பாடம் :13 ஒய்வு நாள் பிரமாணம் கிறிஸ்தவர்களுக்கு கொடுக்கப்பட்டதா?
பத்து கற்பனைகளில் முதலாம் கற்பனையைக் காட்டிலும் கிறிஸ்துவின் பிரமாணத்தில் மேலான பிரமாணம் கொடுக்கப்பட்டிருக்கிறதா?
ஒய்வு நாள் பிரமாணம் யாருக்கு கொடுக்கப்பட்டு இருந்தது என்பதை நாம் கற்றுக் கொண்டு வருகிறோம்
ஒய்வுநாள் சபையார் பத்து கற்பனைகளைப் பார்க்கிலும் மேலான கற்பனை எதுவும் இல்லை என்கிறார்கள்
இப்போது நாம் பத்து கற்பனையில் முதல் கற்பனையை எடுத்துக் கொண்டு புதிய ஏற்பாட்டில் கிறிஸ்துவின் பிரமாணத்தில் எப்படிப்பட்ட பிரமாணம் நமக்கு கொடுக்கப்பட்டு இருக்கிறது என்பதை நாம் ஒப்பிட்டு பார்க்க போகிறோம்
நாம் ஏன் கிறிஸ்துவின் பிரமாணத்திற்கு செவி கொடுக்க வேண்டும்?
யோவா 12:48 என்னைத் தள்ளி என் வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளாதவனை நியாயந்தீர்க்கிறதொன்றிருக்கிறது; நான் சொன்ன வசனமே அவனைக் கடைசிநாளில் நியாயந்தீர்க்கும்.
நாம் கிறிஸ்துவின் பிரமாணத்திற்கு மாத்திரம் செவி ஏன் கொடுக்க வேண்டும் ஏனென்றால் அந்த பிரமாணத்தின்படியாக தான் நாம் நியாயந்தீர்க்கப்பட போகிறோம்
பத்து கற்பனையில் முதலாம் கற்பனை என்ன?
யாத் 20:2 உன்னை அடிமைத்தன வீடாகிய எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணின உன் தேவனாகிய கர்த்தர் நானே.
யாத் 20:3 என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்கவேண்டாம்.
தேவன் இஸ்ரவேல் ஜனங்களுக்கு பிரமாணத்தை கொடுத்த போது என்னை தவிர வேறே தேவன் இல்லை என்றும் அவரை தவிர வேறே தேவர்கள் உண்டாயிருக்க கூடாது என்று கட்டளையிட்டார்
இதே போல் பிரமாணம் கிறிஸ்துவின் பிரமாணத்தில் இல்லையா?
கிறிஸ்துவின் பிரமாணத்தில் தேவனைக் குறித்து நமக்கு என்ன போதிக்கப்பட்டு இருக்கிறது என்பதை நாம் கற்றுக் கொள்ளுவோம்
வானத்திலும் பூமியிலும் தேவர்கள் என்னப்படுகிறவர்களும் இருந்தாலும் நமக்கு பிதாவாகிய ஒரே தேவன் தான் இருக்கிறார்
1கொரி 8:5 வானத்திலேயும் பூமியிலேயும் தேவர்கள் என்னப்படுகிறவர்கள் உண்டு இப்படி அநேக தேவர்களும் அநேக கர்த்தாக்களும் உண்டாயிருந்தாலும்,
1கொரி 8:6 பிதாவாகிய ஒரே தேவன் நமக்குண்டு,அவராலே சகலமும் உண்டாயிருக்கிறது; அவருக்கென்று நாமும் உண்டாயிருக்கிறோம். இயேசு கிறிஸ்து என்னும் ஒரே கர்த்தரும் நமக்குண்டு; அவர் மூலமாய்ச் சகலமும் உண்டாயிருக்கிறது, அவர் மூலமாய் நாமும் உண்டாயிருக்கிறோம்.
கிறிஸ்துவின் பிரமாணத்திலும் ஒரே தேவன் சொல்லப்பட்டு இருக்கிறார் அவருக்கென்று நாமும் உண்டாயிருக்கிறோம் என்கிறார்
பழைய ஏற்பாட்டில் ஒன்றான மெய் தேவன் அறிவிக்கப்பட்டு இருக்கிறார் ஆனால் புதிய ஏற்பாட்டில் நாம் நித்திய ஜீவனை பெறுவதற்கு இப்போது இன்னும் கூடுதல் கட்டளை கொடுக்கப்பட்டிருக்கிறது
ஒன்றான மெய் தேவனாகிய பிதாவையும் அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவையும் அறியவில்லை என்றால் நமக்கு நித்திய ஜீவன் இல்லை
யோவா 17:3 ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்.
இருவரில் யார் ஒருவரையும் அறியவில்லை என்றால் நமக்கு நித்திய ஜீவன் என்பதே இல்லை என்பதை இயேசு தெளிவாக போதிக்கிறார்
அப்படி என்றால் நாம் இந்த பிரமாணத்திற்கு கீழ்ப்படிய வேண்டுமா அல்லது 10 கற்பனையில் உள்ள முதலாம் கற்பனைக்கு கீழ்ப்படிய வேண்டுமா?
அந்த ஒன்றான மெய் தேவனை பணிந்து கொண்டு அவர் ஒருவருக்கே ஆராதனை செய்ய வேண்டும் என்று இயேசு கட்டளையிட்டு இருக்கிறார்
மத் 4:10 அப்பொழுது இயேசு: அப்பாலே போ சாத்தானே; உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக என்று எழுதியிருக்கிறதே என்றார்.
நாம் தேவன் ஒருவரை தொழுது கொள்ளாமல் வேறொன்றை தொழுது கொள்ளும்போது நாம் சாத்தானை சேவிக்கிறோம்
பிதாவாகிய தேவனை ஆவியோடும் சத்தியத்தோடும் தொழுது கொள்ள வேண்டும் என்று கிறிஸ்து நமக்கு கட்டளையிட்டு இருக்கிறார்
யோவா 4:23 உண்மையாய்த் தொழுதுகொள்ளுகிறவர்கள் பிதாவை ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்ளுங்காலம் வரும் அது இப்பொழுதே வந்திருக்கிறது; தம்மைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் இப்படிப்பட்டவர்களாயிருக்கும்படி பிதாவானவர் விரும்புகிறார்.
யோவா 4:24 தேவன் ஆவியாயிருக்கிறார், அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ளவேண்டும் என்றார்.
நாம் தேவனை
ஆவியோடும் சத்தியத்தோடும் தொழுது கொள்ளாத போது தேவன் நம்மை ஏற்றுக் கொள்வதில்லை
நாம் உலகப்பொருளை அன்புகூருகின்ற போது நாம் தேவனை சேவிப்பதில்லை
லூக் 16:13 எந்த ஊழியக்காரனும் இரண்டு எஜமான்களுக்கு ஊழியஞ்செய்யக்கூடாது; ஒருவனைப் பகைத்து மற்றவனைச் சிநேகிப்பான், அல்லது ஒருவனைப் பற்றிக்கொண்டு மற்றவனை அசட்டைபண்ணுவான். தேவனுக்கும் உலகப்பொருளுக்கும் ஊழியஞ்செய்ய உங்களாலே கூடாது என்றார்.
நாம் தேவனை விட்டு உலகப் பொருளுக்காக ஊழியம் செய்கின்ற போது நாம் வேறொன்றைச் சேவிக்கிறோம்
உலகத்திலும் உலகத்தில் உள்ளவைகளிலும் ஏன் அன்பு கூரக்கூடாது?
1யோவா 2:15 உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்புகூராதிருங்கள்; ஒருவன் உலகத்தில் அன்புகூர்ந்தால் அவனிடத்தில் பிதாவின் அன்பில்லை.
1யோவா 2:16 ஏனெனில், மாம்சத்தின் இச்சையும், கண்களின் இச்சையும், ஜீவனத்தின் பெருமையுமாகிய உலகத்திலுள்ளவைகளெல்லாம் பிதாவினாலுண்டானவைகளல்ல, அவைகள் உலகத்தினாலுண்டானவைகள்.
1யோவா 2:17 உலகமும் அதின் இச்சையும் ஒழிந்துபோம்; தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான்.
கிறிஸ்துவின் பிரமாணம் உள்ளான மனுஷனை சுத்தப்படுத்துகிறது உள்ளான மனுஷன் சுத்தமாகும் போது புறம்பான மனுஷன் சுத்திகரிக்கப்படுகிறான்
மத்தேயு 23:25
மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, போஜனபானபாத்திரங்களின் வெளிப்புறத்தைச் சுத்தமாக்குகிறீர்கள் உட்புறத்திலோ அவைகள் கொள்ளையினாலும் அநீதத்தினாலும் நிறைந்திருக்கிறது.
மத்தேயு 23:26
குருடனான பரிசேயனே! போஜனபானபாத்திரங்களின் வெளிப்புறம் சுத்தமாகும்படி அவைகளின் உட்புறத்தை முதலாவது சுத்தமாக்கு.
அப்படி என்றால் பத்து கட்டளைகளில் முதலாம் கற்பனைகளை காட்டிலும் கிறிஸ்துவின் பிரமாணத்தில் அதைக் காட்டிலும் மேலான பிரமாணம் கொடுக்கப்பட்டிருக்கிறது
பத்து கற்பனையில் பத்து கற்பனைகளில் முதலாம் கற்பனையைக் காட்டிலும் கிறிஸ்துவின் பிரமாணத்தில் மேலான பிரமாணம் கொடுக்கப்பட்டிருக்கிறதா? என்பதற்கு இவைகள் எல்லாம் சில உதாரணங்கள் தான் இன்னும் அதிகமான உதாரணங்களை கிறிஸ்துவின் பிரமாணத்தில் இருந்து எடுத்து காண்பிக்க முடியும்
கர்த்தருக்கு சித்தமானால் பத்து கற்பனையில் இரண்டாம் கற்பனையைக் காட்டிலும் கிறிஸ்துவின் பிரமாணத்தில் எவ்வளவு மேலான பிரமாணம் கொடுக்கப்பட்டு இருக்கிறது நாம் கற்றுக் கொள்ளுவோம்
நீங்கள் ஈரோட்டில் இருந்தால் ஜெபிக்கவும் தேவனுடைய சத்தியங்களை இலவசமாகவும் உங்கள் வீடுகளில் கற்றுக்கொள்ள எங்களை அழைக்கவும்
Preacher: Bro Ariyel Barnabas
Church Of Christ
Erode
Call-9025776966
தேவனுடைய சத்தியங்களை தொடர்ந்து வாட்ஸ் ஆப் ல் பெற 9025776966 என்ற எண்ணுக்கு குறுந்தகவல் அனுப்பவும்