பாடம் :15 ஓய்வு
நாள் பிரமாண உபதேசங்கள்
ஓய்வுநாள் சபையார் சனிக்கிழமை தான் பரிசுத்தமான நாள் அது தான் ஆராதனை நாள் என்று வாதிடுகிறார்கள்
ஆனால் இவர்கள் இப்படி சொல்லுவதற்கு வேத
வாக்கியத்தில் எந்தவொரு ஆதாரமும் இல்லை
- கிறிஸ்து ஓய்வுநாளை ஆசாரித்தார் அதனால் நாமும் ஆசாரிக்க வேண்டும் என்பார்கள்.
- இயேசு கிறிஸ்து யூதன் என்பதும் நியாயப்பிரமாணத்திற்கு கீழாக அவர் வந்தபடியினாலே அவர் அதை ஆசாரிக்க வேண்டும் என்பதும் எல்லா யூதர்களும்(இஸ்ரவேலர்களும்) அதை ஆசாரிக்க வேண்டும் என்பதும் இன்றுவரை இவர்களால் விளங்கி கொள்ள முடியவில்லை
- அப்போஸ்தலனாகிய தோமா இந்தியாவில் வந்து ஓய்வுநாளில் ஆராதனை செய்தார் என்றும் பின்னாளில் ரோம சபை ஆராதனை நாளை ஞாயிற்று கிழமை மாற்றி விட்டதும் என்றும் சரித்திரத்தை காண்பித்து புலம்பிக் கொண்டு இருக்கிறார்கள்
- சுமார் 1600 வருஷங்களாக எழுதப்பட்ட பழைய ஏற்பாட்டை (ஆதியாகம் முதல் மல்கியா வரை) உலகத்தை ஆண்ட ஆசீரியா, பாபிலோன், மேதியா பெர்சியா, ரோம சாம்ராஜ்யம் இவர்களால் அந்த புஸ்தகத்திலிருந்து ஒரு எழுத்தையும் எழுத்தின் உருப்பையும் அழிக்க முடியவில்லை என்றால் தேவன் தம்முடைய வேத வாக்கியங்களையும் தம்முடைய சத்தியங்களையும் எப்படி பாதுகாக்கிறார் என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்
தேவன் நமக்கு இந்த
புதியஏற்பாட்டை எப்படி கொடுத்து இருக்கிறார் என்பதை கவனியுங்கள்
Heb 2:3 முதலாவது கர்த்தர் மூலமாய் அறிவிக்கப்பட்டு, பின்பு அவரிடத்தில் கேட்டவர்களாலே நமக்கு உறுதியாக்கப்பட்டதும்,
Heb 2:4 அடையாளங்களினாலும் அற்புதங்களினாலும் பலவிதமான பலத்த செய்கைகளினாலும், தம்முடைய சித்தத்தின்படி பகிர்ந்துகொடுத்த பரிசுத்த ஆவியின் வரங்களினாலும், தேவன் தாமே சாட்சி கொடுத்ததுமாயிருக்கிற இவ்வளவு பெரிதான இரட்சிப்பைக்குறித்து நாம் கவலையற்றிருப்போமானால் தண்டனைக்கு எப்படித் தப்பித்துக்கொள்ளுவோம்.
புதிய ஏற்பாட்டு (கிறிஸ்துவின்
பிரமாணம்) எப்படி கொடுக்கப்பட்டது?
- கர்த்தர் மூலமாய் அறிவிக்கப்பட்டது
- கர்த்தரிடத்தில் கேட்டவர்களாலே (அப்போஸ்தலர்கள்) உறுதியாக்கப்பட்டது
தேவன் எப்படி கிறிஸ்துவின்
பிரமாணத்திற்கு சாட்சி கொடுத்தார்?
- அடையாளங்கள்
- அற்புதங்கள்
- பலவிதமான பலத்த செய்கைகள்
- பரிசுத்த ஆவியின் வரங்கள்
இப்படி
கொடுக்கப்பட்ட புதிய ஏற்பாட்டின் சத்தியமான
வார்த்தைகளை யாராவது மற்ற முடியுமா இல்லை
அழித்து தான் போட முடியுமா?
Mat 24:35 வானமும் பூமியும் ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ ஒழிந்துபோவதில்லை.
Luk 16:17 வேதத்தில் ஒரு எழுத்தின் உறுப்பு அவமாய்ப் போவதைப்பார்க்கிலும், வானமும் பூமியும் ஒழிந்துபோவது எளிதாயிருக்கும்.
- இவர்கள் ஆராதனை நாளை தேவன் பரிசுத்த ஆவியினால் ஏவப்பட்ட வேத வாக்கியங்களில் தேடாமல் மனுஷர்கள் எழுதின பொய்யான சரித்திரத்தில் தேடி கொண்டு இருப்பதினால் இன்றுவரை இவர்களால் சத்தியத்தை உணர்ந்து கொள்ள முடியவில்லை
- இவர்கள் ஓய்வுநாள் என்கிற கண்ணாடியை போட்டுக் கொண்டு வேத வாக்கியங்களை வாசிப்பதினாலே இவர்கள் சத்தியங்களை ஒருபோதும் உணர்ந்து கொள்ளவே முடியாது
நாம் பிதாவாகிய தேவனை தொழுது கொள்ளக்கூடிய நாள் என்பது
எந்த நாள்?
இயேசு கிறிஸ்து எந்தநாளில் உயிர்த்தெழுந்தார்?
இயேசு கிறிஸ்து ஓய்வுநாள்(சனிக்கிழமை)
முடிந்து வாரத்தின் முதல்நாளில் (ஞாயிற்றுகிழமை) உயிர்த்தெழுந்தார் என்பதற்கு இந்த
வேத வாக்கியங்களே நமக்கு சாட்சியாக இருக்கிறது
Mat 28:1 ஓய்வுநாள் முடிந்து, வாரத்தின் முதலாம் நாள் விடிந்துவருகையில், மகதலேனா மரியாளும் மற்ற மரியாளும் கல்லறையைப் பார்க்கவந்தார்கள்.
Mar 16:2 வாரத்தின் முதலாம்நாள் அதிகாலையிலே சூரியன் உதயமாகிறபோது கல்லறையினிடத்தில் வந்து,
Mar 16:9 வாரத்தின் முதலாம் நாள் அதிகாலையிலே இயேசு எழுந்திருந்தபின்பு, மகதலேனா மரியாளுக்கு முதல்முதல் தரிசனமானார்.
Luk 24:1 வாரத்தின் முதலாம்நாள் அதிகாலையிலே தாங்கள் ஆயத்தம்பண்ணின கந்தவர்க்கங்களை அவர்கள் எடுத்துக்கொண்டு வேறு சில ஸ்திரீகளோடுங்கூடக் கல்லறையினிடத்தில் வந்தார்கள்.
ஏன் வாரத்தின் முதல்நாள் (ஞாயிற்று கிழமை) கிறிஸ்தவர்களுக்கு முக்கியமான
நாளாக இருக்கிறது?
சகலமும்
இந்த நாளில் இருந்து தான் தொடங்கியது
- சகல ஜனங்களும் கிறிஸ்துவுக்குள் பாவமன்னிப்பு ஆரம்பித்த நாள் (அப் 2ம் அதி)
- ஓன்றான மெய் சபை ஸ்தாபிக்கப்பட்ட நாள் (அப் 2ம் அதி)
- முதல் சுவிசேஷம் பிரசங்கிக்கப்பட்ட நாள் (அப் 2ம் அதி)
- மனந்திரும்புதலும் பாவமன்னிப்பும் எருசலேமில் தொடங்கியநாள் (அப் 2ம் அதி)
- பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தை அப்போஸ்தலர்களும் பரிசுத்த ஆவியின் வரங்களை கிறிஸ்தவர்களும் பெற்றுக் கொண்ட நாள் (அப் 2ம் அதி)
- பேதுருவின் சுவிசேஷத்தை கேட்டு 3000 பேர் இரட்சிக்கப்பட்டு கர்த்தரால் சபையில் சேர்க்கப்பட்ட நாள் (அப் 2ம் அதி)
- கர்த்தருடைய பந்தியும்(அப்பம் பிட்குதல்), காணிக்கையும்(தசமபாகம் அல்ல) தொடங்கிய நாள் (அப் 2ம் அதி)
- கிறிஸ்து வாரத்தின் முதல்நாளிலே உயிர்த்தெழுந்ததினாலே தேவனுடைய குமாரன் என்று பலமாய் ரூபிக்கப்பட்ட நாள் (ரோம 1:5)
- இயேசு கிறிஸ்து மரித்தோரின் உயிர்த்தெழுதலில் முதல்வரான நாள் (அப் 23:26)
- நமக்கும் நித்திய உயிர்த்தெழுதல் உண்டு என்ற நம்பிக்கையை ஏற்படுத்திய நாள் (ரோம 6:5)
- நியாயப்பிரமாணம் முடிந்து கிறிஸ்துவின் பிரமாணம் அமுலுக்கு வந்த நாள் (கலா 3:13)
- யூதர்கள் நியாயப்பிரமாணத்தின் சாபத்திலிருந்து விடுதலையாக்கப்பட்ட நாள் (கலா 3:13)
- யூதர்களும் யூதமார்க்கமைந்தவர்களும் ஞானஸ்நானத்தின் மூலமாக ஒரே சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம் பண்ணப்பட்டு தாகந்தீர்க்கப்பட்ட நாள் (1கொரி 12:13)
இப்படி
அநேக ஆசீர்வாதங்களும் தேவனோடு சேரும் சிலாக்கியமும் இந்த நாளில் இருந்து தான்
ஆரம்பமானது
No comments:
Post a Comment