Friday, 29 April 2022

ஆதியாகம புஸ்தகத்திலும் நியாயப்பிரமாணம் கொடுக்கப்படுவதற்கு முன்பதாகவும் திருமண உறவுகள் எப்படி இருந்தது?

பாடம் :4 விவாகம் யாவருக்குள்ளும் கனம் உள்ளதா?  

ஆதியாகம புஸ்தகத்திலும் நியாயப்பிரமாணம் கொடுக்கப்படுவதற்கு முன்பதாகவும் திருமண உறவுகள் எப்படி இருந்தது?

நாம் மாம்ச இச்சைகளுக்காக மாத்திரம் திருமணம் செய்தால் என்ன சம்பவிக்கும் என்பதை வசன ஆதாரத்தோடு கற்றுக் கொண்டிருக்கிறோம்  

தேவன் மனுஷக்கு ஏற்ற துணையாக ஒரே மனுஷியை உண்டாக்கினாலும் மனுஷர்கள் தங்கள் தேவைகளுக்கென்று பல திருமணம் செய்து கொண்டார்கள் என்பதை ஆதியாகம புஸ்தகத்தில் நாம் பார்க்க முடியும் 

மனுஷன் தன் மனைவியாகிய ஒரே மனுஷியோடு தன் தகப்பனையும் தாயையும் விட்டு கூடி வாழ வேண்டும் என்று தேவன் விரும்பினார் ஆனால் மனுஷன் அப்படி இருக்க வில்லை

ஆனாலும் தேவன் ஆதியாகம புஸ்தகத்தில் ஒரு துணையோடு சேர்ந்து வாழ வேண்டும் என்று அவர் கட்டளை ஏதும் கொடுக்கவில்லை, அதனால் மனுஷர்கள் பல மணம் செய்து கொண்டாலும் கூட அது பாவமாக எண்ணப்படவில்லை

ஆதியாகம புஸ்தகத்தில் புருஷர்கள் தங்கள் சகோதரிகளை திருமணம் செய்து கொண்டார்கள் இதுவும் பாவமாக என்னப்பட வில்லை

பிரமாணம் கொடுக்கப்பட்டு அது மீறப்படும் போது தான் அது பாவம் ஆகிறது 

பிரமாணம் இல்லாவிட்டால் பாவம் செத்ததாயிருக்கும்
ரோம 7:8 ,,,, நியாயப்பிரமாணம் இல்லாவிட்டால் பாவம் செத்ததாயிருக்குமே.

லாமேக்கு இரண்டு ஸ்திரீகளை விவாகம் பண்ணி இருந்தார்
ஆதி 4:19 லாமேக்கு இரண்டு ஸ்திரீகளை விவாகம்பண்ணினான்; ஒருத்திக்கு ஆதாள் என்று பேர், மற்றொருத்திக்குச் சில்லாள் என்று பேர்.

விசுவாசத்தின் தகப்பனாகிய ஆபிரகாம் மூன்று ஸ்திரீகளை விவாகம் பண்ணியிருந்தார்
ஆதி 11:29 ஆபிராமும் நாகோரும் தங்களுக்குப் பெண் கொண்டார்கள்; ஆபிராமுடைய மனைவிக்குச் சாராய் என்று பேர்; நாகோருடைய மனைவிக்கு மில்க்காள் என்று பேர்; இவள் ஆரானுடைய குமாரத்தி; அந்த ஆரான் மில்க்காளுக்கும் இஸ்காளுக்கும் தகப்பன்.
ஆதி 16:3 ஆபிராம் கானான்தேசத்தில் பத்து வருஷம் குடியிருந்தபின்பு, ஆபிராமின் மனைவியாகிய சாராய் எகிப்து தேசத்தாளான தன் அடிமைப்பெண்ணாகிய ஆகாரை அழைத்து, அவளைத் தன் புருஷனாகிய ஆபிராமுக்கு மறுமனையாட்டியாகக் கொடுத்தாள்.
ஆதி 25:1 ஆபிரகாம் கேத்தூராள் என்னும் பேர்கொண்ட ஒரு ஸ்திரீயையும் விவாகம்பண்ணியிருந்தான்.

ஏசாவும் பல ஸ்திரீகளை விவாகம் செய்து இருந்தார்
ஆதி 26:34 ஏசா நாற்பது வயதானபோது, ஏத்தியனான பெயேரியினுடைய குமாரத்தியாகிய யூதீத்தையும், ஏத்தியனான ஏலோனுடைய குமாரத்தியாகிய பஸ்மாத்தையும் விவாகம்பண்ணினான்.
ஆதி 36:2 ஏசா கானான் தேசத்துப் பெண்களில் ஏத்தியனான ஏலோனின் குமாரத்தியாகிய ஆதாளையும், ஏவியனாகிய சிபியோனின் குமாரத்தியும் ஆனாகின் குமாரத்தியுமாகிய அகோலிபாமாளையும்,
ஆதி 36:3 இஸ்மவேலின் குமாரத்தியும் நெபாயோத்தின் சகோதரியுமாகிய பஸ்மாத்தையும் விவாகம் பண்ணியிருந்தான்.

யாக்கோபு நான்கு ஸ்திரீகளை விவாகம் செய்து இருந்தார்
ஆதி 35:23 யாக்கோபின் குமாரர் பன்னிரண்டு பேர். யாக்கோபின் மூத்தமகனாகிய ரூபன், சிமியோன், லேவி, யூதா, இசக்கார், செபுலோன் என்பவர்கள் லேயாள் பெற்ற குமாரர்.
ஆதி 35:24 யோசேப்பு, பென்யமீன் என்பவர்கள் ராகேல் பெற்ற குமாரர்.
ஆதி 35:25 தாண், நப்தலி என்பவர்கள் ராகேலுடைய பணிவிடைக்காரியாகிய பில்காள் பெற்ற குமாரர்.
ஆதி 35:26 காத், ஆசேர் என்பவர்கள் லேயாளின் பணிவிடைக்காரியாகிய சில்பாள் பெற்ற குமாரர்; இவர்களே யாக்கோபுக்குப் பதான் அராமிலே பிறந்த குமாரர்.

இப்படி ஆதியாகம புஸ்தகத்தில் பல ஸ்திரீகளை விவாகம் செய்த சம்பவங்கள் இருந்தாலும் தங்கள் சகோதரிகளை விவாகம் செய்த சம்பவங்களும் லோத்தின் குமாரத்திகள் தன் தகப்பனாகிய லோத்தோடு சேர்ந்த சம்பவங்களும் யூதா தன் மருமகளோடு அறியாமல் சேர்ந்த சம்பவங்களும் சொல்லப்பட்டு இருக்கிறது

லோத்துவின் குமாரத்திகள் அவரோடு சேர்ந்து சந்ததியை உண்டாக்கினார்கள்

ஆனால் இந்த சம்பவங்கள் லோத்துவுக்கு அறியாமல் நடந்த சம்பவங்கள் ஆகும்
ஆதி 19:30 பின்பு லோத்து சோவாரிலே குடியிருக்கப் பயந்து, சோவாரை விட்டுப்போய், அவனும் அவனோடேகூட அவனுடைய இரண்டு குமாரத்திகளும் மலையிலே வாசம்பண்ணினார்கள்; அங்கே அவனும் அவனுடைய இரண்டு குமாரத்திகளும் ஒரு கெபியிலே குடியிருந்தார்கள்.
ஆதி 19:31 அப்பொழுது மூத்தவள் இளையவளைப் பார்த்து: நம்முடைய தகப்பன் முதிர்வயதானார், பூமியெங்கும் நடக்கிற முறைமையின்படியே நம்மோடே சேரப் பூமியிலே ஒரு புருஷனும் இல்லை.
ஆதி 19:32 நம்முடைய தகப்பனால் சந்ததி உண்டாகும்படிக்கு, அவருக்கு மதுவைக் குடிக்கக்கொடுத்து, அவரோடே சயனிப்போம் வா என்றாள்.
ஆதி 19:33 அப்படியே அன்று இரவிலே, தங்கள் தகப்பனுக்கு மதுவைக் குடிக்கக் கொடுத்தார்கள். மூத்தவள் போய், தன் தகப்பனோடே சயனித்தாள்; அவள் சயனித்ததையும் எழுந்திருந்ததையும் அவன் உணராதிருந்தான்.
ஆதி 19:34 மறுநாளிலே மூத்தவள் இளையவளைப் பார்த்து: நேற்று ராத்திரி நான் தகப்பனோடே சயனித்தேன்; இன்று ராத்திரியும் மதுவைக் குடிக்கக் கொடுப்போம், நம்முடைய தகப்பனால் சந்ததி உண்டாகும்படி நீ போய் அவரோடே சயனி என்றாள்.
ஆதி 19:35 அப்படியே அன்று ராத்திரியிலும் தங்கள் தகப்பனுக்கு மதுவைக் குடிக்கக் கொடுத்தார்கள். அப்பொழுது இளையவள் எழுந்துபோய், அவனோடே சயனித்தாள் அவள் சயனித்ததையும் எழுந்திருந்ததையும் அவன் உணராதிருந்தான்.
ஆதி 19:36 இவ்விதமாய் லோத்தின் குமாரத்திகள் இருவரும் தங்கள் தகப்பனாலே கர்ப்பவதியானார்கள்.
ஆதி 19:37 மூத்தவள் ஒரு குமாரனைப் பெற்று, அவனுக்கு மோவாப் என்று பேரிட்டாள்; அவன் இந்நாள்வரைக்கும் இருக்கிற மோவாபியருக்குத் தகப்பன்.
ஆதி 19:38 இளையவளும் ஒரு குமாரனைப் பெற்று, அவனுக்குப் பென்னம்மி என்று பேரிட்டாள்; அவன் இந்நாள்வரைக்கும் இருக்கிற அம்மோன் புத்திரருக்குத் தகப்பன்.

ஆனால் தேவன் இந்த சந்ததியை பல வருஷங்களாக ஏற்று கொள்ளவில்லை

மனச்சாட்சியின் பிரமாணத்தின் படி பாவங்களை நாம் உணர்ந்து கொள்ள முடியும்

ஆபிரகாம் தன் தகப்பனுடைய இன்னொரு மனைவிக்கு பிறந்த குமாரத்தியை திருமணம் செய்து இருந்தார்
ஆதி 20:11 அதற்கு ஆபிரகாம்: இவ்விடத்தில் தெய்வபயம் இல்லையென்றும், என் மனைவியினிமித்தம் என்னைக் கொன்றுபோடுவார்கள் என்றும் நான் நினைத்தேன்.
ஆதி 20:12 அவள் என் சகோதரி என்பதும் மெய்தான்; அவள் என் தகப்பனுக்குக் குமாரத்தி, என் தாய்க்குக் குமாரத்தியல்ல; அவள் எனக்கு மனைவியானாள்.

யூதா தன் மருமகளோடு சேர்ந்த சம்பவமும் அறியாமல் சேர்ந்த சம்பவமாகும் 
ஆதி 38:15 யூதா அவளைக் கண்டு, அவள் தன் முகத்தை மூடியிருந்தபடியால், அவள் ஒரு வேசி என்று நினைத்து,
ஆதி 38:16 அந்த வழியாய் அவளிடத்தில் போய், அவள் தன் மருமகள் என்று அறியாமல்: நான் உன்னிடத்தில் சேரும்படி வருவாயா என்றான்; அதற்கு அவள்: நீர் என்னிடத்தில் சேரும்படி, எனக்கு என்ன தருவீர் என்றாள்.
ஆதி 38:26 யூதா அவைகளைப் பார்த்தறிந்து: என்னிலும் அவள் நீதியுள்ளவள்; அவளை என் குமாரனாகிய சேலாவுக்குக் கொடாமற்போனேனே என்றான். அப்புறம் அவன் அவளைச் சேரவில்லை.

மோசேயின் தகப்பனாகிய அம்ராம் தன் அத்தையாகிய யோகெபேத்தை விவாகம் செய்து இருந்தார்
யாத் 6:20 அம்ராம் தன் அத்தையாகிய யோகெபேத்தை விவாகம்பண்ணினான்; அவள் அவனுக்கு ஆரோனையும் மோசேயையும் பெற்றாள்; அம்ராம் நூற்றுமுப்பத்தேழு வருஷம் உயிரோடிருந்தான்.

தேவன் விவாகம் பண்ணக்கூடிய விசயத்தில் எந்தவொரு சட்டத்தையும் கொடுக்கவில்லை, ஆதலால் அது பாவமாகவும் எண்ணப்படவில்லை

கர்த்தருக்கு சித்தமானால் தொடர்ந்து கற்றுக் கொள்ளுவோம்

நீங்கள் ஈரோட்டில் இருந்தால் ஜெபிக்கவும் தேவனுடைய சத்தியங்களை இலவசமாகவும் உங்கள் வீடுகளில் கற்றுக்கொள்ள எங்களை அழைக்கவும்

Preacher: Bro Ariyel Barnabas
Church Of Christ
Erode
Call-9025776966

தேவனுடைய சத்தியங்களை தொடர்ந்து வாட்ஸ் ஆப் ல் பெற 9025776966 என்ற இந்த எண்ணுக்கு குறுந் தகவல் அனுப்பவும்

Thursday, 28 April 2022

ஆவிக்குரிய வளர்ச்சிக்கு சில முக்கியமான சத்தியங்கள்

Tamil Bible Question & Answer









Subscribe Like Share

ஆதியாக புஸ்தகத்தின் காலத்தில் வாழ்ந்த ஜனங்களுக்கு ஒய்வுநாள் பிரமாணம் கொடுக்கப்பட்டு இருந்ததா?

பாடம் :5 ஒய்வு நாள் ஆசரிப்பு கிறிஸ்தவர்களுக்கு கொடுக்கப்பட்டதா?

ஆதியாக புஸ்தகத்தின் காலத்தில் வாழ்ந்த ஜனங்களுக்கு ஒய்வுநாள் பிரமாணம் கொடுக்கப்பட்டு இருந்ததா?

ஆதியாகமம் புஸ்தகம் மாத்திரம் சுமார் 2500 வருட சம்பவங்களை உள்ளடக்கியது 

ஏழாம் ஓய்வு நாள் வருகை ஆசரிப்பு சபையார் ஆதாம் முதற்கொண்டு ஓய்வு நாளை ஆசரித்தார்கள் என்று சொல்லுகிறார்கள் 

முதலில் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய சத்தியம் என்னவென்றால் நம்முடைய நினைவுகளும் தேவனுடைய நினைவுகளும் நம்முடைய வழிகளும் தேவனுடைய வழிகளும் இரண்டும் ஒன்றல்ல என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும்
ஏசாயா 55:8 என் நினைவுகள் உங்கள் நினைவுகள் அல்ல; உங்கள் வழிகள் என் வழிகளும் அல்லவென்று கர்த்தர் சொல்லுகிறார். 

தேவனுடைய நினைவுகளும் தேவனுடைய வழிகளும் பூமியைப்பார்க்கிலும் வானங்கள் எப்படி உயர்ந்திருக்கிறதோ அது போல உயர்ந்து இருக்கிறது
ஏசா 55:9 பூமியைப்பார்க்கிலும் வானங்கள் எப்படி உயர்ந்திருக்கிறதோ, அப்படியே உங்கள் வழிகளைப்பார்க்கிலும் என் வழிகளும், உங்கள் நினைவுகளைப்பார்க்கிலும் என் நினைவுகளும் உயர்ந்திருக்கிறது.

தேவனுடைய வழிகளும் நினைவுகளும் வேத வாக்கியத்தில் மாத்திரமே வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது

நாமாக எது ஒன்றையும் யூகித்துக் கொள்ளக்கூடாது அப்படி யூகித்துக் கொண்டு கர்த்தருடைய வார்த்தையோடு ஒரு வார்த்தையை கூட்டுகின்ற போது நாம் பொய்யராக இருக்கிறோம்
நீதி 30:5 தேவனுடைய வசனமெல்லாம் புடமிடப்பட்டவைகள்; தம்மை அண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு அவர் கேடகமானவர். 
நீதி30:6 அவருடைய வசனங்களோடு ஒன்றையும் கூட்டாதே, கூட்டினால் அவர் உன்னைக் கடிந்துகொள்வார், நீ பொய்யனாவாய்.

நாம் சத்தியத்தை விசுவாசித்து போதிக்கிறோம் என்றால் அதற்கான வேத வசனத்தை ஆதாரமாக காண்பிக்க வேண்டும்

அப்படி காண்பிக்காமல் நாமே யூகித்து இப்படித்தான் இருக்கும் என்று போதிக்கின்ற போது
புடமிடப்பட்ட வசனத்தோடு நாம் ஒன்றை கூட்டுகிறோம் அப்படி வசனத்தை கூட்டுகின்ற போது நாம் பொய்யராய் இருக்கிறோம்

ஆதியாக புஸ்தகத்தில் ஆதாமுக்கு தேவன் ஒய்வுநாள் கட்டளையை கொடுத்தாரா?

கீழே உள்ள இந்த வசனத்தில் தேவன் தம்முடைய கிரியை எல்லாம் முடித்து ஏழாம் நாளை ஆசீர்வதித்து அதை பரிசுத்தமாக்கினார்
ஆதி 2:2 தேவன் தாம் செய்த தம்முடைய கிரியையை ஏழாம் நாளிலே நிறைவேற்றி, தாம் உண்டாக்கின தம்முடைய கிரியைகளையெல்லாம் முடித்தபின்பு, ஏழாம் நாளிலே ஓய்ந்திருந்தார்.

கீழே உள்ள வசனத்தில் ஓய்வுநாளை பரிசுத்தப்படுத்தி அதில் ஓய்ந்து இருந்தவர் யார்?
ஆதி 2:3 தேவன் தாம் சிருஷ்டித்து உண்டுபண்ணின தம்முடைய கிரியைகளையெல்லாம் முடித்தபின்பு அதிலே ஓய்ந்திருந்தபடியால், தேவன் ஏழாம் நாளை ஆசீர்வதித்து, அதைப் பரிசுத்தமாக்கினார்.

ஆதியாகம புஸ்தகத்தில் ஏழாம் நாளில் தம்முடைய சிருஷ்டிப்பை முடித்து ஏழாம் நாளில் ஓய்திருந்தது நம்முடைய தேவன் மாத்திரமே

நாம் வசனத்தை கூட்டவும் இல்லை குறைக்கவும் இல்லை அங்கே என்ன நமக்கு வெளிப்படுத்தப்பட்டு இருக்கிறதோ அதை மாத்திரமே நாம் கற்றுக் கொண்டிருக்கிறோம்

தேவன் ஓய்ந்திருந்த அந்த நாளைக் குறித்து தான் தேவன் மோசேயின் மூலமாக நியாயப்பிரமணத்தில் வெளிப்படுத்தி இஸ்ரவேல் ஜனங்களுக்கு கட்டளையிட்டார் 

ஆதாமுக்கு தேவன் ஒய்வு நாளை ஆசரி என்று கட்டளையிட்டார் என்றால் அதற்கான வசன ஆதாரம் எங்கே இருக்கிறது?
1கொரி 4:6 சகோதரரே, எழுதப்பட்டதற்கு மிஞ்சி எண்ணவேண்டாமென்று நீங்கள் எங்களாலே கற்றுக்கொள்ளவும், ,,,, நான் உங்கள்நிமித்தம் என்னையும் அப்பொல்லோவையும் திருஷ்டாந்தமாக வைத்து, இவைகளை எழுதினேன்.
மத் 5:37 உள்ளதை உள்ளதென்றும், இல்லதை இல்லதென்றும் சொல்லுங்கள்; இதற்கு மிஞ்சினது தீமையினால் உண்டாயிருக்கும்.
யாக் 5:12 ,,, நீங்கள் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படாதபடிக்கு உள்ளதை உள்ளதென்றும், இல்லதை இல்லதென்றும் சொல்லக்கடவீர்கள்.

தேவன் ஆதாமுக்கு என்ன கட்டளையை கொடுத்தார்? 

இந்த கட்டளையை தான் வேத வாக்கியம் போதிக்கிறது
ஆதி 2:16 தேவனாகிய கர்த்தர் மனுஷனை நோக்கி: நீ தோட்டத்திலுள்ள சகல விருட்சத்தின் கனியையும் புசிக்கவே புசிக்கலாம்.
ஆதி 2:17 ஆனாலும் நன்மைதீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்கவேண்டாம்; அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய் என்று கட்டளையிட்டார்.

இந்த கட்டளையை தான் ஆதாம் மீறினார் அதற்கான விளைவுகளையும் அவர் பெற்று கொண்டார் அதை தவிர வேறு எதையும் மீறினதாக எந்த ஒரு வேத வாக்கியமும் இல்லை 

இன்னும் சிலர் பரிசுத்த ஆவியானவர் எங்களுக்கு வெளிப்படுத்தி இருக்கிறார் என்று சொல்லி பத்து கற்பனைகளை எடுத்து ஆதியாகமம் மூன்றாம் அதிகாரத்தில் இணைத்து போதிக்க கூடியவர்களும் இருக்கிறார்கள்

இது எல்லாமே இவர்களுடைய யூகங்களே தவிர தேவனுடைய சத்தியங்கள் இல்லை
ஏனென்றால் அது தேவனுடைய நினைவுகளும் தேவனுடைய வழிகளும் அல்ல

இதை தவிர தேவனுடைய வார்த்தைகளை கூட்டி குறைத்து போதிக்கும் போது நாம் பொய்யராகிவிடுகிறோம்

அவருடைய வார்த்தையோடு ஒரு வார்த்தையை கூட்டவும் கூடாது குறைக்கவும் கூடாது என்று நாம் எச்சரிக்கப்பட்டு இருக்கிறோம்
நீதி 30:5 தேவனுடைய வசனமெல்லாம் புடமிடப்பட்டவைகள்;தம்மை அண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு அவர் கேடகமானவர்.
நீதி 30:6 அவருடைய வசனங்களோடு ஒன்றையும் கூட்டாதே, கூட்டினால் அவர் உன்னைக் கடிந்துகொள்வார், நீ பொய்யனாவாய்.

தேவனுடைய வசனத்தை கூட்டி குறைக்கக் கூடிய பொய்யர் அனைவரும் இரண்டாம் மரணமாகிய அக்கினி கடலிலே பங்கடைவார்கள்
வெளி 21:8 பயப்படுகிறவர்களும், அவிசுவாசிகளும், அருவருப்பானவர்களும், கொலைபாதகரும், விபசாரக்காரரும், சூனியக்காரரும், விக்கிரகாராதனைக்காரரும், பொய்யர் அனைவரும் இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள் என்றார். 

ஆபிரகாம் ஒய்வுநாள் பிரமாணத்தை ஆசரித்தாரா?
ஆதி 18:19 கர்த்தர் ஆபிரகாமுக்குச் சொன்னதை நிறைவேற்றும்படியாய் அவன் தன் பிள்ளைகளுக்கும், தனக்குப் பின்வரும் தன் வீட்டாருக்கும்: நீங்கள் நீதியையும் நியாயத்தையும் செய்து, கர்த்தருடைய வழியைக் காத்து நடவுங்கள் என்று கட்டளையிடுவான் என்பதை அறிந்திருக்கிறேன் என்றார்.

இங்கே சொல்லக்கூடிய நீதி நியாயம் கர்த்தருடைய வழி இது ஒய்வுநாள் பிரமாணம் என்று அவர்கள் சொல்லுகிறார்கள்

 அப்படி என்றால் வேத வாக்கியத்தில் நீதி நியாயம் கர்த்தருடைய வழி என்ற வார்த்தை வந்தால் எல்லாம் ஓய்வுநாளை குறித்தா பேசுகிறது?

ஆபிரகாமுக்கு சொன்ன இந்த வேத வாக்கியம் ஒய்வுநாள் பிரமாணத்தை பற்றி தான் பேசுகிறது என்பதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது?

கீழே உள்ள வேத வாக்கியத்தை கவனியுங்கள்

ஆபிராகம் தன் பிள்ளைகளுக்கும் தன் வீட்டாருக்கும் என்ன கட்டளையிட்டார்?
1) நீதியையும் நியாயத்தையும் செய்யுங்கள்
2) கர்த்தருடைய வழியை காத்து நடவுங்கள்

இதற்கும் ஒய்வுநாளுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது?

ஒய்வுநாள் பிரமாணத்தைக் குறித்து தேவன் ஆபிரகாமுக்கு போதித்தார் என்பதை வசன ஆதாரத்தோடு இவர்களால் காண்பிக்க முடியாது 

சுமார் 2500 வருஷங்களை உள்ளடக்கிய ஆதியாகம புஸ்தகத்தில் எந்த ஒரு பரிசுத்தவான்களும் (ஆபேல் முதற்கொண்டு யோசேப்பு வரை) ஒய்வு நாள் ஆசரித்ததாக எந்த ஒரு வேத வாக்கியமும் போதிக்கவில்லை

அப்படி இருக்கும் என்றால் ஆதியாகம புத்தகத்தில் இரண்டு மூன்று வசனங்களை ஆதாரமாக காண்பியுங்கள்

சுமார் 1500 வருஷங்களை உள்ளடக்கிய யாத்திராகமம் முதல் மல்கியா வரை சுமார் 50 வசனங்களுக்கு மேல் இஸ்ரவேல் ஜனங்களுக்கு தான் அந்த ஒய்வுநாள் பிரமாணத்தை கொடுத்தார் என்பதை பட்டியல் இட்டு காட்ட முடியும் 

இந்த ஓய்வு நாள் ஆசரிப்பு வருகை சபையார் தேவனுடைய வார்த்தைகளை கூட்டி தங்கள் சொந்த கற்பனைகளை உபதேசங்களாக போதித்து வருகிறார்கள் 

இவர்கள் தங்களுடைய சொந்த யூகங்களை போதித்து ஆராதனை செய்கிறபடியால் இவர்கள் செய்யக்கூடிய ஆராதனை வீணான ஆராதனையாக தான் இருக்கிறது

இவர்களுடைய உபதேசங்கள் எல்லாம் எழுதப்பட்டதற்கு மிஞ்சி தான் இருக்கும்
1கொரி 4:6 சகோதரரே, எழுதப்பட்டதற்கு மிஞ்சி எண்ணவேண்டாமென்று நீங்கள் எங்களாலே கற்றுக்கொள்ளவும், ,,,, 
மத் 5:37 உள்ளதை உள்ளதென்றும், இல்லதை இல்லதென்றும் சொல்லுங்கள் இதற்கு மிஞ்சினது தீமையினால் உண்டாயிருக்கும்.
யாக் 5:12 ,,, நீங்கள் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படாதபடிக்கு உள்ளதை உள்ளதென்றும், இல்லதை இல்லதென்றும் சொல்லக்கடவீர்கள்.

கர்த்தருக்கு சித்தமானால் இன்னும் ஓய்வு நாள் பிரமாணத்தை குறித்து தொடர்ந்து கற்றுக் கொள்வோம் 

நீங்கள் ஈரோட்டில் இருந்தால் ஜெபிக்கவும் தேவனுடைய சத்தியங்களை இலவசமாகவும் உங்கள் வீடுகளில் கற்றுக்கொள்ள எங்களை அழைக்கவும்

Preacher: Bro Ariyel Barnabas
Church Of Christ
Erode
Call-9025776966

தேவனுடைய சத்தியங்களை தொடர்ந்து வாட்ஸ் ஆப் ல் பெற 9025776966 என்ற இந்த எண்ணுக்கு குறுந் தகவல் அனுப்பவும்

சில வேதாகம கேள்விகளுக்கு வேத வாக்கியத்தில் இருந்து எங்களுடைய பதில்

Tamil Bible Question & Answer

சில வேதாகம கேள்விகளுக்கு வேத வாக்கியத்தில் இருந்து எங்களுடைய பதில்

எங்களுடைய யூடியூப் சேனலை பாருங்கள் சத்தியத்தை கற்றுக் கொள்ளுங்கள் 

ஆமென் என்பதற்கான அர்த்தம் என்ன

1000, 500, 100 ஸ்தோத்திர பலிகளினால் என்ன நன்மை இருக்கிறது?










Subscribe Like Share

Tuesday, 26 April 2022

மாம்ச இச்சைகளுக்காக மாத்திரம் திருமணம் செய்தால் என்ன சம்பவிக்கும்?

பாடம் :03 விவாகம் யாவருக்குள்ளும் கனம் உள்ளதா?

மாம்ச இச்சைகளுக்காக மாத்திரம் திருமணம் செய்தால் என்ன சம்பவிக்கும்?

தேவன் திருமண உறவை எதற்காக ஏற்படுத்தினார் என்பதை நாம் கற்றுக் கொண்டு இருக்கிறோம்

விவாகம் என்பது யாவருக்குள்ளும் கனமுள்ளதாகவும் பரிசுத்தமுள்ளதாகவும் இருக்கிறது என்று வேத வாக்கியம் நமக்கு போதிக்கிறது

இன்றைக்கு அநேகர் தங்கள் சரீர இச்சைகளை தீர்ப்பதற்காக மாத்திரம் திருமணம் செய்கிறார்கள்

இப்படி திருமணம் செய்கிறவர்கள் தேவன் என்ன நோக்கத்திற்காக விவாகத்தை ஏற்படுத்தினாரோ அந்த நோக்கத்தையே அவர்கள் அசுசிப்படுத்துகிறார்கள்

இன்றைக்கு அநேகர் காதல் என்கிற சாத்தானுடைய கண்ணியில் சிக்கிக் கொள்ளுகிறார்கள் அவர்கள் எங்களுடைய காதல் புனிதமானது என்று சொல்லிக் கொள்ளுகிறார்கள்

திருமணத்திற்கு முன்பதாக யாரொவரும் இச்சையோடு பார்க்கின்ற போது அங்கே என்ன சம்பவிக்கிறது?
மத் 5:28 நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளோடே விபசாரஞ்செய்தாயிற்று.

இச்சையோடு பார்க்கின்றபோது அங்கே விபச்சாரமாய் இருக்கிறது என்றால் இன்றைய காலகட்டத்தில் காதல் எப்படி பரிசுத்தமாக இருக்கும்?

பெரும்பாலான காதல்களில் அங்கே இருதயத்தில் தங்கள் துணையை இச்சையோடு பார்க்கின்ற போது அவர்கள் விபசாரக்காரர்களாய் இருக்கிறார்கள்

திருமணத்திற்கு முன்பதாகவே தங்கள் சரீரங்களை அவர்கள் இணைத்து கொள்ளுகின்ற போது அங்கே அது விபசாரமாய் இருக்கிறது

நாம் பழைய ஏற்பாட்டில் இருந்து காதல் என்பது எப்படி இருக்கிறது என்பதை உதாரணமாக பார்க்க போகிறோம் 

இன்றைக்கு காதல் என்கிற மயக்கத்தில் சிக்கிக்கொள்ளுகிற எல்லாருக்கு இந்த சம்பவம் ஒரு எச்சரிக்கையாக இருக்கிறது

தாவீதின் குமாரனாகிய அப்சலோமுக்கு தாமார் என்னும் பேருள்ள சவுந்தரியமுள்ள ஒரு சகோதரி இருந்தாள்
2சாமு 13:1 இதற்குப்பின்பு தாவீதின் குமாரனாகிய அப்சலோமுக்குத் தாமார் என்னும் பேருள்ள சவுந்தரியமுள்ள ஒரு சகோதரி இருந்தாள்; அவள் மேல் தாவீதின் குமாரன் அம்னோன் மோகங்கொண்டான்.

தாமார் மேல் தாவீதின் இன்னொரு குமரனாகிய அம்னோன் என்பவன் மோகங்கொண்டான்

அம்னோன் தாமாரினிமித்தம் ஏக்கங்கொண்டு வியாதிப்பட்டான்
2சாமு 13:2 தன் சகோதரியாகிய தாமாரினிமித்தம் ஏக்கங்கொண்டு வியாதிப்பட்டான்; அவள் கன்னியாஸ்திரீயாயிருந்தாள்; அவளுக்குப் பொல்லாப்புச் செய்ய, அம்னோனுக்கு வருத்தமாய்க் கண்டது

இன்றைக்கு அநேகர் காதலில் மயக்கத்தில் விழுந்து இப்படிப்பட்ட மனநிலையில் தான் இருக்கிறார்கள்

அதாவது ஏக்கம் கொண்டு வியாதிப்பட்டு இருக்கிறார்கள் 

அம்னோனுக்கு தாமாரை விவாகம் பண்ண வேண்டும் என்பது அவனுடைய நோக்கம் அல்ல

அவன் தாமாரை சரீரபிரகாரமாக அநுபவிக்க வேண்டும் என்று தான் அவனுடைய இருதயத்தின் எண்ணமாக இருந்தது

ஏனென்றால் தாமார் அழகுள்ள ரூபாவதியாக (சௌந்தரியமுள்ள) இருந்தாள்

இன்றைக்கு இருக்கக்கூடிய வாலிப ஸ்திரீகளும் இதை புரிந்து கொள்ள வேண்டும் உங்களை விரும்ப கூடியவர்கள் ஒருவேளை அம்னோனைப் போல இருதயம் உடையவர்களாக இருந்து உங்கள் சரீரத்தை இச்சிக்கக் கூடியவர்களாக இருக்கலாம்

இன்றைக்கும் நிறைய வாலிப ஸ்திரீகள் இப்படிப்பட்ட இருதயம் உடையவர்களுடைய கண்ணியில் சிக்கி கொண்டு அவர்கள் அதை வீடியோவாக எடுத்து மிரட்டி அவர்கள் குடும்பத்தையே நாசம் செய்து விடுகிறார்கள்

அம்மோன் கூட இருந்த அவனுடைய சிநேகிதன் யோனதாப் மகா தந்திரவாதியாக இருந்தான்
2சாமு 13:3 அம்னோனுக்குத் தாவீதுடைய தமையன் சிமியாவின் குமாரனாகிய யோனதாப் என்னும் பேருள்ள ஒரு சிநேகிதன் இருந்தான்; அந்த யோனதாப் மகா தந்திரவாதி.

இன்றைக்கும் இப்படிப்பட்ட தந்திரமுள்ள சிநேகிதர்கள் அநேகர் இருக்கிறார்கள் 

அம்மோன் தாமாரின் மேல் கொண்ட ஏக்கத்தினால் நாளுக்கு நாள் மெலிந்து கொண்டே வந்தான்
2சாமு 13:4 அவன் இவனைப் பார்த்து: ராஜகுமாரனாகிய நீ, நாளுக்குநாள் எதினாலே இப்படி மெலிந்துபோகிறாய், எனக்குச் சொல்லமாட்டாயா என்றான். அதற்கு அம்னோன்: என் சகோதரன் அப்சலோமின் சகோதரியாகிய தாமாரின்மேல் நான் ஆசை வைத்திருக்கிறேன் என்றான்.

இன்றைக்கு காதலிக்கிறேன் சொல்லக்கூடியவர்கள் இப்படி நாளுக்கு நாள் மெலிந்து வருவதாக சொல்லி கொள்கிறார்கள்
ஏன் இப்படி மெலிந்து வருகிறீர்கள் என்றால் காதல் ஏக்கம் என்கிறார்கள் 

இதற்கொல்லாம் காரணம் திருமணம் செய்ய வேண்டும் என்கிற எண்ணமா அல்லது வேறு ஏதாவது காரணம் இருக்கிறதா?

தந்திரவாதியான யோனதாப் அம்னோனுக்கு ஒரு ஆலோசனையை கொடுத்தான்
2சாமு 13:5 அப்பொழுது யோனதாப் அவனைப் பார்த்து: நீ வியாதிக்காரனைப்போல உன் படுக்கையின்மேல் படுத்துக்கொள்; உன்னைப் பார்க்கிறதற்கு உன் தகப்பனார் வரும்போது, நீ, என் சகோதரியாகிய தாமார் வந்து, எனக்குப் போஜனம்கொடுத்து, அவள் கையினாலே சாப்பிடும்படிக்கு நான் பார்க்க, என் கண்களுக்கு முன்பாகச் சமைக்கும்படி தயவுசெய்யவேண்டும் என்று சொல் என்றான்.

தாமாரை அம்னோன் இருக்கிற வீட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்பது தான் யோனதாபின் திட்டமாக இருந்தது

யோனதாபின் திட்டத்தின்படியாகவே அம்னோன் நடந்து கொண்டான்
2சாமு 13:6 அப்படியே அம்னோன் வியாதிக்காரன்போல் படுத்துக்கொண்டு, ராஜா தன்னைப் பார்க்கவந்தபோது, ராஜாவை நோக்கி: என் சகோதரியாகிய தாமார் வந்து நான் அவள் கையினாலே சாப்பிடும்படிக்கு, என் கண்களுக்கு முன்பாக இரண்டு நல்ல பணியாரங்களைப் பண்ணும்படி உத்தரவு கொடுக்கவேண்டும் என்றான்.

அவன் சொன்னபடியே தாவீதும் தாமாரிடத்தில் ஆள் அனுப்பி உன் சகோதரனுக்கு சமையல் பண்ணி கொடு என்று சொல்ல சொன்னார்
2சாமு 13:7 அப்பொழுது தாவீது: வீட்டுக்குத் தாமாரிடத்தில் ஆள் அனுப்பி, நீ உன் சகோதரனாகிய அம்னோன் வீட்டுக்குப் போய், அவனுக்குச் சமையல் பண்ணிக்கொடு என்று சொல்லச்சொன்னான்.

தாவீதின் வார்த்தைகளுக்கு கீழ்ப்படிந்து தாமார் அம்னோன் வீட்டுக்குப்போய் பணியாரங்களை சுட்டு கொடுத்தாள்
2சாமு 13:8 தாமார் தன் சகோதரனாகிய அம்னோன் படுத்துக்கொண்டிருக்கிற வீட்டுக்குப்போய், மாவெடுத்துப் பிசைந்து, அவன் கண்களுக்கு முன்பாகத் தட்டி, பணியாரங்களைச் சுட்டு,
2சாமு 13:9 சட்டியை எடுத்து, அவனுக்கு முன்பாக அவைகளை வைத்தாள்; ஆனாலும் அவன் சாப்பிடமாட்டேன் என்றான்; பின்பு அம்னோன்: எல்லாரும் என்னைவிட்டு வெளியே போகட்டும் என்றான்; எல்லாரும் அவனை விட்டு வெளியே போனார்கள்

எல்லாரையும் அம்னோன் வெளியே அனுப்பி தந்திரமாய் நடந்து கொண்டான்
2சாமு 13:10 அப்பொழுது அம்னோன் தாமாரைப் பார்த்து: நான் உன் கையினாலே சாப்பிடும்படிக்கு, அந்தப் பலகாரத்தை அறை வீட்டிலே கொண்டுவா என்றான்; அப்படியே தாமார் தான் செய்த பணியாரங்களை அறை வீட்டில் இருக்கிற தன் சகோதரனாகிய அம்னோனிடத்தில் கொண்டு போனாள்

தாமார் தன்னுடைய சகோதரி என்று பாராமல் என்னோடே சயனி என்றான்
2சாமு 13:11 அவன் சாப்பிடும்படிக்கு அவள் அவைகளைக் கிட்ட கொண்டுவருகையில், அவன் அவளைப் பிடித்து, அவளைப் பார்த்து: என் சகோதரியே, நீ வந்து என்னோடே சயனி என்றான்.

தாமார் அவனிடத்தில் இது மதிகேடான காரியம் என்றாள்
2சாமு 13:12 அதற்கு அவள்: வேண்டாம், என் சகோதரனே, என்னை அவமானப்படுத்தாதே, இஸ்ரவேலிலே இப்படிச் செய்யத்தகாது; இப்படிப்பட்ட மதிகேடான காரியத்தைச் செய்யவேண்டாம்.

தாமார் அவனிடத்தில் தன்னை திருமணம் செய்வதற்கு ராஜாவோடு பேசு என்றாள்
2சாமு 13:13 நான் என் வெட்கத்தோடே எங்கே போவேன்? நீயும் இஸ்ரவேலிலே மதிகெட்டவர்களில் ஒருவனைப்போல ஆவாய்; இப்போதும் நீ ராஜாவோடே பேசு, அவர் என்னை உனக்குத் தராமல் மறுக்க மாட்டார் என்றாள்.

அம்னோனுக்கு தாமாரை திருமணம் செய்ய வேண்டும் என்கிற எண்ணம் எல்லாம் அவனுக்கு இல்லை

அம்னோன் தாமாரை பலவந்தமாய் கற்பழித்தான்
2சாமு 13:14 அவன் அவள் சொல்லைக் கேட்கமாட்டேன் என்று அவளைப் பலவந்தமாய்ப் பிடித்து, அவளோடே சயனித்து, அவளைக் கற்பழித்தான்.

அம்னோன் தாமார் மேல் வைத்து இருந்த மாம்ச இச்சைகள் நிறைவேறின பின்பு எப்படி நடந்து கொண்டான்?
2சாமு 13:15 பிற்பாடு அம்னோன் அவளை மிகவும் வெறுத்தான்; அவன் அவளை விரும்பின விருப்பத்தைப் பார்க்கிலும், அவளை வெறுத்த வெறுப்பு அதிகமாயிருந்தது. ஆகையால்: நீ எழுந்து போய்விடு என்று அம்னோன் அவளோடே சொன்னான்.

இன்றைக்கு நிறைய காதல் திருமணங்களில் இது எல்லாம் நடக்கிறதா? நடக்கிறது

இது எல்லாம் தொடர்ந்து நடக்குமா?
ஆம் நிச்சயமாக இது எல்லாம் தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருக்கும்

காதல் பரிசுத்தமானது என்று இன்றைக்கு திரைப்படங்கள் கற்றுக் கொடுக்கிறது அதையும் இன்றைக்கு இருக்கக்கூடிய வாலிப பிள்ளைகள் நம்பிக் கொண்டு இந்த சாத்தானுடைய கண்ணியில் போய் சிக்கிக் கொள்ளுகிறார்கள்

காதலிக்கும் போது தங்கள் இச்சைகளை நிறைவேற்றின பின்பு அவர்கள் எப்படி நடந்து கொள்ளுவார்கள்?
2சாமு 13:16 அப்பொழுது அவள்: நீ எனக்கு முந்தி செய்த அநியாயத்தைப் பார்க்கிலும், இப்பொழுது என்னைத் துரத்திவிடுகிற அந்த அநியாயம் கொடுமையாயிருக்கிறது என்றாள்; ஆனாலும் அவன் அவள் சொல்லைக் கேட்க மனதில்லாமல்,

இச்சைகளுக்காக திருமணம் செய்யக் கூடியவர்கள் தங்கள் மாம்ச இச்சைகளை நிறைவேறிய பின்பு இப்படித்தான் நடந்து கொள்வார்கள்

அம்னோன் தாமாரை வெளியே தள்ளி கதவை பூட்ட சொன்னான்
2சாமு 13:17 தன்னிடத்தில் சேவிக்கிற தன் வேலைக்காரனைக் கூப்பிட்டு: நீ இவளை என்னை விட்டு வெளியே தள்ளி, கதவைப் பூட்டு என்றான்.
2சாமு 13:18 அப்படியே அவனிடத்தில் சேவிக்கிறவன் அவளை வெளியே தள்ளி, கதவைப் பூட்டினான்; அவள் பலவருணமான வஸ்திரத்தை உடுத்திக்கொண்டிருந்தாள்; ராஜகுமாரத்திகளாகிய கன்னிகைகள் இப்படிக்கொத்த சால்வைகளைத் தரித்துக்கொள்வார்கள்.
2சாமு 13:19 அப்பொழுது தாமார்: தன் தலையின்மேல் சாம்பலை வாரிப் போட்டுக்கொண்டு, தான் தரித்திருந்த பலவருணமான வஸ்திரத்தைக் கிழித்து, தன் கையைத் தன் தலையின்மேல் வைத்து, சத்தமிட்டு அழுதுகொண்டு போனாள்.

காதல் என்கிற சாத்தானுடைய கண்ணியில் சிக்கிக்கொண்டு பெற்றோர்களை உதறிவிட்டவர்களும்
தங்கள் மாம்ச இச்சைகளுக்காக காதலிக்கிறவர்களும் திருமணம் செய்கிறவர்களும் தங்களுடைய மாம்ச இச்சைகள் தீர்ந்த பின் அவர்கள் இப்படித்தான் அவமானப்படுத்தப் படுகிறார்கள்

இப்படி இச்சைக்காக காதல் வயப்பட்டு தன் காதல் கணவனால் அடித்துத் துரத்தப்பட்ட பெண்கள் இன்றைக்கு வாழ வழியின்றி தற்கொலை செய்து கொண்டும் அல்லது தங்கள் பெற்றோர்களை சார்ந்து கண்ணீரோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்

சரீர இச்சைகளுக்காக திருமணம் செய்யக் கூடியவர்களுடைய வாழ்க்கை இப்படித்தான் இருக்கும்

இவர்கள் திருமணத்தை கனமாகவும் பரிசுத்தமாகவும் பார்க்காதவர்கள் அதின் மேன்மையும் உணராதவர்கள்

கர்த்தருக்கு சித்தமானால் இன்னும் விவாகத்தை குறித்து நிறைய சத்தியங்களை கற்றுக் கொள்ளலாம்

நீங்கள் ஈரோட்டில் இருந்தால் ஜெபிக்கவும் தேவனுடைய சத்தியங்களை இலவசமாகவும் உங்கள் வீடுகளில் கற்றுக்கொள்ள எங்களை அழைக்கவும்

Preacher: Bro Ariyel Barnabas
Church Of Christ
Erode
Call-9025776966

தேவனுடைய சத்தியங்களை தொடர்ந்து வாட்ஸ் ஆப் ல் பெற 9025776966 என்ற எண்ணுக்கு குறுந்தகவல் அனுப்பவும்

Monday, 25 April 2022

புதிய உடன்படிக்கையில் ஓய்வுநாளை ஆசாிக்க வேண்டும் என்ற கட்டளை இருக்கிறதா?

பகுதி:4 ஒய்வு நாள் ஆசரிப்பு கிறிஸ்தவர்களுக்கு கொடுக்கப்பட்டதா?

புதிய உடன்படிக்கையில் ஓய்வுநாளை ஆசாரிக்க வேண்டும் என்ற கட்டளை இருக்கிறதா?

ஏழாம் ஓய்வுநாள் சபையார் கிபி 3ம் நூற்றாண்டில் ரோம சக்கரவர்த்தி ஒருவர் சனிக்கிழமை ஓய்வுநாள் பிரமாணத்தை மாற்றி ஞாயிற்று கிழமை ஆராதனை நாளாக அறிவித்தார் என்று போதித்து கொண்டு இருக்கிறார்கள்

அதனால் ஓய்வு நாளை கிறிஸ்தவர்கள் மாத்திரம் அல்ல உலகத்தார் எல்லாரும் ஆசாரிக்க வேண்டும் என்று சொல்லி கொண்டு இருக்கிறார்கள்

இவர்கள் தேவனுடைய சத்தியங்களை மனப்பூர்வமாய் விசுவாசிப்பது இல்லை

ஒரு விஷயத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும் எப்போது தேவனுடைய சபை ஸ்தாபிக்கப்பட்டதோ அன்றிலிருந்து இன்றுவரை தொடர்ந்து தேவனுடைய சபையின் மீது தாக்குதல்(கள்ள போதகங்கள்) நடந்து கொண்டே இருக்கிறது

தேவனுடைய பிரமாணமாகிய மோசேயின் நியாயப் பிரமாணத்தை குறித்து கிறிஸ்துவின் விசுவாசம் என்னவாக இருந்தது?
மத் 5:18 வானமும் பூமியும் ஒழிந்துபோனாலும், நியாயப்பிரமாணத்திலுள்ளதெல்லாம் நிறைவேறுமளவும், அதில் ஒரு எழுத்தாகிலும், ஒரு எழுத்தின் உறுப்பாகிலும் ஒழிந்து போகாது என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். 

இயேசு கிறிஸ்து விசுவாசித்தது போல தேவனுடைய சத்தியத்தை யாராலும் மாற்றவும் முடியாது  யாராலும் அதை அழித்து போடவும் முடியாது என்பதை நாம் மனப்பூர்வமாக விசுவாசிக்க வேண்டும்

பாபிலோன், மேதிய பெர்சியா, கிரேக்கம் மற்றும் ரோம சாம்ராஜ்யம் போன்ற ராஜ்ஜியங்கள் ஆட்சி செய்த போதும் மோசேயின் நியாயப்பிரமாணத்தில் உள்ள ஒரு எழுத்தையாகிலும் எழுத்தின் உறுப்பை யாகிலும் யாராலும் அழித்து போட முடியவில்லை

இவர்கள் புதிய ஏற்பாடு கிறிஸ்துவின் உபதேசங்களை  சரியாக  விசுவாசிப்பது இல்லை, இவர்கள் புதிய ஏற்பாட்டில் எங்கு கற்பனை என்ற வார்த்தை இருக்கிறதோ அதை மாத்திரம் மனப்பாடம் செய்து கொள்ளுவார்கள்

வேத வாக்கியத்தில்(குறிப்பாக புதிய ஏற்பாடு) எங்கு எல்லாம் கற்பனை என்ற வார்த்தை வந்து இருக்கிறதோ அது எல்லாம் அவர்களை  பொறுத்த வரை பத்து கற்பனைகள் தான்

வேத வாக்கியத்தில் யாராவது ஒருவர் கற்பனையின் படி நடந்தார் என்று வாசித்தால் உடனே பார்த்தீர்களா அவர் பத்து கற்பனையின் நடந்தார் என்று வாதம் செய்வார்கள்

பழைய ஏற்பாட்டுக்கும்  புதிய ஏற்பாட்டுக்கும் உள்ள வித்தியாசத்தை நாம் தெரிந்து வைத்து இருக்க வேண்டும் 

எந்த பிரமாணத்தை கிறிஸ்து நமக்கு கொடுத்து இருக்கிறார் என்ற சத்தியத்தை உணர்ந்து இருக்க வேண்டும் 

இவர்கள் ஏழாம் ஓய்வு நாள் என்கிற கண்ணாடியை அணிந்து கொண்டு வேத வாக்கியத்தை வாசிப்பதால் இந்த ஆவிக்குரிய குருடர்களுக்கு கற்பனைகள் எல்லாம் பத்து கற்பனைகள் போலவே தெரிகிறது

புது உடன்படிக்கையை ஏற்படுத்துவேன் என்று தேவன் வாக்குத்தத்தம் செய்து இருந்தார்
எரே 31:31 இதோ, நாட்கள் வருமென்று கர்த்தர் சொல்லுகிறார், அப்பொழுது இஸ்ரவேல் குடும்பத்தோடும் யூதா குடும்பத்தோடும் புது உடன்படிக்கை பண்ணுவேன்.
எரே 31:32 நான் அவர்கள் பிதாக்களை எகிப்து தேசத்திலிருந்து அழைத்துவரக் கைப்பிடித்த நாளிலே அவர்களோடே பண்ணின உடன்படிக்கையின்படி அல்ல; ஏனெனில் நான் அவர்களுக்கு நாயகராயிருந்தும், அந்த என் உடன்படிக்கையை அவர்கள் மீறி அவமாக்கிப்போட்டார்களே என்று கர்த்தர் சொல்லுகிறார்.
எரே 31:33 அந்நாட்களுக்குப்பிற்பாடு, நான் இஸ்ரவேல் குடும்பத்தோடே பண்ணப்போகிற உடன்படிக்கையாவது; நான் என் நியாயப்பிரமாணத்தை அவர்கள் உள்ளத்திலே வைத்து, அதை அவர்கள் இருதயத்திலே எழுதி, நான் அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

அந்த புது உடன்படிக்கைக்கு கிறிஸ்து மத்தியஸ்தராக இருந்தார்
எபி 8:7 அந்த முதலாம் உடன்படிக்கை பிழையில்லாதிருந்ததானால், இரண்டாம் உடன்படிக்கைக்கு இடம் தேடவேண்டுவதில்லையே.
எபி 8:8 அவர்களைக் குற்றப்படுத்தி, அவர்களை நோக்கி: இதோ, கர்த்தர் சொல்லுகிறதென்னவெனில்: இஸ்ரவேல் குடும்பத்தோடும் யூதா குடும்பத்தோடும் நான் புது உடன்படிக்கையை ஏற்படுத்துங்காலம் வருகிறது.
எபி 8:9 அவர்களுடைய பிதாக்களை எகிப்துதேசத்திலிருந்து கொண்டுவரும்படிக்கு நான் அவர்களுடைய கையைப் பிடித்த நாளிலே அவர்களோடு பண்ணின உடன்படிக்கையைப்போல இது இருப்பதில்லை; அந்த உடன்படிக்கையிலே அவர்கள் நிலைநிற்கவில்லையே, நானும் அவர்களைப் புறக்கணித்தேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

அந்த புது உடன்படிக்கை மனதிலே வைத்து இருதயத்தில் எழுதப்பட்டது
எபி 8:10 அந்த நாட்களுக்குப்பின்பு நான் இஸ்ரவேல் குடும்பத்தாரோடே பண்ணும் உடன்படிக்கையாவது: என்னுடைய பிரமாணங்களை அவர்களுடைய மனதிலே வைத்து, அவர்களுடைய இருதயங்களில் அவைகளை எழுதுவேன்; நான் அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள்.
எபி 8:11 அப்பொழுது சிறியவன் முதற்கொண்டு பெரியவன்வரைக்கும் எல்லாரும் என்னை அறிவார்கள் ஆகையால், கர்த்தரை அறிந்துகொள் என்று ஒருவன் தன் அயலானுக்கும், ஒருவன் தன் சகோதரனுக்கும் போதிக்கவேண்டுவதில்லை.

அந்த பழைய உடன்படிக்கை(நியாயப்பிரமாணம்) கி,பி 70 ல் தேவாலயம் அழிக்கப்பட்ட போது அது உருவழிந்து போயிற்று
எபி 8:12 ஏனெனில் நான் அவர்கள் அநியாயங்களைக் கிருபையாய் மன்னித்து, அவர்கள் பாவங்களையும் அக்கிரமங்களையும் இனி நினையாமலிருப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
எபி 8:13 புது உடன்படிக்கை என்று அவர் சொல்லுகிறதினாலே முந்தினதைப் பழமையாக்கினார்; பழமையானதும் நாள்பட்டதுமாயிருக்கிறது உருவழிந்துபோகக் காலம் சமீபித்திருக்கிறது.

தேவன் நியாயப்பிரமாணத்தை குறித்து உண்டாக்குகிற வாக்குவாதங்களை விட்டு நாம் விலக வேண்டும் என்று எச்சரிக்கிறார்
தீத்து 3:9 புத்தியீனமான தர்க்கங்களையும், வம்சவரலாறுகளையும், சண்டைகளையும், நியாயப்பிரமாணத்தைக்குறித்து உண்டாகிற வாக்குவாதங்களையும் விட்டு விலகு; அவைகள் அப்பிரயோஜனமும் வீணுமாயிருக்கும்.
தீத்து 3:10 வேதப்புரட்டனாயிருக்கிற ஒருவனுக்கு நீ இரண்டொருதரம் புத்தி சொன்னபின்பு அவனை விட்டு விலகு.
தீத்து 3:11 அப்படிப்பட்டவன் நிலைதவறி, தன்னிலேதானே ஆக்கினைத்தீர்ப்புடையவனாய்ப் பாவஞ்செய்கிறவனென்று அறிந்திருக்கிறாயே.

ஓய்வு நாள் பிரமாணம் உலகத்தில் வாழக்கூடிய எல்லாருக்கும் கொடுக்கப்பட்டு இருக்கும் என்றால் புதிய ஏற்பாட்டு கிறிஸ்துவின் பிரமாணத்தில் பாவ அட்டவணையில் ஒய்வுநாளை மீறுவது பாவம் என்று எந்தவொரு வசனமும் ஏன் சொல்லவில்லை?

1) மனிதனுடைய இருதயத்தை தீட்டுப்படுத்தும் 13 பாவங்கள் (மாற் 7:20-23)

2) இப்படிப்பட்ட பாவங்களைச் செய்கிறவர்கள் மரணத்திற்கு பாத்திரராயிருக்கிறார்களென்று 23 பாவங்களை எழுதுகிறார்
(ரோம 1:19-21)

3) இப்படிப்பட்டவர்கள் தேவனுடைய ராஜ்ஜியத்தை சுதந்தரிப்பதில்லை (17பாவங்கள்) (கலா 5:19-21)

4) கிறிஸ்துவின் ராஜ்யத்தில் பிரவேசிக்க தகுதியற்றவர்கள்
(7 பாவங்கள்)(எபே 5:3-7)

5) கடைசி கால கொடிய பாவங்கள் (19 பாவங்கள்) (2தீமோ 3:1-5)

6) இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள் (8 பாவங்கள்) (வெளி 21:8)

7) தேவனுடைய நித்திய ராஜ்யத்துக்கும் அவர் சமூகத்துக்கும் புறம்பே இருப்பார்கள் ( 6வித கொடிய பாவம்) (வெளி 22:15)

இந்த அட்டவணையில் ஒரு வசனத்தில் கூட ஒய்வு நாளை மீறுவது பாவம் என்றோ அக்கிரமம் என்றோ வேத வாக்கியங்களை ஏவின பரிசுத்த ஆவியானவர் வெளிப்படுத்தவில்லை

கர்த்தருக்கு சித்தமானால் இன்னும் ஓய்வு நாள் உபதேசத்தை குறித்து  இன்னும் கற்றுக் கொள்வோம் 

நீங்கள் ஈரோட்டில் இருந்தால் ஜெபிக்கவும்  தேவனுடைய சத்தியங்களை இலவசமாகவும்  உங்கள் வீடுகளில் கற்றுக்கொள்ள எங்களை அழைக்கவும்

Preacher: Bro Ariyel Barnabas
Church Of Christ
Erode
Call-9025776966

தேவனுடைய சத்தியங்களை தொடர்ந்து வாட்ஸ் ஆப் ல் பெற 9025776966 என்ற இந்த எண்ணுக்கு குறுந் தகவல் அனுப்பவும்

Sunday, 24 April 2022

திருமண உறவை தேவன் எதற்காக ஏற்படுத்தினார்?

பாடம்:02  விவாகம் யாவருக்குள்ளும் கனம் உள்ளதா?
                                             
திருமண உறவை தேவன் எதற்காக ஏற்படுத்தினார்?

 திருமண உறவுகளை குறித்து உலகம் பெரிதாக கவலைப்படுவதில்லை
ஆனால் தேவனுடைய பிள்ளைகள் தங்களுடைய திருமண உறவுகளில் சரியாக இருக்க வேண்டும் என்று தேவன் விரும்புகிறார்

திருமணம் என்பது தேவனுடைய திட்டத்திலிருந்து வந்த ஒன்றாகும் என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும் 

அவர் திருமண உறவை ஆதாமுக்கு ஏற்ற துணையாக  ஏவாளை சிருஷ்டித்து  ஏற்படுத்தினார் 

ஆதாமுக்கு ஏற்ற துணை என்பது மிருகங்களோ பறவைகளோ இல்லை என்பதை கவனியுங்கள்
ஆதி 2:20அப்படியே, ஆதாம் சகலவித நாட்டு மிருகங்களுக்கும், ஆகாயத்துப் பறவைகளுக்கும், சகலவித காட்டுமிருகங்களுக்கும் பேரிட்டான். ஆதாமுக்கோ ஏற்ற துணை இன்னும் காணப்படவில்லை.

திருமண உறவை தேவன் எதற்காக உண்டாக்கினார் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டுமா?

1) மனுஷன் தனிமையாக இருப்பது நல்லதல்ல என்பதற்காக உண்டாக்கினார்
ஆதி 2:18 பின்பு, தேவனாகிய கர்த்தர்: மனுஷன் தனிமையாயிருப்பது நல்லதல்ல, ஏற்ற துணையை அவனுக்கு உண்டாக்குவேன் என்றார்.

திருமணம் முடிந்த பின்பு கணவனோ அல்லது மனைவியோ தனிமையாக இருப்பது ஆபத்து தான் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்
(இதைக் குறித்து பின்வரும் பாடங்களில் படிப்போம்)

2) அவர்கள் (புருஷனும் மனைவியும்) கூடி வாழ வேண்டும் என்பதற்காக  ஏற்படுத்தினார்
1கொரி 7:5 ,,,,, ஒருவரைவிட்டு ஒருவர் பிரியாதிருங்கள்; ,,,,, மறுபடியும் கூடி வாழுங்கள்.
1கொரி 7:9 ஆகிலும் அவர்கள் விரத்தராயிருக்கக்கூடாதிருந்தால் விவாகம்பண்ணக்கடவர்கள்; வேகிறதைப்பார்க்கிலும் விவாகம்பண்ணுகிறது நலம்.

திருமணமே வேண்டாம் என்று வெந்து கொண்டிருப்பதைப் பார்க்கிலும் திருமணம் செய்வது நலமாயிருக்கும்

கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் பிரியக் கூடாது அவர்கள் கூடி வாழ வேண்டும் என்று தான் தேவன் கட்டளை கொடுக்கிறார்

3) தேவ பக்தியுள்ள் சந்ததியை பெறும்படிக்கு அவர்களை (புருஷனையும் மனைவியையும்) உண்டாக்கினார்
மல் 2:15 அவர் ஒருவனையல்லவா படைத்தார்? ஆவி அவரிடத்தில் பரிபூரணமாயிருந்ததே, பின்னை ஏன் ஒருவனைப் படைத்தார்? தேவபக்தியுள்ள சந்ததியைப் பெறும்படிதானே,,,,,,,

திருமணம் முடிந்து குழந்தைகளை பெற்றுக்கொண்ட உடனே அது தேவ பக்தியுள்ள சந்ததியாக இருக்காது நாம் தான் தேவனுடைய சத்தியத்தை போதித்து அவர்களை தேவ பக்தியுள்ள சந்ததியாக உருவாக்க வேண்டும்

4) அவர்கள்  (புருஷனும் மனைவியும்) தங்கள் பிள்ளைகளோடு தொடர்ந்து குடும்பமாக தேவனை சேவிக்க வேண்டும் என்பதற்காக ஏற்படுத்தினார்
யோசுவா 24:15 கர்த்தரைச் சேவிக்கிறது உங்கள் பார்வைக்கு ஆகாததாய்க் கண்டால், பின்னை யாரைச் சேவிப்பீர்கள் என்று இன்று தெரிந்துகொள்ளுங்கள்; நதிக்கு அப்புறத்தில் உங்கள் பிதாக்கள் சேவித்த தேவர்களைச் சேவிப்பீர்களோ? நீங்கள் வாசம்பண்ணுகிற தேசத்துக் குடிகளாகிய எமோரியரின் தேவர்களைச் சேவிப்பீர்களோ? நானும் என் வீட்டாருமோவென்றால், கர்த்தரையே சேவிப்போம் என்றான். 

தேவன் ஆதியிலே மனுஷனுக்கு ஏற்ற துணையை  உண்டாக்கினாரா?
ஆதி 2:18 ...... ஏற்ற துணையை அவனுக்கு உண்டாக்குவேன் என்றார்.

தேவன் மனுஷனுக்கு ஏற்ற துணையை உண்டாக்கினார்

மனுஷியை எப்படி உண்டாக்கினார்?
ஆதி 2:21 அப்பொழுது தேவனாகிய கர்த்தர் ஆதாமுக்கு அயர்ந்த நித்திரையை வரப்பண்ணினார், அவன் நித்திரையடைந்தான்; அவர் அவன் விலா எலும்புகளில் ஒன்றை எடுத்து, அந்த இடத்தைச் சதையினால் அடைத்தார்.
ஆதி 2:22 தேவனாகிய கர்த்தர் தாம் மனுஷனில் எடுத்த விலா எலும்பை மனுஷியாக உருவாக்கி, அவளை மனுஷனிடத்தில் கொண்டுவந்தார்.

கீழே உள்ள சத்தியங்களை புருஷர்களும் ஸ்திரீகளும் மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்ள வேண்டும்

ஸ்திரீயானவள் புருஷனுடைய மகிமையாயிருக்கிறாள்.
1கொரி 11:7 ... ஸ்திரீயானவள் புருஷனுடைய மகிமையாயிருக்கிறாள்

புருஷனுக்கு மகிமையே ஸ்திரீயானவள் தான்

ஸ்திரீயே புருஷனிலிருந்து தோன்றினவள்
1கொரி 11:8 புருஷன் ஸ்திரீயிலிருந்து தோன்றினவனல்ல, ஸ்திரீயே புருஷனிலிருந்து தோன்றினவள்.

ஸ்திரீயே புருஷனுக்காகச் சிருஷ்டிக்கப்பட்டவள்.
1கொரி 11:9 புருஷன் ஸ்திரீக்காகச் சிருஷ்டிக்கப்பட்டவனல்ல, ஸ்திரீயே புருஷனுக்காகச் சிருஷ்டிக்கப்பட்டவள்.

ஆதாம் ஏவாளை எப்படி ஏற்றுக் கொண்டார்?
ஆதி 2:23 அப்பொழுது ஆதாம்: இவள் என் எலும்பில் எலும்பும், என் மாம்சத்தில் மாம்சமுமாய் இருக்கிறாள்; இவள் மனுஷனில் எடுக்கப்பட்டபடியினால் மனுஷி என்னப்படுவாள் என்றான்.

எலும்பும் மாம்சமும் தனியாக பிரிக்கப்படும் என்றால் அங்கே உயிரும் இருக்காது உருவமும் இருக்காது

தேவன் திருமண உறவை ஏற்படுத்தி இருக்கும் போது தனிமையாக இருப்பது நல்லதா?

மனுஷன் தனிமையாய் இருப்பது நல்லதல்ல என்று தேவன்  அறிந்து இருந்தார்
ஆதி 2:18 பின்பு, தேவனாகிய கர்த்தர்: மனுஷன் தனிமையாயிருப்பது நல்லதல்ல, ஏற்ற துணையை அவனுக்கு உண்டாக்குவேன் என்றார். 

இன்றைக்கு அநேகர் தனிமையை அதிகமாக விரும்புகிறார்கள்

திருமணம் என்றாலும் மனைவி என்றாலும் பிள்ளைகள் என்றாலும் உடனே அவர்கள்  அது எல்லாம்  தொல்லைகள் என்று சொல்லுகிறார்கள்

தேவன் எதை தொல்லை என்று சொல்கிறார்?

குடும்பம் இல்லாதவன் தான் தீராத தொல்லையில் இருக்கிறான்
பிரசங்கி 4:8 ஒருவன் ஒண்டிக்காரனாயிருக்கிறான்; அவனுக்கு உடனாளியுமில்லை, அவனுக்குப் பிள்ளையும் சகோதரனுமில்லை; அப்படியிருந்தும் அவன் படும் பிரயாசத்துக்கு முடிவில்லை; அவன் கண் ஐசுவரியத்தால் திருப்தியாகிறதுமில்லை; நான் ஒரு நன்மையையும் அநுபவியாமல் யாருக்காகப் பிரயாசப்படுகிறேன் என்று அவன் சிந்திக்கிறதுமில்லை; இதுவும் மாயை, தீராத தொல்லை.

இன்றைக்கு அநேகர் தனிமையாக இருந்து விடுவதையே விரும்புகிறார்கள்

இன்றைக்கு நிறைய குற்றங்களும் அக்கிரமங்களும் பாவங்களும் தனிமையாக இருக்கும் போதுதான் ஏற்படுகிறது 

தனிமையாக இருப்பது என்பது சாத்தானுடைய பெரிய கண்ணியாக இருக்கிறது

தனிமையாக இருக்கிற  அநேகர் அந்த கண்ணியில் சிக்கி கொள்கிறார்கள்

மனிதன் ஒருபோதும் தனிமையாக இருக்கக்கூடாது

தேவன் ஆதாமுக்கு அவருடைய விலா எலும்பிலிருந்தே ஏற்ற துணையை உருவாக்கினார்

ஆதாமுக்கு ஏற்ற துணையாக  அவர் மனுஷியை உருவாக்கினார் 

மனுஷி மனுஷனுடைய எலும்பில் எலும்பும் மாம்சத்தில் மாம்சமுமாய் இருக்கிறாள்

தேவன் மனுஷியை உருவாக்கி ஆதாமிடம் கொண்டு வந்தார் ஆதாம் மனுஷியை தன்னுடைய ஏற்ற  துணையாக ஏற்று கொண்டார்

தேவனுடைய விருப்பமே  ஒரு மனுஷனுக்கு ஒரு மனுஷி என்பது தான் அதனால் தான் ஒரு மனுஷனுக்கு ஒரு மனுஷியை உருவாக்கினார்

இன்றைக்கு நாம் ஒருவனுக்கு ஒருத்தி என்றால் அவர்கள்(உலகத்தார்) நம்மைப் பார்த்து பிழைக்கத் தெரியாதவர்கள் என்கிறார்கள்

இதற்கு காரணம் என்னவென்றால் திருமண உறவு எதற்காக இருக்கிறது என்கிற அறிவு அவர்களுக்கு இருப்பதில்லை

அநேகர் திருமணம் என்றால் மாம்ச இச்சைகளை நிறைவேற்றுவதற்காக தான் என்கிறார்கள்

ஒருவன் மாம்ச இச்சைகளுக்காக திருமணம் செய்வான் என்றால் அந்த ஆசைகளை நிறைவேற்றி முடித்த பின்பு அவன் தன் மனைவி அல்லாத வேறொரு உறவை தேட ஆரம்பித்து விடுவான் 

அவர்களைப் பொறுத்த வரை தொடர்ந்து தங்களுடைய இச்சைகளை  நிறைவேற்றிக் கொண்டே இருப்பார்கள்

தேவன் சிருஷ்டித்த போது புருஷனைக் குறித்தும் மனைவியைக் குறித்தும்  அவருடைய ஆசை என்ன?
ஆதி 2:24 இதினிமித்தம் புருஷன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு, தன் மனைவியோடே இசைந்திருப்பான்; அவர்கள் ஒரே மாம்சமாயிருப்பார்கள்.

1) புருஷன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு தன் மனைவியோடே இசைந்திருக்க வேண்டும்
2) அவர்கள்  ஒரே மாம்சமாய் இருக்க வேண்டும்

அவர்கள் இருவரும்  ஒரே மாம்சமாக இருந்தாலும் அதிகாரத்தில் இருவரும் சமம் அல்ல என்பதை பின்வரும் பாடங்களில் படிப்போம் 

கர்த்தருக்கு சித்தமானால் தொடர்ந்து கற்றுக் கொள்ளுவோம்

நீங்கள் ஈரோட்டில் இருந்தால் ஜெபிக்கவும்  தேவனுடைய சத்தியங்களை இலவசமாகவும்  உங்கள் வீடுகளில் கற்றுக்கொள்ள எங்களை அழைக்கவும்

Preacher: Bro Ariyel Barnabas
Church Of Christ
Erode
Call-9025776966

தேவனுடைய சத்தியங்களை தொடர்ந்து வாட்ஸ் ஆப் ல் பெற 9025776966 என்ற இந்த எண்ணுக்கு குறுந் தகவல் அனுப்பவும்

Thursday, 21 April 2022

விவாகம் யாவருக்குள்ளும் கனமுள்ளதா?

பாடம்:01 விவாகம் யாவருக்குள்ளும் பரிசுத்தம் உள்ளதா?      
                                    
விவாகம் யாவருக்குள்ளும் கனமுள்ளதா?

நாம் விவாகத்தைப் பற்றி தேவனுடைய ஆலோசனைகளை வேத வாக்கியத்தோடு கற்றுக் கொள்ள போகிறோம்

தேவன் உலகத்தை சிருஷ்டித்த போது மனுஷனை சிருஷ்டித்து அவனுக்கு ஏற்ற துணையாக மனுஷியை உண்டாக்கினார் 

விவாகத்தில் தேவன் புருஷனையும் ஸ்திரீயையும் இணைத்தார்

தேவன் அவர்களை இணைத்து பலுகி பெருகும் படி அவர்களை ஆசீர்வதித்தார்

அவர்கள் எப்படி இருக்க வேண்டும் என்று கட்டளையையும் கொடுத்தார்

புருஷன் ஸ்திரீயை தான் விவாகம் பண்ண வேண்டும் என்பது தேவனுடைய திட்டமாக இருக்கிறது

அவர்கள் இருவரும் சேர்ந்து தேவ பக்தியுள்ள சந்ததியை உருவாக்க வேண்டும் என்பது தான் தேவனுடைய திட்டமாக இருந்தது

ஆனால் இன்றைக்கு உலகத்தில்  திருமணத்தைப் பற்றிய எண்ணங்கள் எப்படி இருக்கிறது?

அநேகர் திருமணத்தை அவமதிக்கிறார்கள்

அநேகர் திருமணத்தை பற்றி கேலி பண்ணுகிறார்கள்

திருமண வாழ்க்கை என்பதை மிகப்பெரிய பாரமாக பார்க்கிறார்கள்

திருமணம் செய்வதை விட ஒண்டியாகவே வாழ்ந்து விடலாம் என்று அநேகர் நினைக்கிறார்கள் 

இதற்கு எல்லாம் என்ன காரணம்?

குடும்பத்தில் கணவனுக்கும் மனைவிக்கும் ஏற்படக்கூடிய ஓயாத  சண்டைகளைப் பார்க்கும்போது பிள்ளைகள் திருமணத்தை வெறுத்து விடுகிறார்கள்

திருமணத்தைக் குறித்து தவறான அபிப்ராயத்தை இப்படிப்பட்ட  பெற்றோர்களே பிள்ளைகளுக்கு  ஏற்படுத்தி விடுகிறார்கள்

இன்னும் ஊடகங்களும் தொலைக்காட்சிகளும் திருமணத்தை தவறான அபிப்ராயங்களை உருவாக்கி விடுகின்றது, இதன் காரணமாக திருமணத்தைப் பற்றி நல்ல அபிப்ராயங்கள் உலகத்தாரிடத்தில் ஏற்படுவதில்லை

இன்றைக்கு  சினிமாக்களின் மூலமாகவும்  தொலைக்காட்சியில் நாடகங்கள் மூலமாகவும் திருமணத்தைக் குறித்து தவறான அபிப்பிராயங்களை கருத்துக்களையும் உருவாக்குகிறார்கள்

அவர்களின் நோக்கம் நீங்கள் ஒரே மனைவியோடு வாழ வேண்டும் என்பதல்ல ஒரே புருஷனோடு வாழ வேண்டும் என்பதும் அல்ல

அவர்களைப் பொருத்தவரை எந்த கள்ள உறவும் தவறானது அல்ல உங்கள் வாழ்க்கையை நீங்கள் எப்படி வேண்டுமானாலும் வாழுங்கள் என்று கற்றுக் கொடுக்கிறார்கள்

அவர்கள் நம்முடைய பிள்ளைகளின் இருதயங்களிலும் இப்படிப்பட்ட விஷத்தை விதைக்கிறார்கள் 

சிறப்பான தம்பதிகளின் வாழ்க்கையைப் பற்றி எத்தனை ஊடகங்களும் தொலைக்காட்சிகளும் மக்களிடத்தில் கொண்டு போய் சேர்க்கின்றார்கள்?

அதையெல்லாம் அவர்கள் ஒருபோதும் செய்யமாட்டார்கள்

நிறைய குடும்பங்கள் கெட்டு போவதற்கு இந்த தொலைக்காட்சியின் நாடகங்களும் நிகழ்ச்சிகளும் தான் காரணமாய் இருக்கிறது

இன்றைக்கு உலகத்தாரிடத்தில் புதிய கலாச்சாரம் உருவாகி இருக்கின்றது அது என்னவென்றால் திருமணம் செய்யாமல் குறிப்பிட்ட காலங்கள் ஒன்றாக சேர்ந்து வாழ்வது இருவருக்கும் ஒத்து வந்தால் திருமணம் செய்து கொள்ளுவது இல்லையென்றால் பிரிந்து விடுவது.

இப்படிப்பட்ட வழிமுறைகள் எல்லாம் வேசித்தனத்திற்கு விபச்சாரத்திற்கும் ஒப்பாயிருக்கிறது

இன்னும் நிறைய அக்கிரமமான காரியங்களை  கலாச்சாரம் என்ற பெயரில் உருவாக்கி வைத்திருக்கிறார்கள் 

தேவனுடைய பார்வையில் இந்த காரியங்கள்  மிகவும் அருவருப்பானது
1) ஆணுக்கு ஆண் திருமணம் செய்வது 
2) பெண்ணுக்கு பெண் திருமணம் செய்வது
3) அண்ணகர்களை திருமணம் செய்வது
4) மிருகங்களை திருமணம் செய்வது

மேலே சொல்லப்பட்ட திருமணங்களில்  கனம்  என்பது எங்கே  இருக்கிறது?

இப்படிப்பட்ட திருமண  கலாச்சாரங்களை  பெருமையாக எண்ணுகிறார்கள் 

இப்படிப்பட்ட திருமண கலாச்சாரங்கள் தேவனுடைய பார்வையில் எப்போதும்  அருவருப்பாய் இருக்கிறது

திருமணத்தை பற்றி உலகத்தாருடைய கண்ணோட்டம் இப்படி  இருந்தாலும் தேவனுடைய பிள்ளைகள் அப்படிப்பட்ட கண்ணோட்டத்தோடு திருமணத்தை பார்க்க  கூடாது

விவாகத்தை நாம் எப்போதும் கனமுள்ளதாக தான் பார்க்க வேண்டும்
எபி 13:4 விவாகம் யாவருக்குள்ளும் கனமுள்ளதாயும், விவாகமஞ்சம் அசுசிப்படாததாயுமிருப்பதாக; வேசிக்கள்ளரையும் விபசாரக்காரரையும் தேவன் நியாயந்தீர்ப்பார்.

தேவனுடைய பார்வையில் விவாகம் எப்படி இருக்கிறது?
எபி 13:4 விவாகம் யாவருக்குள்ளும் கனமுள்ளதாயும்,.......

விவாகம் யாவருக்குள்ளும் கனமுள்ளதாக இருக்கிறது என்கிறார்

நீங்கள் விவாகத்தை எப்படி பார்க்கிறீர்கள்?

விவாக மஞ்சம் (படுக்கை) என்ன ஆக கூடாது என்று தேவன் கட்டளையிடுகிறார்?
எபி 13:4 ......விவாகமஞ்சம் அசுசிப்படாததாயுமிருப்பதாக

தேவன் அது அசுசிப்படக்கூடாது என்கிறார்

விவாக மஞ்சத்தை நாம் எப்படி அசுசிப்படுத்த முடியும்?
எபி 13:4 ……. வேசிக்கள்ளரையும் விபசாரக்காரரையும் தேவன் நியாயந்தீர்ப்பார்.

நாம் நம்முடைய விவாக மஞ்சத்தை எப்படி அசுசிப்படுத்தக் கூடும்?
1) திருமணத்திற்கு முன்பு எந்த ஆணும் பெண்ணும் பாலியல் உறவில் ஈடுபடும் போது அது விபசாரமாய் இருக்கிறது 
2)திருமணத்திற்கு பின்பு எந்த புருஷனும் மனைவியும் இன்னொரு ஆணோடும் பெண்ணோடும் பாலியல் உறவு வைக்கும் போது அது வேசித்தனமாக இருக்கிறது

இப்படிப்பட்ட வேசிக்கள்ளரையும் விபசாரக்காரரையும் தேவன் என்ன செய்வார்?
எபி 13:4 ......வேசிக்கள்ளரையும் விபசாரக்காரரையும் தேவன் நியாயந்தீர்ப்பார்.

தேவனுக்கு சித்தமானால் திருமண உறவுகள் பற்றி தேவன் நமக்கு கொடுக்கக் கூடிய ஆலோசனை என்ன என்பதை குறித்து கற்றுக் கொள்ளுவோம்

நீங்கள் ஈரோட்டில் இருந்தால் ஜெபிக்கவும்  தேவனுடைய சத்தியங்களை இலவசமாகவும்  உங்கள் வீடுகளில் கற்றுக்கொள்ள எங்களை அழைக்கவும்

Preacher: Bro Ariyel Barnabas
Church Of Christ
Erode
Call-9025776966

தேவனுடைய சத்தியங்களை தொடர்ந்து வாட்ஸ் ஆப் ல் பெற 9025776966 என்ற இந்த எண்ணுக்கு குறுந் தகவல் அனுப்பவும்

Wednesday, 20 April 2022

ஒய்வு நாள் ஆசரிப்பு பிரமாணம் நியாயப்பிரமாணத்தில் ஒரு பாகமாக இருக்கிறதா?

பகுதி:3 ஒய்வு நாள் ஆசரிப்பு கிறிஸ்தவர்களுக்கு கொடுக்கப்பட்டதா?

ஒய்வு நாள் ஆசரிப்பு  பிரமாணம் நியாயப்பிரமாணத்தில் ஒரு பாகமாக இருக்கிறதா?

ஓய்வு நாள் ஆசரிப்பு பிரமாணத்தை குறித்து நாம் கற்றுக் கொண்டு வருகிறோம்

அந்தப் பிரமாணம் இஸ்ரவேல் ஜனங்களுக்கு கொடுக்கப்பட்டது என்பதை வசன ஆதாரத்தோடு கற்று இருக்கிறோம் 

இயேசு கிறிஸ்து நியாயப்பிரமாணத்தை சிலுவையில் குலைத்து போட்டார்
கொலோ 2:14 நமக்கு எதிரிடையாகவும் கட்டளைகளால் நமக்கு விரோதமாகவும் இருந்த கையெழுத்தைக் குலைத்து, அதை நடுவிலிராதபடிக்கு எடுத்து, சிலுவையின்மேல் ஆணியடித்து;
கொலோ 2:15 துரைத்தனங்களையும் அதிகாரங்களையும் உரிந்துகொண்டு, வெளியரங்கமான கோலமாக்கி, அவைகளின்மேல் சிலுவையிலே வெற்றிசிறந்தார்
கொலோ 2:16 ஆகையால், போஜனத்தையும் பானத்தையும் குறித்தாவது, பண்டிகைநாளையும் மாதப்பிறப்பையும் ஓய்வுநாட்களையுங்குறித்தாவது, ஒருவனும் உங்களைக் குற்றப்படுத்தாதிருப்பானாக.

ஆனால் இந்த ஓய்வு நாள் ஆசரிப்பு சபையார் பத்து கற்பனைகளை  இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையவில்லை மோசேயின் பிரமாணங்களை தான் சிலுவையில் அறைந்தார் என்று  வாதம் செய்வார்கள் 

கொலோசெயர் 3ம்அதிகாரம் 16ம் வசனத்தில் இருக்கிற ஓய்வுநாள் என்பது மோசேயின் பிரமாணத்தில் கொடுக்கப்பட்ட ஓய்வுநாளைக் குறித்த சட்ட திட்டங்கள் அதைத்தான் இயேசுகிறிஸ்து சிலுவையில் அறைந்தார் என்பார்கள்

அவர்களிடத்தில் பத்து கட்டளைகளில் உள்ள ஓய்வு நாளை எப்படி ஆசாரிப்பீர்கள் என்று கேட்டால் மோசேயின் பிரமாணத்தில் உள்ள கட்டளைகளை காண்பித்து  இப்படி தான் ஆசாரிக்க வேண்டும் என்பார்கள் 

அதை தான் இயேசு கிறிஸ்து சிலுவையில் அறைத்து விட்டாரே என்று கேட்டால் அவர்களுக்கு கோபம் வந்து நம்மை பரியாசம் பண்ணுவதை போல பேச  ஆரம்பித்து விடுவார்கள்

இவர்கள் யூதர்களை போல ஏழாம் நாளில் கூடுவார்கள் அங்கு என்ன செய்வார்கள் என்றால் புதிய ஏற்பாட்டையும் பழைய ஏற்பாட்டையும் கலந்து போதித்து  கொண்டு  இருப்பார்கள் 

பத்து கற்பனையும் மோசேயின் நியாயப்பிரமணத்தில்  உள்ளடக்கமாகத்தான் இருக்கிறது என்பதை இதற்கு  பின் வரும் சத்தியங்களில் வசன ஆதாரத்தோடு நாம் கற்று கற்று கொள்ளுவோம் 

இவர்களுடைய பெரும்பாலான உபதேசம் ஓய்வு நாளைப் பற்றி தான் இருக்கும் 

நியாயப்பிரமாணத்தின் சட்டத் திட்டங்களைக் குறித்து புதிய ஏற்பாடு நமக்கு என்ன போதிக்கிறது?

1) அது நம்முடைய முற்பிதாக்களாலும் நம்மாலும் சுமக்க முடியாது நுகம் (அப் 15:5-10)

2) நியாயப்பிரமாணம் மனிதனுக்கு மரணத்தை கொண்டு வந்தது
(ரோம 7:9,10)

3) நியாயப்பிரமாணத்தின் கிரியைக்காரராகிய யாவரும் சாபத்துக்குட்பட்டு இருக்கிறார்கள் (கலா 3:9,10)

4) சிலுவைக்கு பின்பு நியாயப்பிரமாணத்தினால் யாரும் நீதிமானாக முடியாது (கலா 2:16, 3:11, ரோம 3:20)

5) நியாயப்பிரமாணத்தில் நீதிமான்களாக யாவரும் கிறிஸ்துவை விட்டு பிரிந்து கிருபையிலிருந்து விழுவார்கள் (கலா 5:4)

6) கிறிஸ்து நியாயப்பிரமாணத்தின் முடிவாக இருக்கிறார் (ரோம 10:3,4)

7) கிறிஸ்து நமக்காக சாபமாகி நியாயப்பிரமாணத்தின் சாபத்திற்கு நம்மை நீங்கலாக்கி மீட்டுக் கொண்டார் (கலா 3:13, உபா 21:23)

8) நீங்கள் மறுபடியும் அடிமைத்தனத்தின் நுகத்திற்குட்படாமல், கிறிஸ்து நமக்காக உண்டாக்கின சுயாதீன நிலைமையிலே நிலைகொண்டிருங்கள் (கலா 5:1)

9) ஆவியினால் நடத்தப்படுவீர்களானால் நீங்கள் நியாயப்பிரமாணத்திற்கு கீழ்ப்பட்டவர்கள் அல்ல (கலா 5:18)

நியாயப்பிரமாணத்தை போதிக்கிறவர்கள் கள்ளச் சகோதரர்களாக இருக்கிறார்கள்
கலா 2:4 கிறிஸ்து இயேசுவுக்குள் நமக்கு உண்டான சுயாதீனத்தை உளவுபார்த்து நம்மை நியாயப்பிரமாணத்திற்கு அடிமைகளாக்கும்பொருட்டாகப் பக்கவழியாய் நுழைந்த கள்ளச் சகோதரர் நிமித்தம் அப்படியாயிற்று.

அப்போஸ்தலர்கள் அந்த உபதேசத்திற்கு செவி கொடுக்கவும் இல்லை அவர்களுக்கு கீழ்ப்படியவும் இல்லை
கலா 2:5 சுவிசேஷத்தின் சத்தியம் உங்களிடத்திலே நிலைத்திருக்கும்படி, நாங்கள் ஒரு நாழிகையாகிலும் அவர்களுக்குக் கீழ்ப்படிந்து இணங்கவில்லை.

நியாயப்பிரமாணத்தை போதிக்கிறவர்கள் ஆத்துமாக்களை புரட்டுகிறார்கள்
அப் 15:24 எங்களால் கட்டளைபெறாத சிலர் எங்களிடத்திலிருந்து புறப்பட்டு, நீங்கள் விருத்தசேதனமடைய வேண்டுமென்றும், நியாயப்பிரமாணத்தைக் கைக்கொள்ளவேண்டுமென்றும் சொல்லி, இப்படிப்பட்ட வார்த்தைகளால் உங்களைக் கலக்கி, உங்கள் ஆத்துமாக்களைப் புரட்டினார்கள் என்று நாங்கள் கேள்விப்பட்டபடியினாலே,

நியாயப்பிரமாணம் கிறிஸ்துவினிடத்தில் வழிநடத்துகிற உபாத்தியாய் மாத்திரம் இருந்தது
கலா 3:23 ஆதலால் விசுவாசம் வருகிறதற்கு முன்னே, வெளிப்படப்போகிற விசுவாசத்திற்கு ஏதுவாக நாம் அடைக்கப்பட்டவர்களாய் நியாயப்பிரமாணத்தின்கீழ் காவல்பண்ணப்பட்டிருந்தோம்.
கலா 3:24 இவ்விதமாக, நாம் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்படுவதற்கு நியாயப்பிரமாணம் நம்மைக் கிறிஸ்துவினிடத்தில் வழிநடத்துகிற உபாத்தியாய் இருந்தது.
கலா 3:25 விசுவாசம் வந்தபின்பு நாம் உபாத்திக்குக் கீழானவர்களல்லவே.

இப்படிப்பட்ட உபதேசங்கள் கிறிஸ்துவைப் பற்றினது அல்ல
கொலோ 2:8 லௌகிக ஞானத்தினாலும், மாயமான தந்திரத்தினாலும், ஒருவனும் உங்களைக் கொள்ளைகொண்டு போகாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அது மனுஷர்களின் பாரம்பரிய நியாயத்தையும் உலகவழிபாடுகளையும் பற்றினதேயல்லாமல் கிறிஸ்துவைப் பற்றினதல்ல.

நியாயப்பிரமாணம் யாருக்கு விதிக்கப்பட்டது?
1தீமோ 1:9 எங்களுக்குத் தெரிந்திருக்கிறபடி, நியாயப்பிரமாணம் நீதிமானுக்கு விதிக்கப்படாமல், அக்கிரமக்காரருக்கும், அடங்காதவர்களுக்கும், பக்தியில்லாதவர்களுக்கும், பாவிகளுக்கும், அசுத்தருக்கும், சீர்கெட்டவர்களுக்கும், தாய் தகப்பன்மாரை அடிக்கிறவர்களுக்கும், கொலைபாதகருக்கும்,
1தீமோ 1:10 வேசிக்கள்ளருக்கும், ஆண்புணர்ச்சிக்காரருக்கும், மனுஷரைத் திருடுகிறவர்களுக்கும், பொய்யருக்கும், பொய்யாணை இடுகிறவர்களுக்கும்,
1தீமோ 1:11 நித்தியானந்த தேவனுடைய மகிமையான சுவிசேஷத்தின்படி எனக்கு ஒப்புவிக்கப்பட்டிருக்கிற ஆரோக்கியமான உபதேசத்திற்கு எதிரிடையாயிருக்கிற மற்றெந்தச் செய்கைக்கும் விரோதமாய் விதிக்கப்பட்டிருக்கிறது.

கிறிஸ்துவின் ஆவியின் பிரமாணம் இந்த நியாயப்பிரமாணத்திலிருந்து நம்மை விடுதலையாக்கி இருக்கிறது
ரோம 8:2 கிறிஸ்து இயேசுவினாலே ஜீவனுடைய ஆவியின் பிரமாணம் என்னைப் பாவம் மரணம் என்பவைகளின் பிரமாணத்தினின்று விடுதலையாக்கிற்றே.

இப்படி நியாயப்பிரமாணத்தை போதிக்கிறவர்கள் தங்களுக்கேற்ற ஆக்கினையை அடைவார்கள்
கலா 5:10 நீங்கள் வேறுவிதமாய்ச் சிந்திக்கமாட்டீர்களென்று நான் கர்த்தருக்குள் உங்களைக்குறித்து நம்பிக்கையாயிருக்கிறேன்; உங்களைக் கலக்குகிறவன் எப்படிப்பட்டவனாயிருந்தாலும் தனக்கேற்ற ஆக்கினையை அடைவான்.

இப்படிப்பட்டப்பட்டவர்கள் தறிப்புண்டு போனால் நலமாய் இருக்கும் என்று அப்போஸ்தலனாகிய பவுல் சொல்லுவதை கவனியுங்கள்
கலா 5:11 சகோதரரே, இதுவரைக்கும் நான் விருத்தசேதனத்தைப் பிரசங்கிக்கிறவனாயிருந்தால், இதுவரைக்கும் என்னத்திற்குத் துன்பப்படுகிறேன்? அப்படியானால் சிலுவையைப்பற்றி வரும் இடறல் ஒழிந்திருக்குமே.
கலா 5:12 உங்களைக் கலக்குகிறவர்கள் தறிப்புண்டுபோனால் நலமாயிருக்கும்.

தொடர்ந்து ஏழாம் ஒய்வுநாளைக் குறித்து கற்றுக் கொள்ளுவோம்

நீங்கள் ஈரோட்டில் இருந்தால் ஜெபிக்கவும்  தேவனுடைய சத்தியங்களை இலவசமாகவும்  உங்கள் வீடுகளில் கற்றுக்கொள்ள எங்களை அழைக்கவும்

Preacher: Bro Ariyel Barnabas
Church Of Christ
Erode
Call-9025776966

தேவனுடைய சத்தியங்களை தொடர்ந்து வாட்ஸ் ஆப் ல் பெற 9025776966 என்ற இந்த எண்ணுக்கு குறுந் தகவல் அனுப்பவும்