பாடம்
:14 ஓய்வு நாள் பிரமாண உபதேசங்கள்
ஏழாம் ஒய்வுநாள்
ஆசரிப்பு சபையார் ஓய்வுநாள் எல்லா மனிதர்களுக்கும் கொடுக்கப்பட்டது என்று வாதிடுகிறார்கள்
வேத வாக்கியங்கள் அப்படி போதிக்கிறதா?
வேத
வாக்கியங்கள் அப்படி ஒருபோதும் போதிப்பது
இல்லை
நெகேமியா தேவன் இஸ்ரவேல் ஜனங்களுக்கு தான் பத்து
கற்பனைகளையும் ஓய்வுநாளையும் தெரியப்படுத்தினார்
என்றார்
Neh 9:13 நீர் சீனாய் மலையிலிறங்கி, வானத்திலிருந்து அவர்களோடே பேசி, அவர்களுக்குச் செம்மையான நீதிநியாயங்களையும், நல்ல கட்டளைகளும் கற்பனைகளுமாகிய உண்மையான பிரமாணங்களையும் கொடுத்தீர்.
Neh 9:14 உமது பரிசுத்த ஓய்வுநாளை அவர்களுக்குத் தெரியப்படுத்தி, உமது தாசனாகிய மோசேயைக்கொண்டு, அவர்களுக்குக் கற்பனைகளையும், கட்டளைகளையும், நியாயப்பிரமாணங்களையும் கற்பித்தீர்.
இஸ்ரவேல் ஜனங்கள் தங்கள் ஓய்வுநாளை தேவன் சொன்னபடி ஆசாரிப்போம் என்று ஆணையிட்டு சொன்னார்கள்
Neh 10:31 தேசத்தின் ஜனங்கள் ஓய்வுநாளிலே சரக்குகளையும், எந்தவிதத் தானியதவசத்தையும் விற்கிறதற்குக் கொண்டுவந்தால், நாங்கள் அதை ஓய்வுநாளிலும் பரிசுத்தநாளிலும் அவர்கள் கையில் கொள்ளாதிருப்போம் என்றும், நாங்கள் ஏழாம் வருஷத்தை விடுதலை வருஷமாக்கிச் சகல கடன்களையும் விட்டுவிடுவோம் என்றும் ஆணையிட்டுப் பிரமாணம்பண்ணினார்கள்.
- இங்கே தேசத்தின் ஜனங்கள் என்று இஸ்ரவேர்கள் சொல்லுவதினாலே அவர்கள் புறஜாதிகளாயிருக்கிறார்கள்
- புறஜாதிகள் ஒய்வுநாளிலே பொருள்களை விற்கிறதற்கு கொண்டு வந்தால் நாங்கள் வாங்கமாட்டோம் என்று சொல்லுவதினாலே அது இஸ்ரவேலர்களுக்கு மாத்திரம் கொடுக்கப்பட்டது
- புறஜாதிகள் ஓய்வுநாளில் இஸ்ரவேல் தேசத்திற்கு வந்து பொருள்களை விற்பதினாலே ஓய்வுநாள் பிரமாணத்திற்கு அவர்கள் கட்டுப்பட்டவர்கள் அல்ல என்பதை இந்த வேத வாக்கியம் நமக்கு போதிக்கிறது
ஓய்வுநாளில் யூதாவில் இருந்த
இஸ்ரவேலர்கள் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட ஓய்வுநாளிலே வேலை செய்து கொண்டு இருந்தார்கள்
Neh 13:15 அந்த நாட்களில் நான் யூதாவிலே ஓய்வுநாளில் சிலர் ஆலைகளை மிதிக்கிறதையும், சிலர் தானியப் பொதிகளைக் கழுதைகள்மேல் ஏற்றிக்கொண்டு வருகிறதையும், திராட்சரசம், திராட்சப்பழம், அத்திப்பழம் முதலானவைகளின் பற்பல சுமைகளை ஓய்வுநாளிலே எருசலேமுக்குக் கொண்டுவருகிறதையும் கண்டு, அவர்கள் தின்பண்டம் விற்கிற நாளைப்பற்றி அவர்களைத் திடசாட்சியாய்க் கடிந்துகொண்டேன்.
Neh 13:16 மீனையும் சகலவித சரக்குகளையும் கொண்டுவந்து, ஓய்வுநாளிலே யூதா புத்திரருக்கும் எருசலேமில் இருக்கிறவர்களுக்கும் விற்கிற சில தீரியரும் உள்ளே குடியிருந்தார்கள்.
- நெகேமியா அப்படி செய்தவர்களை திடசாட்சியாக கடிந்து கொண்டார்
- யூதா புத்திரருக்கும் எருசலேமில் இருக்கிறவர்களுக்கும் மீனையும் சகலவித சரக்குகளையும் கொண்டு வந்து விற்கிற புறஜாதிகளாயிருந்த தீரியரும் உள்ளே குடியிருந்தார்கள்
Neh 13:17 ஆகையால் நான் யூதாவின் பெரியவர்களைக் கடிந்துகொண்டு: நீங்கள் ஓய்வுநாளைப் பரிசுத்தக் குலைச்சலாக்குகிற இந்தப் பொல்லாத செய்கையென்ன?
- நெகேமியா யூதாவின் பெரியர்களை ஒய்வுநாளைப் பரிசுத்த குலைச்சாலாக்குறி இந்த பொல்லாத செய்கையென்ன என்று கடிந்து கொண்டார்
- நெகேமியா ஏன் தீரியரை கடிந்து கொள்ளவில்லை ஏனென்றால் தீரியருக்கு அந்த ஓய்வுநாள் பிரமாணம் கொடுக்கப்பட வில்லை
இஸ்ரவேலர்கள் மேலும் எருசலேம் நகரத்தின்
மேலும் இந்த தீங்கை தேவன் வரப்பண்ணினார் என்று நெகேமியா சொல்லுவதை கவனியுங்கள்
Neh 13:18 உங்கள் பிதாக்கள் இப்படிச் செய்ததினாலல்லவா, நமது தேவன் நம்மேலும் இந்த நகரத்தின்மேலும் இந்தத் தீங்கையெல்லாம் வரப்பண்ணினார்; நீங்களோவென்றால் ஓய்வுநாளைப் பரிசுத்தக் குலைச்சலாக்குகிறதினால், இஸ்ரவேலின் மேலிருக்கிற உக்கிரத்தை அதிகரிக்கப்பண்ணுகிறீர்கள் என்று அவர்களுக்குச் சொன்னேன்.
- தேவன் அவர்களை புறஜாதிகளின் கையில் ஒப்புக்கொடுத்ததற்கு காரணம் அவர்கள் தேவனுடைய கட்டளையை மீறி ஒய்வுநாளை பரிசுத்தகுலைச்சாலாக்கி போட்டத்தினால் தான் என்று நெகேமியா அவர்களை கடிந்து கொண்டார்
நெகேமியா இஸ்ரவேல் ஜனங்கள்
ஓய்வுநாளை எப்படி ஆசரிக்க வேண்டும் என்று கட்டளையிட்டார்?
Neh 13:19 ஆகையால் ஓய்வுநாளுக்கு முன்னே எருசலேமின் பட்டணவாசலில், மாலைமயங்கும்போது, கதவுகளைப் பூட்டவும், ஓய்வுநாள் முடியுமட்டும் அவைகளைத் திறவாதிருக்கவும் வேண்டுமென்று கட்டளையிட்டு, ஓய்வுநாளிலே ஒரு சுமையும் உள்ளே வராதபடிக்கு வாசலண்டையிலே என் வேலைக்காரரில் சிலரை நிறுத்தினேன்.
- ஓய்வுநாளுக்கு முன்னே எருலேமின் பட்டணவாசலில் மாலை மயங்கும் போது கதவுகளைப் பூட்ட வேண்டும
- ஓய்வுநாள் முடியும் மட்டும் கதவுகளை திறக்கக்கூடாது
- ஓய்வுநாளில் ஒரு சுமையும் உள்ளே வரக்கூடாது என்பதற்கு வேலைக்காரர்களை வாசலண்டையிலே காவலில் வைத்தார்
எருசலேமிக்கு புறம்பே இராத்தங்கின
புறஜாதிகளை நெகேமியாக ஏன் திடசாட்சியாக கடிந்து கொண்டார்
Neh 13:20 அதினால் வர்த்தகரும், சகலவித சரக்குகளை விற்கிறவர்களும், இரண்டொருதரம் எருசலேமுக்குப் புறம்பே இராத்தங்கினார்கள்.
Neh 13:21 அப்பொழுது நான் அவர்களைத் திடசாட்சியாய்க் கடிந்துகொண்டு, நீங்கள் அலங்கத்தண்டையிலே இராத்தங்குகிறது என்ன? நீங்கள் மறுபடியும் இப்படிச் செய்தால், உங்கள்மேல் கைபோடுவேன் என்று அவர்களோடே சொன்னேன்; அதுமுதல் அவர்கள் ஓய்வுநாளில் வராதிருந்தார்கள்.
- புறஜாதிகள் வியாபாரம் செய்வதற்காக எருசலேமின் வாசலண்டையிலே ஓய்வுநாளில் எருசலேமின் வாசலண்டையிலே காத்து இருந்தபடியாலே அவர்களை நெகேமியாக கடிந்து கொண்டார்
- நெகேமியா ஏன் அவர்களை ஓய்வுநாளை ஆசரியுங்கள் என்று சொல்லவில்லை? ஏனென்றால் அந்த பிரமாணம் புறஜாதிகளுக்கு கொடுக்கப்படவில்லை
- ஓய்வுநாளில் அலங்கத்தண்டையிலே இராத்தங்கினால் உங்களை அடிப்பேன்(கைபோடுவேன்) என்று புறஜாதிகளை திடசாட்சியாக கடிந்து கொண்டபடியால் அதற்கு பிறகு அவர்கள் வரவில்லை
நெகேமியா லேவியர்களை ஓய்வுநாளை
பரிசுத்தமாக்கும்படிக்கு உங்களை சுத்திகரித்து
வாசல்களை காக்க வாருங்கள் என்று சொன்னார்
Neh 13:22 ஓய்வுநாளைப் பரிசுத்தமாக்கும்படிக்கு, உங்களைச் சுத்தம்பண்ணிக்கொண்டு வாசல்களைக் காக்க வாருங்கள் என்று லேவியருக்கும் சொன்னேன். என் தேவனே, இதைக்குறித்து நீர் என்னை நினைத்தருளி, உம்முடைய மிகுந்த கிருபையின்படி எனக்கு இரங்குவீராக.
நெகேமியாவின்
புஸ்தகத்தில் நாம் கற்றுக் கொண்டது என்ன?
- பத்துகற்பனைகளும் ஓய்வுநாள் பிரமாணமும் இஸ்ரவேலர்களுக்கு கொடுக்கப்பட்டது
- தேவனுடைய கட்டளைகளை மீறி ஓய்வுநாளை பரிசுத்தகுலைச்சலாக்கி போட்டபடியால் தான் தேவன் அவர்களை அடிமைகளாக ஒப்புக் கொடுத்தார்
- நெகேமியா காலத்தில் இருந்த இஸ்ரவேலர்கள் ஓய்வுநாளை பரிசுத்தமாய் ஆசாரிப்போம் என்று ஆணையிட்டார்கள்
- புறஜாதிகள் ஓய்வுநாளில் கொண்டு வரும் எந்த பொருள்களையும் வாங்கமாட்டோம் என்று ஆணையிட்டார்கள்
- ஓய்வுநாளில் எந்த சுமையும் எருசலேமிக்குள் வராதபடிக்கு எருசலேமின் வாசல் கதவுகள் அடைக்கப்பட்டது
- ஓய்வுநாளில் எருசலேமின் அலங்கத்தண்டையிலே வியாபாரிகளாய் இருந்த புறஜாதிகளை நெகேமியா ஓய்வுநாளில் உள்ளே வரக்கூடாது என்றும் இராத்தங்கக்கூடாது என்றும் திடசாட்சியாக கடிந்து கொண்டார், ஏனென்றால் ஓய்வுநாள் புறஜாதிகளுக்கு கொடுக்கப்படவில்லை
- ஓய்வுநாளை பரிசுத்தமாக்கவும் வாசலைக்காக்கவும் லேவியர்களுக்கு நெகேமியாக கட்டளையிட்டார்
கர்த்தருக்கு
சித்தமானால் தொடர்ந்து கற்றுக் கொள்ளுவோம்
No comments:
Post a Comment