இயேசு கிறிஸ்துவின் அப்போஸ்தலனாகிய யூதாஸ் காரியோத் ஏன் விழுந்து போனார்?
இன்றைக்கு அநேகர் இயேசு கிறிஸ்துவுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை காட்டிலும் பணத்திற்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்
அநேகர் இயேசு கிறிஸ்துவை காட்டிலும் பணத்தை தான் மதிக்கிறார்கள்
இயேசு கிறிஸ்து தம்முடைய அப்போஸ்தலர்களுக்கு தன்னுடைய ஊழிய நாட்களில் ஒரு எச்சரிப்பை கொடுத்தார்
லூக் 12:15 பின்பு அவர் அவர்களை நோக்கி: பொருளாசையைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில் ஒருவனுக்கு எவ்வளவு திரளான ஆஸ்தி இருந்தாலும் அது அவனுக்கு ஜீவன் அல்ல என்றார்.
எவ்வளவு திரளான ஆஸ்திகள் வைத்து இருந்தாலும் அது ஒரு போதும் அவர்களுக்கு ஜீவனை தராது
இயேசு கிறிஸ்து தம்முடைய அப்போஸ்தலர்களுக்கு அநேக சமயங்களில் பொருளாசையைக் குறித்து எச்சரிக்கையாக இருங்கள் என்றார் ஆனால் அவருடைய அப்போஸ்தலர்களில் ஒருவராய் இருந்த யூதாஸ் காரியோத் பண ஆசை உடையவராக தான் இருந்தார்
நாம் இயேசு கிறிஸ்துவோடு இருந்தாலும் சாத்தான் நம்மை வீழ்த்துவதற்கு அருகில் தான் இருக்கிறான் என்பதை நினைவில் வைத்து கொள்ள வேண்டும்
அவன் கெர்சிக்கிற சிங்கம் போல எவனை விழுங்கலாமென்று வகை தேடி சுற்றித் திரிகிறான்
1 பேதுரு 5:8 தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள், விழித்திருங்கள்; ஏனெனில், உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான்.
இயேசு கிறிஸ்து அப்போஸ்தலர்களை தெரிந்து எடுப்பதற்கு முன்பதாக இரா முழுவதும் ஜெபித்து தான் தெரிந்தெடுத்தார்
லூக் 6:12 அந்நாட்களிலே, அவர் ஜெபம்பண்ணும்படி ஒரு மலையின்மேல் ஏறி, இராமுழுவதும் தேவனை நோக்கி ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தார்.
லூக் 6:13 பொழுது விடிந்தபோது, அவர் தம்முடைய சீஷர்களை வரவழைத்து, அவர்களில் பன்னிரண்டுபேரைத் தெரிந்துகொண்டு, அவர்களுக்கு அப்போஸ்தலர் என்று பேரிட்டார்.
பிதா தான் அப்போஸ்தலர்களை உலகத்தில் இருந்து தெரிந்தெடுத்து இயேசு கிறிஸ்துவுக்கு கொடுத்தார்
யோவா 17:6 நீர் உலகத்தில் தெரிந்தெடுத்து எனக்குத் தந்த மனுஷருக்கு உம்முடைய நாமத்தை வெளிப்படுத்தினேன். அவர்கள் உம்முடையவர்களாயிருந்தார்கள், அவர்களை எனக்குத் தந்தீர், அவர்கள் உம்முடைய வசனத்தைக் கைக்கொண்டிருக்கிறார்கள்.
யூதாஸ் காரியோத்தும் பனிரெண்டு அப்போஸ்தலர்களில் ஒருவராய் இருந்தார்
லூக் 6:16 யாக்கோபின் சகோதரனாகிய யூதா, துரோகியான யூதாஸ்காரியோத்து என்பவர்களே.
இயேசு கிறிஸ்துவோடு கூட அவர் ஊழியத்தின் கடைசி நாட்கள் மட்டும் அவரோடு கூட தான் இருந்தார்
இயேசு கிறிஸ்துவின் சகல உபதேசங்களையும் அறிந்தவர்
இயேசு கிறிஸ்துவின் ஊழிய நாட்களில் மற்ற அப்போஸ்தலர்களை போல இவரும் கிராமங்களுக்கு சென்று சுவிசேஷம் அறிவித்தவர் தான்
லூக் 9:6 அவர்கள் புறப்பட்டுப்போய், கிராமங்கள்தோறும் திரிந்து, எங்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து, பிணியாளிகளைக் குணமாக்கினார்கள்.
யூதாஸ் காரியோத் மாத்திரம் ஏன் விழுந்து போனார்?
அவருக்கு கர்த்தருடைய ஊழியத்தை காட்டிலும் பணத்தின் மேல் தன் இருதயத்தை வைத்து இருந்தார்
பனிரெண்டு அப்போஸ்தலர்களில் அவர் மாத்திரமே பணப் பையை சுமக்கிறவராய் இருந்தார்
தரித்திரர்களுக்கு உதவி செய்யவும் மற்ற தேவைகளை சந்திக்கவும் யூதாஸ் காரியோத்தின் கையில் அந்த பணப்பை கொடுக்கப்பட்டு இருந்தது
யோவா 13:29 யூதாஸ் பணப்பையை வைத்துக் கொண்டிருந்தபடியினால், அவன் போய், பண்டிகைக்குத் தேவையானவைகளைக் கொள்ளும்படிக்காவது, தரித்திரருக்கு ஏதாகிலும் கொடுக்கும்படிக்காவது, இயேசு அவனுடனே சொல்லியிருப்பார் என்று சிலர் நினைத்தார்கள்.
யூதாஸ் காரியோத் அந்த பணப்பையை வைத்து இருந்த போது அந்த பணப்பையில் இருந்து அவர் திருடிக் கொண்டு இருந்தார்
யோவா 12:6 அவன் தரித்திரரைக்குறித்துக் கவலைப்பட்டு இப்படிச் சொல்லாமல், அவன் திருடனானபடியினாலும், பணப்பையை வைத்துக்கொண்டு அதிலே போடப்பட்டதைச் சுமக்கிறவனானபடியினாலும் இப்படிச் சொன்னான்.
இயேசு கிறிஸ்துவுக்குரியத்தை அவர் திருடிக் கொண்டு இருந்தாலும் இயேசு கிறிஸ்து அதை திரும்பக் கேட்கவில்லை
லூக் 6:30 உன்னிடத்தில் கேட்கிற எவனுக்கும் கொடு; உன்னுடையதை எடுத்துக் கொள்ளுகிறவனிடத்தில் அதைத் திரும்பக் கேளாதே.
அந்த பணம் நற்கிரியைகள் செய்யும் படியாக இயேசு கிறிஸ்து அந்த பொறுப்பை அவரிடம் கொடுத்து இருந்தார்
தனக்கு கொடுக்கப்பட்ட உக்கிரான உத்தியோகத்தில் யூதாஸ் காரியோத் உண்மையுள்ளவராக இருக்கவில்லை
யூதாஸ் காரியோத் பணத்தை திருடிக் கொண்டு இருக்கிறார் என்று இயேசு கிறிஸ்து ஒருமுறை கூட அப்போஸ்தலர்களுக்கு முன்பாக அவரை குற்றப்படுத்தவில்லை
யூதாஸ் காரியோத் பணத்தை திருடிக் கொண்டு இருப்பதை இயேசு கிறிஸ்து அறிந்திருந்தாலும் யூதாஸ் காரியோத் எதை விரும்பினாரோ அதற்கே அவரை ஒப்புக் கொடுத்து இருந்தார்
சங் 109:17 சாபத்தை விரும்பினான், அது அவனுக்கு வரும்; அவன் ஆசீர்வாதத்தை விரும்பாமற்போனான், அது அவனுக்குத் தூரமாய் விலகிப்போம்.
யூதாஸ் காரியோத் தான் திருடக்கூடிய பணம் ஆசீர்வாதம் என்று நினைத்து கொண்டு இருந்தார் ஆனால் அது அவருக்கு சாபமாய் இருந்தது
யூதாஸ் காரியோத் தன்னுடைய இருதயத்தை பணத்தின் மீது தான் வைத்து இருந்தார்
மத் 13:22 முள்ளுள்ள இடங்களில் விதைக்கப்பட்டவன், வசனத்தைக் கேட்கிறவனாயிருந்தும், உலகக்கவலையும் ஐசுவரியத்தின் மயக்கமும் வசனத்தை நெருக்கிப் போடுகிறதினால், அவனும் பலனற்றுப் போவான்.
இயேசு கிறிஸ்துவோடு கூட இருந்து யூதாஸ் காரியோத் வசனத்தை கேட்டலும் ஐஸ்வரியத்தின் மயக்கம் வசனத்தை நெருக்கிப் போட்டபடியினால் பலனற்றுப் போனார்
இயேசு கிறிஸ்துவின் பாதத்தில் மரியாள் களங்கமில்லாத நளதம் என்னும் தைலத்தை பூசின போது யூதாஸ் காரியோத் என்ன சொன்னார் என்பதை கவனியுங்கள்
யோவா 12:4 அப்பொழுது அவருடைய சீஷரில் ஒருவனும் அவரைக் காட்டிக்கொடுக்கப் போகிறவனுமாகிய சீமோனுடைய குமாரனான யூதாஸ்காரியோத்து:
யோவா 12:5 இந்தத் தைலத்தை முந்நூறு பணத்துக்கு விற்று, தரித்திரருக்குக் கொடாமல் போனதென்ன என்றான்.
நளதம் என்னும் தைலத்தை விற்று கொடுத்தால் யூதாஸ் காரியோத் தரித்திரருக்கு கொடுத்து இருப்பாரா?
யூதாஸ் காரியோத் தரித்திரர் மேல் கவலையாய் இருந்தாரா?
யோவா 12:6 அவன் தரித்திரரைக்குறித்துக் கவலைப்பட்டு இப்படிச் சொல்லாமல், அவன் திருடனானபடியினாலும், பணப்பையை வைத்துக்கொண்டு அதிலே போடப்பட்டதைச் சுமக்கிறவனானபடியினாலும் இப்படிச் சொன்னான்.
யூதாஸ் காரியோத் தரித்திரர் மேல் அவர் கவலையாக இல்லை அந்த களங்கமில்லாத நளதம் என்னும் தைலத்தை முந்நுறு பணத்துக்கு விற்று கொடுத்தால் தரித்திரருக்கு உதவி செய்வேன் என்கிற பெயரில் தன்னுடைய பணப்பையை நிரப்ப ஆசையாக இருந்தார்
யூதாஸ் காரியோத் இயேசு கிறிஸ்துவைக் காட்டிலும் பணத்தை மேலாக மதித்தார்
பணத்தை உயர்வாக மதித்தபடியால் இயேசு கிறிஸ்துவை காட்டிக் கொடுப்பதற்கு பேரம் பேசிக் கொண்டு இருந்தார்
மத் 26:14 அப்பொழுது, பன்னிருவரில் ஒருவனாகிய யூதாஸ்காரியோத்து என்பவன் பிரதான ஆசாரியரிடத்திற்குப் போய்:
மத் 26:15 நான் அவரை உங்களுக்குக் காட்டிக்கொடுக்கிறேன், நீங்கள் எனக்கு என்ன கொடுக்கிறீர்கள் என்றான். அவர்கள் அவனுக்கு முப்பது வெள்ளிக்காசைக் கொடுக்க உடன்பட்டார்கள்.
மாற் 14:11 அவர்கள் அதைக் கேட்டு, சந்தோஷப்பட்டு, அவனுக்குப் பணங்கொடுப்போம் என்று வாக்குத்தத்தம் பண்ணினார்கள் அவன் அவரைக் காட்டிக்கொடுப்பதற்குத் தகுந்த சமயம் பார்த்துக்கொண்டிருந்தான்.
இயேசு கிறிஸ்துவைக் காட்டிலும் யூதாஸ் காரியோத் பணத்தை உயர்வாக மதித்தபடியால் அவர் அந்த சோதனையில் விழுந்து போனார்
யூதாஸ் காரியோத் என்ன விரும்பினாரோ அந்த காரியத்தை செய்யும் படியாகவே இயேசு கிறிஸ்து அவரை ஒப்புக்கொடுத்தார்
யோவா 13:27 அந்தத் துணிக்கையை அவன் வாங்கினபின்பு, சாத்தான் அவனுக்குள் புகுந்தான். அப்பொழுது இயேசு அவனை நோக்கி: நீ செய்கிறதைச் சீக்கிரமாய்ச் செய் என்றார்.
இயேசு கிறிஸ்து மரணாக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்பட்டதைக் கண்டு மனஸ்தாப்பட்டார்
மத் 27:3 அப்பொழுது, அவரைக் காட்டிக்கொடுத்த யூதாஸ், அவர் மரணாக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்பட்டதைக் கண்டு, மனஸ்தாபப்பட்டு அந்த முப்பது வெள்ளிக்காசைப் பிரதான ஆசாரியரிடத்திற்கும் மூப்பரிடத்திற்கும் திரும்பக் கொண்டுவந்து:
அந்த முப்பது வெள்ளிக்காசை திரும்ப கொண்டு வந்து அவர்களிடத்திலே கொடுத்தார்
இயேசு கிறிஸ்து குற்றமில்லாதவர் என்பதை யூதாஸ் காரியோத் அறிந்து இருந்தாலும் அவருடைய பண ஆசை தான் அவரை இந்த நிலைக்கு கொண்டு வந்தது
மத் 27:4 குற்றமில்லாத இரத்தத்தை நான் காட்டிக்கொடுத்ததினால் பாவஞ்செய்தேன் என்றான். அதற்கு அவர்கள்: எங்களுக்கென்ன, அது உன்பாடு என்றார்கள்.
தான் செய்த பாவத்திற்கு மனஸ்தாப்பட்டார் ஆனால் மனந்திரும்பாமல் தற்கொலை செய்து கொண்டார்
மத் 27:5 அப்பொழுது, அவன் அந்த வெள்ளிக்காசைத் தேவாலயத்திலே எறிந்துவிட்டு, புறப்பட்டுப்போய், நான்றுகொண்டு செத்தான்.
யூதாஸ் காரியோத் விசுவாசத்தை விட்டு விலகி தன்னை அநேக வேதனைகளாலே உருவ குத்திக் கொள்ளுவதற்கு பண ஆசைதான் எல்லா தீமைக்கும் காரணமாய் இருந்தது
1தீமோ 6:10 பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது; சிலர் அதை இச்சித்து, விசுவாசத்தைவிட்டு வழுவி, அநேக வேதனைகளாலே தங்களை உருவக் குத்திக்கொண்டிருக்கிறார்கள்.
யூதாஸ் காரியோத் தன் சுய இச்சையினாலே இழுக்கப்பட்டு சிக்குண்டு சோதிக்கப்பட்டு விழுந்து போய் விட்டார்
யாக் 1:14 அவனவன் தன் தன் சுய இச்சையினாலே இழுக்கப்பட்டு, சிக்குண்டு, சோதிக்கப்படுகிறான்.
யாக் 1:15 பின்பு இச்சையானது கர்ப்பந்தரித்து, பாவத்தைப் பிறப்பிக்கும், பாவம் பூரணமாகும்போது, மரணத்தைப் பிறப்பிக்கும்.
யூதாஸ்காரியோத் இயேசு கிறிஸ்துவோடு கூட இருந்தாலும் விழுந்து போனார் நாமும் விழுந்து போவதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கிறது
யூதாஸ் காரியோத்தை காட்டிலும் மோசமான நிலையில் தான் இன்றைக்கு அநேக ஊழியக்காரர்கள் இருக்கிறார்கள்
பணத்திற்காக சத்தியத்தை புரட்டுவதற்கும் தயாராக இருக்கிறார்கள்
நீங்கள் ஈரோட்டில் இருந்தால் ஜெபிக்கவும் தேவனுடைய சத்தியங்களை இலவசமாகவும் உங்கள் வீடுகளில் கற்றுக்கொள்ள எங்களை அழைக்கவும்
Preacher: Bro Ariyel Barnabas
Church Of Christ
Erode
Call-9025776966
தேவனுடைய சத்தியங்களை தொடர்ந்து வாட்ஸ் ஆப் ல் பெற 9025776966 என்ற இந்த எண்ணுக்கு குறுந் தகவல் அனுப்பவும்
No comments:
Post a Comment