசு கிறிஸ்துவைக் கொண்டும் அவருக்கென்று தான்
சிருஷ்டிக்கப்பட்டுஇருக்கிறது
Col 1:16 ஏனென்றால் அவருக்குள் சகலமும் சிருஷ்டிக்கப்பட்டது; பரலோகத்திலுள்ளவைகளும் பூலோகத்திலுள்ளவைகளுமாகிய காணப்படுகிறவைகளும் காணப்படாதவைகளுமான சகல வஸ்துக்களும், சிங்காசனங்களானாலும், கர்த்தத்துவங்களானாலும், துரைத்தனங்களானாலும், அதிகாரங்களானாலும், சகலமும் அவரைக்கொண்டும் அவருக்கென்றும் சிருஷ்டிக்கப்பட்டது.
4) இயேசு கிறிஸ்து மாத்திரம் நமக்கு வழியும் சத்தியமும் ஜீவனுமாய்
இருக்கிறார்
Joh 14:6 அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; ...
Act 4:12
அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை என்றான்.
5) இயேசு கிறிஸ்து நம்முடைய தேவனும் இரட்சகரும் ராஜாதி ராஜாவும்
கர்த்தாதி கர்த்தாவுமாய் இருக்கிறார்
Tit 2:13 நாம் நம்பியிருக்கிற ஆனந்த பாக்கியத்துக்கும், மகா தேவனும் நமது இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவினுடைய ....
1Co 8:6 ,,, இயேசு கிறிஸ்து என்னும் ஒரே கர்த்தரும் நமக்குண்டு; அவர் மூலமாய்ச் சகலமும் உண்டாயிருக்கிறது, அவர் மூலமாய் நாமும் உண்டாயிருக்கிறோம்.
Rev 17:14 ,,, ஆட்டுக்குட்டியானவர் கர்த்தாதி கர்த்தரும் ராஜாதி ராஜாவுமாயிருக்கிறபடியால் அவர்களை ஜெயிப்பார்,,,
6) இயேசு கிறிஸ்துவையல்லாமல் பிதாவினிடத்தில் ஒருவனும் வரவும் முடியாது
அவரையல்லாமல் நம்மால் ஒன்றும் செய்யவும் முடியாது
Joh 14:6
அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.
Joh 15:5 ,,, என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது.
7) இயேசுவை கிறிஸ்து(அபிஷேகம் பண்ணப்பட்ட ராஜா) என்றும், தேவன்
(சிருஷ்டிக்கர்) என்றும், கர்த்தர் என்றும் விசுவாசித்து அவருக்கு கீழ்ப்படியாத
ஒரு யெகோவா சாட்சிக்காரர்கள் கூட பலனுக்கேதுவான நித்திய ஜீவனை பெறவும் முடியாது
பரலோகம் வரவும் முடியாது
Joh 17:3
ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்.
No comments:
Post a Comment