Sunday, 25 March 2018

டயோனசர் பற்றி நம்முடைய பிள்ளைகளுக்கு என்ன சொல்லி கொடுத்து இருக்கிறோம்?



இன்றைக்கு உலகம் மிக பிரமாண்டமான ஒரு ஜீவராசியைப் பற்றி பேசுகிறது என்றால் அது பெரும்பாலும் டயோனசர் பற்றி தான் இருக்கும்.

இந்த டயோனசர் பற்றி நம்முடைய பிள்ளைகளுக்கு நாம் என்ன சொல்லி கொடுத்து இருக்கிறோம். 

நம்முடைய பிள்ளைகளுடைய பாடபுத்தகங்களில் டயோனசர் 500மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பதாக  வாழ்ந்தாகவும் அந்த காலத்திற்கு ஜுராஸிக் காலம் என்றும் அந்த காலகட்டத்தில் மனித இனம் தோன்றி இருக்கவில்லை என்றும் போதிக்கப்படுகிறது.

டயோனசரருடைய இனம் அழிந்த பிறகு தான் மனித இனம் தோன்றியது என்று பரிணாம கொள்கையாளர்கள் சொல்லி பிள்ளைகளின் இருதயங்களை கெடுத்து கொண்டு இருக்கிறார்கள். அதை பற்றி நாம் கவலைப்படுகிறோமா?

பெற்றோர்களே உங்களுடைய பிள்ளைகளின் புத்தகங்களில் இன்றைக்கு தேவன் இல்லையென்று சொல்லக்கூடிய அநேக பாடங்கள் அச்சிடப்பட்டு நம்முடைய பிள்ளைகளின் இருதயங்களில் அது விதைக்கப்பட்டு கொண்டு இருக்கிறது அதை பற்றி நீங்கள் கவலைப்படுகிறீர்களா? ஒரு காலகட்டத்தில் அவர்கள் தேவன் இல்லை என்று சொல்லக்கூடிய மதிகேடர்களா மாறி போய் விடுவார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா?

நாம் டயோனசர் பற்றி நம்முடைய பிள்ளைகளுக்கு வேத வசனங்களோடு நாம் கற்றுக் கொடுக்க வேண்டும் 

தேவன் இந்த உலகத்தை சிருஷ்டித்த போது ஆறாம் நாளில் சகல காட்டு மிருகங்கள் நாட்டு மிருகங்கள் ஊரும் பிராணிகள் கடைசியாக

மனுஷனையையும் மனுஷியையும்
சிருஷ்டித்தார்

Gen 1:24 பின்பு தேவன்: பூமியானது ஜாதிஜாதியான ஜீவஜந்துக்களாகிய நாட்டுமிருகங்களையும், ஊரும் பிராணிகளையும், காட்டுமிருகங்களையும், ஜாதிஜாதியாகப் பிறப்பிக்கக்கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று.


  • சகல காட்டுமிருகங்கள் என்று சொல்லும் போது அதில் டயோனசரும் அடங்கும் என்பது இந்த வசனத்தில் நமக்கு பாடமாக இருக்கிறது


தேவன் எல்லாவற்றையும் சிருஷ்டித்த பின்பு அதற்கெல்லாம் பெயரிடும்படி ஆதாமிடத்தில் கொண்டு வந்தார்
Gen 2:19 தேவனாகிய கர்த்தர் வெளியின் சகலவித மிருகங்களையும், ஆகாயத்தின் சகலவிதப் பறவைகளையும் மண்ணினாலே உருவாக்கி, ஆதாம் அவைகளுக்கு என்ன பேரிடுவான் என்று பார்க்கும்படி அவைகளை அவனிடத்தில் கொண்டுவந்தார்; அந்தந்த ஜீவஜந்துக்கு ஆதாம் எந்தெந்தப் பேரிட்டானோ அதுவே அதற்குப் பேராயிற்று.
Gen 2:20 அப்படியே ஆதாம் சகலவித நாட்டுமிருகங்களுக்கும், ஆகாயத்துப் பறவைகளுக்கும், சகலவிதக் காட்டுமிருகங்களுக்கும் பேரிட்டான்; ஆதாமுக்கோ ஏற்ற துணை இன்னும் காணப்படவில்லை.


  • ஆதாம் சகல காட்டு மிருகங்களும் பெயரிட்டார் என்றால் மனிதன் இன்றைக்கு டயோனசர் என்று அழைக்க கூடிய மிருகத்திற்கும் அவர் தான் பெயரிட்டு இருக்க வேண்டும், ஆனால் என்ன பெயர் வைத்தார் என்பது நமக்கு தெரியாது
  •  டயோனசர் என்றால் அதற்கான அர்த்தம் பயங்கரமான மிருகம் என்று அர்த்தம்
  • விஞ்ஞானிகள் இந்த டயோனசருக்கு அர்ஜென்டினசுரஸ் என்று பெயர் வைத்து இருக்கிறார்கள்


தேவன் இந்த டயோனசரை பிகொமோத் என்று அழைக்கிறார்
Job 40:15 இப்போதும் பிகெமோத்தை நீ கவனித்துப்பார்;...........

யோவுவின் காலகட்டதில் இந்த டயோனசர்கள் வாழ்ந்து இருக்கிறது அதனால் தான் யோபுவினிடத்தில் அதை கவனித்து பார் என்கிறார்

இந்த டயோனசரை (பிகொமோத்) உண்டாக்கியது பரலோகத்தின் தேவன்
Job 40:15 இப்போதும் பிகெமோத்தை நீ கவனித்துப்பார்; உன்னை உண்டாக்கினதுபோல அதையும் உண்டாக்கினேன்........

இந்த பிகொமோத்(டயோனசர்) என்ன சாப்பிடும் என்று தேவன் சொல்லுகிறார்
Job 40:15 .......அது மாட்டைப்போல் புல்லைத் தின்னும்.

டயோனசருடைய பலமும் வீரியமும் எங்கே இருக்கிறது?
Job 40:16 இதோ, அதினுடைய பெலன் அதின் இடுப்பிலும், அதின் வீரியம் அதின் வயிற்றின் நரம்புகளிலும் இருக்கிறது.

டயோனசருடைய வால் எவ்வளவு நீளமுள்ளது?
Job 40:17 அது தன் வாலைக் கேதுருமரத்தைப்போல் நீட்டுகிறது; அதின் இடுப்பு நரம்புகள் பின்னிக்கொண்டிருக்கிறது.

டயோனசருடைய எலும்புகள் எப்படிப்பட்ட உறுதியுள்ளது?
Job 40:18 அதின் எலும்புகள் கெட்டியான வெண்கலத்தைப்போலவும், அதின் அஸ்திகள் இருப்புக் கம்பிகளைப்போலவும் இருக்கிறது.

டயோனசர் தேவனுடைய கிரியைகளில் பிரதான கிரியை. அதற்கு ஒரு பட்டயத்தையும் (ஒரு வேளை தன்னை பாதுகாத்து கொள்ள) கொடுத்து இருக்கிறார்
Job 40:19 அது தேவனுடைய கிரியைகளில் பிரதானமான ஒரு கிரியை, அதை உண்டாக்கினவர் அதற்கு ஒரு பட்டயத்தையும் கொடுத்தார்.

டயோனசர் எங்கே மேயும்?
Job 40:20 காட்டுமிருகங்கள் யாவும் விளையாடுகிற மலைகள் அதற்கு மேய்ச்சலை விளைவிக்கும்.

டயோனசர் எங்கே படுத்துக் கொள்ளும்?
Job 40:21 அது நிழலுள்ள செடிகளின் கீழும், நாணலின் மறைவிலும், உளையிலும் படுத்துக்கொள்ளும்.
Job 40:22 தழைகளின் நிழல் அதைக் கவிந்து, நதியின் அலரிகள் அதைச் சூழ்ந்துகொள்ளும்.

யோர்தான் நதி முழுவதும் வந்து டயோனசருடைய முகத்தில் மோதினாலும் அது அசையாமல் இருக்கும்
Job 40:23 இதோ, நதி புரண்டு வந்தாலும் அது பயந்தோடாது; யோர்தான் நதியத்தனை தண்ணீர் அதின் முகத்தில் மோதினாலும் அது அசையாமலிருக்கும்.

டயோனசரை மூக்கணங் கயிறு போட்டு யாரும் அதை பிடிக்க முடியாது
Job 40:24 அதின் கண்கள் பார்த்திருக்க அதை யார் பிடிக்கக்கூடும்? மூக்கணாங்கயிறுபோட அதின் மூக்கை யார் குத்தக்கூடும்?

  • மேலே சொல்லப்பட்ட ஒவ்வொரு வார்த்தையும் அந்த மிருகத்தை பற்றி தேவன் யோபுவிடம் சொல்லுகிறார்
  • டயனோசர் யோபுவின் காலக்கட்டத்தில் வாழ்ந்து இருக்கிறது என்பது தேவன் நமக்கு கொடுக்கும் ஆதாரமாக இருக்கிறது

  • ஆனால் இன்றைக்கு பரிணாம கொள்கையாளர்களும் சில விஞ்ஞானிகளும் 500 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பதாக டயோனசர் வாழ்ந்ததாக நம்முடைய பிள்ளைகளுடைய பாட புத்தகங்களில் போதிக்கிறார்கள்
  • ஆனால் இன்றைய கண்டுபிடிப்புகளில் எகிப்து. ஆப்பிரிகா. அமெரிக்கா போன்ற நாடுகளிலும் இன்னும் சில நாடுகளிலும் டயோனசரும் மனிதனும் ஒன்றாக வாழ்ந்து இருக்கிறார்கள் என்ற உண்மையை கண்டு பிடித்து இருக்கிறார்கள்
  • அநேக குகை ஒவியங்கள். புதை படிவங்கள் போன்றவைகளில் மனிதனும் டயோனசரும் வாழ்ந்து இருக்கிறார்கள் என்று தத்துரூபமான ஓவியங்களும் காலடி தடங்களின் படிவங்களும் கிடைத்து இருக்கிறது
  • கி,பி 1500ல் வாழ்ந்த மக்கள் (இவர்களுடைய காலத்திலும் டயோனசர் வாழ்ந்து இருக்கிறது) டயோனசரைப்பற்றி தத்ரூபமான ஓவியங்களை வரைந்து வைத்து இருக்கிறார்கள்.
  • கிடைக்கப்பட்ட ஆதாரங்கள் பரிணாம கொள்கையாளர்களுக்கு எதிராக இருப்பதால் அவர்கள் என்ன செய்வது என்று அறியாமல் புலம்பிக்  கொண்டு இருக்கிறார்கள்

ஆகையால் உங்கள் பிள்ளைகள் படிக்கக்கூடிய பாடங்களை குறித்து எச்சரிக்கையாக  இருங்கள். தேவனுக்கு விரோதமான எந்த பாடங்கள் இருந்தாலும் அது தவறு என்று போதித்து தேவனுடைய உண்மையான சத்தியங்களை அவர்களுக்கு கற்றுக் கொடுங்கள்
1Ti 6:20 தீமோத்தேயுவே, உன்னிடத்தில் ஒப்புவிக்கப்பட்டதை நீ காத்துக்கொண்டு, சீர்கேடான வீண்பேச்சுகளுக்கும், ஞானமென்று  பொய்யாய்ப் பேர்பெற்றிருக்கிற கொள்கையின் விபரீதங்களுக்கும் விலகு.

  • ஞானமென்று என்ற இந்த வார்த்தை கிரேக்க வேதாகமத்தில் அறிவியல் என்று பொய்யாய் பேர் பெற்று இருக்கிற என்று வந்து இருக்கிறது. ஆகையால் இப்படிப்பட்ட கொள்கையின் விபரீதங்களுக்கு நாம் விலகி இருக்க வேண்டும்
  • விஞ்ஞானிகள் சொல்லக்கூடிய கட்டுக்கதைகளுக்கு நாம் ஒருபோதும் செவி கொடுக்கக்கூடாது
  • வேத வாக்கியங்களே நமக்கு தேவன் கொடுத்த ஆதாரமாய் இருக்கிறது அவைகளின் மீது தான் நம்முடைய விசுவாசத்தையும் நம்பிக்கையையும் வைக்க வேண்டும்

  • யோனசரை சிருஷ்டித்தவர் நம்முடைய பரலோகத்தின் தேவன் அதை ஏதோ ஒரு நோக்கத்திற்காக அதை அழித்துப் போட்டு இருக்கிறார்
  • தேவன் தான் டயோனசரை சிருஷ்டித்தார் என்றும் மனிதனுடைய கால கட்டத்தில் அது வாழ்ந்து இருக்கிறது என்றும் உங்கள் பிள்ளைகளுக்கு ஒருபோதும் சொல்லி கொடுக்க மறக்காதீர்கள்

















No comments:

Post a Comment