தேவனுடைய கிருபை என்றால் வேதாகமம் கொடுக்கும் அர்த்தம் என்ன?
இந்த கிருபையின் உபதேசத்தை போதிக்கக்கூடியவர்கள் இந்த கிருபை என்ற
வார்த்தைக்கு அவர்கள் கொடுக்கக்கக்கூடிய அர்த்தம் என்னவென்று பாருங்கள்
தகுதியில்லாத ஒருவனுக்கு தகுதியான ஒன்றை கொடுப்பது தான் கிருபை என்று
சொல்லுகிறார்கள்
அதாவது நாம் தேவனிடத்திலிருந்து பெற்றுக் கொள்ளுவதற்கு நமக்கு எந்த
தகுதியும் இல்லை அதனால் அவர் கொடுக்கக்கூடிய ஈவு எல்லாம் கிருபை தான் என்று
போதிக்கிறார்கள்
கிருபை,தயவு இந்த இரண்டு வார்த்தைகளுக்கும் கிரேக்க வேதாகமத்தில் ஒரே
கிரேக்க வார்த்தை தான்
அநேகர் கிருபை என்பது வேறு தயவு என்பது வேறு என்று நினைக்கிறார்கள்
இந்த வசனத்தை கவனியுங்கள்
Luk 2:52
(KJV) And Jesus increased in wisdom and stature,
and in favour with God and man.
(KJV+) And2532
Jesus2424 increased4298 in wisdom4678
and2532 stature,2244 and2532
in favor5485 with3844 God2316
and2532 man.444
(Tamil OV) இயேசுவானவர் ஞானத்திலும், வளர்த்தியிலும், தேவகிருபையிலும், மனுஷர் தயவிலும் அதிகமதிகமாய் விருத்தியடைந்தார்.
கிருபை என்ற வார்த்தைக்கான கிரேக்க எண் 5485
G5485
χάρις
charis
khar'-ece
From G5463; graciousness (as gratifying)
லூக்கா 2ம்
அதிகாரம் 52ம் வசனத்தில் கிருபை(favor.
grace) என்ற வார்த்தைக்கும் தயவு என்ற வார்த்தைக்கும் ஒரே கிரேக்க எண் தான்.
நம்முடைய தமிழ்மொழிப்பெயர்ப்பாளர்கள் தேவனுக்கு சம்பந்தமாக வரும் போது
கிருபை என்றும் மனுஷருக்கு சம்பந்தமாக வரும் போது தயவு என்றும் மொழிப்பெயர்த்து
இருக்கிறார்கள்
லூக்கா 2ம்
அதிகாரம் 52ம் வசனத்தில் கிருபைக்கும் தயவுக்கும் தனி தனியாக மொழிப்பெயர்த்து
இருக்கிறார்கள், ஆனால் கிரேக்க வேதாகமத்தில் அப்படி வசனம் இல்லை. கிருபை(தயவு) ஒரே
ஒரு முறை தான் இந்த வசனத்தில் வந்து இருக்கிறது
இதற்கு மேலே உள்ள
வசன ஆதாரமே சாட்சி
நீங்கள் புதிய
ஏற்பாட்டு வேதாகமம் முழுவதும் தேடிப்பாருங்கள் கிருபைக்கும் தயவுக்கும் ஒரே
கிரேக்க வார்த்தையைத் தான் தேவன் பயன்படுத்தி இருக்கிறார்கள்
இந்த வசனத்தை கவனியுங்கள்
ஜனங்களிடத்தில் தயவு பெற்றிருந்தார்கள்
என்ற வார்த்தை கிரேக்க மொழியில் அதே 5485 எண் தான் அதாவது கிருபை பெற்று
இருந்தார்கள்
Act 2:47
(KJV) Praising God, and having favour with all the
people. And the Lord added to the church daily such as should be saved.
(KJV+) Praising134
God,2316 and2532 having2192
favor5485 with4314 all3650
the3588 people.2992 And1161
the3588 Lord2962 added4369
to the3588 church1577 daily2596,
2250 such as should be saved.4982
(Tamil OV) தேவனைத் துதித்து, ஜனங்களெல்லாரிடத்திலும் தயவுபெற்றிருந்தார்கள். இரட்சிக்கப்படுகிறவர்களைக் கர்த்தர் அநுதினமும் சபையிலே சேர்த்துக்கொண்டு வந்தார்.
கிருபை என்ற வார்த்தை
தேவனுக்குரியது என்றால் இந்த வசனத்தின் படி மனுஷர்களிடத்தில் நீங்கள் எப்படி
கிருபையை பெற்றுக் கொள்ளுவீர்கள்
இன்னொரு வசனத்தையும் கவனியுங்கள்
யூதருக்கு தயவு செய்யமனதாய்ப் பேலிக்ஸ் பவுலை காவலில் வைத்து விட்டு
போனான் என்று வசனத்தில் தயவு என்ற வார்த்தைக்கு தேவனுக்கு பயன்படுத்தக்கூடிய அதே
கிரேக்க எண் தான் 5485
Act 24:27
(KJV) But after two years Porcius Festus came into
Felix' room: and Felix, willing to shew the Jews a pleasure, left Paul bound.
(KJV+) But1161
after two years4137, 1333 Porcius4201 Festus5347
came into Felix' room:2983, 1240, 5344
and5037 Felix,5344 willing2309
to show2698 the3588 Jews2453
a pleasure,5485 left2641 Paul3972
bound.1210
(Tamil OV) இரண்டு வருஷம் சென்றபின்பு பேலிக்ஸ் என்பவனுக்குப் பதிலாய்ப் பொர்க்கியுபெஸ்து தேசாதிபதியாக வந்தான்; அப்பொழுது பேலிக்ஸ் யூதருக்குத் தயவுசெய்ய மனதாய்ப் பவுலைக் காவலில் வைத்துவிட்டுப்போனான்.
கிருபை என்ற வார்த்தை
தேவனுக்குரியது என்றால் இந்த வசனத்தில் பேலிக்ஸ் யூதர்களுடைய கிருபையை பெறும்படி
முயற்சி செய்தது ஏன்?
கள்ள கிருபையின்
உபதேசத்தை போதிக்கிறவர்கள் தகுதியில்லாத ஒருவனுக்கு தகுதியான ஒன்றை கொடுப்பது தான்
கிருபை என்று சொல்லுகிறார்களே இந்த வேத வாக்கியங்களுக்கு என்ன பதில்
சொல்லப்போகிறார்கள்
நாம் தேவனுடைய கிருபையை
(தயவை) பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை குறித்து கர்த்தருக்கு சித்தமானால் தொடர்ந்து
கற்றுக் கொள்ளுவோம்
No comments:
Post a Comment