யேகோவாவுக்கு யார் சாட்சியாக
இருக்க முடியும்?
பூமியில் வாழக்கூடிய எந்தவொரு மனிதனும்(இயேசு கிறிஸ்துவை தவிர)
யேகோவாவைக் கண்டதில்லை
1Ti 6:15 அந்தப் பிரசன்னமாகுதலைத் தேவன் தம்முடைய காலங்களில் வெளிப்படுத்துவார். அவரே நித்தியானந்தமுள்ள ஏக சக்கராதிபதியும், ராஜாதி ராஜாவும், கர்த்தாதி கர்த்தாவும்,
1Ti 6:16 ஒருவராய், சாவாமையுள்ளவரும், சேரக்கூடாத ஒளியில் வாசம்பண்ணுகிறவரும், மனுஷரில் ஒருவரும் கண்டிராதவரும், காணக்கூடாதவருமாயிருக்கிறவர்; அவருக்கே கனமும் நித்திய வல்லமையும் உண்டாயிருப்பதாக. ஆமென்.
புதிய ஏற்பாட்டில் (யெகோவா) தேவன் எப்படி
இருக்கிறார்?
1) நித்தியானந்தமுள்ள ஏக சக்கராதிபதி
2) ராஜாதி ராஜா
3) கர்த்தாதி கர்த்தா
4) ஒருவராய் சாவாமையுள்ளவர்
5) சேரக்கூடாத ஒளியில் வாசம் பண்ணுகிறவர்
6) மனுஷரில் ஒருவரும் கண்டிராதவர்
7) மனுஷரில் ஒருவர் காணக்கூடாதவர்
கண்டிராதவரும் காணக்கூடாதவருமாய் இருக்கிற யெகோவா தேவனைக் குறித்து
யெகோவாவுக்கு நாங்கள் தான் சாட்சிகள் என்று இந்த யெகோவா சாட்சிக்காரர்கள் எப்படி
சொல்ல முடியும்?
யாரும் கண்டிராதவரும் காணக்கூடாதவருமாய் இருக்கிற யெகோவா தேவன்
இருக்கிறார் என்பது நமக்கு எப்படி தெரியும்?
யெகோவா
தேவன் தான் இருக்கிறேன் என்பதை அவருடைய சிருஷ்டிப்புகள் மூலம் நமக்கு உணர்த்தி
இருக்கிறார்
அவருடைய
வல்லமை மற்றும் நித்தியத்துவத்தை அவருடைய சிருஷ்டிப்புகள் மூலம் நமக்கு உணர்த்தி
இருக்கிறார்
Rom 1:19 தேவனைக்குறித்து அறியப்படுவது அவர்களுக்குள்ளே வெளிப்பட்டிருக்கிறது; தேவனே அதை அவர்களுக்கு வெளிப்படுத்தியிருக்கிறார்.
Rom 1:20 எப்படியென்றால், காணப்படாதவைகளாகிய அவருடைய நித்திய வல்லமை தேவத்துவம் என்பவைகள், உண்டாக்கப்பட்டிருக்கிறவைகளினாலே, உலகமுண்டானதுமுதற்கொண்டு, தெளிவாய்க் காணப்படும்; ஆதலால் அவர்கள் போக்குச்சொல்ல இடமில்லை.
உலகம் உண்டானது முதற்கொண்டு தெளிவாய்
நமக்கு வெளிப்படுத்தி இருக்கிறார்
Act 14:16 சென்ற காலங்களில் அவர் சகல ஜனங்களையும் தங்கள் தங்கள் வழிகளிலே நடக்கவிட்டிருந்தும்,
Act 14:17 அவர் நன்மை செய்துவந்து, வானத்திலிருந்து மழைகளையும் செழிப்புள்ள காலங்களையும் நமக்குத் தந்து, ஆகாரத்தினாலும் சந்தோஷத்தினாலும் நம்முடைய இருதயங்களை நிரப்பி, இவ்விதமாய் அவர் தம்மைக்குறித்துச் சாட்சி விளங்கப்பண்ணாதிருந்ததில்லை என்றார்கள்.
யெகோவா தேவன் இருக்கிறார் என்பதற்கு
அவருடைய கிரியைகளே சாட்சியாக இருக்கிறது
1) வானத்திலிருந்து மழைகளை கொடுத்து கொண்டு
இருக்கிறார்
2) செழிப்புள்ள காலங்களை நமக்கு தந்து
கொண்டு இருக்கிறார்
3) ஆகாரத்தினாலும் சந்தோஷத்தினாலும்
நம்முடைய இருதயங்களை நிரப்பி கொண்டு வருகிறார்
யெகோவா தேவன் வானத்தையும் பூமியையும்
சிருஷ்டித்ததின் மூலம் தான் இருக்கிறேன் என்பதை சாட்சியாக அறிவித்து இருக்கிறார்
Act 17:24 உலகத்தையும் அதிலுள்ள யாவற்றையும் உண்டாக்கின தேவனானவர் வானத்திற்கும் பூமிக்கும் ஆண்டவராயிருக்கிறபடியால் கைகளினால் கட்டப்பட்ட கோவில்களில் அவர் வாசம்பண்ணுகிறதில்லை.
யெகோவா தேவன் எல்லா ஜீவன்களுக்கும் சுவாசத்தையும் சகலத்தையும்
கொடுப்பதின் மூலம் தான் இருக்கிறேன் என்பதை சாட்சியாக அறிவித்து இருக்கிறார்
Act 17:25 எல்லாருக்கும் ஜீவனையும் சுவாசத்தையும் சகலத்தையும் கொடுக்கிற அவர், தமக்கு யாதொன்று தேவையானதுபோல, மனுஷர் கைகளால் பணிவிடைகொள்ளுகிறதுமில்லை.
யெகோவா தேவன் சகல ஜனங்களையும் அவர் ஒரே இரத்தத்தினாலே தோன்றப்பண்ணி
பூமியின் மீதெங்கும் குடியிருக்கச் செய்து இருப்பதின் மூலம் தான் இருக்கிறேன்
என்பதை சாட்சியாக அறிவித்து இருக்கிறார்
Act 17:26 மனுஷஜாதியான சகல ஜனங்களையும் அவர் ஒரே இரத்தத்தினாலே தோன்றப்பண்ணி, பூமியின்மீதெங்கும் குடியிருக்கச்செய்து, முன் தீர்மானிக்கப்பட்ட காலங்களையும் அவர்கள் குடியிருப்பின் எல்லைகளையும் குறித்திருக்கிறார்;
இந்த சாட்சியெல்லாம் தேவன்(யெகோவா) ஏன்
நமக்கு கொடுத்து இருக்கிறார்?
Act 17:27 கர்த்தராகிய தம்மை அவர்கள் தடவியாகிலும் கண்டுபிடிக்கத்தக்கதாகத் தம்மைத் தேடும்படிக்கு அப்படிச் செய்தார்; அவர் நம்மில் ஒருவருக்கும் தூரமானவரல்லவே.
பாருங்கள் யெகோவா தேவனைக்குறித்து யாரும்
சாட்சி சொல்ல வேண்டிய அவசியம் இல்லை, ஏனென்றால் இன்றைக்கும் வரைக்கும் அவருடைய சகல
சிருஷ்டிப்புகள் மூலம் சகலத்தையும் அதினதின் காலத்தில் நேர்த்தியாய் நடத்துவதின்
மூலம் அவர் தன்னை வெளிப்படுத்தி கொண்டு இருக்கிறார்
பழைய ஏற்பாட்டில் யெகோவா தேவன் என்று
அழைக்கப்பட்ட தேவனைத் தான் புதிய ஏற்பாட்டில் இயேசு கிறிஸ்து அவரை பிதாவாகிய தேவன்
என்று அவரை நமக்கு வெளிப்படுத்தினார்
Joh 1:18 தேவனை ஒருவனும் ஒருக்காலுங் கண்டதில்லை, பிதாவின் மடியிலிருக்கிற ஒரேபேறான குமாரனே அவரை வெளிப்படுத்தினார்.
Joh 6:46 தேவனிடத்தினின்று வந்தவரே தவிர வேறொருவரும் பிதாவைக் கண்டதில்லை, இவரே பிதாவைக் கண்டவர்.
Joh 20:17 இயேசு அவளை நோக்கி: என்னைத் தொடாதே, நான் இன்னும் என் பிதாவினிடத்திற்கு ஏறிப்போகவில்லை; நீ என் சகோதரரிடத்திற்குப் போய், நான் என் பிதாவினிடத்திற்கும் உங்கள் பிதாவினிடத்திற்கும், என் தேவனிடத்திற்கும் உங்கள் தேவனிடத்திற்கும் ஏறிப்போகிறேன் என்று அவர்களுக்குச் சொல்லு என்றார்.
இயேசு கிறிஸ்துவின் கிரியைகளின் மூலம்
பிதா(யெகோவா) தன்னை வெளிப்படுத்தினார்
Joh 14:8 பிலிப்பு அவரை நோக்கி: ஆண்டவரே, பிதாவை எங்களுக்குக் காண்பியும், அது எங்களுக்குப் போதும் என்றான்.
Joh 14:9 அதற்கு இயேசு: பிலிப்புவே, இவ்வளவுகாலம் நான் உங்களுடனேகூட இருந்தும் நீ என்னை அறியவில்லையா? என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்; அப்படியிருக்க, பிதாவை எங்களுக்குக் காண்பியும் என்று நீ எப்படிச் சொல்லுகிறாய்?
Joh 14:10 நான் பிதாவிலும், பிதா என்னிலும் இருக்கிறதை நீ விசுவாசிக்கிறதில்லையா? நான் உங்களுடனே சொல்லுகிற வசனங்களை என் சுயமாய்ச் சொல்லவில்லை; என்னிடத்தில் வாசமாயிருக்கிற பிதாவானவரே இந்தக் கிரியைகளைச் செய்துவருகிறார்.
Joh 14:11 நான் பிதாவிலும் பிதா என்னிலும் இருக்கிறதை நம்புங்கள்; அப்படியில்லாவிட்டாலும் என் கிரியைகளினிமித்தமாவது என்னை நம்புங்கள்.
இன்றைக்கு யெகோவாவுக்கு(தேவனுக்கு)
எந்தவொரு மனிதனும் சாட்சியாக இருக்க முடியாது
யெகோவா சாட்சிக்காரர்கள் உங்கள்
வீடுகளுக்கு வருவார்கள் என்றால் மேலே உள்ள வசனதை அவர்களுக்கு மேற்கோள் காண்பித்து
யெகோவாவுக்கு நீங்கள் எப்படி சாட்சியாக இருக்க முடியும் என்று கேளுங்கள்
No comments:
Post a Comment