Wednesday, 16 August 2017

ஓய்வு நாள் பிரமாணம் நியாயப்பிரமாணத்தில் ஒரு பகுதியாக இருக்கிறது



பகுதி:3 ஓய்வு நாள் பிரமாண உபதேசங்கள்                                                             

நியாயப்பிரமாணத்திற்கும் அதின் சட்டத்திட்டங்களுக்கும் புதிய ஏற்பாடு தரும் சத்தியங்கள்

  •  அது நம்முடைய முற்பிதாக்களாலும் நம்மாலும் சுமக்க முடியாது நுகம் (அப் 15:5-10)
  • நியாயப்பிரமாணம் மனிதனுக்கு மரணத்தை கொண்டு வந்தது  (ரோம 7:9,10)
  • நியாயப்பிரமாணத்தின் கிரியைக்காரராகிய யாவரும் சாபத்துக்குட்பட்டு இருக்கிறார்கள் (கலா 3:9,10)
  • சிலுவைக்கு பின்பு நியாயப்பிரமாணத்தினால் யாரும் நீதிமானாக முடியாது (கலா 2:16, 3:11, ரோம 3:20)
  • நியாயப்பிரமாணத்தினால் நீதிமான்களாக யாவரும் கிறிஸ்துவை விட்டு பிரிந்து கிருபையிலிருந்து விழுவார்கள் (கலா 5:4)
  •   கிறிஸ்து நியாயப்பிரமாணத்தின் முடிவாக இருக்கிறார் (ரோம 10:3,4)
  •  கிறிஸ்து நமக்காக சாபமாகி நியாயப்பிரமாணத்தின் சாபத்திற்கு நம்மை நீங்கலாக்கி மீட்டுக் கொண்டார் (கலா 3:13, உபா 21:23)
  •   நீங்கள் மறுபடியும் அடிமைத்தனத்தின் நுகத்திற்குட்படாமல், கிறிஸ்து நமக்காக உண்டாக்கின சுயாதீன நிலைமையிலே நிலைகொண்டிருங்கள் (கலா 5:1)
  •   ஆவியினால் நடத்தப்படுவீர்களானால் நீங்கள் நியாயப்பிரமாணத்திற்கு கீழ்ப்பட்டவர்கள் அல்ல (கலா 5:18)


கலாத்தியா நாட்டிலுள்ள சபையில் நுழைத்த கள்ளப்போதகர்கள்:

நியாயப்பிரமாணத்தை போதிக்கிறவர்கள் கள்ளச் சகோதரர்களாக இருக்கிறார்கள்
Gal 2:4 கிறிஸ்து இயேசுவுக்குள் நமக்கு உண்டான சுயாதீனத்தை உளவுபார்த்து நம்மை நியாயப்பிரமாணத்திற்கு அடிமைகளாக்கும்பொருட்டாகப் பக்கவழியாய் நுழைந்த கள்ளச் சகோதரர் நிமித்தம் அப்படியாயிற்று.

அப்போஸ்தலர்கள் அந்த உபதேசத்திற்கு செவி கொடுக்கவும் இல்லை அவர்களுக்கு கீழ்ப்படியவும் இல்லை
Gal 2:5 சுவிசேஷத்தின் சத்தியம் உங்களிடத்திலே நிலைத்திருக்கும்படி, நாங்கள் ஒரு நாழிகையாகிலும் அவர்களுக்குக் கீழ்ப்படிந்து இணங்கவில்லை.

நியாயப்பிரமாணத்தை போதிக்கிறவர்கள் ஆத்துமாக்களை புரட்டுகிறார்கள்
Act 15:24 எங்களால் கட்டளைபெறாத சிலர் எங்களிடத்திலிருந்து புறப்பட்டு, நீங்கள் விருத்தசேதனமடைய வேண்டுமென்றும், நியாயப்பிரமாணத்தைக் கைக்கொள்ளவேண்டுமென்றும் சொல்லி, இப்படிப்பட்ட வார்த்தைகளால் உங்களைக் கலக்கி, உங்கள் ஆத்துமாக்களைப் புரட்டினார்கள் என்று நாங்கள் கேள்விப்பட்டபடியினாலே,

நியாயப்பிரமாணம் கிறிஸ்துவினிடத்தில் வழிநடத்துகிற உபாத்தியாய் மாத்திரம் இருந்தது
Gal 3:23 ஆதலால் விசுவாசம் வருகிறதற்கு முன்னே, வெளிப்படப்போகிற விசுவாசத்திற்கு ஏதுவாக நாம் அடைக்கப்பட்டவர்களாய் நியாயப்பிரமாணத்தின்கீழ் காவல்பண்ணப்பட்டிருந்தோம்.
Gal 3:24 இவ்விதமாக, நாம் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்படுவதற்கு நியாயப்பிரமாணம் நம்மைக் கிறிஸ்துவினிடத்தில் வழிநடத்துகிற உபாத்தியாய் இருந்தது.
Gal 3:25 விசுவாசம் வந்தபின்பு நாம் உபாத்திக்குக் கீழானவர்களல்லவே.

இப்படிப்பட்ட உபதேசங்கள் கிறிஸ்துவைப் பற்றினது அல்ல
Col 2:8 லௌகிக ஞானத்தினாலும், மாயமான தந்திரத்தினாலும், ஒருவனும் உங்களைக் கொள்ளைகொண்டு போகாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அது மனுஷர்களின் பாரம்பரிய நியாயத்தையும் உலகவழிபாடுகளையும் பற்றினதேயல்லாமல் கிறிஸ்துவைப் பற்றினதல்ல.

நியாயப்பிரமாணம் யாருக்கு விதிக்கப்பட்டது?
1Ti 1:9 எங்களுக்குத் தெரிந்திருக்கிறபடி, நியாயப்பிரமாணம் நீதிமானுக்கு விதிக்கப்படாமல், அக்கிரமக்காரருக்கும், அடங்காதவர்களுக்கும், பக்தியில்லாதவர்களுக்கும், பாவிகளுக்கும், அசுத்தருக்கும், சீர்கெட்டவர்களுக்கும், தாய் தகப்பன்மாரை அடிக்கிறவர்களுக்கும், கொலைபாதகருக்கும்,
1Ti 1:10 வேசிக்கள்ளருக்கும், ஆண்புணர்ச்சிக்காரருக்கும், மனுஷரைத் திருடுகிறவர்களுக்கும், பொய்யருக்கும், பொய்யாணை இடுகிறவர்களுக்கும்,
1Ti 1:11 நித்தியானந்த தேவனுடைய மகிமையான சுவிசேஷத்தின்படி எனக்கு ஒப்புவிக்கப்பட்டிருக்கிற ஆரோக்கியமான உபதேசத்திற்கு எதிரிடையாயிருக்கிற மற்றெந்தச் செய்கைக்கும் விரோதமாய் விதிக்கப்பட்டிருக்கிறது.

கிறிஸ்துவின் ஆவியின் பிரமாணம் இந்த நியாயப்பிரமாணத்திலிருந்து நம்மை விடுதலையாக்கி இருக்கிறது
Rom 8:2 கிறிஸ்து இயேசுவினாலே ஜீவனுடைய ஆவியின் பிரமாணம் என்னைப் பாவம் மரணம் என்பவைகளின் பிரமாணத்தினின்று விடுதலையாக்கிற்றே.

இப்படி நியாயப்பிரமாணத்தை போதிக்கிறவர்கள் தங்களுக்கேற்ற ஆக்கினையை அடைவார்கள்
Gal 5:10 நீங்கள் வேறுவிதமாய்ச் சிந்திக்கமாட்டீர்களென்று நான் கர்த்தருக்குள் உங்களைக்குறித்து நம்பிக்கையாயிருக்கிறேன்; உங்களைக் கலக்குகிறவன் எப்படிப்பட்டவனாயிருந்தாலும் தனக்கேற்ற ஆக்கினையை அடைவான்.

இப்படிப்பட்டப்பட்டவர்கள் தறிப்புண்டு போனால் நலமாய் இருக்கும் என்று அப்போஸ்தலனாகிய பவுல் சொல்லுவதை கவனியுங்கள்
Gal 5:11 சகோதரரே, இதுவரைக்கும் நான் விருத்தசேதனத்தைப் பிரசங்கிக்கிறவனாயிருந்தால், இதுவரைக்கும் என்னத்திற்குத் துன்பப்படுகிறேன்? அப்படியானால் சிலுவையைப்பற்றி வரும் இடறல் ஒழிந்திருக்குமே.
Gal 5:12 உங்களைக் கலக்குகிறவர்கள் தறிப்புண்டுபோனால் நலமாயிருக்கும்.

தொடர்ந்து ஏழாம் ஓய்வுநாளைக் குறித்து கற்றுக் கொள்ளுவோம்

No comments:

Post a Comment