பாடம் :01 சரீரப் பிரகாரமான மரணம்
மரணத்தைக் குறித்து வேத வாக்கியம் என்ன போதிக்கிறது?
நாம் இந்த நாளில் வேத வாக்கியத்தில் மரணத்தை குறித்து என்ன சொல்லப்பட்டு இருக்கிறது என்று கற்றுக் கொள்ளபோகிறோம்
மரணம் என்றாலே எபிரேய மொழியில் பிரிவு என்று தான் இருக்கிறது
முதலாவது தேவன் மனுஷனை விட்டு தூரமாய் போவது அல்லது தேவன் மனுஷனை தன்னை விட்டு துரப்படுத்துவது தான் ஆத்தும மரணமாக இருக்கிறது
இரண்டாவது சரீரத்தை விட்டு ஆவி பிரிவது தான் சரீரபிரகாரமான மரணமாக இருக்கிறது
நம்முடைய வேத வாக்கியம் முக்கியமாக இந்த இரண்டு விதமான மரணத்தைக் குறித்து தான் அதிகம் பேசுகிறது
1) நாம் பாவம் செய்கின்ற போது நம்முடைய ஆத்துமா மரித்து போகிறது அது தான் ஆவிக்குரிய மரணமாக இருக்கிறது என்று வேதவாக்கியம் போதிக்கிறது
தேவனை அறியாமலும் அவருடைய சத்தியத்திற்கு கீழ்படியாமலும் உலகத்தில் வாழக்கூடிய எல்லாருடைய ஆத்துமாக்களும் தேவனுக்கு முன்பாக மரித்து தான் இருக்கிறது
எசே 18:4 இதோ, எல்லா ஆத்துமாக்களும் என்னுடையவைகள்; தகப்பனின் ஆத்துமா எப்படியோ, அப்படியே மகனின் ஆத்துமாவும் என்னுடையது; பாவஞ்செய்கிற ஆத்துமாவே சாகும்.
ரோம 6:23 பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன்.
எல்லாரும் பாவம் செய்யும் போது அவர்கள் தங்கள் ஆத்துமாக்களில் மரிக்கிறார்கள்
சுகபோகமாய் வாழ்கிறவர்கள் தேவனுடைய பார்வையில் தங்கள் ஆத்துமாவில் செத்தவர்களாய் தான் இருக்கிறார்கள்
1தீமோ 5:6 சுகபோகமாய் வாழ்கிறவள் உயிரோடே செத்தவள்.
உலகத்தில் யார் தேவனுடைய கட்டளைகளுக்கு கீழ்ப்படுகிறார்களோ
அந்த ஆத்துமாக்கள் தான் தேவனுக்கு முன்பாக ஜீவனோடு இருக்கிறது
நாம் இப்போது எல்லாருக்கும் நியமிக்கப்பட்டு இருக்கிற இரண்டாவது மரணமாகிய சரீரபிரகாரமான மரணத்தைப் பற்றி தான் பார்க்க போகிறோம்
2) சரீரத்தை விட்டு ஆத்துமா வெளியேறுகின் போது அது சரீர பிரகாரமான மரணமாக இருக்கிறது
எல்லாருக்கும் பிறக்க ஒரு காலம் இருக்கிறது போல இறப்பதற்கு ஒரு காலம் இருக்கிறது
பிர 3:2 பிறக்க ஒரு காலமுண்டு, இறக்க ஒரு காலமுண்டு நட ஒரு காலமுண்டு, நட்டதைப் பிடுங்க ஒரு காலமுண்டு;
இந்த இரண்டு மரணத்தை குறித்து இயேசு கிறிஸ்து ஒரே வசனத்தில் சொன்னதை கவனியுங்கள்
மத் 8:21 அவருடைய சீஷர்களில் வேறொருவன் அவரை நோக்கி: ஆண்டவரே! முன்பு நான் போய், என் தகப்பனை அடக்கம்பண்ண எனக்கு உத்தரவு கொடுக்கவேண்டும் என்றான்.
மத் 8:22 அதற்கு இயேசு: மரித்தோர் தங்கள் மரித்தோரை அடக்கம்பண்ணட்டும், நீ என்னைப் பின்பற்றி வா என்றார்.
இந்த வசனத்தில் இயேசு சரீரத்தில் மரித்தவரை ஆத்துமாவில் மரித்தவர்கள் அடக்கம் பண்ணட்டும் என்று சொல்லுவதை நாம் கவனிக்க வேண்டும்
உலகத்தில் வாழக்கூடிய தேவனுடைய பிள்ளைகளாக இருந்தாலும் சரி பாவிகளாக இருந்தாலும் சரி எல்லாருக்கும் மரணம் என்பது நியமிக்கப்பட்டு இருக்கிறது
எபி 9:27 அன்றியும், ஒரேதரம் மரிப்பதும், பின்பு நியாயத்தீர்ப்படைவதும் மனுஷருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறபடியே,
தன்னுடைய ஆவியை விடாதிருக்கிறதற்கு ஆவியின்மேல் எந்த மனுஷனுக்கும் அதிகாரமில்லை என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்
பிர 8:8 ஆவியை விடாதிருக்கிறதற்கு ஆவியின்மேல் ஒரு மனுஷனுக்கும் அதிகாரமில்லை; மரணநாளின்மேலும் அவனுக்கு அதிகாரமில்லை; அந்தப் போருக்கு நீங்கிப்போவதுமில்லை; துன்மார்க்கரைத் துன்மார்க்கம் விடுவிக்கவுமாட்டாது.
எல்லாருக்கும் மரணநாள் என்பது இருக்கிறது அந்த நாளில் யார் ஒருவரும் தப்பிப்போக முடியாது என்பதை நாம் கவனிக்க வேண்டும்
ஆனால் அந்த மரணநாள் நமக்கு தெரியுமா?
நமக்கு நிச்சயமாக தெரியாது
தேவன் ஒருவருக்கு மரணநாளை குறித்தார் அதிலிருந்து அவர் தப்பிக்கொண்டாரா என்பதை நாம் வேத வாக்கியத்தை கவனிப்போம்
இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாப் தேவனுக்கு விரோதமாக துரோகம் பண்ணிகொண்டே இருந்தபடியால் தேவன் அவரை கொல்ல சித்தம் கொண்டார்
1இராஜா 22:20 அப்பொழுது கர்த்தர்: ஆகாப் போய், கீலேயாத்திலுள்ள ராமோத்தில் விழும்படிக்கு, அவனுக்குப் போதனை செய்கிறவன் யார் என்று கேட்டதற்கு, ஒருவன் இப்படியும் ஒருவன் அப்படியும் சொன்னார்கள்.
ஆகாப் ராமோத்திலே யுத்தத்தில் சாக வேண்டும் என்று தேவன் குறித்து வைத்தார் ஆனால் தான் அந்த நாளில் சாக கூடாது என்று ஆகாப் நினைத்து யோசேபாத்திற்கு ராஜா வஸ்திரத்தை தரித்து யுத்தத்தில் பிரவேசிக்க செய்தார் ஆனால் ஆகாப் வேஷம் மாறி யுத்தகளத்திற்கு வந்தார்
ஆனால் தேவன் குறித்த அந்த நாளில் ஆகாப் செத்துப்போனார்
1இராஜா 22:34 ஒருவன் நினையாமல் வில்லை நாணேற்றி எய்தான்; அது இஸ்ரவேலின் ராஜாவினுடைய கவசத்தின் சந்துகளுக்குள் பட்டது அப்பொழுது அவன் தன் சாரதியைப் பார்த்து: நீ திருப்பி என்னை இராணுவத்துக்கப்பால் கொண்டுபோ; எனக்குக் காயம்பட்டது என்றான்.
யுத்த களத்தில் ஒருவன் நினையாமல் வில்லை நாணேற்றி எய்த போது அது ஆகாபுடைய கவசத்தின் சந்துகள் பட்டது அவர் அங்கே செத்துப்போனார்
ஆகாப் அந்த மரண நாளில் தப்பித்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்தார் ஆனால் அவரால் அந்த மரணநாளில் தப்பித்து கொள்ள முடியவில்லை
அந்த மரணநாள் என்பது யார் ஒருவருக்கும் தெரியாது ஆனால் அந்த நாளில் நாம் யாரும் தப்பித்துக் கொள்ள முடியாது என்பது தான் நாம் உணர்ந்து கொள்ள வேண்டிய சத்தியமாய் இருக்கிறது
ஐஸ்வர்யவானாக இருந்தாலும் சரி தரித்திரனாக இருந்தாலும் மரணம் என்ற இந்த போருக்கு யாரும் தப்பித்துக் கொள்ள முடியாது
லூக் 16:22 பின்பு அந்தத் தரித்திரன் மரித்து, தேவதூதரால் ஆபிரகாமுடைய மடியிலே கொண்டுபோய் விடப்பட்டான்; ஐசுவரியவானும் மரித்து அடக்கம்பண்ணப்பட்டான்.
இப்போது கேள்வி என்னவென்றால் மனிதனுக்கு மரணம் எப்படி சம்பவிக்கும்?
மனிதன் எந்த வயதிலும் எப்படி வேண்டுமானாலும் மரித்து போகலாம் என்பதை நாம் அறிந்து இருக்க வேண்டும்
1சாமு 26:10 பின்னும் தாவீது: கர்த்தர் அவரை அடித்து, அல்லது அவருடைய காலம் வந்து, அவர் மரித்து, அல்லது அவர் யுத்தத்திற்குப் போய் மாண்டாலொழிய,
தீர்க்கதரிசியாகிய எலிசா மரணத்துக்கேதுவான வியாதி வந்து மரித்தார்
2இராஜா 13:14 அவன் நாட்களில் எலிசா மரணத்துக்கு ஏதுவான வியாதியாய்க் கிடந்தான்; அப்பொழுது இஸ்ரவேலின் ராஜாவாகிய யோவாஸ் அவனிடத்துக்குப் போய், அவன்மேல் விழுந்து, அழுது: என் தகப்பனே, என் தகப்பனே, இஸ்ரவேலுக்கு இரதமும் குதிரைவீரருமாயிருந்தவரே என்றான்.
ஸ்தேவான் வாலிப வயதில் கொலை செய்யப்பட்டு மரித்துப்போனார்
அப் 7:59 அப்பொழுது: கர்த்தராகிய இயேசுவே, என் ஆவியை ஏற்றுக்கொள்ளும் என்று ஸ்தேவான் தொழுதுகொள்ளுகையில், அவனைக் கல்லெறிந்தார்கள்.
அப் 7:60 அவனோ, முழங்காற்படியிட்டு: ஆண்டவரே, இவர்கள்மேல் இந்தப் பாவத்தைச் சுமத்தாதிரும் என்று மிகுந்த சத்தமிட்டுச் சொன்னான். இப்படிச் சொல்லி, நித்திரையடைந்தான்
அநேகர் விபத்தில் கூட மரித்து போகிறார்கள்
லூக் 13:4 சீலோவாமிலே கோபுரம் விழுந்து பதினெட்டுப்பேரைக் கொன்றதே; எருசலேமில் குடியிருக்கிற மனுஷரெல்லாரிலும் அவர்கள் குற்றவாளிகளாயிருந்தார்களென்று நினைக்கிறீர்களோ?
சில பரிசுத்தவான்கள் பூரண வயதில் சமாதானத்தோடு மரித்து இருக்கிறார்கள்
யோபு 42:16 இதற்குப்பின்பு யோபு நூற்று நாற்பது வருஷம் உயிரோடிருந்து, நாலு தலைமுறையாகத் தன் பிள்ளைகளையும் தன் பிள்ளைகளுடைய பிள்ளைகளையும் கண்டான்.
யோபு 42:17 யோபு நெடுநாளிருந்து, பூரண வயதுள்ளவனாய் மரித்தான்.
உபா 34:7 மோசே மரிக்கிறபோது நூற்றிருபது வயதாயிருந்தான்; அவன் கண் இருளடையவுமில்லை, அவன் பெலன் குறையவுமில்லை.
கர்த்தருக்கு சித்தமானால் இன்னும் தொடர்ந்து சரீர மரணத்தைக் குறித்து கற்றுக் கொள்ளுவோம்
நீங்கள் ஈரோட்டில் இருந்தால் ஜெபிக்கவும் தேவனுடைய சத்தியங்களை இலவசமாகவும் உங்கள் வீடுகளில் கற்றுக்கொள்ள எங்களை அழைக்கவும்
Preacher: Bro Ariyel Barnabas
Church Of Christ
Erode
Call-9025776966
தேவனுடைய சத்தியங்களை தொடர்ந்து வாட்ஸ் ஆப் ல் பெற 9025776966 என்ற எண்ணுக்கு குறுந்தகவல் அனுப்பவும்
No comments:
Post a Comment