Thursday, 2 June 2022

இயேசு கிறிஸ்து சிலுவையில் குலைத்து போட்டது மோசேயின் கையால் எழுதப்பட்ட நியாயப்பிரமாணத்தை தான் என்று சொல்லுகிறார்கள் அது உண்மையா?

பாடம் :12 ஓய்வு நாள் பிரமாணம் கிறிஸ்தவர்களுக்கு கொடுக்கப்பட்டதா?                                   
இயேசு கிறிஸ்து சிலுவையில் குலைத்து போட்டது  மோசேயின் கையால் எழுதப்பட்ட நியாயப்பிரமாணத்தை தான் என்று சொல்லுகிறார்கள் அது உண்மையா?

ஓய்வுநாளை ஆசரிக்கிறவர்களின் முக்கியமான உபதேசம் இது தான்
1) தேவன் எழுதிய பத்து கற்பனைகள் தேவனுடைய நியாயப்பிரமாணம்
2) மோசே தன்னுடைய கையால் எழுதிய எல்லா பிரமாணங்களும் மோசேயினுடைய நியாயப்பிரமாணம் என்கிறார்கள்

பத்து கட்டளைகளை தேவன் தம்முடைய கையால் எழுதி கொடுத்தார் அது தேவனுடைய நியாயப்பிரமாணம் அதை கிறிஸ்து சிலுவையில் குலைத்துப் போடவில்லை என்கிறார்கள் அது உண்மையா?

பழைய ஏற்பாட்டில் பத்து கட்டளைகளை   கொடுக்கப்பட்ட போது என்ன சம்பவித்தது என்பதை முதலில் கவனிப்போம்
யாத் 24:12 அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நீ மலையின்மேல் என்னிடத்திற்கு ஏறிவந்து, அங்கே இரு; நான் உனக்குக் கற்பலகைகளையும், நீ அவர்களுக்கு உபதேசிப்பதற்கு, நான் எழுதின நியாயப்பிரமாணத்தையும் கற்பனைகளையும் கொடுப்பேன் என்றார்.

தேவன் பத்துக் கற்பனைகளை அவரே எழுதி அதை மோசேயினிடத்தில் கொடுத்தார்
யாத் 31:18 சீனாய்மலையில் அவர் மோசேயோடே பேசி முடிந்தபின், தேவனுடைய விரலினால் எழுதப்பட்ட கற்பலகைகளாகிய சாட்சியின் இரண்டு பலகைகளை அவனிடத்தில் கொடுத்தார்.
உபா 9:9 கர்த்தர் உங்களோடே பண்ணின உடன்படிக்கைப் பலகைகளாகிய கற்பலகைகளைப் பெற்றுக்கொள்ளும்படி நான் மலையில் ஏறினபோது, நாற்பதுநாள் இரவும் பகலும் மலையில் தங்கி அப்பம் புசியாமலும் தண்ணீர் குடியாமலும் இருந்தேன்.
உபா 9:10 அப்பொழுது தேவனுடைய விரலினால் எழுதியிருந்த இரண்டு கற்பலகைகளைக் கர்த்தர் என்னிடத்தில் ஒப்புக்கொடுத்தார்; சபை கூடியிருந்த நாளில் கர்த்தர் மலையிலே அக்கினியின் நடுவிலிருந்து உங்களுடனே பேசின வார்த்தைகளின்படியே அவைகளில் எழுதியிருந்தது.
உபா 5:22 இந்த வார்த்தைகளைக் கர்த்தர் மலையிலே அக்கினியிலும் மேகத்திலும் காரிருளிலும் இருந்து உங்கள் சபையார் எல்லாரோடும் மகா சத்தத்துடனே சொன்னார்; அவைகளோடு ஒன்றும் கூட்டாமல், அவைகளை இரண்டு கற்பலகைகளில் எழுதி, என்னிடத்தில் கொடுத்தார்.

ஆனால்  இஸ்ரவேல் ஜனங்கள் செய்த அக்கிரமத்தின்  நிமித்தம்  அவர்கள் மேல் இருந்த கோபத்தினால் பத்து கற்பனைகளை மோசே உடைத்துப் போட்டார்
உபா 9:11 இரவும் பகலும் நாற்பதுநாள் முடிந்து, கர்த்தர் எனக்கு அந்த உடன்படிக்கையின் இரண்டு கற்பலகைகளைக் கொடுக்கிறபோது,
உபா 9:12 கர்த்தர் என்னை நோக்கி: நீ எழுந்து, சீக்கிரமாய் இவ்விடம் விட்டு, இறங்கிப்போ; நீ எகிப்திலிருந்து அழைத்துக்கொண்டுவந்த உன் ஜனங்கள் தங்களைக் கெடுத்துக்கொண்டார்கள்; நான் அவர்களுக்கு விதித்த வழியை அவர்கள் சீக்கிரமாக விட்டு விலகி, வார்ப்பிக்கப்பட்ட விக்கிரகத்தைத் தங்களுக்காக உண்டாக்கினார்கள் என்றார்.
உபா 9:15 அப்பொழுது நான் திரும்பி மலையிலிருந்து இறங்கினேன், மலையானது அக்கினி பற்றி எரிந்துகொண்டிருந்தது; உடன்படிக்கையின் இரண்டு பலகைகளும் என் இரண்டு கைகளில் இருந்தது.
உபா 9:16 நான் பார்த்தபோது, நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாகப் பாவஞ்செய்து, வார்ப்பிக்கப்பட்ட கன்றுக்குட்டியை உங்களுக்கு உண்டாக்கி, கர்த்தர் உங்களுக்கு விதித்த வழியைச் சீக்கிரமாய் விட்டு விலகினதைக் கண்டேன்.
உபா 9:17 அப்பொழுது நான் என் இரண்டு கைகளிலும் இருந்த அந்த இரண்டு பலகைகளையும் ஓங்கி எறிந்து, அவைகளை உங்கள் கண்களுக்கு முன்பாக உடைத்துப்போட்டேன்.

முதலில் எழுதின கற்பலகை  தேவனுடையது  அதில் தான் தேவன் பத்து கற்பனைகளை எழுதினார் அதை தான் மோசே உடைத்து போட்டார் 

மறுபடியும் தேவன் கற்பலகைகளில்  எழுதுவதற்கு மோசேயிடம் கற்பலகைகளை இழைத்துக் கொண்டு வர சொன்னார்
யாத் 34:1 கர்த்தர் மோசேயை நோக்கி: முந்தின கற்பலகைகளுக்கு ஒத்த இரண்டு கற்பலகைகளை இழைத்துக்கொள்;நீ உடைத்துப்போட்ட முந்தின பலகைகளில் இருந்த வார்த்தைகளை அவைகளில் எழுதுவேன்.
யாத் 34:4 அப்பொழுது மோசே முந்தின கற்பலகைகளுக்கு ஒத்த இரண்டு கற்பலகைகளை இழைத்து, அதிகாலமே எழுந்திருந்து, கர்த்தர் தனக்குக் கட்டளையிட்டபடியே அவ்விரண்டு கற்பலகைகளையும் தன் கையிலே எடுத்துக்கொண்டு, சீனாய் மலையில் ஏறினான்.
உபா 10:1 அக்காலத்திலே கர்த்தர் என்னை நோக்கி: நீ முந்தினவைகளுக்கொத்த இரண்டு கற்பலகைகளை வெட்டிக்கொண்டு, மலையின்மேல் ஏறி, என்னிடத்தில் வா;ஒரு மரப்பெட்டியையும் செய்வாயாக.
உபா 10:2 நீ உடைத்துப்போட்ட முந்தின பலகைகளில் இருந்த வார்த்தைகளை நான் அந்தப் பலகைகளில் எழுதுவேன்; நீ அவைகளைப் பெட்டியிலே வைப்பாயாக என்றார்.

மோசே கொண்டு போன போது கற்பலகைளில் தேவன் மறுபடியும் அந்த பத்துக் கற்பனைகளை எழுதி கொடுத்தார்
உபா 10:3 அப்படியே நான் சீத்திம் மரத்தினால் ஒரு பெட்டியைச் செய்து, முந்தினவைகளுக்கொத்த இரண்டு கற்பலகைகளை வெட்டி, அவைகளை என் கையிலே எடுத்துக்கொண்டு மலையில் ஏறினேன்.
உபா 10:4 முன்னே சபைகூடிவந்த நாளில் கர்த்தர் மலையில் அக்கினி நடுவிலிருந்து உங்களுக்கு விளம்பின பத்துக் கற்பனைகளையும் அவர் முன் எழுதியிருந்த பிரகாரம் அந்தப் பலகைகளில் எழுதி, அவைகளை என்னிடத்தில் தந்தார்.
உபா 10:5 அப்பொழுது நான் திரும்பி மலையிலிருந்து இறங்கி, அந்தப் பலகைகளை நான் செய்த பெட்டியிலே வைத்தேன்; கர்த்தர் எனக்குக் கட்டளையிட்டபடியே அவைகள் அதிலே வைத்திருக்கிறது.

ஆனால் அங்கு பத்துக்கற்பனைகளாகிய உடன்படிக்கையின் வார்த்தைகளை மறுபடியும்  கற்பலகையில்  எழுதியது யார்?
யாத்  34:28 அங்கே அவன் அப்பம் புசியாமலும் தண்ணீர் குடியாமலும் இரவும் பகலும் நாற்பதுநாள் கர்த்தரோடே இருந்தான்; அவன் பத்துக்கற்பனைகளாகிய உடன்படிக்கையின் வார்த்தைகளைப் பலகைகளில் எழுதினான்.

தேவன் எழுதினார் என்று சொன்னாலும் மோசே எழுதினார் என்று சொன்னாலும் அது தேவனுடைய வார்த்தை ஏனென்றால் அது தேவனுடைய அதிகாரத்தில் இருந்து வந்திருக்கிறது

ஒரு உதாரணம் ஒன்றைக் கவனியுங்கள்

இயேசுகிறிஸ்து ஞானஸ்நானம் கொடுத்தார் என்று பதிவு செய்யப்பட்டிருக்கிறது
யோவான் 4:1
யோவானைப்பார்க்கிலும் இயேசு அநேகம்பேரைச் சீஷராக்கி ஞானஸ்நானங்கொடுக்கிறாரென்று பரிசேயர் கேள்விப்பட்டதாகக் கர்த்தர் அறிந்தபோது,

ஆனால் இயேசுகிறிஸ்து ஞானஸ்நானம் கொடுக்கவில்லை அவருடைய சீஷர்கள் ஞானஸ்நானம் கொடுத்தார்கள்
யோவான் 4:3 இயேசு தாமே ஞானஸ்நானங்கொடுக்கவில்லை, அவருடைய சீஷர்கள் கொடுத்தார்கள்

இயேசு ஞானஸ்நானம் கொடுத்தாலும் அவருடைய சீஷர்கள் ஞானஸ்நானம் கொடுத்தாலும் அதிகாரம் ஒருவரிடத்தில் மாத்திரம் இருக்கிறது

புதிய ஏற்பாடு புஸ்தகத்தை  நிறைய பரிசுத்தவான்கள் எழுதினார்கள் அதினால் அது தேவனுடைய வார்த்தை இல்லையா?

அது எல்லாமே தேவனுக்கு சொந்தமானது

புதிய ஏற்பாடு மனுஷர்கள் மூலமாக ஏவப்பட்டு பேசினாலும் எழுதினாலும் அது கிறிஸ்துவின் பிரமாணம் என்றுதான் அழைக்கப்பட்டிருக்கிறது

நியாயப்பிரமாணத்தை மோசே எழுதினாலும் அது தேவனுடைய நியாயப்பிரமாணமாகத்தான் இருக்கிறது 

பவுல் நிருபங்களை எழுதினாலும் அது தேவனுடைய கற்பனைகளாகத் தான் இருக்கிறது
1 கொரி 14:37 ஒருவன் தன்னைத் தீர்க்கதரிசியென்றாவது, ஆவியைப் பெற்றவனென்றாவது எண்ணினால், நான் உங்களுக்கு எழுதுகிறவைகள் கர்த்தருடைய கற்பனைகளென்று அவன் ஒத்துக்கொள்ளக்கடவன்.

வேத வாக்கியங்கள் எல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டு இருக்கிறது

இயேசு கிறிஸ்து சிலுவையில் குலைத்துப் போட்டது தேவனுடைய நியாயப்பிரமாணத்தையா அல்லது மோசேயின்  பிரமாணத்தையா?
கொலோ 2:14 நமக்கு எதிரிடையாகவும் கட்டளைகளால் நமக்கு விரோதமாகவும் இருந்த கையெழுத்தைக் குலைத்து, அதை நடுவிலிராதபடிக்கு எடுத்து, சிலுவையின்மேல் ஆணியடித்து
கொலோ 2:15 துரைத்தனங்களையும் அதிகாரங்களையும் உரிந்துகொண்டு, வெளியரங்கமான கோலமாக்கி, அவைகளின்மேல் சிலுவையிலே வெற்றிசிறந்தார்.

இங்கே சொல்லப்பட்டது மோசேயின் பிரமாணம் என்றால் இந்த வசனத்தில் ஏன் ஓய்வுநாளை குறித்தாவது ஒருவனும் உங்களை குற்றப்படுத்த வேண்டாம் என்கிறார்?
கொலோ 2:16 ஆகையால், போஜனத்தையும் பானத்தையும் குறித்தாவது, பண்டிகை நாளையும் மாதப்பிறப்பையும் ஓய்வுநாட்களையுங்குறித்தாவது ஒருவனும் உங்களைக் குற்றப்படுத்தாதிருப்பானாக.
கொலோ 2:17 அவைகள் வருங்காரியங்களுக்கு நிழலாயிருக்கிறது; அவைகளின் பொருள் கிறிஸ்துவைப்பற்றினது.

ஆனால் இந்த வசனத்தை ஓய்வு நாள் சபையார் ஏற்று கொள்ள மாட்டார்கள் இது மோசேயின் பிரமணத்தில் உள்ள ஓய்வு நாள் சம்பத்தப்பட்ட பிரமாணங்கள் என்பார்கள்

ஆனால் இங்கே சொல்லப்பட்டு இருக்கிற பலிகளும் ஓய்வுநாட்களும் பண்டிகைகளும் கர்த்தருடைய நியாயப்பிரமாணம்  தான் என்று தேவனுடைய பலமான சாட்சி நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது
2நாளா 31:3 ராஜா கர்த்தருடைய நியாயப்பிரமாணத்தில் எழுதியிருக்கிறபடியே அந்திசந்திகளில் செலுத்தவேண்டிய சர்வாங்க தகனபலிகளுக்கும், ஓய்வுநாட்களிலும் மாதப்பிறப்புகளிலும் பண்டிகைகளிலும் செலுத்தவேண்டிய சர்வாங்க தகனபலிகளுக்கும் தன் ஆஸ்தியிலிருந்தெடுத்துத் தன் பங்கைக் கொடுத்தான்.

இங்கே சொல்லப்படக்கூடிய சர்வாங்க தகனபலிகளும், ஓய்வு நாட்களும், பண்டிகை காலங்களில் செலுத்தவேண்டிய தகன பலிகளும், பத்து கட்டளைகளில் இருக்கிறதா?

இல்லை அது மோசேயின் பிரமாணத்தில் இருக்கிறது

அப்படியென்றால் தேவன் இதை கர்த்தருடைய நியாயப்பிரமாணம் என்று ஏன் அழைக்கிறார்?

வேத வாக்கியத்தில் பலிகளும் ஓய்வுநாட்களும் பண்டிகைகளும் கர்த்தருடைய நியாயப்பிரமாணம் தான் என்று தேவன் சாட்சிக் கொடுக்கிறார் அவருடைய சாட்சி உண்மையானதா இல்லை இது எல்லாம் மோசேயின் பிரமாணம் மாத்திரம்தான் என்று சொல்லக்கூடிய இவர்களுடைய சாட்சி  உண்மையானதா?

நம்முடைய தேவன் ஒருபோதும் பொய்யுரையாதவர்
தீத்து 1:3 பொய்யுரையாத தேவன் ஆதிகாலமுதல் நித்திய ஜீவனைக்குறித்து வாக்குத்தத்தம்பண்ணி,,,,,,,,

கொலோசெயர் 2:15-17  வசனத்தில் பண்டிகை நாளும் மாதப்பிறப்புகளும் போஜனபலியும் பானபலியும் ஓய்வுநாட்களும் சிலுவையில் குலைத்துப் போடப்பட்டு இருக்கிறது

போஜனத்தையும் பானத்தையும் குறித்தாவது, பண்டிகை நாளையும் மாதப்பிறப்பையும் குறித்தாவது ஒருவனும் நம்மை குற்றப்படுத்த முடியாது என்றால் ஓய்வுநாட்களையுங் குறித்தும் ஒருவனும் நம்மை குற்றப்படுத்த முடியாது

மோசேயின் பிரமாணம் என்றாலும் கர்த்தருடைய நியாயப்பிரமாணம் அல்லது தேவனுடைய  நியாயப்பிரமாணம் என்றாலும் மூன்றும் ஒன்று தான்,சிலுவையில் குலைத்துப் போடப்பட்டதும் இது தான்

கர்த்தருக்கு சித்தமானால் தொடர்ந்து கற்றுக் கொள்ளுவோம்

நீங்கள் ஈரோட்டில் இருந்தால் ஜெபிக்கவும்  தேவனுடைய சத்தியங்களை இலவசமாகவும்  உங்கள் வீடுகளில் கற்றுக்கொள்ள எங்களை அழைக்கவும்

Preacher: Bro Ariyel Barnabas
Church Of Christ
Erode
Call-9025776966

தேவனுடைய சத்தியங்களை தொடர்ந்து வாட்ஸ் ஆப் ல் பெற 9025776966 என்ற இந்த எண்ணுக்கு குறுந் தகவல் அனுப்பவும்

No comments:

Post a Comment