Thursday, 22 March 2018

ஆபேலுடைய காணிக்கையை தேவன் ஏன் ஏற்றுக் கொண்டார்?




தேவன் ஆபேலுடைய காணிக்கையை அங்கிகரித்ததை குறித்து கிறிஸ்தவத்தில் பல குழப்பான விளக்கங்களை கொடுக்கிறார்கள்

என்றைக்குமே நாம் தேவனுடைய வார்த்தைகளை கொண்டு  சரியாக உணர்ந்து கொள்ள வேண்டும். நம்முடைய விசுவாசமும் எப்போதும் தேவனுடைய வார்த்தைகள் மீதுதான் இருக்க வேண்டும்

மனுஷருடைய யூகங்களுக்கும் சுய விளக்கங்களுக்கும் செவி கொடுப்போம் என்றால் சரியான சத்தியத்தை நாம் கண்டுபிடிக்க முடியாது

நாம் தேவனுடைய பிள்ளைகள் என்றால் எப்போதும் அவருடைய வார்த்தைகள் மாத்திரமே செவி கொடுக்க வேண்டும்

ஆபேலை அவன் காணிக்கையும் கர்த்தர் ஏன் அங்கிகரித்தார்?
Gen 4:4 ஆபேலும் தன் மந்தையின் தலையீற்றுகளிலும் அவைகளில் கொழுமையானவைகளிலும் சிலவற்றைக் கொண்டுவந்தான். ஆபேலையும் அவன் காணிக்கையையும் கர்த்தர் அங்கிகரித்தார்.


  • இந்த வேத வாக்கியத்தை நாம் கூர்ந்து கவனிப்போம் என்றால் கர்த்தர் ஆபேலையும் அங்கிகரித்து இருக்கிறார் அவருடைய காணிக்கையும் அங்கிகரித்து இருக்கிறார்
  • ஆபேல் தேவன் விசுவாசித்தார் அதே போல் காயீனும் தேவனை விசுவாசித்தார்
  • காயீன் தேவன் ஒருவர் இருக்கிறார் என்கிற விசுவாசம் இல்லாததிருந்தால் அவர் காணிக்கை கொண்டு வந்து இருக்க மாட்டார்


ஆபேலின் விசுவாசத்திற்கும் காயீனுடைய விசுவாசத்திற்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது
Heb 11:6 விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதகாரியம்; ஏனென்றால், தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்கவேண்டும்.


  •  காயீன் தேவன் ஒருவர் உண்டென்று விசுவாசித்தார் அவர் அதோடு நிறுத்திக் கொண்டார் அது அவருக்கு போதுமானது அல்ல
  • ஆபேல் தேவன் அங்கிகரிக்க காரணம்  தேவன் ஒருவர் உண்டென்றும் அவரை தேடும் போது பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசித்தார்
  • ஆபேலுடைய காணிக்கைகளை தேவன் அங்கிகரிக்க காரணம் தன் மந்தையின் தலையீற்றுகளிலும் அவைகளில் கொழுமையானவைகளிலும் சிலவற்றைக் கொண்டு வந்தார்
  • ஆபேல் தன்னிடத்தில் இருப்பதில் எல்லாம் எது சிறந்ததாக மேன்மையாக இருக்கிறதோ அதை தேவனுக்கு செலுத்தினார்


காயீனுடைய விசுவாசத்திற்கும் பிசாசுகளின் விசுவாசத்திற்கும் எந்த வித்தியாசமும் இல்லை
Jas 2:19 தேவன் ஒருவர் உண்டென்று விசுவாசிக்கிறாய், அப்படிச் செய்கிறது நல்லதுதான்; பிசாசுகளும் விசுவாசித்து, நடுங்குகின்றன.

காயீனும் ஆபேலும் கர்த்தருக்கு காணிக்கை கொண்டு வந்த போது தேவன் ஏன் ஆபேலின் காணிக்கையை அங்கிகரிக்க வேண்டும்?
என்ன காரணம் என்று பரிசுத்த ஆவியானவர் எபிரெயெர் புஸ்கத்தில் சொல்லுவதை கவனியுங்கள்
Heb 11:4 விசுவாசத்தினாலே ஆபேல் காயீனுடைய பலியிலும் மேன்மையான பலியை தேவனுக்குச் செலுத்தினான்; ........

  • ஆபேல் தேவனுக்கு விசுவாசத்தோடு காணிக்கை செலுத்தினார் என்று இந்த வேத வாக்கியம் நமக்கு தெளிவாக போதிக்கிறது
  • ஆபேல் தேவனுக்கு மேன்மையான பலியை செலுத்தினார் அது அவர் தேவன் மேல் வைத்திருந்த அன்பை அது வெளிப்படுத்துகிறது
  • தேவன் ஒருவர் உண்டு என்கிற விசுவாசம் மாத்திரம் போதுமானது அல்ல அந்த விசுவாசம் எந்த மனிதனையும் இரட்சிக்காது அந்த விசுவாசம் போதுமானது அல்ல

அப்படியென்றால் ஆபேலுக்கு தேவன் மேல் அந்த விசுவாசம் வந்தது எப்படி?
Rom 10:17 ஆதலால் விசுவாசம் கேள்வியினாலே வரும், கேள்வி தேவனுடைய வசனத்தினாலே வரும்.

  • இந்த வசனத்தை பார்க்கும் போது  ஆபேலுக்கு விசுவாசம் தேவனுடைய வார்த்தையிலிருந்து தான் வந்து இருக்கிறது
  • ஏனென்றால் தேவன் வெளிப்படுத்தாத பட்சத்தில் தேவனுக்கு அவர்கள் எப்படி காணிக்கை கொண்டு வர முடியும்?

ஆபேலுக்கும் காயீனுக்கும் தேவனுடைய வார்த்தை அவர்களுக்கு வெளிப்படுத்தப்பட்டது.
Rom 10:14 அவரை விசுவாசியாதவர்கள் எப்படி அவரைத் தொழுதுகொள்ளுவார்கள்? அவரைக் குறித்துக் கேள்விப்படாதவர்கள் எப்படி விசுவாசிப்பார்கள்? பிரசங்கிக்கிறவன் இல்லாவிட்டால் எப்படிக் கேள்விப்படுவார்கள்?

  • அவர்கள் இருவரும் தேவனுடைய வார்த்தையை கேட்டார்கள்
  • அவர்கள் தேவனை விசுவாசித்தார்கள்
  • அவர்கள் தேவனை தொழுது கொள்ளும்படியாக காணிக்கைகளை கொண்டு வந்தார்கள்
  • ஆனால் ஆபேல் மாத்திரமே தேவனை தேடும் போது பலன் அளிக்கிறவர் என்கிற விசுவாசத்தோடு தேவனுக்கு மேன்மையான காணிக்கையை கொண்டு வந்தார்
  •  அதனால் தேவன் ஆபேலையும் அவருடைய காணிக்கையும் ஏற்றுக் கொண்டார்

விசுவாசம் என்றால் என்ன அர்த்தம்?

விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும் காணப்படாதவைகளின் நிச்சயமாக இருக்கிறது
Heb 11:1 விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது.

தேவனுடைய வார்த்தையை உணர்ந்து கொண்டு அதற்கு கீழ்ப்படிவது
Psa 119:34 எனக்கு உணர்வைத் தாரும்; அப்பொழுது நான் உமது வேதத்தைப் பற்றிக்கொண்டு, ன் முழு இருதயத்தோடும் அதைக் கைக்கொள்ளுவேன்.
Psa 119:104 உமது கட்டளைகளால் உணர்வடைந்தேன், ஆதலால் எல்லாப் பொய்வழிகளையும் வெறுக்கிறேன்.



தேவனுடைய வார்த்தையை நாம் உணர்ந்து கொள்ளாத பட்சத்தில் நாம் தேவனை தேடும் போது அவர் நமக்கு எந்த பலனையும் தருவதில்லை
Mat 13:19 ஒருவன், ராஜ்யத்தின் வசனத்தைக் கேட்டும் உணராதிருக்கும்போது, பொல்லாங்கன் வந்து, அவன் இருதயத்தில் விதைக்கப்பட்டதைப் பறித்துக்கொள்ளுகிறான்; அவனே வழியருகே விதைக்கப்பட்டவன்.

  • ஆபேல் தேவனுடைய வார்த்தையை உணர்ந்து கொண்டு தேவன் பலன் அளிக்கிறவர் என்று விசுவாசித்து அதற்கு கீழ்ப்படிந்தார். அதனால் தான் தேவன் அவருடைய காணிக்கையை ஏற்றுக் கொண்டார்

ஆபேலை தேவன் புதிய ஏற்பாட்டிலே இயேசு கிறிஸ்துவைக் கொண்டு சொல்லும் போது அவரை நீதிமான் என்று தான் அழைத்து இருக்கிறார்
Mat 23:35 நீதிமானாகிய ஆபேலின் ,,,,,,,,,,

ஒருவன் தேவனிடத்தில் எப்படி நீதிமான் ஆக முடியும்?
Eze 18:9 என் கட்டளைகளின்படி நடந்து, என் நியாயங்களைக் கைக்கொண்டு, உண்மையாயிருப்பானாகில் அவனே நீதிமான்; அவன் பிழைக்கவே பிழைப்பான் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

  • அப்படியென்றால் ஆபேல் தேவனிடத்தில் நீதிமான் ஆனாது எப்படி என்றால் அவர் தேவனுடைய வார்த்தைகளை கேட்டு விசுவாசித்து கீழ்ப்படிந்து மேன்மையான பலியை செலுத்தினார்

அவருடைய பலி எப்படி என்று தேவனே சாட்சி கொடுக்கிறார்
Heb 11:4 விசுவாசத்தினாலே ஆபேல் காயீனுடைய பலியிலும் மேன்மையான பலியை தேவனுக்குச் செலுத்தினான்; அதினாலே அவன் நீதிமானென்று சாட்சி பெற்றான்; அவனுடைய காணிக்கைகளைக் குறித்துத் தேவனே சாட்சி கொடுத்தார்; அவன் மரித்தும் இன்னும் பேசுகிறான்.

  • ஆபேல் தேவனிடத்தில் அன்பு செலுத்தி அவருக்கு தன்னிடத்தில் இருக்கக்கூடியவைகளில் மேன்மையானதை செலுத்தினார்
  • ஆபேல் கொடுத்த மேன்மையான  காணிக்கை தேவனை எந்தளவு உயர்வாக மதித்தார் என்பதற்கு அதுவே சாட்சி


இன்றைக்கு அநேகர் தேவன் மேல் விசுவாசம் வைத்தால் போதும் அதற்கு எந்த கிரியைகளையும் செய்ய வேண்டியது இல்லை என்று போதிக்கிறார்கள்
Jam 2:19 தேவன் ஒருவர் உண்டென்று விசுவாசிக்கிறாய், அப்படிச் செய்கிறது நல்லதுதான்; பிசாசுகளும் விசுவாசித்து, நடுங்குகின்றன.

  • விசுவாசம் மாத்திரம் போதும் என்று சொல்லக்கூடியவர்களின் விசுவாசம் எல்லாம் பிசாசிகளின் விசுவாசம் அதனால் எந்தவொரு பிரயோஜனமும் இல்லை
  • தேவன் மேல் விசுவாசம் வைத்து எந்தவொரு தேவனுக்கேற்ற கிரியையும் செய்யாமல் நடுங்கினால் அது பிசாசுகளின் விசுவாசம்.
  • அவர்களுக்கும் பிசாசுகளுக்கும் எந்தவொரு வித்தியாசமும் இல்லை

கிரியையில்லாத விசுவாசம் எப்படிப்பட்டது?
Jam 2:20 வீணான மனுஷனே, கிரியைகளில்லாத விசுவாசம் செத்ததென்று நீ அறியவேண்டுமோ?

  • கிரியை இல்லாத விசுவாசம் செத்த விசுவாசமாக இருக்கிறது

ஆபேலின் விசுவாசம் எப்படிப்பட்டது?
  • தேவன் ஒருவர் உண்டென்று விசுவாசித்து அவரை தேடும் போது பலன் அளிக்கிறவரென்றம் விசுவாசித்து இருக்கிறார்
  • தேவனுடைய வார்த்தையை கேட்டு தேவனுடைய வார்த்தைகளை உணர்ந்து கொண்டு விசுவாசித்து இருக்கிறார்
  • அந்த விசுவாசத்திற்கான கிரியை என்னவென்றால் தேவனுக்கு    மேன்மையான பலியை செலுத்தினார்

தேவன் அவரைக்குறித்து கொடுத்த சாட்சி என்ன?
  • நீதிமான் என்று அழைத்தார்
  • இவருடைய காணிக்கைக்கு தேவனே சாட்சி கொடுக்கிறார்

ஆபேலுக்கு கிடைத்த பிரதிபலன் என்ன?
Heb 11:4 ,,,,,,,, அவன் மரித்தும் இன்னும் பேசுகிறான்.





























No comments:

Post a Comment