Friday, 25 August 2017

இயேசு கிறிஸ்து ஓய்வுநாளில் என்ன செய்தார்?



பாடம் :8 ஓய்வு நாள் பிரமாண உபதேசங்கள்        
                                                    

ஆசாரியர்கள் ஓய்வுநாளில் வேலை செய்தாலும் குற்றம் இல்லாமல் இருக்கிறார்கள் என்று இயேசு கிறிஸ்து சொன்ன சாட்சியை நாம் கவனித்து இருக்கிறோம்

யூதர்கள் ஓய்வுநாளிலே ஜெப ஆலயத்தில் கூடி இருப்பார்கள் என்பதை மனதிலே வைத்துக் கொள்ளுங்கள்

இயேசு கிறிஸ்து ஓய்வுநாளில் ஜெப ஆலயத்தில் போதகம் பண்ணினார்
Mar 1:21 பின்பு கப்பர்நகூமுக்குப் போனார்கள். உடனே அவர் ஓய்வுநாளில் ஜெபஆலயத்திலே பிரவேசித்து, போதகம் பண்ணினார்.
Mar 6:2 ஓய்வுநாளானபோது, ஜெபஆலயத்தில் உபதேசம்பண்ணத் தொடங்கினார். ,,,,

இயேசு கிறிஸ்து ஓய்வு நாளில் ஜெப ஆலயத்தில் போதகம் பண்ணுவதை தம்முடைய வழக்கமாக வைத்து இருந்தார்
Luk 4:16 தாம் வளர்ந்த ஊராகிய நாசரேத்துக்கு அவர் வந்து, தம்முடைய வழக்கத்தின்படியே ஓய்வுநாளில் ஜெப ஆலயத்திலே பிரவேசித்து, வாசிக்க எழுந்து நின்றார்.
Luk 4:31 பின்பு அவர் கலிலேயாவிலுள்ள கப்பர்நகூம் பட்டணத்துக்கு வந்து, ஓய்வுநாட்களில் ஜனங்களுக்குப் போதகம் பண்ணினார்.
Luk 13:10 ஒரு ஓய்வுநாளில் அவர் ஜெபஆலயத்தில் போதகம்பண்ணிக்கொண்டிருந்தார்.

இயேசு கிறிஸ்து ஒரு ஓய்வுநாளில் பரிசேயனுடைய வீட்டிலே போஜனம் பண்ணுவதற்காக போய் இருந்தார்
Luk 14:1 ஒரு ஓய்வுநாளிலே பரிசேயரில் தலைவனாகிய ஒருவனுடைய வீட்டிலே அவர் போஜனம் பண்ணும்படிக்குப் போயிருந்தார்.

இயேசு கிறிஸ்துவை குற்றம் சாட்டும்படிக்கு யூதர்கள் ஒரு கேள்வியை கேட்டார்கள்
Mat 12:10 அங்கே சூம்பின கையையுடைய மனுஷன் ஒருவன் இருந்தான். அப்பொழுது, அவர்மேல் குற்றஞ்சாட்டும்படிக்கு: ஓய்வுநாளில் சொஸ்தமாக்குகிறது நியாயமா என்று கேட்டார்கள்.

இயேசு கிறிஸ்து ஓய்வுநாளில் இதில் எது  நியாயம் என்ற கேள்வியை கேட்ட போது பரிசேயர்கள் அமைதலாயிருந்தார்கள்
Mar 3:4 அவர்களைப் பார்த்து: ஓய்வுநாட்களில் நன்மைசெய்வதோ, தீமைசெய்வதோ, ஜீவனைக் காப்பதோ அழிப்பதோ, எது நியாயம் என்றார். அதற்கு அவர்கள் பேசாமலிருந்தார்கள்.

பரிசேயர்கள் ஓய்வுநாளில் நன்மை செய்வதை விரும்பாமல் இருந்தால் இயேசு கிறிஸ்து அவர்களை கடிந்து கொண்டார்
Mar 3:5 அவர்களுடைய இருதயகடினத்தினிமித்தம் அவர் விசனப்பட்டு, கோபத்துடனே சுற்றிலும் இருந்தவர்களைப் பார்த்து, அந்த மனுஷனை நோக்கி: உன் கையை நீட்டு என்றார்; அவன் நீட்டினான்; அவன் கை மறுகையைப்போலச் சொஸ்தமாயிற்று.

இயேசு கிறிஸ்து அதற்கு ஓய்வு நாளில் நன்மை செய்வது நியாயம் தான் என்றார்
Mat 12:11 அதற்கு அவர்: உங்களில் எந்த மனுஷனுக்காகிலும் ஒரு ஆடு இருந்து, அது ஓய்வுநாளில் குழியிலே விழுந்தால், அதைப் பிடித்துத் தூக்கிவிடமாட்டானோ?
Mat 12:12 ஆட்டைப்பார்க்கிலும் மனுஷனானவன் எவ்வளவோ விசேஷித்திருக்கிறான்! ஆதலால், ஓய்வுநாளிலே நன்மைசெய்வது நியாயந்தான் என்று சொன்னார்.

ஓய்வுநாளில் சூம்பின கையையுடைய மனுஷனை அவர் சொஸ்தப்படுத்தினார்
Mat 12:13 பின்பு அந்த மனுஷனை நோக்கி: உன் கையை நீட்டு என்றார். அவன் நீட்டினான்; அது மறுகையைப்போல் சொஸ்தமாயிற்று.

ஓய்வுநாளில் அவர் நன்மை செய்தபடியால் அவரை கொலை செய்யும்படி அவருக்கு விரோதமான ஆலோசனை பண்ணினார்கள்
Mat 12:14 அப்பொழுது, பரிசேயர் வெளியேபோய், அவரைக் கொலைசெய்யும்படி அவருக்கு விரோதமாய் ஆலோசனைபண்ணினார்கள்.
Mar 3:6 உடனே பரிசேயர் புறப்பட்டுப்போய், அவரைக் கொலைசெய்யும்படி, அவருக்கு விரோதமாய் ஏரோதியரோடேகூட ஆலோசனைபண்ணினார்கள்.
Luk 6:11 அவர்களோ மூர்க்கவெறிகொண்டு, இயேசுவை என்ன செய்யலாமென்று ஒருவரோடொருவர் ஆலோசித்தார்கள்.

இயேசு கிறிஸ்து ஓய்வுநாளில் நன்மை செய்வதை யூதர்கள் தடை செய்தார்கள்
Luk 13:10 ஒரு ஓய்வுநாளில் அவர் ஜெபஆலயத்தில் போதகம்பண்ணிக்கொண்டிருந்தார்.
Luk 13:11 அப்பொழுது பதினெட்டு வருஷமாய்ப் பலவீனப்படுத்தும் ஆவியைக் கொண்ட ஒரு ஸ்திரீ அங்கேயிருந்தாள். அவள் எவ்வளவும் நிமிரக்கூடாத கூனியாயிருந்தாள்.
Luk 13:12 இயேசு அவளைக் கண்டு, தம்மிடத்தில் அழைத்து: ஸ்திரீயே, உன் பலவீனத்தினின்று விடுதலையாக்கப்பட்டாய் என்று சொல்லி,
Luk 13:13 அவள்மேல் தமது கைகளை வைத்தார்; உடனே அவள் நிமிர்ந்து, தேவனை மகிமைப்படுத்தினாள்.
Luk 13:14 இயேசு ஓய்வுநாளிலே சொஸ்தமாக்கினபடியால், ஜெப ஆலயத்தலைவன் கோபமடைந்து, ஜனங்களை நோக்கி: வேலைசெய்கிறதற்கு ஆறுநாள் உண்டே, அந்த நாட்களிலே நீங்கள் வந்து சொஸ்தமாக்கிக்கொள்ளுங்கள், ஓய்வுநாளிலே அப்படிச் செய்யலாகாது என்றான்.
Luk 13:15 கர்த்தர் அவனுக்குப் பிரதியுத்தரமாக: மாயக்காரனே, உங்களில் எவனும் ஓய்வுநாளில் தன் எருதையாவது தன் கழுதையையாவது தொழுவத்திலிருந்து அவிழ்த்துக்கொண்டுபோய், அதற்குத் தண்ணீர் காட்டுகிறதில்லையா?
Luk 13:16 இதோ, சாத்தான் பதினெட்டு வருஷமாய்க் கட்டியிருந்த ஆபிரகாமின் குமாரத்தியாகிய இவளை ஓய்வுநாளில் இந்தக் கட்டிலிருந்து அவிழ்த்துவிடவேண்டியதில்லையா என்றார்.
Luk 13:17 அவர் அப்படிச் சொன்னபோது, அவரை விரோதித்திருந்த அனைவரும் வெட்கப்பட்டார்கள். ஜனங்களெல்லாரும் அவரால் செய்யப்பட்ட சகல மகிமையான செய்கைகளைக்குறித்தும் சந்தோஷப்பட்டார்கள்.

இயேசு கிறிஸ்து ஓய்வுநாளில் நீர்க்கோவை வியாதியுள்ள மனுஷனை சொஸ்தமாக்கினார்
Luk 14:1 ஒரு ஓய்வுநாளிலே பரிசேயரில் தலைவனாகிய ஒருவனுடைய வீட்டிலே அவர் போஜனம் பண்ணும்படிக்குப் போயிருந்தார்.
Luk 14:2 அப்பொழுது நீர்க்கோவை வியாதியுள்ள ஒரு மனுஷன் அவருக்கு முன்பாக இருந்தான். என்ன செய்வாரோவென்று ஜனங்கள் அவர்மேல் நோக்கமாயிருந்தார்கள்.
Luk 14:3 இயேசு நியாயசாஸ்திரிகளையும் பரிசேயரையும் பார்த்து: ஓய்வு நாளிலே சொஸ்தமாக்குகிறது நியாயமா என்று கேட்டார்.
Luk 14:4 அதற்கு அவர்கள் பேசாமலிருந்தார்கள். அப்பொழுது அவர் அவனை அழைத்து, சொஸ்தமாக்கி, அனுப்பிவிட்டு,
Luk 14:5 அவர்களை நோக்கி: உங்களில் ஒருவனுடைய கழுதையாவது எருதாவது ஓய்வுநாளில் துரவிலே விழுந்தால், அவன் அதை உடனே தூக்கிவிடானோ என்றார்.
Luk 14:6 அதற்கு உத்தரவுசொல்ல அவர்களால் கூடாமற்போயிற்று.

ஓய்வுநாளில் படுக்கையை எடுத்து கொண்டு நடப்பதை கூட யூதர்கள் நியாயமல்ல என்று சொன்னார்கள்
Joh 5:8 இயேசு அவனை நோக்கி: எழுந்திரு, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நட என்றார்.
Joh 5:9 உடனே அந்த மனுஷன் சொஸ்தமாகி, தன் படுக்கையை எடுத்துக்கொண்டு, நடந்துபோனான். அந்த நாள் ஓய்வுநாளாயிருந்தது.
Joh 5:10 ஆதலால் யூதர்கள் குணமாக்கப்பட்டவனை நோக்கி: இது ஓய்வுநாளாயிருக்கிறதே, படுக்கையை எடுத்துக்கொண்டு போகிறது உனக்கு நியாயமல்ல என்றார்கள்.
Joh 5:11 அவன் அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: என்னைச் சொஸ்தமாக்கினவர், உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நடவென்று எனக்குச் சொன்னார் என்றான்.
Joh 5:12 அதற்கு அவர்கள்: உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நடவென்று உன்னுடனே சொன்ன மனுஷன் யார் என்று அவனிடத்தில் கேட்டார்கள்.

இயேசு கிறிஸ்து இந்த நன்மையை செய்தபடியால் அவரை துன்பப்படுத்து கொலை செய்ய யூதர்கள் வகை தேடினார்கள்
Joh 5:16 இயேசு இவைகளை ஓய்வுநாளில் செய்தபடியால், யூதர்கள் அவரைத் துன்பப்படுத்தி, அவரைக் கொலைசெய்ய வகைதேடினார்கள்.
Joh 5:17 இயேசு அவர்களை நோக்கி: என் பிதா இதுவரைக்கும் கிரியை செய்து வருகிறார், நானும் கிரியை செய்து வருகிறேன் என்றார்.

இயேசு ஓய்வுநாளை மீறினார் என்று அவரை கொலை செய்ய அதிகமாய் வகை தேடினார்கள்
Joh 5:18 அவர் ஓய்வுநாள் கட்டளையை மீறினதுமல்லாமல், தேவனைத் தம்முடைய சொந்தப் பிதா என்றுஞ்சொல்லித் தம்மைத் தேவனுக்குச் சமமாக்கினபடியினாலே, யூதர்கள் அவரைக் கொலைசெய்யும்படி அதிகமாய் வகைதேடினார்கள்.

ஓய்வுநாளில் இயேசு கிறிஸ்து நன்மை செய்தபடியால் அவர் மேல் யூதர்கள் எரிச்சலாய் இருந்தார்கள்
Joh 7:22 விருத்தசேதனம் மோசேயினால் உண்டாகாமல், பிதாக்களால் உண்டாயிற்று; பின்பு மோசே அதை உங்களுக்கு நியமித்தான்; நீங்கள் ஓய்வுநாளிலும் மனுஷனை விருத்தசேதனம் பண்ணுகிறீர்கள்.
Joh 7:23 மோசேயின் நியாயப்பிரமாணம் மீறப்படாதபடிக்கு ஓய்வுநாளில் மனுஷன் விருத்தசேதனம் பெறலாமென்றால், நான் ஓய்வுநாளில் ஒரு மனுஷனை முழுவதும் சுகமாக்கினதினாலே என்மேல் எரிச்சலாயிருக்கலாமா?

  •   நாம் இங்கே பார்த்தது எல்லாம் இஸ்ரவேல் தேசத்தில் நடந்த சம்பவங்கள் என்பதையும் அவர்கள் ஒய்வுநாள் பிரமாணத்திற்கு கீழ்ப்படிந்து இருக்க வேண்டும் என்பதையும் மனதிலே வைத்துக் கொள்ளுங்கள்
  •   இயேசு கிறிஸ்து ஓய்வுநாளில் இதை தவிர வேறொன்றும் செய்ததாக எந்த வேதவாக்கியங்களும் இல்லை
  •   இயேசு கிறிஸ்து ஓய்வுநாளில் ஜனங்களுக்கு போதித்தும் நன்மை செய்தும் அற்புதங்களை செய்து கொண்டும் வந்தார் ஏனென்றால் அவர் ஓய்வுநாளுக்கும் கர்த்தர் என்பதை ஒரு போதும் மறக்காதீர்கள்

கர்த்தருக்கு சித்தமானால் தொடர்ந்து கற்றுக் கொள்ளுவோம்

No comments:

Post a Comment