Wednesday, 8 June 2022

இரட்சிக்கப்படாத கணவன் அல்லது மனைவியைப் பற்றி புதிய ஏற்பாடு என்ன போதிக்கிறது?

பாடம்:16 விவாகம் யாவருக்குள்ளும் கனம் உள்ளதா?
 
இரட்சிக்கப்படாத கணவன் அல்லது மனைவியைப் பற்றி புதிய ஏற்பாடு என்ன போதிக்கிறது?

விவாகம் என்பது பாவமா?

விவாகம் என்பது பாவம் அல்ல
1கொரி 7:28 நீ விவாகம்பண்ணினாலும் பாவமல்ல; கன்னிகை விவாகம்பண்ணினாலும் பாவமல்ல ....
1கொரி 7:36 ஆகிலும் ஒருவன் தன் புத்திரியின் கன்னிகைப்பருவம் கடந்துபோனதினாலே, அவள் விவாகம் பண்ணாமலிருப்பது அவளுக்குத் தகுதியல்லவென்றும், அவள் விவாகம்பண்ணுவது அவசியமென்றும் நினைத்தால், அவன் தன் மனதின்படி செய்யக்கடவன்; அது பாவமல்ல, விவாகம்பண்ணட்டும்.

விவாகம் யாவருக்குள்ளும் கனமுள்ளது
எபி 13:4 விவாகம் யாவருக்குள்ளும் கனமுள்ளதாயும், விவாகமஞ்சம் அசுசிப்படாததாயுமிருப்பதாக; ,,,,,

அப்போஸ்தலனாகிய பவுல் விவாகத்தைப் பற்றி யோசனை ஒன்றை சொல்லுகிறார்
1கொரி 7:6 இதை நான் கட்டளையாகச் சொல்லாமல், யோசனையாகச் சொல்லுகிறேன்.
1கொரி 7:7 எல்லா மனுஷரும் என்னைப்போலவே இருக்க விரும்புகிறேன். ஆகிலும் அவனவனுக்குத் தேவனால் அருளப்பட்ட அவனவனுக்குரிய வரமுண்டு; அது ஒருவனுக்கு ஒருவிதமாயும், மற்றொருவனுக்கு வேறுவிதமாயும் இருக்கிறது.

இங்கே அப்போஸ்தலனாகிய பவுல் பரிசுத்த ஆவியினாலே ஏவப்பட்டு பேசுகிறார் இது கட்டளை அல்ல இது யோசனை
1கொரி 7:40 ,,,,, என்னிடத்திலும் தேவனுடைய ஆவி உண்டென்று எண்ணுகிறேன்.

வேகிறதைப் பார்க்கிலும் விவாகம் பண்ணுகிறது நலம்
1கொரி 7:8 விவாகமில்லாதவர்களையும், கைம்பெண்களையும்குறித்து நான் சொல்லுகிறது என்னவென்றால், அவர்கள் என்னைப்போல இருந்துவிட்டால் அவர்களுக்கு நலமாயிருக்கும்.
1கொரி 7:9 ஆகிலும் அவர்கள் விரத்தராயிருக்கக்கூடாதிருந்தால் விவாகம்பண்ணக்கடவர்கள்; வேகிறதைப்பார்க்கிலும் விவாகம்பண்ணுகிறது நலம்.

திருமணமானவர்களுக்கு தேவனுடைய ஆலோசனை என்ன?

ஒரு குடும்பத்தில் கணவனோ அல்லது மனைவியோ இரட்சிக்கப்படவில்லை என்றால் என்ன செய்வது?

மனைவியானவள் தன் புருஷனை விட்டு பிரிந்து போக கூடாது
1கொரி 7:10 விவாகம்பண்ணிக்கொண்டவர்களுக்கு நானல்ல, கர்த்தரே கட்டளையிடுகிறதாவது: மனைவியானவள் தன் புருஷனை விட்டுப் பிரிந்து போகக்கூடாது.

இங்கே பிரிந்து போவது என்பது விவாகரத்து அல்ல அது தற்காலிக பிரிவு மாத்திரமே ஏனென்றால் அவள் தன் புருஷனோடு ஒப்புரவாக வேண்டும் என்று தேவன் கட்டளையிடுகிறார்

பிரிந்து போக கூடிய மனைவி விவாகமில்லாமல் இருக்க வேண்டும் அல்லது தன் புருனோடே ஒப்புரவாகக்கடவள்
1கொரி 7:11 பிரிந்துபோனால் அவள் விவாகமில்லாதிருக்கக்கடவள் அல்லது புருஷனோடே ஒப்புரவாகக்கடவள்; புருஷனும் தன் மனைவியைத் தள்ளிவிடக்கூடாது.

மனைவி அவிசுவாசியாயிருந்து புருஷனோடு வாழ சம்மதமிருந்தால் என்ன செய்வது?
1கொரி 7:12 மற்றவர்களைக்குறித்துக் கர்த்தர் அல்ல, நானே சொல்லுகிறதாவது: சகோதரனொருவனுடைய மனைவி அவிசுவாசியாயிருந்தும், அவனுடனே வாசமாயிருக்க அவளுக்குச் சம்மதமிருந்தால், அவன் அவளைத் தள்ளிவிடாதிருக்கக்கடவன்.

புருஷன் அவிசுவாசியாயிருந்து மனைவியோடு வாழ சம்மதமிருந்தால் என்ன செய்வது?
1கொரி 7:13 அப்படியே ஒரு ஸ்திரீயினுடைய புருஷன் அவிசுவாசியாயிருந்தும், அவளுடனே வாசமாயிருக்க அவனுக்குச் சம்மதமிருந்தால், அவள் அவனைத் தள்ளிவிடாதிருக்கக்கடவள்.

புருஷனும் மனைவியும் சேர்ந்து வாழும் போது அவர்களும் அவர்கள் பிள்ளைகளும் பரிசுத்தமாக இருக்கிறார்கள்
1கொரி 7:14 என்னத்தினாலெனில், அவிசுவாசியான புருஷன் தன் மனைவியால் பரிசுத்தமாக்கப்படுகிறான்; அவிசுவாசியான மனைவியும் தன் புருஷனால் பரிசுத்தமாக்கப்படுகிறாள். இல்லாவிட்டால் உங்கள் பிள்ளைகள் அசுத்தமாயிருக்குமே; இப்பொழுதோ அவைகள் பரிசுத்தமாயிருக்கின்றன.

ஆனால் புருஷனோ அல்லது மனைவியோ வாழ சம்மதியாமல் இருந்தால் என்ன செய்வது?
1கொரி 7:15 ஆகிலும், அவிசுவாசி பிரிந்துபோனால் பிரிந்துபோகட்டும், இப்படிப்பட்ட விஷயத்தில், சகோதரனாவது சகோதரியாவது அடிமைப்பட்டவர்களல்ல.

சமாதானமாயிருக்கும்படிக்கே தேவன் நம்மை அழைத்திருக்கிறார்.
1கொரி 7:16 மனைவியானவளே, நீ உன் புருஷனை இரட்சிப்பாயோ அல்லவோ உனக்கு எப்படித் தெரியும்? புருஷனே, நீ உன் மனைவியை இரட்சிப்பாயோ அல்லவோ உனக்கு எப்படித் தெரியும்?

கணவனோ அல்லது மனைவியோ கிறிஸ்தவர்களாய் இருப்பதினால் இருவரில் ஒருவர் வாழ சம்மதியாமல் பிரிந்து போக விருப்பட்டார்கள் என்றால் அவர்கள் பிரிந்து போகலாம்
1கொரி 7:15 ஆகிலும், அவிசுவாசி பிரிந்துபோனால் பிரிந்துபோகட்டும், இப்படிப்பட்ட விஷயத்தில், சகோதரனாவது சகோதரியாவது அடிமைப்பட்டவர்களல்ல. சமாதானமாயிருக்கும்படிக்கே தேவன் நம்மை அழைத்திருக்கிறார்.
 
அப்படி பிரியக்கூடியவர்கள் ஒருபோதும் மறுமணம் செய்யக்கூடாது
1கொரி 7:10 விவாகம்பண்ணிக்கொண்டவர்களுக்கு நானல்ல, கர்த்தரே கட்டளையிடுகிறதாவது: மனைவியானவள் தன் புருஷனை விட்டுப் பிரிந்து போகக்கூடாது.
1கொரி 7:11 பிரிந்துபோனால் அவள் விவாகமில்லாதிருக்கக்கடவள், அல்லது புருஷனோடே ஒப்புரவாகக்கடவள்; புருஷனும் தன் மனைவியைத் தள்ளிவிடக்கூடாது.

பாடம் நிறைவுற்றது

நீங்கள் ஈரோட்டில் இருந்தால் ஜெபிக்கவும் தேவனுடைய சத்தியங்களை இலவசமாகவும் உங்கள் வீடுகளில் கற்றுக்கொள்ள எங்களை அழைக்கவும்

Preacher: Bro Ariyel Barnabas
Church Of Christ
Erode
Call-9025776966

தேவனுடைய சத்தியங்களை தொடர்ந்து வாட்ஸ் ஆப் ல் பெற 9025776966 என்ற இந்த எண்ணுக்கு குறுந் தகவல் அனுப்பவும்

No comments:

Post a Comment