Thursday, 30 June 2022

ஒருவனுடைய ஜநநநாளைப்பார்க்கிலும் மரண நாள் ஏன் நல்லதாக இருக்கிறது?

பாடம் :02 சரீரப் பிரகாரமான மரணம்

ஒருவனுடைய ஜநநநாளைப்பார்க்கிலும்  மரண நாள் ஏன் நல்லதாக இருக்கிறது?

எல்லா மனுஷர்களுக்கும் நியமிக்கப்பட்டு இருக்கிற மரணத்தை குறித்து நாம் கற்றுக் கொண்டு வருகிறோம் 

மரணத்தைக் குறித்து வேத வாக்கியம் என்ன போதிக்கிறது என்பதையும்  கற்றுக் கொண்டு இருக்கிறோம் 

தேவன் தாயின் கர்ப்பத்தில் நம்மை பிரமிக்கதக்க அதிசயமாக உண்டாக்கினாலும் தேவன் நம்மை மண்ணென்று தான் என்று நினைவு கூறுகிறார்
சங் 139:14 நான் பிரமிக்கத்தக்க அதிசயமாய் உண்டாக்கப்பட்டபடியால், உம்மைத் துதிப்பேன்; உமது கிரியைகள் அதிசயமானவைகள், அது என் ஆத்துமாவுக்கு நன்றாய்த் தெரியும்.
சங் 103:14 நம்முடைய உருவம் இன்னதென்று அவர் அறிவார்; நாம் மண்ணென்று நினைவுகூருகிறார்

நாம் மண்ணாய்  இருக்கிறோம் என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்

நம்முடைய சரீரம் மண்ணாய் இருக்கிறபடியால் அது மண்ணுக்கு திரும்புகிறது
பிர 12:7 இவ்விதமாய் மண்ணானது தான் முன்னிருந்த பூமிக்குத் திரும்பி, ஆவி தன்னைத் தந்த தேவனிடத்திற்கு மறுபடியும் போகாததற்குமுன்னும், அவரை உன் வாலிபப்பிராயத்திலே நினை.

நம்முடைய மரணத்தைக் குறித்து தேவன் என்ன சொல்கிறார்?

மனுஷனுக்கு எது நல்லதென்று தேவன் சொல்லுகிறார் என்பதை கவனியுங்கள்
பிர 7:1 பரிமளதைலத்தைப்பார்க்கிலும் நற்கீர்த்தியும், ஒருவனுடைய ஜநநநாளைப்பார்க்கிலும் மரணநாளும் நல்லது.

மனுஷனுக்கு பிறந்த நாளா அல்லது மரணநாளா எது நல்ல நாளாக இருக்கிறது?

அநேகர் பிறந்த நாளை மிகுந்த ஆவலோடு எதிர்பார்க்கிறார்கள் அதை மகிழ்ச்சியோடு கொண்டாடுகிறார்கள்

அதோடு மாத்திரம் அல்ல இன்றைக்கு அநேகர் தங்களுடைய  பிறந்தநாளுக்கு வாழ்த்துதல் சொல்லவேண்டும் என்று விரும்புகிறார்கள்

அப்படி வாழ்த்துதல் சொல்லுவதினாலே அவர்களுக்கு கிடைக்கும் மேன்மை என்ன?

நாம் இன்றைக்கு பிறந்த நாளை நல்ல நாள் என்று கொண்டாடிக் கொண்டு இருக்கிறோம் ஆனால் நம்முடைய மரண நாள் தான் நல்லது என்று தேவன் சொல்லுகிறார்

பிறந்த நாளை நீங்கள் வருஷந்தோறும் அநுசரித்தல் அதினால் உங்களுக்கு இலாபம் என்ன?

அப்படி நீங்கள் கொண்டாடுவதினால்  ஆவிக்குரிய வாழ்க்கையில் அது உங்களுக்கு என்ன பிரயோஜனத்தை கொடுக்கிறது?

நீங்கள் இருக்கிறவரைக்கும் உங்கள் பிறந்த நாளை கொண்டாடுவீர்கள் உங்களுடைய மரணத்திற்கு பிறகு அந்த நாளைக் குறித்து யார் சிந்திப்பார்கள்?

உங்களுடைய ஒவ்வொரு பிறந்தநாளும் வருகின்ற பொழுது  உங்களுடைய கல்லறையை நோக்கி நீங்கள் ஒரு அடி எடுத்து வைக்கிறீர்கள்

நம்முடைய மரணத்திற்கு பிறகு இந்த பூமியிலே நமக்கு என்ன பங்கு இருக்கிறது?
பிர 9:4 இதற்கு நீங்கலாயிருக்கிறவன் யார்? உயிரோடிருக்கிற அனைவரிடத்திலும் நம்பிக்கையுண்டு; செத்த சிங்கத்தைப்பார்க்கிலும் உயிருள்ள நாய் வாசி.
பிர 9:5 உயிரோடிருக்கிறவர்கள் தாங்கள் மரிப்பதை அறிவார்களே, மரித்தவர்கள் ஒன்றும் அறியார்கள்; இனி அவர்களுக்கு ஒரு பலனுமில்லை, அவர்கள் பேர்முதலாய் மறக்கப்பட்டிருக்கிறது.
பிர 9:6 அவர்கள் சிநேகமும், அவர்கள் பகையும், அவர்கள் பொறாமையும் எல்லாம் ஒழிந்துபோயிற்று; சூரியனுக்குக் கீழே செய்யப்படுகிறதொன்றிலும் அவர்களுக்கு இனி என்றைக்கும் பங்கில்லை

நீங்கள் இந்த பூமியில் சிங்கமாக வாழ்ந்தாலும் மரித்த பின் உங்களைப் பார்க்கிலும் உயிருள்ள நாய் வாசியாக இருக்கிறது

நீங்கள் மரித்த பின் உங்களுடைய சிநேகமும் பகையும் பொறாமையும் எல்லாம் ஒழிந்து விடும் 

உங்களுடைய பேர் முதலாய் இங்கே மறக்கப்பட்டு போகும்

இந்த பூமியில்  நாம் பாடுபடும்படி தேவன் நமக்கு தொல்லைகளை நியமித்து இருக்கிறார்
பிர 3:9 வருத்தப்பட்டுப் பிரயாசப்படுகிறவனுக்கு அதினால் பலன் என்ன?
பிர 3:10 மனுபுத்திரர் பாடுபடும்படி தேவன் அவர்களுக்கு நியமித்த தொல்லையைக் கண்டேன்.

நாம் விருந்து வீட்டுக்கு போவதா அல்லது துக்கவீட்டுக்கு போவதா எது நல்லது என்று தேவன் நமக்கு வெளிப்படுத்தி இருக்கிறார்
பிர 7:2 விருந்துவீட்டுக்குப் போவதிலும் துக்கவீட்டுக்குப் போவது நலம்; இதிலே எல்லா மனுஷரின் முடிவும் காணப்படும்; உயிரோடிருக்கிறவன் இதைத் தன் மனதிலே சிந்திப்பான்.

நாம் துக்கவீட்டுக்கு ஏன் போவது நலமாய் இருக்கும்? ஏனென்றால் எல்லா மனுஷரின் முடிவு அங்கே காணப்படும் நாம் இதை தான சிந்திக்க வேண்டும் என்று தேவன் விரும்புகிறார் 

அங்கே நாம் என்ன முடிவை பார்க்கிறோம்?
பிர 2:14 ஞானியின் கண்கள் அவன் முகத்திலே இருக்கிறது; மூடனோ இருளிலே நடக்கிறான்; ஆகிலும் அவர்களெல்லாருக்கும் ஒரே விதமாய்ச் சம்பவிக்கிறது என்று கண்டேன்.
பிர 2:15 மூடனுக்குச் சம்பவிக்கிறதுபோல எனக்கும் சம்பவிக்கிறதே; அப்படியிருக்க நான் அதிக ஞானமடைந்ததினால் காரியமென்ன என்று சிந்தித்தேன்; இதுவும் மாயை என்று என் உள்ளத்தில் எண்ணினேன்.
பிர 2:16 மூடன் என்றாலும் ஞானியென்றாலும் என்றைக்கும் நினைவில் இருப்பதில்லை; இப்பொழுது இருக்கிறதெல்லாம் வருங்காலத்தில் மறக்கப்பட்டுப்போம்; மூடன் எப்படிச் சாகிறானோ அப்படியே ஞானியும் சாகிறான்.

மரிக்கிற விசயத்தில் மனுஷனுக்கும் மிருகத்திற்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது?
பிர 3:19 மனுபுத்திரருக்குச் சம்பவிக்கிறது மிருகங்களுக்கும் சம்பவிக்கும்; அவர்களுக்கும் இவைகளுக்கும் ஏக சம்பவமுண்டு; இவைகள் சாகிறதுபோலவே அவர்களும் சாகிறார்கள்; ஜீவன்களுக்கெல்லாம் சுவாசம் ஒன்றே; மிருகத்தைப்பார்க்கிலும் மனுஷன் மேன்மையுள்ளவன் அல்ல; எல்லாம் மாயையே.
பிர 3:20 எல்லாம் ஒரே இடத்துக்குப் போகிறது; எல்லாம் மண்ணிலே உண்டாகிறது, எல்லாம் மண்ணுக்குத் திரும்புகிறது.

மனுஷனுடைய ஆவி உயரேயும் மிருகங்களுடைய தாழப் பூமியிலேயும் இறங்குகிறது
பிர 3:21 உயர ஏறும் மனுஷனுடைய ஆவியையும், தாழப் பூமியிலிறங்கும் மிருகங்களுடைய ஆவியையும் அறிகிறவன் யார்?

மரத்தைக் குறித்து நம்பிக்கை இருக்கிறது ஆனால் மனுஷனைக் குறித்து என்ன நம்பிக்கை இருக்கிறது?
யோபு 14:7 ஒரு மரத்தைக்குறித்தாவது நம்பிக்கையுண்டு; அது வெட்டிப்போடப்பட்டாலும் திரும்பத் தழைக்கும், அதின் இளங்கிளைகள் துளிர்க்கும்;
யோபு 14:8 அதின் வேர் தரையிலே பழையதாகி, அதின் அடிக்கட்டை மண்ணிலே செத்தாலும்,
யோபு 14:9 தண்ணீரின் வாசனையினால் அது துளிர்த்து, இளமரம்போலக் கிளைவிடும்.
யோபு 14:10 மனுஷனோவென்றால் செத்தபின் ஒழிந்துபோகிறான், மனுபுத்திரன் ஜீவித்துப்போனபின் அவன் எங்கே?

மரத்தை குறித்து துளிர்க்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது ஆனால் மனுஷனைக் குறித்து என்ன நம்பிக்கை இருக்கிறது?

நாம் இந்த பூமியில் இருக்கிற வரைக்கும் எல்லா வருத்தங்களும் கஷ்டங்களும் போராட்டங்களுக்கும் நமக்கு  இருக்கிறது
வெளி 21:4 அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயின என்று விளம்பினது.
பிர 5:17 அவன் தன் நாட்களிலெல்லாம் இருளிலே புசித்து, மிகவும் சலித்து, நோயும் துன்பமும் அடைகிறான்.

தேவனுடைய பிள்ளைகளுக்கு ஏன் மரணநாள் நல்ல நாளாக இருக்கிறது?

மேலே சொல்லப்பட்ட கண்ணீர், மரணம், துக்கம், அலறுதல், வருத்தம் எல்லாம் ஒழிந்து போய் விடும்

நம்முடைய மரணம் நம்முடைய வீட்டாருக்கு துக்கமான நாளாக இருக்கிறது ஆனால் அந்த நாள் நம்முடைய வாழ்க்கையில் மிகவும் சந்தோஷமான நாள்

அந்த நாள் ஏன் நமக்கு சந்தோஷமான நாளாக இருக்கிறது?

இந்த பூமியிலே தேவன் நமக்கு கொடுத்த கிரியை எல்லாம் முடித்து மரிக்கின்ற போது நாம் இளைப்பாறுதலில் பிரவேசிக்கும் சிலாக்கியத்தை பெறுகிறோம்
எபி 4:10 ஏனெனில், அவருடைய இளைப்பாறுதலில் பிரவேசித்தவன், தேவன் தம்முடைய கிரியைகளை முடித்து ஓய்ந்ததுபோல, தானும் தன் கிரியைகளை முடித்து ஓய்ந்திருப்பான்.

இயேசு கிறிஸ்து பிதாவின் கிரியைகளை எல்லாம் செய்து முடித்து பிதாவின் வலது பாரிசத்தில் வீற்றிருக்கிறார்
யோவா 17:4 பூமியிலே நான் உம்மை மகிமைப்படுத்தினேன்; நான் செய்யும்படி நீர் எனக்கு நியமித்த கிரியையைச் செய்து முடித்தேன்.

நாம் நம்முடைய கிரியை எல்லாம் முடித்து மரித்த பிறகு தான் நாம் ஆபிரகாமின் மடியில் இளைப்பாற முடியும்
லூக் 16:22 பின்பு அந்தத் தரித்திரன் மரித்து, தேவதூதரால் ஆபிரகாமுடைய மடியிலே கொண்டுபோய் விடப்பட்டான்; ஐசுவரியவானும் மரித்து அடக்கம்பண்ணப்பட்டான்.

நாம் கிறிஸ்துவின் எல்லா பிரமாணத்திற்கும் கீழ்படிவோம் என்றால் நம்முடைய மரணத்திற்கு பிறகு நாம் பரதீசியில் தேற்றப்படுவோம்
லூக் 16:25 அதற்கு ஆபிரகாம்: மகனே, நீ பூமியிலே உயிரோடிருக்குங் காலத்தில் உன் நன்மைகளை அனுபவித்தாய், லாசருவும் அப்படியே தீமைகளை அநுபவித்தான், அதை நினைத்துக்கொள்; இப்பொழுது அவன் தேற்றப்படுகிறான், நீயோ வேதனைப்படுகிறாய்

கர்த்தருக்கு சித்தமானால் இன்னும் மரணத்தைக் குறித்து கற்றுக் கொள்ளுவோம் 

நீங்கள் ஈரோட்டில் இருந்தால் ஜெபிக்கவும்  தேவனுடைய சத்தியங்களை இலவசமாகவும்  உங்கள் வீடுகளில் கற்றுக்கொள்ள எங்களை அழைக்கவும்

Preacher: Bro Ariyel Barnabas
Church Of Christ
Erode
Call-9025776966

தேவனுடைய சத்தியங்களை தொடர்ந்து வாட்ஸ் ஆப் ல் பெற  9025776966 என்ற எண்ணுக்கு குறுந்தகவல் அனுப்பவும்

No comments:

Post a Comment