Wednesday, 23 August 2017

இயேசு கிறிஸ்து ஓய்வுநாள் பிரமாணத்தை ஆசரித்தாரா?



பாடம் :7 ஓய்வு நாள் பிரமாண உபதேசங்கள்                                                          

இயேசு கிறிஸ்து ஓய்வுநாளை ஆசாரித்தாரா என்பதை புரிந்து கொள்ளுவதற்கு முன்பு ஒன்றை மனதில் கொள்ளுங்கள்

இயேசு கிறிஸ்து யூதன் என்பதையும் அவர் நியாயப்பிரமாணத்திற்கு கீழ் பிறந்தவர் என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்
Gal 4:5 காலம் நிறைவேறினபோது, ஸ்திரீயினிடத்திற் பிறந்தவரும் நியாயப்பிரமாணத்திற்குக் கீழானவருமாகிய தம்முடைய குமாரனைத் தேவன் அனுப்பினார்.

யூதர்கள் எப்படி நியாயப்பிரமாணத்திற்கு கீழ்ப்படிய வேண்டுமோ அதைப் போல இயேசு கிறிஸ்துவும் அதற்கு கீழ்ப்படிந்தார்
Mat 5:17 நியாயப்பிரமாணத்தையானாலும் தீர்க்கதரிசனங்களையானாலும் அழிக்கிறதற்கு வந்தேன் என்று எண்ணிக்கொள்ளாதேயுங்கள்; அழிக்கிறதற்கு அல்ல, நிறைவேற்றுகிறதற்கே வந்தேன்.


விருத்தசேதனமுள்ள எந்த யூதனும் நியாயப்பிரமாணம் முழுவதையும் நிறைவேற்ற கடனாளியாய் இருக்கிறார்கள்
Gal 5:3 மேலும், விருத்தசேதனம் பண்ணிக்கொள்ளுகிற எந்த மனுஷனும் நியாயப்பிரமாணம் முழுவதையும் நிறைவேற்றக் கடனாளியாயிருக்கிறான் என்று மறுபடியும் அப்படிப்பட்டவனுக்குச் சாட்சியாகச் சொல்லுகிறேன்.
  • இயேசு கிறிஸ்து விருத்தசேதனமுள்ள யூதராய் இருந்தபடியால் அவர் நியாயப்பிரமாணம் முழுவதையும் நிறைவேற்ற கடனாளியாய் இருந்தார்
 இயேசு கிறிஸ்து ஓய்வுநாளை ஆசாரித்தாரா?
ஆம் இயேசு கிறிஸ்து ஓய்வுநாளை ஆசாரித்தார் ஏனென்றால் அவர் நியாயப்பிரமாணத்திற்கு கீழ்ப்பட்டவராக வந்தார்

 இயேசு கிறிஸ்து ஓய்வுநாளுக்கும் கர்த்தராய் இருக்கிறார் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்
Mar 2:28 ஆகையால் மனுஷகுமாரன் ஓய்வு நாளுக்கும் ஆண்டவராய் இருக்கிறார் என்றார்.

ஓய்வுநாளை மீறினார்கள் என்று  இயேசு கிறிஸ்துவின் சீஷர்களை  பரிசேயர்கள் குற்றம் சாட்டினார்கள்
Mat 12:1 அக்காலத்திலே, இயேசு ஓய்வுநாளில் பயிர்வழியே போனார்; அவருடைய சீஷர்கள் பசியாயிருந்து, கதிர்களைக் கொய்து, தின்னத் தொடங்கினார்கள்.
Mat 12:2 பரிசேயர் அதைக்கண்டு, அவரை நோக்கி: இதோ, ஓய்வுநாளில் செய்யத்தகாததை உம்முடைய சீஷர்கள் செய்கிறார்களே என்றார்கள்.


இயேசு கிறிஸ்து அதற்கு என்ன பதில் கொடுத்தார்?
முதலாவது தாவீது பசியாயிருந்த போது ஆசாரியர்கள் தவிர வேறொருவரும் புசிக்கத்தக்காத தேவசமுகத்து அப்பங்களை புசித்தது அது குற்றமில்லை என்றார்
Mat 12:3 அதற்கு அவர்: தாவீதும் அவனோடிருந்தவர்களும் பசியாயிருந்தபோது செய்ததை நீங்கள் வாசிக்கவில்லையா?
Mat 12:4 அவன் தேவனுடைய வீட்டில் பிரவேசித்து, ஆசாரியர் தவிர வேறொருவரும் புசிக்கத்தகாத தேவசமுகத்து அப்பங்களைத் தானும் தன்னோடிருந்தவர்களும் புசித்தார்களே.

இரண்டாவது ஓய்வுநாட்களில் ஆசாரியர்கள் தேவாலயத்தில் ஓய்ந்திராமல் ஓய்வுநாளை வேலை நாளாக்கினாலும் அவர்கள் குற்றமில்லாதிருக்கிறார்கள் என்றார்
Mat 12:5 அன்றியும், ஓய்வுநாட்களில் ஆசாரியர்கள் தேவாலயத்தில் ஓய்ந்திராமல், ஓய்வுநாளை வேலை நாளாக்கினாலும், குற்றமில்லாதிருக்கிறார்கள் என்று நீங்கள் வேதத்தில் வாசிக்கவில்லையா?


  • ஓய்வுநாளை எல்லா மனுஷர்களும் ஆசாரிக்க வேண்டும் என்று வாதிடுகிறவர்களே இந்த ஆசாரியர்கள் தேவலாயத்தில் ஓய்வுநாளில் வேலை செய்து கொண்டு இருக்கிறார்களே இவர்களை தேவன் எப்படி நியாயந்தீர்ப்பார் என்று சொல்லுங்களேன்

ஓய்வுநாளில் ஆசாரியர்கள் என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள்?
ஓய்வுநாட்களில் ஆசாரியர்கள் ஓய்ந்திருப்பது இல்லை 
ஓய்வு நாளை வேலை நாளாக்கிருக்கிறார்கள்  
ஓய்வு நாளை வேலை நாளாக்கினாலும் அவர்கள் குற்றமில்லாதிருக்கிறார்கள்
  • ஓய்வுநாள் மனுஷனுக்கு உண்டாக்கப்பட்டது என்றால் இவர்கள் மனுஷர்கள் இல்லையா? இவர்கள் ஏன் இந்த ஒய்வுநாள் பிரமாணத்திற்கு கீழ்ப்படியவில்லை

பரிசேயர்கள் ஓய்வுநாள் பிரமாணத்தை வைத்துக் கொண்டு சீஷர்களை இரக்கமில்லாமல் குற்றப்படுத்த முயற்சி செய்தார்கள் அதை இயேசு கிறிஸ்து கடிந்து கொண்டார்
Mat 12:7 பலியையல்ல இரக்கத்தையே விரும்புகிறேன் என்பதின் கருத்து இன்னதென்று அறிந்தீர்களானால், குற்றமில்லாதவர்களை நீங்கள் குற்றப்படுத்தமாட்டீர்கள்.


இயேசு கிறிஸ்து தேவாலயத்திலும் பெரியவர் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்
Mat 12:6 தேவாலயத்திலும் பெரியவர் இங்கே இருக்கிறார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.

இயேசு கிறிஸ்து ஓய்வுநாளுக்கும் கர்த்தராக இருக்கிறார்
Mat 12:8 மனுஷகுமாரன் ஓய்வுநாளுக்கும் ஆண்டவராய் இருக்கிறார் என்றார்.

கர்த்தருக்கு சித்தமானல் தொடர்ந்து கற்றுக் கொள்ளுவோம்


No comments:

Post a Comment