Monday, 20 June 2022

நாம் தேவனை தொழுது கொள்ளுவதின் நோக்கம் என்ன?


நாம் எல்லாரும் பூமிக்குரிய ஆசிர்வாதத்தை  பெறுவதுதான் தொழுது கொள்ளுவதின்  நோக்கமா? 

இன்றைக்கு அநேக போதகர்கள் அப்படித்தான் போதிக்கிறார்கள்

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பிரமாணம் அப்படித்தான் போதிக்கிறதா?

தேவனை மாத்திரம் மகிமைப்படுத்துவது தான் ஆராதனை என்று அநேகர் நினைக்கிறார்கள் அது சரியா? 

ஆராதனையில் ஜெபிக்கிறோம் யாருக்காக ஜெபிக்கிறோம்?

ஆராதனையில் பாடல் பாடுகிறோம் எதற்காக பாடுகிறோம்?

தேவனுடைய சத்தியங்களை பிரசங்கிக்க கேட்கிறோம்  எதற்காக கேட்கிறோம்?  

கர்த்தருடைய பந்தியில் பங்கு பெறுகிறோம் என்ன நோக்கத்திற்காக பங்கு பெறுகிறோம்?

காணிக்கை கொடுக்கிறோம் எதற்காக கொடுக்கிறோம்?

இந்த ஐந்து பகுதியையும் நமக்காக செய்கிறோமா அல்லது தேவனுக்காக செய்கிறோமா?

மேலே சொல்லப்பட்ட ஆராதனைக்குரிய காரியங்கள் நம்முடைய பக்தி விருத்திக்காக செய்யும் படி தேவன் நமக்கு கட்டளையிட்டு இருக்கிறார் 

நாம் வேத வாக்கியத்தின் படி அவருடைய கட்டளையின் படி செய்யும்போது தான் தேவனை நாம் மகிமைப்படுத்துகிறோம்

இதில் எது ஒன்றிலும் வசனத்தை மீறுவோம் என்றால் அது வீணான ஆராதனையாகிவிடும் 

பழைய ஏற்பாட்டில் தேவனுடைய சமூகத்தில் செய்யப்பட்ட அநேக தொழுது கொள்ளுதலை தேவன் ஏற்று கொள்ளவில்லை

தேவனுக்கு பயந்து அவருடைய கட்டளைக்கு கீழ்ப்படிந்து அவர் கட்டளையிட்ட  பிரகாரம் ஆராதனை செய்யும் போது தான் தேவன் அதை ஏற்று கொண்டு இருக்கிறார் 

நாம் இன்றைக்கு தேவனுடைய சபையாக  தேவனுடைய ஆலயமாக இருக்கிறோம் நாம் சபை கூடிவருவத்தின் நோக்கம் என்ன என்பதை வசனத்தின் அடிப்படையில் உணர்ந்து கொள்ள வேண்டும் 

நாம் சபையாக கூடிவருவதின் நோக்கம் என்ன?

நாம் கிறிஸ்துவின் சாயலுக்கு ஒப்பாக வளர வேண்டும் என்பதற்காக தான் கூடி வருகிறோம்
ரோம 8:29 தம்முடைய குமாரன் அநேக சகோதரருக்குள்ளே முதற்பேறானவராயிருக்கும்பொருட்டு, தேவன் எவர்களை முன்னறிந்தாரோ அவர்களைத் தமது குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாயிருப்பதற்கு முன்குறித்திருக்கிறார்.

தேவன் நமக்கு வேதவாக்கியங்களை கொடுத்ததின் நோக்கம் என்ன?
2தீமோ3:16 வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது. தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக,
2 தீமோ 3:17அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும் சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது. 

நாம் தேவனுடைய  சத்தியத்தை கேட்டு கிறிஸ்துவை போல தேறினவர்களாக (பூரண புருஷர்களாக) இருக்க வேண்டும் என்பதற்கு தான் வேத வாக்கியங்கள் கொடுக்கப்பட்டு இருக்கிறது 

அப்போஸ்தர்களையும்  தீர்க்கதரிகளையும் மற்ற ஊழியங்களையும் தேவன் ஏன் ஏற்படுத்தினார்?
எபே 4:11:-மேலும் நாம் அனைவரும் தேவனுடைய குமாரனைப் பற்றும் விசுவாசத்திலும் அறிவிலும் ஒருமைப்பட்டவர்களாகி, கிறிஸ்துவினுடைய நிறைவான வளர்ச்சியின் அளவுக்குத்தக்க பூரண புருஷராகும்வரைக்கும்,
எபே 4:12:-பரிசுத்தவான்கள் சீர்பொருந்தும்பொருட்டு, சுவிசேஷ ஊழியத்தின் வேலைக்காகவும், கிறிஸ்துவின் சரீரமாகிய சபையானது பக்திவிருத்தி அடைவதற்காகவும்,
எபே4:13:அவர், சிலரை அப்போஸ்தலராகவும், சிலரைத் தீர்க்கதரிசிகளாகவும், சிலரைச் சுவிசேஷகராகவும், சிலரை மேய்ப்பராகவும், போதகராகவும் ஏற்படுத்தினார். 

கிறிஸ்துவின் சரீரமாகிய சபையானது பக்தி விருத்தி அடைந்து கிறிஸ்துவின் நிறைவான அளவுக்குத்தக்கதாக பூரண புருஷராக வேண்டும்

இன்றைக்கு எத்தனை பேர் சபையானது கிறிஸ்துவின் வளர்சிக்குத்தக்கதாக பூரண புருஷராக வேண்டும் என்று போதிக்கிறார்கள்?  

இன்றைக்கு கிறிஸ்தவம் என்பது  அநேக கள்ளப்போதகர்களாலே   வியாபாரமாகி விட்டது 

இப்படிப்பட்டவர்கள் தேவனுக்கு அல்ல தங்கள் வயிற்றுக்கே ஊழியம் செய்கிறார்கள் அவர்களுடைய தேவன் அவர்கள் வயிறு என்று பவுல் சொல்லுவதை மனதில் வைத்து கொள்ளுங்கள் 

இந்த கள்ள போதகர்களை அவர்களுடைய கனிகளினாலே அறிந்து கொள்ள முடியும் 

இன்றைக்கு அநேக கள்ளப்போதகர்களுடைய ஆராதனை என்பது எப்படி இருக்கிறது?

நடனம் பண்ணுவது  குதிப்பது,  விழுவது,  பலமாக சிரிப்பது, கத்துவது, கையை தட்டுவது, விசில் அடிப்பது 
அடிக்கடி  அல்லேலூயா சொல்லுவது, ஆமென் என்று சொல்லி  கடைசியில் தசமபாக காணிக்கை வாங்குவது 

இதில் எங்கே பக்திவிருத்திக்கான காரியங்கள் இருக்கிறது? 

பழைய ஏற்பாட்டில் தேவாலயம் கட்டப்படும் போது உளியின் சத்தம் கூட அதில் கேட்கப்படவில்லை என்பதை மனதில் வைத்து கொள்ளுங்கள்

இப்படி பட்ட கள்ள போதகர்கள் தேவாலயத்தை (தேவனுடைய சபையை) கள்ளர் குகையாக (வியாபார ஸ்தலம்) வைத்து இருக்கிறார்கள் 

தேவனுக்கு பிரியமான ஆராதனை செய்ய வேண்டும் என்றால் எப்படி செய்ய வேண்டும்?
எபி 12:28:-ஆதலால், அசைவில்லாத ராஜ்யத்தைப் பெறுகிறவர்களாகிய நாம் பயத்தோடும் பக்தியோடும் தேவனுக்குப் பிரியமாய் ஆராதனை செய்யும்படி கிருபையைப் பற்றிக்கொள்ளக்கடவோம். 
எபி12:29:- நம்முடைய தேவன் பட்சிக்கிற அக்கினியாயிருக்கிறாரே 

தேவனுக்கு ஆராதனை செய்யும் போது அதில் தேவனுக்குரிய பயமும் பக்தியும் இல்லை என்றால் அங்கே தேவன் வாசம் செய்வதில்லை அது வீணான ஆராதனையாகவே இருக்கும் 

சகலமும்  நல்லொழுக்கமாயும் கிரமமாயும் இருக்க வேண்டும்
1 கொரி 14:40:-சகலமும் நல்லொழுக்கமாயும் கிரமமாயும் செய்யப்படக்கடவது. 

பிரசங்கியார் வேத வாக்கியங்களை போதிக்க வேண்டும் விசுவாசிகள் அமைதலோடு கற்றுக்கொண்டு அதற்கு கீழ்ப்படிய வேண்டும் 

தேவனுடைய சபையிலே ஆராதனையிலே தேவன் ஒருவர் மாத்திரமே மகிமைப்பட வேண்டும்

நீங்கள் ஈரோட்டில் இருந்தால் ஜெபிக்கவும்  தேவனுடைய சத்தியங்களை இலவசமாகவும்  உங்கள் வீடுகளில் கற்றுக்கொள்ள எங்களை அழைக்கவும்

Preacher: Bro Ariyel Barnabas
Church Of Christ
Erode
Call-9025776966

தேவனுடைய சத்தியங்களை தொடர்ந்து வாட்ஸ் ஆப் ல் பெற 9025776966 என்ற எண்ணுக்கு குறுந்தகவல் அனுப்பவும்

No comments:

Post a Comment