Thursday, 15 March 2018

பத்துக்கட்டளையைப் பார்க்கிலும் மேலான பிரமாணம் புதிய ஏற்பாட்டில் கொடுக்கப்பட்டு இருக்கிறது

பாடம் :13 ஓய்வு நாள் பிரமாண உபதேசங்கள்                                                


 ஓய்வுநாளை ஆசரிக்கிறவர்கள் பத்துக்கட்டளை மேலானது என்றும் அது பரித்தமானது என்றும் அதை ஆசரிக்காதவர்களை சபித்தும் கொண்டும் இருக்கிறார்கள்

ஆனால் அந்த பத்துக்கட்டளையைக் காட்டிலும் மேலான புதிய பிரமாணம் கொடுக்கப்பட்டு இருக்கிறது

பத்துக்கட்டளையும் புதிய கட்டளையும் (கிறிஸ்துவின் பிரமாணம்)

1) என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்க வேண்டாம்
Exo 20:3 என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்கவேண்டாம்.

கிறிஸ்துவின் உபதேசம்
பிதாவாகிய ஓரே தேவன் நமக்கு உண்டு
1Co 8:6 பிதாவாகிய ஒரே தேவன் நமக்குண்டு, அவராலே சகலமும் உண்டாயிருக்கிறது; அவருக்கென்று நாமும் உண்டாயிருக்கிறோம். இயேசு கிறிஸ்து என்னும் ஒரே கர்த்தரும் நமக்குண்டு; அவர் மூலமாய்ச் சகலமும் உண்டாயிருக்கிறது, அவர் மூலமாய் நாமும் உண்டாயிருக்கிறோம்.
Joh 17:3 ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்.

2) நீ உனக்கு யாதொரு சொரூபத்தையாகிலும் விக்கிரகத்தையாகிலும் உண்டாக்க வேண்டாம் நீ உனக்கு வேண்டாம்
Exo 20:3 என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்கவேண்டாம்.
Exo 20:4 மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின் கீழ்த் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சொரூபத்தையாகிலும் யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்கவேண்டாம்;

கிறிஸ்துவின் உபதேசம்
உலகத்திலே விக்கிரகமானது ஒன்றுமில்லையென்று ஒருவரேயன்றி வேறொரு தேவன் இல்லை
1Co 8:4 ,,, உலகத்திலே விக்கிரகமானது ஒன்றுமில்லையென்றும் ஒருவரேயன்றி வேறொரு தேவன் இல்லையென்றும் அறிந்திருக்கிறோம்.
1Co 10:7 ,,, அவர்களில் சிலர் விக்கிரகாராதனைக்காரர் ஆனதுபோல நீங்களும் ஆகாதிருங்கள்.
1Co 10:14 ஆகையால் எனக்குப் பிரியமானவர்களே, விக்கிரகாராதனைக்கு விலகி ஓடுங்கள்.

புதிய ஏற்பாட்டிலும் பொருளாசை விக்கிரக ஆராதனையாக இருக்கிறது
Eph 5:5 ... விக்கிரகாராதனைக்காரனாகிய பொருளாசைக்காரனாவது தேவனுடைய ராஜ்யமாகிய கிறிஸ்துவின் ராஜ்யத்திலே சுதந்தரமடைவதில்லையென்று அறிந்திருக்கிறீர்களே.
Col 3:5 ... விக்கிரகாராதனையான பொருளாசை ஆகிய இவைகளைப் பூமியில் உண்டுபண்ணுகிற உங்கள் அவயவங்களை அழித்துப்போடுங்கள்.

3) உன் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தை வீணிலே வழங்காதிருப்பாயாக
Exo 20:7 உன் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தை வீணிலே வழங்காதிருப்பாயாக; கர்த்தர் தம்முடைய நாமத்தை வீணிலே வழங்குகிறவனைத் தண்டியாமல் விடார்.

கிறிஸ்துவின் உபதேசம்
வீணிலே வழங்குவது என்பது பொய்யாணை ஈடுவது
Mat 5:37 உள்ளதை உள்ளதென்றும், இல்லதை இல்லதென்றும் சொல்லுங்கள்; இதற்கு மிஞ்சினது தீமையினால் உண்டாயிருக்கும்.
Eph 4:25 அன்றியும், நாம் ஒருவருக்கொருவர் அவயவங்களாயிருக்கிறபடியால், பொய்யைக் களைந்து, அவனவன் பிறனுடனே மெய்யைப் பேசக்கடவன்.
Mat 7:21 பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை.

4) ஓய்வு நாளை பரிசுத்தமாய் ஆசரிக்க நினைப்பாயாக
Exo 20:8 ஓய்வுநாளைப் பரிசுத்தமாய் ஆசரிக்க நினைப்பாயாக;

கிறிஸ்துவின் உபதேசம்
கிறிஸ்து உயிர்தெழுந்த வாரத்தின் முதல் நாள் பரலோகத்தின் தேவனை அப்பம் பிட்டு ஆராதிக்கக்கூடிய நாள்
Joh 4:24 தேவன் ஆவியாயிருக்கிறார், அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ளவேண்டும் என்றார்.
Heb 10:25 சபை கூடிவருதலைச் சிலர் விட்டுவிடுகிறதுபோல நாமும் விட்டுவிடாமல், ஒருவருக்கொருவர் புத்திசொல்லக்கடவோம்; நாளானது சமீபித்துவருகிறதை எவ்வளவாய்ப் பார்க்கிறீர்களோ அவ்வளவாய்ப் புத்திசொல்லவேண்டும்.
Heb 13:15 ஆகையால், அவருடைய நாமத்தைத் துதிக்கும் உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திரபலியை அவர்மூலமாய் எப்போதும் தேவனுக்குச் செலுத்தக்கடவோம்.

ஒவ்வொரு நாளும் பரிசுத்தமாய் வாழ வேண்டும்
2Co 7:1 இப்படிப்பட்ட வாக்குத்தத்தங்கள் நமக்கு உண்டாயிருக்கிறபடியினால், பிரியமானவர்களே, மாம்சத்திலும் ஆவியிலும் உண்டான எல்லா அசுசியும் நீங்க, நம்மைச் சுத்திகரித்துக்கொண்டு, பரிசுத்தமாகுதலைத் தேவபயத்தோடே பூரணப்படுத்தக்கடவோம்.
2Co 4:16 ஆனபடியினாலே நாங்கள் சோர்ந்துபோகிறதில்லை; எங்கள் புறம்பான மனுஷனானது அழிந்தும், உள்ளான மனுஷனானது நாளுக்குநாள் புதிதாக்கப்படுகிறது.

5) உன் தகப்பனையும் தாயையும் கனம் பண்ணுவாயாக
Exo 20:12 உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கிற தேசத்திலே உன் நாட்கள் நீடித்திருப்பதற்கு, உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக.


கிறிஸ்துவின் உபதேசம்
புதிய ஏற்பாட்டில் பிள்ளைகள் பெற்றோருக்கு கீழ்ப்படிய வேண்டும் என்று தேவன் கட்டளையிட்டு இருக்கிறார்
Eph 6:1 பிள்ளைகளே, உங்கள் பெற்றாருக்குக் கர்த்தருக்குள் கீழ்ப்படியுங்கள், இது நியாயம்.
Eph 6:2 உனக்கு நன்மை உண்டாயிருப்பதற்கும், பூமியிலே உன் வாழ்நாள் நீடித்திருப்பதற்கும்,
Eph 6:3 உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக என்பதே வாக்குத்தத்தமுள்ள முதலாங் கற்பனையாயிருக்கிறது.
Col 3:20 பிள்ளைகளே, உங்களைப் பெற்றாருக்கு எல்லாக் காரியத்திலேயும் கீழ்ப்படியுங்கள்; இது கர்த்தருக்குப் பிரியமானது.

6) கொலை செய்யாதிருப்பாயாக
Exo 20:13 கொலை செய்யாதிருப்பாயாக.

கிறிஸ்துவின் உபதேசம்
1Pe 4:15 ஆதலால் உங்களில் ஒருவனும் கொலைபாதகனாயாவது, திருடனாயாவது, பொல்லாங்கு செய்தவனாயாவது, அந்நிய காரியங்களில் தலையிட்டுக்கொண்டவனாயாவது பாடுபடுகிறவனாயிருக்கக்கூடாது.

தன் சகோதரனை பகைத்தாலே அவன் மனுஷ கொலைபாதகனாக இருக்கிறான்
1Jo 3:15 தன் சகோதரனைப் பகைக்கிற எவனும் மனுஷ கொலைபாதகனாயிருக்கிறான்; மனுஷ கொலைபாதகனெவனோ அவனுக்குள் நித்தியஜீவன் நிலைத்திராது என்று அறிவீர்கள்.


7) விபசாரம் செய்யாதிருப்பாயாக
Exo 20:14 விபசாரம் செய்யாதிருப்பாயாக.

   கிறிஸ்துவின் உபதேசம்
Col 3:5 ஆகையால், விபசாரம், ,,,,ஆகிய இவைகளைப் பூமியில் உண்டுபண்ணுகிற உங்கள் அவயவங்களை அழித்துப்போடுங்கள்.

ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்ப்பது விபசாரமாக இருக்கிறது
Mat 5:28 நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளோடே விபசாரஞ்செய்தாயிற்று.

உலகத்தை அன்பு கூறுகிறவர்கள் விபசாரகாரர்களாக இருக்கிறார்கள்
Jam 4:4 விபசாரரே, விபசாரிகளே, உலக சிநேகம் தேவனுக்கு விரோதமான பகையென்று அறியீர்களா? ஆகையால் உலகத்துக்குச் சிநேகிதனாயிருக்க விரும்புகிறவன் தேவனுக்குப் பகைஞனாகிறான்.

8) களவு செய்யாதிருப்பாயாக
Exo 20:15 களவு செய்யாதிருப்பாயாக.

கிறிஸ்துவின் உபதேசம்
1Co 6:10 திருடரும், ,,,,,தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லை.
Eph 4:28 திருடுகிறவன் இனித் திருடாமல், குறைச்சலுள்ளவனுக்குக் கொடுக்கத்தக்கதாகத் தனக்கு உண்டாயிருக்கும்படி, தன் கைகளினால் நலமான வேலைசெய்து, பிரயாசப்படக்கடவன்.
1Pe 4:15 ,,, திருடனாயாவது, ,,, பாடுபடுகிறவனாயிருக்கக்கூடாது.
Tit 2:10 ,,,, திருடாமலிருந்து, சகலவிதத்திலும் நல்லுண்மையைக் காண்பிக்கவும் புத்திசொல்லு.

9) பிறனுக்கு விரோதமாகப் பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக
Exo 20:16 பிறனுக்கு விரோதமாகப் பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக.

கிறிஸ்துவின் உபதேசம்
Eph 4:25 அன்றியும், நாம் ஒருவருக்கொருவர் அவயவங்களாயிருக்கிறபடியால், பொய்யைக் களைந்து, அவனவன் பிறனுடனே மெய்யைப் பேசக்கடவன்.
Rom 13:9 எப்படியென்றால், விபசாரம் செய்யாதிருப்பாயாக, கொலை செய்யாதிருப்பாயாக, களவு செய்யாதிருப்பாயாக, பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக, இச்சியாதிருப்பாயாக என்கிற இந்தக் கற்பனைகளும், வேறே எந்தக் கற்பனையும், உன்னிடத்தில் நீ அன்புகூருகிறதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்கிற ஒரே வார்த்தையிலே தொகையாய் அடங்கியிருக்கிறது.

10) பிறனுடைய எதுவொன்றையும் இச்சியாதிருப்பாயாக
Exo 20:17 பிறனுடைய வீட்டை இச்சியாதிருப்பாயாக; ,,,,பின்னும் பிறனுக்குள்ள யாதொன்றையும் இச்சியாதிருப்பாயாக என்றார்.

கிறிஸ்துவின் உபதேசம்
1Jn 2:16 ஏனெனில், மாம்சத்தின் இச்சையும், கண்களின் இச்சையும், ஜீவனத்தின் பெருமையுமாகிய உலகத்திலுள்ளவைகளெல்லாம் பிதாவினாலுண்டானவைகளல்ல, அவைகள் உலகத்தினாலுண்டானவைகள்.
1Jn 2:17 உலகமும் அதின் இச்சையும் ஒழிந்துபோம்; தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான்.

நாம் பிறனுடைய பக்திவிருத்திக்கேதுவாக நன்மையுண்டாகும்படி அவனுக்கு பிரியமாய் நடக்க வேண்டும்
Rom 15:2 நம்மில் ஒவ்வொருவனும் பிறனுடைய பக்திவிருத்திக்கேதுவான நன்மையுண்டாகும்படி அவனுக்குப் பிரியமாய் நடக்கக்கடவன்.
1Ti 6:10 பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது; சிலர் அதை இச்சித்து, விசுவாசத்தைவிட்டு வழுவி, அநேக வேதனைகளாலே தங்களை உருவக் குத்திக்கொண்டிருக்கிறார்கள்.
1Ti 6:11 நீயோ, தேவனுடைய மனுஷனே, இவைகளை விட்டோடி, நீதியையும் தேவபக்தியையும் விசுவாசத்தையும் அன்பையும் பொறுமையையும் சாந்தகுணத்தையும் அடையும்படி நாடு.
Heb 13:5 நீங்கள் பண ஆசையில்லாதவர்களாய் நடந்து, உங்களுக்கு இருக்கிறவைகள் போதுமென்று எண்ணுங்கள்; நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை என்று அவர் சொல்லியிருக்கிறாரே.

கிறிஸ்துவின் உபதேசத்தில் மாத்திரம் நிலைத்திருக்க வேண்டும்
2Jn 1:9 கிறிஸ்துவின் உபதேசத்திலே நிலைத்திராமல் மீறி நடக்கிற எவனும் தேவனை உடையவனல்ல; கிறிஸ்துவின் உபதேசத்தில் நிலைத்திருக்கிறவனோ பிதாவையும் குமாரனையும் உடையவன்.


கர்த்தருக்கு சித்தமானால் தொடரும்


No comments:

Post a Comment