Friday, 23 March 2018

வானவில் (RAINBOW) பற்றி நம்முடைய பிள்ளைகளுக்கு என்ன சொல்லிக் கொடுக்கிறோம்?




மேகத்தில் வானவில் (RAINBOW)  தோன்றும் போது நாம் அதின் அழகை கண்டு பிரமித்து ரசிக்கிறோம் ஆனால் அந்த வானவில்லுக்கு பின்பதாக ஒரு உலகம் அழிக்கப்பட்டது என்பது உங்களுக்கு தெரியுமா?

வானவில்(RAINBOW)  எப்படி வருகிறது என்று இன்றைய அறிவியல் என்ன விளக்கம் வேண்டுமானால் கொடுத்து விட்டு போகட்டும் ஆனால் அதைப்பற்றி நாம் சிந்திக்காமல் அந்த வானவில்லை தேவன் ஏன் மேகத்தில் வைத்தார் என்பதை நாம் கற்றுக் கொள்ளுவோம்

ஆதாமில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட ஜனக்கூட்டம் நோவாவுடைய காலத்தில் தேவனையே அறியாமல் அக்கிரமம் மிகுதியாக போய் தேவனுடைய கோபத்திற்கு உள்ளாகி போனார்கள்
Gen 6:11 பூமியானது தேவனுக்கு முன்பாகச் சீர்கெட்டதாயிருந்தது; பூமி கொடுமையினால் நிறைந்திருந்தது.
Gen 6:12 தேவன் பூமியைப் பார்த்தார்; இதோ அது சீர்கெட்டதாயிருந்தது; மாம்சமான யாவரும் பூமியின்மேல் தங்கள் வழியைக் கெடுத்துக்கொண்டிருந்தார்கள்.

ஆனால் ஓரே ஒரு மனிதன் மாத்திரம் தேவனுடைய பார்வையில் நீதிமானும் உத்தமானுமாய் இருந்தார் அவர் தான் நோவா
Gen 6:9 நோவாவின் வம்சவரலாறு: நோவா தன் காலத்தில் இருந்தவர்களுக்குள்ளே நீதிமானும் உத்தமனுமாயிருந்தான்; நோவா தேவனோடே சஞ்சரித்துக்கொண்டிருந்தான்

பூமியில் இருக்கிற நாசியில் சுவாசமுள்ள யாவையும் ஜலப்பிரளயத்தினால் அழித்துபோடும்படி தேவன் முடிவு செய்து நோவாவும் அவருடைய குடும்பத்தையும் பூமியில் வாழக்கூடிய ஜோடியான சகல ஜீவராசிகளையும் காப்பற்றும் படி ஒரு பேழையை உண்டு பண்ண சொன்னார்
Gen 6:13 அப்பொழுது தேவன் நோவாவை நோக்கி: மாம்சமான யாவரின் முடிவும் எனக்கு முன்பாக வந்தது; அவர்களாலே பூமி கொடுமையினால் நிறைந்தது; நான் அவர்களைப் பூமியோடுங்கூட அழித்துப்போடுவேன்.
Gen 6:14 நீ கொப்பேர் மரத்தால் உனக்கு ஒரு பேழையை உண்டாக்கு; அந்தப் பேழையிலே அறைகளை உண்டுபண்ணி, அதை உள்ளும் புறம்புமாகக் கீல்பூசு.

  • நோவா சுமார் 100 வருடங்கள் அந்த பேழையை தன் குடும்பாத்தாரோடு கூட செய்தார்.

நோவாவுடைய காலம் வரை மழை என்பதே ஜனங்கள் அறியாதிருந்தார்கள் ஆனால் நோவா தேவன் மழையை வருஷிக்கப்பண்ணி பூமியை அழித்து போடுவார் என்று நோவா தேவனை விசுவாசித்து. தேவனுடைய கட்டளைக்கு கீழ்ப்படிந்தார்
Heb11:7 விசுவாசத்தினாலே நோவா தற்காலத்திலே காணாதவைகளைக்குறித்துத் தேவஎச்சரிப்புப் பெற்று, பயபக்தியுள்ளவனாகி, தன் குடும்பத்தை இரட்சிப்பதற்குப் பேழையை உண்டுபண்ணினான்; அதினாலே அவன் உலகம் ஆக்கினைக்குள்ளானதென்று தீர்த்து, விசுவாசத்தினாலுண்டாகும் நீதிக்குச் சுதந்தரவாளியானான்.

தேவன் இரவும் பகலும் நாற்பது நாள் மழையை வருஷிக்கப்பண்ணி பூமியிலே நாசியில் சுவாசமுள்ள எல்லா ஜீவன்களையும் அழித்துப்போட்டார்
2Pe 2:5 பூர்வ உலகத்தையும் தப்பவிடாமல், நீதியைப் பிரசங்கித்தவனாகிய நோவா முதலான எட்டுப்பேரைக் காப்பாற்றி, அவபக்தியுள்ளவர்கள் நிறைந்த உலகத்தின்மேல் ஜலப்பிரளயத்தை வரப்பண்ணி;
Gen 7:23 மனுஷர் முதல், மிருகங்கள், ஊரும் பிராணிகள், ஆகாயத்துப் பறவைகள் பரியந்தமும், பூமியின்மேல் இருந்த உயிருள்ள வஸ்துக்கள் யாவும் அழிந்து, அவைகள் பூமியில் இராதபடிக்கு நிக்கிரகமாயின; நோவாவும் அவனோடே பேழையிலிருந்த உயிர்களும் மாத்திரம் காக்கப்பட்டன.

பின்பு ஜலம் வடிந்து நோவாவும் அவருடைய குடும்பத்தாரும் வெளியே வந்தபோது நோவா தேவனுக்கு தகனபலிகைளை செலுத்தினார்
Gen 8:20 அப்பொழுது நோவா கர்த்தருக்கு ஒரு பலிபீடம் கட்டி, சுத்தமான சகல மிருகங்களிலும், சுத்தமான சகல பறவைகளிலும் சிலவற்றைத் தெரிந்துகொண்டு, அவைகளைப் பலிபீடத்தின்மேல் தகனபலிகளாகப் பலியிட்டான்.

  • தேவன் அதை ஏற்றுக் கொண்டு பூமியில் வாழக்கூடிய சகல ஜீவராசிகளோடு ஒரு உடன்படிக்கை ஏற்படுத்திக் கொண்டார்.

அது என்னவென்றால் இனிமேல் ஜலப்பிரளயத்தினால் உலகத்தை அழிக்க மாட்டேன் என்பது தான்  
Gen 9:9 நான் உங்களோடும், உங்களுக்குப் பின்வரும் உங்கள் சந்ததியோடும்,
Gen 9:10 உங்களோடே பேழையிலிருந்து புறப்பட்ட சகல ஜீவஜந்துக்கள்முதல் இனிப் பூமியில் உண்டாகப்போகிற சகல ஜீவஜந்துக்கள்பரியந்தம், பறவைகளோடும், நாட்டு மிருகங்களோடும், உங்களிடத்தில் இருக்கிற பூமியிலுள்ள சகல காட்டு மிருகங்களோடும் என் உடன்படிக்கையை ஏற்படுத்துகிறேன்.
Gen 9:11 இனி மாம்சமானவைகளெல்லாம் ஜலப்பிரளயத்தினால் சங்கரிக்கப்படுவதில்லையென்றும், பூமியை அழிக்க இனி ஜலப்பிரளயம் உண்டாவதில்லையென்றும், உங்களோடே என் உடன்படிக்கையை ஏற்படுத்துகிறேன் என்றார்.

இந்த உடன்படிக்கையின் அடையாளமாக தான் தேவன் மேகத்தில் தன்னுடைய வானவில்லை(RAINBOW)  வைத்தார்
Gen 9:12 அன்றியும் தேவன்: எனக்கும் உங்களுக்கும், உங்களிடத்தில் இருக்கும் சகல ஜீவஜந்துக்களுக்கும், நித்திய தலைமுறைகளுக்கென்று நான் செய்கிற உடன்படிக்கையின் அடையாளமாக:
Gen 9:13 நான் என் வில்லை மேகத்தில் வைத்தேன்; அது எனக்கும் பூமிக்கும் உண்டான உடன்படிக்கைக்கு அடையாளமாயிருக்கும்.

தேவன் தான் நோவாவுடைய காலத்தில் இருந்து இன்றைக்கு வரை நாம் காணும் படி அந்த வானவில்லை(RAINBOW)  வருவிக்கிறார்
Gen 9:14 நான் பூமிக்கு மேலாய் மேகத்தை வருவிக்கும்போது, அந்த வில் மேகத்தில் தோன்றும்.

அந்த வானவில்(RAINBOW)  வரும் போது தேவன் தம்முடைய உடன்படிக்கையை நினைவு கூருகிறார்
Gen 9:15 அப்பொழுது எல்லா மாம்சஜீவன்களையும் அழிக்க இனி ஜலமானது பிரளயமாய்ப் பெருகாதபடிக்கு எனக்கும் உங்களுக்கும் மாம்சமான சகல ஜீவஜந்துக்களுக்கும் உண்டான என் உடன்படிக்கையை நினைவுகூருவேன்.

அந்த வானவில்(RAINBOW)  வரும்போது தேவன் அதை நோக்கி பார்க்கிறார்
Gen 9:16 அந்த வில் மேகத்தில் தோன்றும்போது, தேவனுக்கும் பூமியின்மேலுள்ள சகலவித மாம்சஜீவன்களுக்கும் உண்டான நித்திய உடன்படிக்கையை நான் நினைவுகூரும்படிக்கு அதை நோக்கிப்பார்ப்பேன்.

அந்த வானவில்(RAINBOW)  தேவனுக்கும் மாம்சமான யாவருக்கும் நித்திய உடன்படிக்கையின் அடையாளம் இருக்கிறது
Gen 9:17 இது எனக்கும், பூமியின்மேலுள்ள மாம்சமான யாவுக்கும், நான் ஏற்படுத்தின உடன்படிக்கையின் அடையாளம் என்று நோவாவோடே சொன்னார்.

  • வானவில்(RAINBOW)  மேகத்தில் வரும்போது தேவன் அதை பார்த்து தம்முடைய நித்திய உடன்படிக்கையை நினைவு கூறுகிறார்,
  • நாம் அந்த வானவில்லை பார்க்கும் போது தேவனுக்கு நன்றி செலுத்துகிறோமா?

கிறிஸ்து இரண்டாம் வருகையில் வருகிற வரைக்கும் வானவில்(RAINBOW)  நித்திய உடன்படிக்கையாக தான் இருக்கும். ஆனால் கிறிஸ்து வரும் போது இந்த உலகத்தை தேவன் அக்கினியினால் அழித்துப்போடுவேன் என்று வாக்குத்தத்தம் செய்து இருக்கிறார்
2Th 1:7 தேவனை அறியாதவர்களுக்கும், நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்திற்குக் கீழ்ப்படியாதவர்களுக்கும் நீதியுள்ள ஆக்கினையைச் செலுத்தும்படிக்கு,
2Th 1:8 கர்த்தராகிய இயேசு தமது வல்லமையின் தூதரோடும், ஜுவாலித்து எரிகிற அக்கினியோடும், வானத்திலிருந்து வெளிப்படும்போது அப்படியாகும்.
2Pe 3:6 அப்பொழுது இருந்த உலகம் ஜலப்பிரளயத்தினாலே அழிந்ததென்பதையும் மனதார அறியாமலிருக்கிறார்கள்.
2Pe 3:7 இப்பொழுது இருக்கிற வானங்களும் பூமியும் அந்த வார்த்தையினாலேயே அக்கினிக்கு இரையாக வைக்கப்பட்டு, தேவபக்தியில்லாதவர்கள் நியாயந்தீர்க்கப்பட்டு அழிந்துபோகும் நாள்வரைக்கும் காக்கப்பட்டிருக்கிறது.

நம்முடைய பிள்ளைகளுக்கு வானவில்லை(RAINBOW)  பற்றி சொல்லிக் கொடுக்க வேண்டிய சத்தியம் இது தான்
  1. நோவாவின் காலத்தில் தேவன் தம்முடைய வார்த்தைக்கு கீழ்ப்படியாத ஜனங்களை ஜலப்பிரளயத்தினால் அழித்துப்போட்டார் அதற்கு அடையாளம் தான் வானவில்(RAINBOW)
  2. தேவன் ஜனங்கள் மனந்திரும்பாத பட்சத்தில் அழித்து போடுகிறார்
  3. தேவன் தான் வானவில்லை(RAINBOW)  வருவிக்கிறார்
  4. தேவனுக்கும் பூமியில் இருக்கிற சகல ஜீவராசிகளுக்கும் நித்திய உடன்படிக்கையின் அடையாளம்
  5. வானவில்(RAINBOW)  வரும்போது தேவன் அதை நோக்கிப் பார்க்கிறார். தம்முடைய உடன்படிக்கையை நினைவு கூறுகிறார்
  6. நாம் வானவில்லை(RAINBOW)  நோக்கி பார்க்கும் போது தேவனுடைய உடன்படிக்கையை நினைவு கூர்ந்து தேவனுக்கு நன்றி செலுத்த வேண்டும்
  7. இனிமேல் தேவன் பெரும் ஜலப்பிரளயத்தினால் பூமியை அழித்துப் போட மாட்டார்
  8. ஆனால் இந்த பூமியையும் வானங்களையும் கிறிஸ்து தம்முடைய இரண்டாம் வருகையில்  வரும்போது அக்கினியினால் அழித்துப்போடுவார்



















No comments:

Post a Comment