Monday, 21 August 2017

இஸ்ரவேல் ஜனங்களுக்கு ஏன் தேவன் ஓய்வுநாளை கட்டளையிட்டார்?



பகுதி:6 ஓய்வு நாள் பிரமாண உபதேசங்கள்                                                          

தேவன் ஆறுநாளைக்குள்ளே  தம்முடைய கிரியையெல்லாம் முடித்தபின்பு அதிலே ஓய்ந்திருந்தபடியால் தேவன் ஏழாம் நாளை ஆசீர்வதித்து அதை பரிசுத்தமாக்கினார்
Gen 2:2 தேவன் தாம் செய்த தம்முடைய கிரியையை ஏழாம் நாளிலே நிறைவேற்றி, தாம் உண்டாக்கின தம்முடைய கிரியைகளையெல்லாம் முடித்தபின்பு, ஏழாம் நாளிலே ஓய்ந்திருந்தார்.
Gen 2:3 தேவன் தாம் சிருஷ்டித்து உண்டுபண்ணின தம்முடைய கிரியைகளையெல்லாம் முடித்தபின்பு அதிலே ஓய்ந்திருந்தபடியால், தேவன் ஏழாம் நாளை ஆசீர்வதித்து, அதைப் பரிசுத்தமாக்கினார்.

தேவன் ஓய்வுநாளை ஆசீர்வதித்து அதை பரிசுத்தமாக்கினாலும் தேவன் அந்த ஓய்வு நாளை யாருக்கு கொடுத்தார்?

  • ஆதாம்
  • நோவா
  •   ஆபிரகாம்
  •   ஈசாக்
  • யாக்கோபு
  •   யோசேப்பு
  •   யோபு


இங்கே இருக்கிற யாருக்காவது ஓய்வுநாள் பிரமாணத்தை ஆசாரிக்கும் படி கட்டளையிட்டார் என்கிற வேத வாக்கியங்கள் இருக்கிறதா?

தேவன் இவர்களுக்கு ஓய்வுநாளை கொடுத்தார் என்றும் அவர்கள் அதை ஆசாரித்தார்கள் ஒரு வேதவாக்கியங்கள் கூட போதிக்கவில்லை

ஓய்வுநளை தேவன் யாருக்கு கட்டளையிட்டார்?
எகிப்திலிருந்து புறப்பட்ட இஸ்ரவேல் ஜனங்களுக்கு தேவன் அதை கட்டளையிட்டார்
Deu 5:15 நீ எகிப்து தேசத்தில் அடிமையாயிருந்தாய் என்றும், உன் தேவனாகிய கர்த்தர் உன்னை அவ்விடத்திலிருந்து வல்லமையுள்ள கரத்தினாலும் ஓங்கிய புயத்தினாலும் புறப்படப்பண்ணினார் என்றும் நினைப்பாயாக; ஆகையால் ஓய்வு நாளை ஆசரிக்க உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கட்டளையிட்டார்.
Exo 31:17 அது என்றைக்கும் எனக்கும் இஸ்ரவேல் புத்திரருக்கும் அடையாளமாயிருக்கும்; ஆறுநாளைக்குள்ளே கர்த்தர் வானத்தையும் பூமியையும் உண்டாக்கி, ஏழாம் நாளிலே ஓய்ந்திருந்து பூரித்தார் என்றார்.

ஓய்வுநாளை கர்த்தர் யாருக்கு அருளினார்?
Exo 16:29 பாருங்கள், கர்த்தர் உங்களுக்கு ஓய்வுநாளை அருளினபடியால், அவர் உங்களுக்கு ஆறாம்நாளில் இரண்டு நாளுக்கு வேண்டிய ஆகாரத்தைக் கொடுக்கிறார்....
Exo 16:30 அப்படியே ஜனங்கள் ஏழாம்நாளில் ஓய்ந்திருந்தார்கள்.


  •   இஸ்ரவேல் ஜனங்களுக்கு அருளினார், அதிலே அவர்கள் ஓய்ந்திருந்தார்கள்


ஓய்வுநாளை தேவன் யாருக்கு தெரியப்படுத்தினார் என்று நெகேமியா சாட்சி கொடுத்தார்?
Neh 9:13 நீர் சீனாய் மலையிலிறங்கி, வானத்திலிருந்து அவர்களோடே பேசி, அவர்களுக்குச் செம்மையான நீதிநியாயங்களையும், நல்ல கட்டளைகளும் கற்பனைகளுமாகிய உண்மையான பிரமாணங்களையும் கொடுத்தீர்.
Neh 9:14 உமது பரிசுத்த ஓய்வுநாளை அவர்களுக்குத் தெரியப்படுத்தி, உமது தாசனாகிய மோசேயைக்கொண்டு, அவர்களுக்குக் கற்பனைகளையும், கட்டளைகளையும், நியாயப்பிரமாணங்களையும் கற்பித்தீர்.

  •  தேவனுடைய பரிசுத்த ஒய்வுநாளை இஸ்ரவேலர்களுக்கு தான் தெரியப்படுத்தினார் என்று நெகேமியா சாட்சியிட்டார்


ஓய்வுநாட்களை இஸ்ரவேல் ஜனங்கள் ஏன் ஆசாரிக்க வேண்டும்?
Exo 31:13 நீ இஸ்ரவேல் புத்திரரை நோக்கி, நீங்கள் என் ஓய்வுநாட்களை ஆசரிக்க வேண்டும்; உங்களைப் பரிசுத்தப்படுத்துகிற கர்த்தர் நான் என்பதை நீங்கள் அறியும்படி, இது உங்கள் தலைமுறைதோறும் எனக்கும் உங்களுக்கும் அடையாளமாயிருக்கும்.
Eze 20:12 நான் தங்களைப் பரிசுத்தம்பண்ணுகிற கர்த்தர் என்று அவர்கள் அறியும்படிக்கு, எனக்கும் அவர்களுக்கும் அடையாளமாய் இருப்பதற்கான என் ஓய்வுநாட்களையும் அவர்களுக்குக் கட்டளையிட்டேன்.


  •  இஸ்ரவேல் ஜனங்களை பரிசுத்தப்படுத்துகிறவர் கர்த்தர் என்பதை அவர்கள் அறியும்படி தலைமுறைதோறும் தேவனுக்கும் இஸ்ரவேல் ஜனங்களுக்கும் அடையாளமாயிருக்கும் என்றார்


நான் உங்கள்(இஸ்ரவேலர்கள்) தேவனாகிய கர்த்தர் என்று நீங்கள் அறியும் படிக்கு உங்களுக்கும் எனக்கும் அடையாளமாய் இருக்கும் என்றார்
Eze 20:20 என் ஓய்வுநாட்களைப் பரிசுத்தமாக்குங்கள்; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர் என்று நீங்கள் அறியும்படிக்கு அவைகள் எனக்கும் உங்களுக்கும் அடையாளமாயிருக்கும் என்றேன்.

ஓய்வுநாள் இஸ்ரவேல் ஜனங்களுக்கும் தேவனுக்கும் பரிசுத்தமானது
Exo 31:14 ஆகையால், ஓய்வுநாளை ஆசரிப்பீர்களாக; அது உங்களுக்குப் பரிசுத்தமானது; ,,,,,
Exo 31:15 ஆறுநாளும் வேலைசெய்யலாம்; ஏழாம் நாளோ வேலை ஒழிந்திருக்கும் ஓய்வுநாள்; அது கர்த்தருக்குப் பரிசுத்தமானது; ,,,,,

இஸ்ரவேல் ஜனங்கள் இதை எப்போது வரை ஆசரிக்க வேண்டும்?
Exo 31:16 ஆகையால், இஸ்ரவேல் புத்திரர் தங்கள் தலைமுறைதோறும் ஓய்வுநாளை நித்திய உடன்படிக்கையாக ஆசரிக்கும்படி, அதைக் கைக்கொள்ளக்கடவர்கள்.

இவ்வளவு வேத வாக்கிங்களும் இஸ்ரவேல் ஜனங்களுக்கு தான் ஓய்வுநாள் பிரமாணம் கொடுக்கப்பட்டு இருக்கிறது என்று சாட்சி கொடுக்கிறது
1Jn 5:9 நாம் மனுஷருடைய சாட்சியை ஏற்றுக்கொண்டால், அதைப்பார்க்கிலும் தேவனுடைய சாட்சி அதிகமாயிருக்கிறது; ,,,,,
Heb 12:1 ஆகையால், மேகம்போன்ற இத்தனை திரளான சாட்சிகள் நம்மைச் சூழ்ந்துகொண்டிருக்க, பாரமான யாவற்றையும், நம்மைச் சுற்றி நெருங்கிநிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு, விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம்;

கர்த்தருக்கு சித்தமானால் தொடர்ந்து கற்றுக் கொள்ளுவோம்





No comments:

Post a Comment