Saturday, 19 August 2017

ஆதியாக புஸ்தகத்தில் ஓய்வுநாள் பிரமாணம் கொடுக்கப்பட்டு இருந்ததா?



பாடம் :5 ஓய்வு நாள் பிரமாண உபதேசங்கள்                                                          

ஒய்வுநாள் பற்றி அநேகர் இன்றைக்கு அநேக விவாதங்களை செய்து கொண்டு இருக்கிறார்கள்

இயேசு கிறிஸ்து ஓய்வு நாள் குறித்து அவர்களிடத்தில் போதித்த போதும் ஒய்வுநாளில் அவர் நடந்து கொண்ட விதத்தை யூதர்கள் புரிந்து கொள்ளாமல் அவரை குற்றம் சாட்டி கொலை செய்யும் அளவுக்கு அவர்மேல் வெறுப்புள்ளவர்களானார்கள்

இன்றைக்கும் ஓய்வுநாளை ஆசாரிக்கிறேன் என்று சொல்லுகிறவர்கள் தேவனுடைய சத்தியங்களை உணர்ந்து கொள்ளாமல் வாக்குவாதங்களில் தான் ஈடுபட முயற்சி செய்கிறார்கள்

வேத வாக்கியங்களை முதலில் சரியாக உணர்ந்து கொள்ள முயற்சி செய்ய வேண்டும்

ஆதாம் ஒய்வுநளை ஆசாரித்தார் என்று ஏழாம் ஒய்வுநாள் சபையை சேர்ந்தவர்கள் சொல்லுகிறார்கள் அது உண்மையா?

ஆதியாக புஸ்தகத்தில் ஆதாமுக்கு தேவன் ஓய்வுநாள் கட்டளையை கொடுத்தாரா?

இந்த வசனத்தில் தம்முடைய கிரியை எல்லாம் முடித்து ஏழாம் நாளை சீர்வதித்து அதை பரிசுத்தமாக்கினார்
Gen 2:2 தேவன் தாம் செய்த தம்முடைய கிரியையை ஏழாம் நாளிலே நிறைவேற்றி, தாம் உண்டாக்கின தம்முடைய கிரியைகளையெல்லாம் முடித்தபின்பு, ஏழாம் நாளிலே ஓய்ந்திருந்தார்.
Gen 2:3 தேவன் தாம் சிருஷ்டித்து உண்டுபண்ணின தம்முடைய கிரியைகளையெல்லாம் முடித்தபின்பு அதிலே ஓய்ந்திருந்தபடியால், தேவன் ஏழாம் நாளை ஆசீர்வதித்து, அதைப் பரிசுத்தமாக்கினார்.

ஆதாமுக்கு தேவன் ஓய்வு நாளை ஆசாரி என்று கட்டளையிட்டார் என்கிறார்கள் அதற்கான வசன ஆதாரங்கள் எங்கே இருக்கிறது?
1Co 4:6 சகோதரரே, எழுதப்பட்டதற்கு மிஞ்சி எண்ணவேண்டாமென்று நீங்கள் எங்களாலே கற்றுக்கொள்ளவும், ,,,, நான் உங்கள்நிமித்தம் என்னையும் அப்பொல்லோவையும் திருஷ்டாந்தமாக வைத்து, இவைகளை எழுதினேன்.
Mat 5:37 உள்ளதை உள்ளதென்றும், இல்லதை இல்லதென்றும் சொல்லுங்கள்; இதற்கு மிஞ்சினது தீமையினால் உண்டாயிருக்கும்.
Jas 5:12 ,,, நீங்கள் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படாதபடிக்கு உள்ளதை உள்ளதென்றும், இல்லதை இல்லதென்றும் சொல்லக்கடவீர்கள்.


  • எழுதப்பட்டத்திற்கு மிஞ்சி ஒருபோதும் எண்ண வேண்டாம்
  • அதற்கு மிஞ்சினது தீமையாக தான் இருக்கும்


தேவன் ஆதாமுக்கு என்ன கட்டளையை கொடுத்தார்?
தேவன் இந்த கட்டளையை தான் கொடுத்தார் என்று  வேத வாக்கியம் போதிக்கிறது
Gen 2:16 தேவனாகிய கர்த்தர் மனுஷனை நோக்கி: நீ தோட்டத்திலுள்ள சகல விருட்சத்தின் கனியையும் புசிக்கவே புசிக்கலாம்.
Gen 2:17 ஆனாலும் நன்மைதீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்கவேண்டாம்; அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய் என்று கட்டளையிட்டார்.

ஆனால் நீங்கள் ஓய்வுநாளை ஆசாரி என்று ஆதாமுக்கு கட்டளையை கொடுத்தார் என்று சொல்லுகிறார்கள் அதற்கான வசன ஆதாரம் எங்கே?

தேவனுடைய வார்த்தைகளை கூட்டி போதிக்கும் எந்த மனுஷனாக இருந்தாலும் அவன் பொய்யனாய் இருக்கிறான்
Pro 30:5 தேவனுடைய வசனமெல்லாம் புடமிடப்பட்டவைகள்; தம்மை அண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு அவர் கேடகமானவர்.
Pro 30:6 அவருடைய வசனங்களோடு ஒன்றையும் கூட்டாதே, கூட்டினால் அவர் உன்னைக் கடிந்துகொள்வார், நீ பொய்யனாவாய்.


  • அவருடைய வார்த்தையோடு கூட்டவும் கூடாது குறைக்கவும் கூடாது என்று சொல்லப்பட்ட போது அதைப் பற்றியெல்லாம் கொஞ்சமும் கவலைப்படாமல் இப்படி கூட்டியும் குறைத்தும் சொல்லுகிறார்கள்
  • ஒருவன் போதித்தால் தேவனுடைய வார்த்தைகளின்படி போதிக்க வேண்டும் என்ற கட்டளையை நாம் ஒருபோதும் மீறக்கூடாது


ஆபிரகாம் ஓய்வுநாள் பிரமாணத்தை ஆசாரித்தாரா?
Gen 18:19 கர்த்தர் ஆபிரகாமுக்குச் சொன்னதை நிறைவேற்றும்படியாய் அவன் தன் பிள்ளைகளுக்கும், தனக்குப் பின்வரும் தன் வீட்டாருக்கும்: நீங்கள் நீதியையும் நியாயத்தையும் செய்து, கர்த்தருடைய வழியைக் காத்து நடவுங்கள் என்று கட்டளையிடுவான் என்பதை அறிந்திருக்கிறேன் என்றார்.


  • இங்கே சொல்லக்கூடிய நீதி நியாயம் கர்த்தருடைய வழி இது ஓய்வுநாள் பிரமாணம் என்று சொல்லுகிறார்கள் இந்த வேத வாக்கியம் ஓய்வுநாள் பிரமாணத்தை பற்றி தான் பேசுகிறது என்பதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது


இந்த வேத வாக்கியத்தை கவனித்து பாருங்கள் ஆபிராகம் தன் பிள்ளைகளுக்கும் தன் வீட்டாருக்கும் என்ன கட்டளையிட்டார்?

1) நீதியையும் நியாயத்தையும் செய்யுங்கள்
2) கர்த்தருடைய வழியை காத்து நடவுங்கள்

இதற்கும் ஓய்வுநாளுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது?


  • ஓய்வுநாள் பிரமாணத்தைக் குறித்து எந்த சட்டத்திட்டங்களை குறித்து தேவன் ஆபிரகாமுக்கு போதித்தார் என்பதை வசனத்தை கொண்டு மேற்கோள் காண்பியுங்கள்
  • சுமார் 2500 வருஷங்களை உள்ளடக்கிய ஆதியாக புஸ்தகத்தில் எந்த பரிசுத்தவான்களும் ஓய்வு நாள் ஆசாரித்ததாக எந்த ஒரு வேத வாக்கியமும் போதிக்கவில்லை


அப்படி இருக்கும் என்றால் ஆதியாக புஸ்தகத்தில்  இரண்டு முன்று வசனங்களை ஆதாரமாக காண்பியுங்கள் ஏனென்றால் இரண்டு மூன்று சாட்சியினால் தான் ஒரு காரியம் நிலைவரப்படும்
2Co 13:1 ,,,,, சகல காரியங்களும் இரண்டு மூன்று சாட்சிகளுடைய வாக்கினால் நிலைவரப்படும்.
1Ti 5:19 ,,,, இரண்டு மூன்று சாட்சிகள் இல்லாமல் நீ ஏற்றுக்கொள்ளக்கூடாது.


  • சுமார் 1500 வருஷங்களை உள்ளடக்கிய யாத்திராகமம் முதல் மல்கியா வரை 125 வசனங்களுக்கு மேல் இஸ்ரவேல் ஜனங்களுக்கு  தான் அந்த ஓய்வுநாள் பிரமாணத்தை கொடுத்தார் என்பதை நாம் தெளிவாக வேத வாக்கியங்களை கொண்டு கண்டுபிடிக்க முடியும்


கர்த்தருக்கு சித்தமானால் ஒய்வுநாள் உபதேசங்களை குறித்து கற்றுக் கொள்ளுவோம்



No comments:

Post a Comment